jaga flash news

Tuesday 24 November 2015

108 திவ்ய தேசம்

இந்த 108 திவ்ய தேசங்களில் இரண்டு ஸ்தலங்கள் இந்நிலவுலகில்
பார்க்க முடியாதவைகளாகும்.
ஒன்று பரம பதம். மற்றொன்று பாற்கடல்.
எஞ்சிய 106 திவ்ய தேசங்களில் வடநாட்டு ஸ்தலங்கள் 12
இதில்
திருமலை என்னும் திருவேங்கடமும், அஹோபிலம் என்னும் சிங்கவேள்
குன்றமும் விந்திய மலைக்கு இப்பால் தென்னாட்டிலேயே அமைந்துள்ளன.
எனவே தென்னாடு மட்டும் 96 திவ்ய தேசங்களுடைத்து.
இவைகள்
தென்னாட்டில் அமைந்ததற்கு ஒரு காரணமுண்டு.
இதற்கு தஞ்சை
என்.எஸ்.தாத்தாச்சார்யாரின் திருநறையூர் ஸ்தலவரலாற்று நூலில் காணப்படும்
கருத்து அப்படியே இங்கு தரப்படுகிறது.
முற்காலத்தில் புண்ணிய ஸ்தலங்களை மனிதர்கள் தாங்கள் நினைத்த
இடத்தில் ஏற்படுத்தினார்களில்லை.
பூமியின் உள்ளே மனித ஜீவாதார
சக்திக்கு தேவையான ஒரு நரம்பு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் குறுக்கே ஓடி
இருக்குமாம்.
அதற்குத் தான் தரித்ரீசாரம் எனப்பெயர்.
அது நியூட்டன்
கண்டுபிடித்த புவியீர்ப்பு சக்தியின் பெரும் பகுதியாகும்.
இத்தகைய இடம் நம்
இந்தியாவில் சிறப்பாகத் தென்பகுதியில் அதிகமாக இருப்பதால்தான்
இந்தியாவையே உண்மையான ப்ருத்வி (பூமி) என மகாகவி காளிதாசனும்
கூறினார்.
ஆகவேதான் அந்த நரம்பு இழையோடும் தென்னாட்டின் பகுதியில்
ஆலயங்கள் பல தோன்றின.

No comments:

Post a Comment