jaga flash news

Sunday 22 November 2015

அத்ம விளக்கு .

அத்ம விளக்கு .
ஐந்து முக விளக்கு, காமாட்சி விளக்கு என பல விளக்குகள் இருந்தாலும் உருவம் பொறிக்கப்படாத அத்ம விளக்கு என்பதே விளக்குகளில் சிறந்தது.
மையத்தில் செங்குத்தாக திரி இருக்கும் படி வட்டவடிவில் இருக்கும் விளக்கின் அமைப்புக்கு அத்ம விளக்கு என பெயர்.
ப்ரார்த்தனை அறையில் அத்ம விளக்கு இல்லாமல் வேறு விளக்குகள் இருந்தாலும் பயன் இல்லை.
பஞ்ச முக விளக்குகள் வைத்தால் இரண்டு ஜோடியாக வைக்க வேண்டும். அத்ம விளக்கு எப்பொழுதும் ஒன்று தான் வைக்க வேண்டும்
விளக்கைக் குளிர வைக்கும் முறை
விளக்கேற்றினால், எண்ணெய் முழுவதும் தீர்ந்து விளக்கு தானாகவே அணையும் வரை விட்டு விடுகின்றனா். அது தவறு! விளக்கு ஏற்றியதிலிருந்து அதனைக் குளிர வைக்கும் வரை விளக்கில் எண்ணெய் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.
விளக்கை வாயால் ஊதியோ, வெறுங்கையாலோ அணைக்கக் கூடாது. விளக்கைக் குளிர வைக்க வேண்டுமானால் திரியில் அடிப்பகுதியை பின்புறமாக இழுக்க வேண்டும். அப்போது தீச்சுடா் சிறிது சிறிதாகக் குறைந்து திரி எண்ணெயில் அமிழ்ந்து விளக்கு குளிரும்
விளக்கை தூண்டுங்கள் உங்களின் உள்ளே இருக்கும் விளக்கை தூண்டுங்கள். இறை ஒளி உங்களில் ஒளிரட்டும்

No comments:

Post a Comment