jaga flash news

Sunday 22 November 2015

" சனி பகவானின் " தண்டனையில் இருந்து தப்பிக்க – ஒரு சிறந்த பரிகாரம்

" சனி பகவானின் " தண்டனையில் இருந்து தப்பிக்க – ஒரு சிறந்த பரிகாரம்
ஏழுதலைமுறைக்கு முன் செய்த பாவங்களும், இந்த தலைமுறையில் நீங்கள் செய்த பாவங்கள் அனைத்தும் தீருவதற்கு ஒரு மிகச் சிறந்த பரிகாரம்.
எவர் ஒருவர் செய்த பாவங்களும், அவருக்கு பூமெராங் ஆகி திரும்ப கிடைப்பது – அவருக்கு ஜாதகப்படி மோசமான தசா, புக்தி நடக்கும் காலங்களில்.
அல்லது அஷ்டமச் சனி, ஜென்ம சனி நடக்கும் காலங்களில் – சனி பகவான் , தயவு , தாட்சண்யமின்றி – கொடுமையாக தண்டிக்கிறார்.
நான் ஒண்ணுமே செய்ய முடியாது.
என் கையிலே ஒண்ணுமே இல்லை.
நான் ஒரு கையாலாகாதவன் கோழை, யாருமே என்னை புரிஞ்சுக்க மாட்டேங்கிறாங்க, நான் ஒரு அநாதை, நான் உயிரோட இருக்கிறதே வேஸ்ட் , என்ன பண்ணினாலும், எவ்வளவு சம்பாதிச்சாலும் – கையிலே பைசா நிக்கவே இல்லை.
இப்படி – பலப்பல எண்ணங்கள் உங்களுக்கு தோன்றினால் உங்களுக்கு அஷ்டம சனி யோ , இல்லை ஏழரை சனியோ நடந்து கொண்டிருக்கும்.
சிவனே னு நீங்க பாட்டுக்கு டூ வீலெர் ல போய்க்கிட்டு இருப்பேங்க, சம்பந்தமே இல்லாமே திடீர்னு ஒரு நாய் , தேடி வந்து , ஏதோ உங்களுக்காகவே வெயிட் பண்ணிக்கிட்டு இருந்த மாதிரி , உள்ளே வந்து விழும்.
அப்புறம் என்ன, ஒரு மாசம் கட்டு போட்டு உக்காரணும்.
உற்றார் உறவினரை விட்டு ஆயிரக்கணக்கான மைல் தள்ளி இருக்க வேண்டி வரும்.
நாம ரொம்ப நேசிக்கிற பொருள், உயிர், நண்பர்கள் எல்லாரையும் வெறுத்து ஒதுக்க வேண்டி வரும்.
அவரை மாதிரி ஒரு உத்தமன் உண்டானு சொல்லிக்கிட்டு இருந்த உலகம் , இப்போ கை கொட்டி சிரிக்கும்.
கவலையே படாதீங்க.
இப்போ தான் நீங்க ஒரு பக்குவப்பட்ட மனுஷனா மாறி இருப்பீங்க.
அசலுக்கும், போலிக்கும் இப்போ தான் வித்தியாசம் பார்க்க முடியும்.
நீங்க செஞ்ச பாவக் கணக்கு – நேராகுதுன்னு நினைச்சுக்கிட்டு – மனசை தேத்திக்கோங்க.
ஆண்டவனுக்கு தெரியும். நமக்கு எது, எப்போ கிடைக்கனும்னு.
மேல நடக்க வேண்டியதை பார்க்கலாம்!
இதுக்கு மேல நீங்கதான் ராஜா! கலக்க போறீங்க.
இது எல்லாமே, சனி யால அவஸ்தை பட்டவங்களுக்கு நல்லா புரியும்.
மத்தவங்களுக்கு ஒரு காமெடியா தெரியலாம்.
கீழே கொடுக்கப் பட்டிருக்கிற விஷயம் – யாரும் சனியோட கடுமையால பாதிக்க
படக்கூடாது கிறதுக்காக சித்தர் பரிந்துரைக்கும் மிக எளிய பரிகாரம்.
பச்சரிசியை ஒரு கையில் அள்ளி அரிசியாக அல்லது அதை நன்கு பொடி செய்து சூரியநமஸ்காரம் செய்துவிட்டு,
விநாயகப் பெருமானை மூன்று சுற்று சுற்றிவிட்டு அந்த அரிசியை விநாயகரைச் சுற்றிப்போட்டால், அதை எறும்பு தூக்கிச் செல்லும்.
அப்படித்தூக்கிச் சென்றாலே நமது பாவங்களில் பெரும்பாலானவை நம்மைவிட்டுப் போய்விடும்.
வன்னி மரத்தடி விநாயகராக இருந்தால் , அது இன்னும் விசேஷம்.
சனிக்கிழமைகளில் இதை செய்யவும்.
அப்படித்தூக்கிச்சென்ற பச்சரிசி மாவை எறும்புகள் தமது மழைக்காலத்திற்காக சேமித்து வைத்துக்கொள்ளும்.
எறும்பின் எச்சில் அரிசிமாவின் மீது பட்டதும் அதன் கெடும்தன்மை நீங்கிவிடும்.
இந்த பச்சரிசிமாவை சாப்பிடுவதற்கு இரண்டரை வருடங்கள் எடுத்துக் கொள்ளும்.
இப்படி இரண்டேகால் வருடங்கள் வரை எறும்புக்கூட்டில் இருப்பதை முப்பத்துமுக்கோடி தேவர்கள் கவனித்துக்கொண்டிருப்பார்கள்.
இரண்டரை ஆண்டிற்கு ஒருமுறை கிரகநிலை மாறும்.
அப்படி மாறியதும், அதன் வலு இழந்துபோய்விடும்.
இதனால்,நாம் அடிக்கடி பச்சரிசி மாவினை எறும்புக்கு உணவாகப் போட வேண்டும்.
ஓர் எறும்பு சாப்பிட்டால் 108 பிராமணர்கள் சாப்பிட்டதற்குச் சமம்.
எனவே இது எத்தனை புண்ணியம் வாய்ந்த செயல் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
இதனால்,சனிபகவானின் தொல்லைகள் நம்மைத் தாக்காது. ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, கண்டச்சனி, அர்த்தாஷ்டகச்சனி – சனி மகா தசை நடப்பவர்களுக்கு , இந்த செயல் ஒரு மிக பெரிய வரப்ரசாதம் ஆகும்.
உடல், ஊனமுற்றவர்களுக்கு – காலணிகள், அன்ன தானம் அளிப்பது , மிக நல்லது.

No comments:

Post a Comment