jaga flash news

Monday 25 January 2021

வெண்கடுகு

கருப்பை கட்டிகளை கரைக்கும் வெண்கடுகு.

உள் உறுப்புகளை தூண்டக் கூடிய தன்மை கொண்டதும், வீக்கம் மற்றும் வலியை போக்க கூடியதும், கருப்பை கட்டிகளை கரைக்கவல்லதும், செரிமானத்தை தூண்டக் கூடியதும், இருமல், விக்கலை சரிசெய்ய கூடியதும், ரத்த ஓட்டத்துக்கு மருந்தாக பயன்படுவதுமான வெண்கடுகு பல மருத்துவ பலன்களை கொண்டது.

கடுகை போன்று பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது வெண்கடுகு. கடுகு வகையை சேர்ந்த இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். வெண்கடுகை பயன்படுத்தி கருப்பையில் ஏற்படும் கட்டிகளை கரைக்ககூடியதும், செரிமாணத்தை தூண்டும் மருந்து தயாரிக்கலாம். வெண் கடுகை வறுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். அரை ஸ்பூன் வெண்கடுகு பொடி, ஒரு சிட்டிகை மிளகு, சிறிது உப்பு, 2 சிட்டிகை பெருங்காய பொடி சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும்.

இதை வடிகட்டி, காலையில் வெறும் வயிற்றில் 50 முதல் 100 மிலி வரை எடுத்துக்கொண்டால், இது செரிமானத்தை தூண்டும். கருப்பை கோளாறுகளை சரிசெய்யும். வெண்கடுகு உள் உறுப்புகளை தூண்டக் கூடியது. இரையறை கோளாறுகளை சரிசெய்யும் தன்மை உடையது. சிறுகுடலில் உள்ள மென் திசுக்களை தூண்டக் கூடியது. மாதவிலக்கு கோளாறுகளை சரிசெய்யும். கருப்பையில் உள்ள நீர்கட்டிகளை கரைத்து, கருப்பைக்கு பலம் தரக்கூடியது.

வெண் கடுகை பயன்படுத்தி கெண்டைக்கால் தசையில் வீக்கம், வாயுக்கான மருந்து தயாரிக்கலாம். 2 ஸ்பூன் விளக்கெண்ணெய்யில், ஒரு ஸ்பூன் வெண்கடுகு பொடியை வறுக்கவும். பின்னர், நீர்விட்டு கொதிக்க வைத்து, அரிசி மாவு சேர்த்து களி பதத்தில் தயாரிக்கவும். இந்த களியை மெல்லிய துணியில் தடவி வலி, வீக்கம் இருக்கும் இடத்தில் கட்டி வைக்க வேண்டும். இதனால் வலி, வீக்கம் சரியாகும்.

வெண்கடுகை பயன்படுத்தி விக்கலுக்கான மருந்து தயாரிக்கலாம். அரை டம்ளர் அளவுக்கு நீர் எடுத்து கொதிக்க வைக்கவும். தனியாக ஒரு பாத்திரத்தில் அரை ஸ்பூன் அளவுக்கு வெண்கடுகு பொடியை எடுத்துக்கொள்ளவும். இதில் வெந்நீரை ஊற்றி நன்றாக கலந்து 15 நிமிடம் வைத்திருந்தால் நீர் தெளிந்துவிடும். மேலே இருக்கும் தெளிந்த நீரை குடித்தால் விக்கல் சரியாகும்.விக்கலால் மது அருந்துபவர்கள், வயிற்று புண் இருப்பவர்கள் மிகவும் அவதிப்படுவார்கள்.

விக்கலை போக்க வெண்கடுகு மருந்தாகிறது. வெண்கடுகை பயன்படுத்தி இருமலுக்கான மருந்து தயாரிக்கலாம். கால் ஸ்பூன் வெண்கடுகு பொடியுடன் சிறிது தேன் சேர்த்து குழைத்து சாப்பிட இருமல் கட்டுப்படும்.

சுவாச பாதையில் ஏற்படும் அழற்சி, வீக்கத்தை குறைக்கும்.வெண்கடுகு, ஒரு வயது வரையுள்ள குழந்தைகளுக்கு வரும் வயிற்றுப்போக்கு, காய்ச்சல், இருமல், சளியை போக்கும். நுண்கிருமிகளை அழிக்கும் தன்மைகொண்டது. வலி நிவாரணியாகிறது. ரத்த ஓட்டத்தை சீர்படுத்தும் தன்மை கொண்டது.

1 comment:

  1. கடுகு :

    வேறு பெயர்கள் : ஐயவி.

    தாவரவியல் பெயர் : Brassica Juncea (Old Name : Brassica Nigra).
    குடும்பப் பெயர் : Brassicaceae
    ஆங்கிலப் பெயர் : Black mustard Seed.
    தெலுங்கு : Nallaavalu
    சமஸ்கிருதம் : Sarsopa
    மலையாளம் : Karuthma Kadugu
    ஹிந்தி : Sarson
    கன்னடம் : Saaive

    வளரியல்பு : சிறு செடி.

    புறஅமைப்பு : 1 செ.மீ உயரம் வளரும்.
    பூக்கள் தண்டின் நுனியில் கொத்தாக மஞ்சள் நிறத்துடன் காணப்படும். "சிலிகுவா வகை கனிகள் காணப்படும்.
    இலை தனி இலைகளாக மாற்றிலை அடுக்கத்தில் அமைந்திருக்கும். இதன் விதை கடுகு.

    பயன்படும் பகுதி : விதை; சுவை − காரம்; தன்மை : வெப்பம்; பிரிவு : காப்பு.

    தாவர வேதிப் பொருட்கள் : இதன் விதையில் Myrosin என்ற குளுக்கோசைடும், Sinigrin என்ற நறுமண எண்ணெயும் உள்ளன.

    செய்கைகள் : செரிப்புண்டாக்கி , சிறுநீர்ப்பெருக்கி, வாந்தியுண்டாக்கி.


    மருத்துவ குணங்கள் : தலைவலி, இருமல், குடைச்சல், வயிற்றுவலி, வாத, பித்த, கப நோய்கள், விக்கல் இவைகள் நீங்கும்.

    நோய் தீர்க்கும் முறை :

    1) கடுகைத் தூள் செய்து அரிசி மாவுடன் சம அளவு கலந்து தேவையான நீர்விட்டு பசைபோல் கிளறி துணியில் தடவி, கீழ்க்கண்டவாறு பற்றிட நோய்கள் குணமாகும்.

    A. தோள்பட்டை, மார்பு − இரைப்பை, சுவாசம், இருமல் நீங்கும்.

    B. அடிவயிறு − வயிற்றுவலி, வயிற்றுளைச்சல், விஷபேதி திரும்.

    C. பிடரி அல்லது பாதம் − காய்ச்சல், தலைவலி, வெறி, அம்மை குணமாகும்.

    D. இடது மார்பு − வாத, கபத்தினால் ஏற்படும் சுரம், விஷபேதி.

    E . பாதம, அடிவயிறு − தூக்கமின்மை, இரத்த ஓட்டமின்மை.

    2) கழுத்து வலி, முக வீக்கம், பல்வலி போன்றவற்றிற்கு;அந்தந்த இடத்தில் மேற்படி போட்டுவர குணமாகும்.

    3) கடுகைப் பொடி செய்து தினமும்.. காலை, மாலை
    3−5கிராம் வீதம் கொடுத்துவர "விந்தணு, குறைபாடு நீங்கும். ஞாபக சக்தியும் பெருகும்.

    4) கடுகு, உப்பு, மிளகு இம்மென்றையும் சம அளவு எடுத்து இடித்து 5 கிராம் வீதம் சாப்பிட்டு.. சுடுநீர் அருந்த... வாத, பித்த, கபத்தினால் தோன்றும் அனைத்து நோய்களும் மட்டுப்படும்.

    5) 150 மி.கி. வெந்நீரில் 10 கிராம் கடுகுத் தூளைப் போட்டு ஊறவைத்து கொடுக்க விக்கல் நீங்கும். விக்கலை நிறுத்துவதற்கு இது சிறந்த வழியாகும்.

    ReplyDelete