jaga flash news

Monday, 2 November 2015

கர்ம வினைகள் (பாவங்கள்):

கர்ம வினைகள் (பாவங்கள்): கர்மா என்பது கர்மா உடையவரை தண்டிக்க செயல்படும் ஒரு தண்டனை சட்டம் போல் ஆகும். இது தீராத நோயாலும், கொடுமையான வேதனையான நோய்களாலும், பண கஷ்ட்டம், மன கஷ்ட்டம், குடும்ப பிரச்சனை, எதிர்பாராத விபத்துக்கள், மரணம் போன்றவற்றை ஏற்படுத்தி தண்டித்து அதன் தீவிரத்தை உணர்த்தும் நாம் அதை உணர்ந்து திருந்தி கொள்ள வேண்டும். கர்மா என்பது பல வகைப்படும் அவைகள்- தெரிந்து செய்யும் பாவங்கள், தெரியாமல் செய்யும் பாவங்கள், மனத்தால் செய்யும் பாவங்கள், நம் வர்க்கத்தினரால் உண்டாகும் பாவங்கள் என்று வகைகள் உண்டு.
தெரிந்து செய்யும் பாவங்களால் வரும் கர்மா: ஒரு செயல் தவறு அல்லது அதனால் பிறருக்கும் பிற உயிர்க்கும் தீங்கும் கெடுதலும், துன்பம் நேருகிறது என்று தெரிந்தும் அந்த செயலை செய்தால் அது தெரிந்து செய்யும் பாவம் ஆகும்.
தெரியாமல் செய்யும் பாவங்களால் ஏற்படும் கர்மா: நாம் நம்மை அறியாமல் நடக்கும் போதும், உண்ணும் போதும், சுவாசிக்கும் போதும், படுக்கும் போதும், அமரும் போதும் பயணத்தின் போதும் நம்மை அறியாமல் பல உயிர்களுக்கு துன்பமோ அல்லது மரணமோ ஏற்படலாம் இது தெரியாமல் செய்யும் நடக்கும் பாவங்கள் ஆகும்.
மனத்தால் செய்யும் பாவங்கலால் வரும் கர்மா: காம எண்ணங்கள், கண்ட பெண்களை தவறாக கற்பனை செய்தல், கண்டதை உண்ணுமாறும், அருந்தும்படியும் எண்ணுதல், மற்றவருக்கு துரோகங்கள் இழைக்க எண்ணுதல், எந்த தவறையும் செய்யாமல் அது நடந்தது போல் எண்ணினாலே மனத்தால் செய்த பாவமாக கர்மாவில் எடுத்து கொள்ளப்படும். இது போன்றவை மனத்தால் செய்யும் பாவங்கள் ஆகும்.
பரம்பரை கர்மா: நம் உறவினர்கள் மேற்கண்ட மூன்று கர்மாக்களை சேர்த்திருந்தால் அவர் பரம்பரையை சேர்ந்தவரை சிறிதளவேனும் பாதிக்கவே செய்யும். எ.கா. பரம்பரை நோய், பரம்பரை குணம், பரம்பரை பழக்க வழக்கங்கள் போன்றவை இதனால் தான் ஏற்படுகிறது.
கர்ம வினைகளை தீர்க்க அல்லது குறைக்கும் வழிமுறைகள்: அன்னதானம், சைவ உணவு, இயலாதோர்க்கு உதவுதல், ஆன்மீக அன்பர்களுக்கு உதவுதல், அனைத்து உயிர்களையும் தம் உயிர்போல எண்ணுதல் பிற உயிர்க்கு இரஞ்சுதல், மற்ற உயிர்களுக்கு ஏற்படும் துன்பத்தை போக்குதல் அல்லது போக்க உதவுதல், தியானம் செய்தல், தீப வழிபாடு செய்தல், உண்மையான குருமார்களுக்கு நன்றி விசுவாசத்துடன் நன்மை செய்தல், சமுத்திரங்களில் நீராடல் போன்றவைகள் கர்ம வினைகளை நீக்கும் அல்லது அதன் பாதிப்புகளை குறைக்கும் அல்லது கர்ம வினைகளை செயல்படாமல் செய்து விடும்.

No comments:

Post a Comment