jaga flash news

Saturday 16 January 2021

செல்வ வளங்களை அள்ளித்தரும் தன்(ந்)திரயோதசி...

தன்(ந்)திரயோதசி என்றால் என்ன ?
அன்று என்ன செய்ய வேண்டும் ?
அதனால் என்ன பலன் ?

அனைத்திற்கும் விடை இதோ ...

தீபாவளி பண்டிகை என்பது நாம் அனைவரும் எப்பொழுதும் சிறப்பாக கொண்டாடி வரக்கூடியதே..

ஆனால், நம்மில் பெரும்பாலானோர் அதற்கு முதல்நாள் உண்டான முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டாடுவது மிகவும் குறைவு தான். அப்படி நீங்கள் கொண்டாடி கொண்டிருந்தால் நீங்கள் 5 % பேர்களில் ஒருவர். உங்களுக்கு ஒரு சபாஷ். மீதமுள்ள 95% நபர்களுக்காக இந்த பதிவு.

ஆம், வட மாநிலங்களில் மிகவும் சிறப்பாகவும், முக்கியத்துவம் கொடுத்தும் கொண்டாடப்படுவது தான் தீபாவளிக்கு முதல் நாள் திதியாகிய 'த்ரயோதசி'. இதுவே  'தன்(ந்)திரயோதசி' என்றும்  'தன்வந்திரி திரயோதசி' என்றும்  அழைக்கப்படுகிறது. திதி ஆரம்பிக்கும் மற்றும் முடியும் நேரம் பொறுத்து முதல் நாள் என்பது சற்றே மாறுபடும். பூஜை நேர விவரங்கள் கீழே... 

(In  Sanskrit - Dhanteras / धनतेरस) 

ஆம், 'தன்'  (அ) 'தன'  என்றால் தனம் / செல்வம் என்று அர்த்தம் அல்லவா ? அதே அர்த்தம் தான் இந்த இடத்திலும்... அதாவது செல்வத்தை அள்ளித்தரும் திரயோதசி என்று அர்த்தம். அதே போன்று அமுதத்தை ஒரு கையிலும் 'ஆயுர்வேத சுவடியை' மறு கையிலும் வைத்திருக்கும் மருந்துகளின் கடவுள் என்று நம்மால் அழைக்கப்படும் 'தன்வந்திரி' பகவானை வணங்கும் (வணங்க வேண்டிய) ஒரு திரயோதசி என்றும் பொருள் கொள்ளலாம்.

பாற்கடலை கடையும் பொழுது ஒரு திரயோதசி திதி அன்று தான் 'லக்ஷ்மி தேவி' பாற்கடலில் இருந்து தோன்றினார்கள். மேலும், விஷ்ணுவின் அவதாரமான 'தன்வந்திரி'யும் அன்று தான் தனது ஒரு  கையில் அமுதகலசத்தையும், மற்றொரு கையில் 'ஆயுர்வேத சுவடியுடன்' தோன்றினார்.  

ஆகவே, அன்று செல்வத்தை அள்ளித் தர வேண்டி 'லக்ஷ்மி குபேர பூஜையும்',  அதன் பிறகு ஆரோக்கியத்தை நிலைக்க செய்ய வேண்டி 'தன்வந்திரி' பகவானை வேண்டுவதும் முறை.

சரி, இப்பொழுது வரிசையாக செய்ய வேண்டியவற்றை காண்போம்...





லக்ஷ்மி குபேர பூஜை:

லக்ஷ்மி குபேர பூஜை பற்றி பலரும் அறிந்திருப்பார்கள் என்று நம்புகிறோம். நாம் எப்பொழுதும் பூஜை செய்யும் விதத்திலேயே செய்து கொள்ளலாம். புதியவர்களுக்காக ஒரு சில முக்கிய குறிப்புகள் மட்டும் ...

லக்ஷ்மி குபேர பூஜையில் பசுவுக்கு முக்கியத்துவம் கொடுத்தே வழிபடுவதே மிகவும் சிறப்பு. ஆகவே, 'பஞ்ச கவ்யம்' மிக முக்கியம். (பசுவின் மூலம் கிடைக்க கூடிய 5 பொருள்கள் கொண்ட கலவை. தற்பொழுது அனைத்து பூஜா பொருள்கள் விற்கும் கடைகளிலும் கிடைக்கின்றது)
அதன் பின்பு  மல்லிகை பூ, வெல்லம் இடப்பட்ட பசும்பால், பால் பாயசம் மற்றும் இனிப்பு வகைகள் (பாலில் செய்யப்பட்ட பதார்த்தங்கள் - {Milk Sweets} அல்லது பால்கோவா), இவைகளை கண்டிப்பாக பூஜையில் சேர்த்து கொள்ளவும். முடிந்தவர்கள் ஒரு லக்ஷ்மி அஷ்டோத்ர நாமாவளி சொல்லி பூஜை செய்யலாம். தெரியாதவர்கள் மனதார லக்ஷ்மி தேவி, குபேரனை வேண்டிக்கொண்டு தூபம், தீபம் காட்டி பூஜை செய்யலாம்.
(லக்ஷ்மி தேவி, குபேர காயத்ரி மந்திரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 11 முறை சொல்லி பூஜை செய்யலாம்)

பூஜை முடித்த பிறகு வாய்ப்பு இருக்கும் அனைவருமே, இனிப்பு வகைகளை முடிந்த வரை வீட்டிற்கு அருகில் உள்ள குழந்தைகளுக்கு வழங்குங்கள். அவர்களது மகிழ்ச்சியே அம்பாளின் மகிழ்ச்சியாக உணரப்படும்.  அதற்கு அடுத்து பெரியவர்களுக்கு கொடுக்கலாம். அப்படி வாய்ப்பே இல்லாவிட்டால் (அருகில் ஒருவருமே இல்லை என்றால்) அடுத்த நாள்(களில்) ஏதாவது ஒரு கோவிலில் உள்ள மரத்தடியில் ஒரு துண்டு இனிப்பை எறும்புகள் உண்ணும் வண்ணம் போட்டு விடுங்கள்.


'தன்(ந்)திரயோதசி' அன்று தங்கம் அல்லது வெள்ளி வாங்குவது செல்வச்செழிப்பை வழங்கும் என்று ஒரு நம்பிக்கை வட மாநிலங்கள் முழுவதும் உள்ளது. அன்று இல்லத்திற்கு தேவையான பாத்திரங்களை வாங்குவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அல்லது மஹா லக்ஷ்மியின் அம்சமாக விளங்க கூடிய மஞ்சள், உப்பு, அரிசி போன்றவற்றை  கூட வாங்கலாம்.

வாய்ப்பு இருப்பவர்கள் அல்லது இந்த வாரத்தில் தங்கம் / வெள்ளி அல்லது ஏதாவது பாத்திரம் வாங்க வேண்டும் என்று  ஏற்கனவே யோசித்து வைத்திருப்பவர்கள்  'தன்(ந்)திரயோதசி' அன்று வாங்கிக்கொள்ளலாம்.


லக்ஷ்மி குபேர பூஜை நேரம்:
பூஜை நேரம் மிக முக்கியம். 
வெள்ளிக்கிழமை 13-11-2020, மாலை 05:28 முதல் 05:59 நிமிடம் வரை


உங்களது பிரார்த்தனையை மிகவும் தெளிவாக எழுதி வைத்துக்கொண்டு குடும்பத்தில் அனைவரும் சேர்ந்தோ அல்லது தனியாகவோ பிரார்த்திக்கலாம்.  

(பூஜை நேரம் தமிழ்நாட்டினை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்பட்டுள்ளது, மற்ற வெளி மாநிலங்களிலும் / வெளி நாடுகளிலும் உள்ள அன்பர்கள் தங்கள் நாட்டிற்கேற்ப நேரத்தை கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும். அல்லது நமது "தாமிரா தர்ம ரக்ஷண ஸபா" Whatsapp எண்ணிற்கு, {+91 6379338850} தங்களது நாடு, மாகாணம் ஊர் பெயர், Postal code ஆகியவற்றை ஒரு Whatsapp Message அனுப்பி சரியான பூஜை நேரம் பற்றிய தகவல் பெற்றுக்கொள்ளலாம்...)

லக்ஷ்மி காயத்ரி மந்திரம்:
ஓம் ஸ்ரீ மஹாலக்ஷ்மிய ச வித்மஹே விஷ்ணு பத்னாய ச தீமஹி |
தந்நோ லக்ஷ்மி ப்ரசோதயாத் ஓம் ||

குபேர காயத்ரி மந்திரம்: 
ஓம் யக்ஷராஜாய வித்மஹே வைஸ்ரவணாய தீமஹி! 
தந்நோ குபேர ப்ரசோதயாத் ||

அடுத்து,

லக்ஷ்மி குபேர பூஜையோடு தொடர்ந்து, தன்வந்த்ரி பகவானை வேண்டுதல் மிக முக்கியம்.



தன்வந்திரி பகவான் பிரார்த்தனை :
தன்வந்திரி பகவானை மனதார தியானித்து, அவரது படம் நமது பூஜையறையில் இருந்தால் (ஏனெனில் பலரது வீடுகளில் அதற்கு வாய்ப்பு குறைவு) அவருக்கு மல்லிகை பூ சாற்றி அவரது காயத்ரி மந்திரத்தை 11 முறை கூறி குடும்பத்தில் அனைவரும் உடல்நலத்தோடு இருக்க வேண்டும், உடல் ஆரோக்கியத்தோடு இருந்து அனைவரது மனநிலையும் எப்பொழுதும் இறைவனை நினைக்கும் படியும் இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்ள வேண்டும்.

தன்வந்த்ரி காயத்ரி மந்திரம்:
ஓம் தத்புருஷாய வித்மஹே |
அம்ருத கலச ஹஸ்தாய தீமஹி |
தந்நோ தன்வந்திரி ப்ரசோதயாத் ||

இவ்வாறு, 'தன்(ந்)திரயோதசி' அன்று லக்ஷ்மி குபேர பூஜை செய்வதன் மூலம் நம் இல்லம் ஐஸ்வர்யத்தால் செழிப்பாகும், மற்றும் தன்வந்திரி பூஜை செய்வதால் ஆரோக்கியம் நிலைக்கும் என்பது ஐதீகம்...

அடுத்து,

முக்கியமாக நம்மில் பலரும் அறிந்திராத, யம தீபம், எவ்வாறு ஏற்ற வேண்டும், அதன் பலன்கள் என்ன ?

பதிவின் நீளம் கருதி அதனை தனி பதிவாக கொடுத்துள்ளோம். 'யம தீபம்' பற்றிய முழு விவரங்களையும் அடுத்த பதிவில் காணலாம் ...

செல்வவளத்தை அள்ளித்தரும் 'தன்(ந்)திரயோதசி' பற்றிய ஒரு காணொளி தொகுப்பு நமது Youtube சேனல்-இல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதனை காண இங்கு கிளிக் செய்யவும்...  


ஹரி ஓம்... 

No comments:

Post a Comment