jaga flash news

Saturday 16 January 2021

பத்து தலைமுறை பாவம் போக்கும் பாபாங்குசா ஏகாதசி...

பாபாங்குசா ஏகாதசி (அ) பாசங்குசா ஏகாதசி 

நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல், உபவாஸங்களில் ஏகாதசி விரதம் என்பது மிக, மிக முக்கியமானதும் மற்றும் ஹிந்துக்களாகிய அனைவரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய விரதமும் கூட. 

அஸ்வினா (October / November)  மாதத்தில்  சுக்லபட்சத்தில்  வரக்கூடிய ஏகாதசியே "பாபாங்குசா  (அ) பாசங்குசா ஏகாதசி" என்று அழைக்கப் படுகின்றது. 


ஒவ்வொரு ஏகாதசியின் பெருமைகளையும், அதன் புண்ணியங்களையும் விவரிக்கும் "பிரம்ம வைவர்த்த புராணத்தில்" இருந்து பாபாங்குசா (அ) பாசங்குசா" ஏகாதசிக்கு உண்டான மகிமையை பார்ப்போம்...


ஸ்ரீ கிருஷ்ணருக்கும், மஹாராஜா யுதிஷ்டிரருக்கும் இடையில் நடைபெறும் சம்பாஷணையில், யுதிஷ்டிரர், அஸ்வினா (அக்டோபர் / நவம்பர்) மாதத்தில் சுக்லபட்சத்தில் (வளர்பிறையில்) வரக்கூடிய ஏகாதசி பெயர் என்ன மற்றும் அதன் மகிமை என்ன என்று விளக்கமாக கூறும் படி ஸ்ரீ கிருஷ்ணரிடம் வேண்டுகிறார்..

ஸ்ரீ கிருஷ்ணர், யுதிர்ஷ்டிர மஹாராஜாவிற்கு எடுத்துரைத்த விளக்கங்களை நாம் இங்கே நமது "ஒரு துளி ஆன்மீகம்" குழு அன்பர்களுக்காக  தொகுத்துள்ளோம் ...

ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகையில்,
மஹாராஜா யுதிஷ்டிரரே, இந்த ஏகாதசி "
பாபாங்குசா ஏகாதசி" என்று அழைக்கப்படுகிறது. மேலும், இந்த ஏகாதசி விரதத்தை ஒருவர் கடைபிடிப்பதன் மூலம், அவரது தந்தை வழியில் 10 தலைமுறையினர்  செய்த பாவங்களையும், தாய் வழியில் 10 தலைமுறையினர்  செய்த பாவங்களையும், தனது மனைவி (அல்லது) கணவர்  வழியில் 10 தலைமுறை முன்னோர்கள் செய்த பாவத்திலிருந்து அவர்களை விடுவிக்க கூடிய வல்லமையை தர வல்லது என்று கூறி மேலும் விளக்குகிறார்...

வைஷ்ணவத்தை நிந்தனை செய்யக்கூடிய சைவர்களும், சைவத்தை நிந்தனை செய்யக்கூடிய வைஷ்ணவர்களும் கண்டிப்பாக நரகத்தை அடைவர். அதனை தவிர்க்க வேண்டும். மேலும், பலநூறு யாகங்கள் செய்து பெறக்கூடிய பலன்களை இந்த ஏகாதசி விரதத்தின் பலனுடன்  ஒப்பிட்டால் பதினாறில் ஒரு பங்கு கூட இல்லை. 

இந்த ஏகாதசி விரதத்தை அனுஷ்டிப்பதின் மூலம், அவர்கள் யம தர்ம லோகத்திற்கு செல்வதற்கு பதில் நேரடியாக விஷ்ணுவின் பரமபதத்தை அடைகின்றனர். 
ஒருவர் கங்கைக்கு சென்று காசி, கயாவில் நீராடி பெறும் புண்ணியத்தை  இந்த பாபாங்குச ஏகாதசி விரதத்தினை அனுஷ்டிப்பதின் மூலம் பெற முடியும். மறுபிறவியை இல்லாமல் செய்து முக்தியை அளிக்க வல்லது. 

இந்த பாபாங்குசா  ஏகாதசி நாளில், அவரவர் முடிந்த அளவுக்கேற்ப தானங்களை வழங்கினால் (தங்கம், மனை, பசு, எள், குடி நீர், குடை மற்றும் காலணிகள்) அவர்கள்  யம தர்மனின் லோகத்திற்கு செல்வதில்லை, விஷ்ணுவின் பாதங்களை அடைகிறார்கள். 

கடந்த பிறவியில், பிற மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் பொதுக்குளங்களை ஏற்படுத்தியவர்கள், பாதசாரிகள் ஓய்வு எடுப்பதற்கு அறை கட்டி கொடுத்தவர்கள், மற்றும் பல புண்ணிய காரியங்களை செய்தவர்கள் தான், இந்த பிறவியில் மற்ற அனைத்து  நோய்களில் இருந்தும் விடுபட்டு, இக வாழ்விற்கு தேவையான பொருள்களையும் பெற்று வளமான வாழ்வை பெறுகின்றனர். 

மேலும், இந்த பாசாங்குச ஏகாதசி தினத்தில்,  நாள் முழுவதும் எவர் ஒருவர் விஷ்ணு நாமத்தை ஜெபித்துக் கொண்டிருக்கிறாரோ அவர் இக வாழ்வில் அனைத்து வளங்களையும் பெற்று பர வாழ்வில் நேரடியாக விஷ்ணுவின் பாதத்தை அடைகின்றனர். 

இந்தப்  பிறவியில் "பாபாங்குசா ஏகாதசி " விரதம் இருப்பதன் மூலம், மீண்டும் ஒரு பிறவி எடுப்பதில்  இருந்தே விடுபட்டு முக்தி நிலையை அடைய முடியும். 


இவ்வாறு, ஸ்ரீ கிருஷ்ணர், மஹாராஜா யுதிஷ்டிரரிடம் "பாபாங்குசா ஏகாதசி" விரத மகிமையை பற்றி எடுத்து கூறினார்.

மேலும், இந்த விரதத்தை அனுஷ்டிப்பவர்களும், இந்த புண்ய கதையை கேட்டவர்களும், பிறருக்கு எடுத்து சொல்பவர்களும் மிகுந்த புண்யத்தை அடைவார்கள், என்று "ப்ரம்ம வைவர்த்த புராணம்" எடுத்துரைக்கின்றது...

ஓம் நமோ நாராயணாய...
ஓம் நமோ வெங்கடேசாய...

ஆகவே, நமது இப்பிறவி எப்படி இருப்பினும், நாம் செய்த பாவங்களை போக்கவும், அடுத்த பிறவியின்றி இருக்கவும்,  'பாபாங்குச ஏகாதசி'  தினத்தில் நாம் செய்ய வேண்டியவை: 

  • வாய்ப்பு இருப்பவர்கள் முழு நாளும் உண்ணாமல் விரதம் இருக்கலாம். (அல்லது அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப ஒரு வேளையோ அல்லது  இரு வேளைகளோ இருக்கலாம்.) 
  • வாய்ப்பு இருப்பவர்கள் பழங்கள், பழச்சாறு மட்டும் அருந்தி விரதம் இருக்கலாம். 
  • வாய்ப்பு இருப்பவர்கள், அன்று நாள் முழுவதும் பகவான் நாமாவை ஜபிக்கலாம். 
  • வாய்ப்பு இருப்பவர்கள், அவரவர் இல்லங்களிலேயே பெருமாள் படத்திற்கு முன்பாக நெய் விளக்கேற்றி, துளசி சாற்றி வழிபடலாம். 
  • (இப்போது சீன வைரஸ் காரணமாக) இருக்கும் இடத்தில் இருந்தே, பெருமாளை நினைத்து மனதார வேண்டிக்கொள்ளலாம்...    
விரதம் இருக்க முடியாதவர்கள், இந்த விரத கதையையும், பலனையும் பிறருக்கு எடுத்து கூறுவதன் மூலம், 'கோ' தானம்  செய்த புண்ணியம் பெறுகிறார்கள்.  

No comments:

Post a Comment