jaga flash news

Friday, 28 February 2025

மா இஞ்சி


கோடையின் கொடை மா இஞ்சி! புற்றுநோய் முதல் ஆஸ்துமா வரை! ஆல் கிளியர் செய்யும் மாங்காய் சுவையிலான இஞ்சி

   புளிப்பு சுவை கொண்ட மா இஞ்சி / மாங்காய் இஞ்சியில் ஏராளமான மருத்துவ குணங்கள் கொட்டி கிடக்கின்றன.

மா இஞ்சி, பார்ப்பதற்கு இஞ்சியை போன்றே இருக்கும். சுவையோ மாம்பழம் போன்று இருக்கும். இது இஞ்சி குடும்பத்தை சேர்ந்தது. அதே நேரம் மஞ்சளுடன் தொடர்புடையது. அதனால்தான் இது இஞ்சி போன்ற மஞ்சள் கிழங்கை போல் மெல்லியதாக இருக்கும்.

What are the health benefits of Maa Ingi


இந்த மா இஞ்சியை தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளிலும் பரவலாக பயன்படுத்துகிறார்கள். அது போல் இந்தியாவில் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, மேற்கு வங்கம், கேரளா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பரவலாக மா இஞ்சி பயன்படுத்தப்படுகிறது.


இந்த மாங்காய் இஞ்சியை காய்ச்சல், தோல் நோய்கள், ஆஸ்துமா, வயிறு சம்பந்தமான வியாதிகளுக்கு பயன்படுத்துகிறார்கள். இந்த மா இஞ்சியை ஊறுகாய் போல், துவையல் போல் பயன்படுத்தலாம். இதில் ஆன்டி பைரிடிக் தன்மை உள்ளது. அது போல் நோய் எதிர்ப்பு தன்மையும் கொண்டிருக்கிறது.



மாங்காய் இஞ்சி: மலமிளக்கியாகவும் இது பயன்படுகிறது. மாங்காய் இஞ்சியில் வேதியியல் பொருளான ஸ்டார்ச், ஃபைபர்ஸ், பினோலிக் அமிலங்கள், எண்ணெய்கள், குர்குமினாய்டுகள் மற்றும் டிஃபுரோகுமெனோனால் அமடானுலன் மற்றும் அமடால்டிஹைட் போன்றவை உள்ளன. அது போல் மாங்காய் நறுமணமே இந்த இஞ்சி வீசும். இதற்காக இதில் பினீன், டெல்டா கேர்ன், பீட்டா ஒசைமின், மைர்சீன் போன்ற பொருட்கள் உள்ளன.


பசியை தூண்டும்: இந்த மா இஞ்சி பசியை தூண்டும். இதில் குர்குமின், டைமெத்தாக்ஸி குர்குமின், டெஸ் மெத்தாக்ஸி குர்குமின் போன்றவை உள்ளன. இது சமையலில் சேர்ப்பதால் பசியை தூண்டும். இந்த மா இஞ்சியில் மனதை அமைதிப்படுத்தும் பண்புகள் உள்ளன. நரம்பு மண்டலத்தை அமைதிப்படுகிறது. கவலை, தலைவலி, மனச்சோர்வை போக்குகிறது. இதன் வாசனையே மனதிற்கு இதமளிக்கிறது.

மாங்காய் இஞ்சியில் புற்றுநோய் எதிர்ப்பு தன்மை உள்ளது. மரபணு செயல்பாட்டால் ஏற்படும் புற்றுநோய் கட்டிகளைத் தடுக்கிறது. கீமோதெரபி போன்ற புற்றுநோய் சிகிச்சைகளுடன் சேர்த்து இதையும் பயன்படுத்தி வரலாம். அது போல் புற்றுநோய் கட்டியின் வளர்ச்சியை தடுக்க உதவுகிறது.


உடல் சூட்டை குறைக்கும்: மா இஞ்சியில் ஆன்டி பைரிடிக் பண்பு இருப்பதால் உடலில் உள்ள அதிகபடியான சூட்டை குறைக்கிறது. காய்ச்சலை உண்டாக்கும் நோய்க் கிருமிகளை எதிர்த்து போராட உதவுகிறது. பாலியல் ஆசைகளையும் இது தூண்டும். ரத்த ஓட்டத்தை ஊக்குவிக்க பயன்படுகிறது. விந்துகள் சேதமடையாமல் காக்கவும் இந்த மா இஞ்சி உதவுகிறது.

உடல் பருமனுக்கு தீர்வு: மூட்டு வலிக்கு அருமருந்து. நீரிழிவு மற்றும் இதயநோய் போன்ற வளர்சிதை மாற்ற கோளாறுகளுக்கு உடல் பருமன் மிக முக்கியமான காரணம். மாங்காய் இஞ்சியில் குர்குமின் இருப்பதால் இது உடல் பருமனை தடுக்கிறது. மா இஞ்சியில் சளியை தடுக்கும் தன்மை இருப்பதால் இருமலுக்கு நல்ல தீர்வாக இருக்கிறது. இது சுவாச பாதையில் உள்ள சளியையே குறைக்கிறது. இதனால் மூச்சுக்குழாய் அழற்சி, ஆஸ்துமா போன்ற சுவாச நோய்களுக்கு சிகிச்சை அளிக்கவும் உதவுகிறது.

மலமிளக்கி: எல்லாவற்றுக்கும் மேல் பெரும்பாலானவர்களின் முக்கிய பிரச்சினையான மலச்சிக்கலை போக்குகிறது. மா இஞ்சியில் நார்ச்சத்து நிறைந்திருக்கிறது. இதனால் மலத்தில் தண்ணீர் சத்தை அதிகரித்து மலம் எளிதாக வெளியேற உதவுகிறது. இது மட்டும் இல்லாமல் வயிறு தொடர்பான அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்கிறது. சரும நோய்களுக்கும் தீர்வை ஏற்படுத்துகிறது. இந்த மா இஞ்சி கோடை காலத்தில் அதிகமாக கிடைக்கும். இதை வாங்கி பயன்பெறுங்கள்.



Wednesday, 26 February 2025

ஜாதகர் நோய்களின்றி இருப்பார் யார்?

நாம் தேர்வு செய்யும் முகூர்த்த நாளை, அன்றைய தினம் நேத்திரம், ஜீவன் உள்ளதா? என்று கவனித்து தான் பஞ்சாங்கத்தில் குறிப்பிடுவார்கள். சுபகாரியங்கள் செய்யும் பொழுது சுபங்கள் யாவும் விருத்தியாகி வருவதற்கு அது சக்தி மிகுந்த நாளாக இருக்க வேண்டும். மனிதனுக்கோ அல்லது விலங்கிற்கோ உடலும், உயிரும் எவ்வளவு முக்கியமோ, அது போல ஒரு நாளுக்கு சக்தியாக இருப்பது நேத்திரமும், ஜீவனும் தான். ஆம்.. நேத்திரம் – ஜீவன் என்பது ஒரு நல்ல நாளுக்கு உயிரும், உடலும் போல.
நேத்திரம்– ஜீவன் இல்லாத நாளை முகூர்த்த நாளாக தேர்வு செய்ய மாட்டார்கள். நேத்திரம் என்பது உடல். ஜீவன் என்பது உயிர். சரி இந்த நேத்திரம்– ஜீவன் என்பது எதைக் குறிக் கிறது? ஒரு மனிதனுக்கு அடையாளம் என்பது உயிரும், உடலும் தான். உயிர் இல்லாத உடலை ‘பிணம்’ என்றும், உடல் இல்லாத ஜீவனை ‘ஆவி என்றும், ‘ஆன்மா’, ‘ஆத்மா’ என்றும் கூறுவார்கள். ஜோதிட சாஸ்திரத்தில் உயிரை ‘லக்னம்’ என்றும், உடலை ‘சந்திரன்’ என்று குறிப்பிடுகிறார்கள். ஜோதிடத்தில் லக்னம், சந்திரன் இவற்றைக் கொண்டே அனைத்து பலன்களும் கணிக்கப்படுகிறது. இந்த உலகில் தோன்றிய எல்லா உயிர்களும் ஏதோ ஒரு லக்னத்தில், ஏதோ ஒரு நட்சத்திரத்தில் பிறந்து இருக்க வேண்டும். லக்னம், சந்திரன் இன்றி எந்த விதமான ஜாதகமும் கணிக்கப்படுவதில்லை.

பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்ள 24 மணி நேரம் எடுத்துக் கொள் கிறது. ஒரு லக்னத்திற்கு 2 மணி நேரம் வீதம் 12 ராசிகளுக்கு 24 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது. ‘எண் சாண் உடலுக்கு தலையே பிரதானம்’ என்பார்கள். அதுபோல தான் 12 லக்ன பாவங்களுக்கு, லக்னமே பிரதானமாக உள்ளது. இந்த லக்னத்தைக் கொண்டு ஒரு மனிதன் தன்னுடைய வாழ்நாளில் அனுபவிக்கும் இன்பம், துன்பம், நோய்கள், வாழ்வின் உயர்வு– தாழ்வு என சகலவிதமான பலன்களை பற்றியும் பார்க்க முடிகிறது. ஒவ்வொரு மனிதனும் என்ன நோக்கத்திற்காக இந்த பூமியில் பிறந்தான் என்பதைக் கூட இந்த லக்னத்தைக் கொண்டே கணிக்கிறோம்.
லக்னத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி நிறையக் கூறலாம். ஆனால் நமக்குத் தேவையானதை மட்டும் இங்கே பார்க்கலாம். ஒருவரது எண்ணங்களில் எழும் அலைகள் நல்லதாக இருந்தால். அதுவே நல்ல ஆரோக்கியமான உடலைத் தரும். கெட்ட எண்ணங்கள் தோன்றி விட்டால், அதுவே பல நோய்களுக்கு வாசல் கதவை திறந்து விட்டு விடும். இதைத் தான் ‘எண்ணம் போல் வாழ்வு’ என் கிறார்கள். ஒரு மனிதன் தோற்றம், பிறந்த இடம், அந்த இடத்தின் சூழல், எந்த மாதிரியான உருவம் எடுத்து இருக்கிறார்கள் என்பதைப் பற்றி லக்னமே கூறுகிறது
ஒரு மனிதனுக்கு அறிவும், சமயோசித புத்தியும் கொடுப்பது இந்த லக்னம் தான். சிறிய காயம் ஏற்படும்போதே மருந்து சாப்பிட்டு விட வேண்டும், காய்ச்சல் லேசாக இருக்கும் போதே மருத்துவரை சந்தித்து விட வேண்டும் என்ற புத்தியைத் தருவது லக்னமே. ஒருவரது உடலில் எவ்விதமான நோய்களும் இருக்காது. ஆனால் தனக்கு ஏதோ ஒரு நோய் இருப்பது போல நினைக்க வைத்துக் கொண்டே இருப்பதற்கும் இந்த லக்னமே காரணம். எந்த நேரமும் சதா சிந்தனையில் மூழ்கி இருப்பதும், நிறைவேறாத கனவுகள் பற்றி நினைத்து உடலை வருத்திக் கொண்டும், கால நேரம் தவறி உணவு உட்கொண்டு பல நோய்களை வரவழைக்கும் தன்மைக்கும் முக்கிய காரணம் இந்த லக்னம் தான்.
ஒருவரது லக்னத்தை கொண்டே பிறந்த இடம், பிறந்த சூழல் பற்றி அறிந்து கொள்ள முடியும் என்பது போலவே, ஒருவரது மரணத்தின் அந்த கடைசி நிமிடங்கள், மரணம் அடையும் இடம், அதன் சூழல் பற்றியும் கூட இந்த லக்னத்தைக் கொண்டு கணித்துவிட முடியும். மேற்கண்ட நிகழ்வுகள் அனைத்தும் எதனை கொண்டு தீர்மானிக்கப்படுகிறது என்றால், ஜோதிட சாஸ்திரத்தில் லக்னம் நின்ற நட்சத்திர அதிபதியும், லக்னம் நின்ற ராசி அதிபதி அதாவது லக்னாதிபதியும் கொண்டே இவை தீர்மானிக்கப்படுகிறது.

இவற்றில் முக்கியமாக காண வேண்டியவை:– லக்னம் நின்ற நட்சத்திர அதிபதியும், லக்னாதிபதியும் நட்பு கிரகமாக அமைந்து விட்டால் அந்த ஜாதகரின் எண்ணங்கள் ஈடேறும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். அடிக்கடி நோய்கள் வராது. உடல் பொலிவு உண்டாகும். லக்னம் நின்ற நட்சத்திர அதிபதியும் லக்னாதிபதியும் பகை, நீச்சம் பெற்ற கிரகமாக அமைந்து விட்டால், அந்த ஜாதகருக்கு நோய்களுக்கு குறை இருக்காது. சதா சர்வ காலமும் மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொண்டே இருப்பார்.
லக்னம் நின்ற நட்சத்திர அதிபதி சந்திரன், குரு, புதன், சுக்ரன் ஆகிய கிரகங்களின் நட்சத்திரத்தில் நின்று, இந்த கிரகங்களில் ஒருவர் லக்னாதிபதியாக அமைந்து விட்டால் அந்த ஜாதகர் நோய்களின்றி இருப்பார். முதுமை காலத்தில் மட்டுமே நோய்கள் வரக்கூடும். லக்னம் நின்ற நட்சத்திர அதிபதி சூரியன் – செவ்வாய் கிரகங்களின் நட்சத்திரத்தில் நின்று, இவற்றில் எதாவது லக்னாதிபதியாக அமைந்தால், அந்த ஜாதகர்கள் கர்வம், ஆணவம், திமிர் கொண்ட போக்கால் நோய்களைத் தாங்களே தேடி கொள்வார்கள். பிடிவாதம்
முரட்டு குணம் போன்றவற்றால், ரத்த அழுத்தம், இதய நோய்கள் போன்றவற்றுக்கு ஆளாவார்கள்.
லக்னம் நின்ற நட்சத்திர அதிபதி சனி, ராகு, கேது ஆகிய கிரகங்களின் நட்சத்திரத்தில் நின்று சனியே லக்னாதிபதியாக அமைந்து விட்டால், அந்த ஜாதகருக்கு என்னவென்றே கண்டுபிடிக்க முடியாத நோய்கள் கூட வரலாம். அந்தந்த காலகட்டத்தில் தோன்றி வரக்கூடிய புதிய நோய்கள் இவர்களைத் தாக்கும். ஜாதகத்தில் உயிராக போற்றப்படும்


ஜாதகர் நோய்களின்றி இருப்பார் யார்?

நாம் தேர்வு செய்யும் முகூர்த்த நாளை, அன்றைய தினம் நேத்திரம், ஜீவன் உள்ளதா? என்று கவனித்து தான் பஞ்சாங்கத்தில் குறிப்பிடுவார்கள். சுபகாரியங்கள் செய்யும் பொழுது சுபங்கள் யாவும் விருத்தியாகி வருவதற்கு அது சக்தி மிகுந்த நாளாக இருக்க வேண்டும். மனிதனுக்கோ அல்லது விலங்கிற்கோ உடலும், உயிரும் எவ்வளவு முக்கியமோ, அது போல ஒரு நாளுக்கு சக்தியாக இருப்பது நேத்திரமும், ஜீவனும் தான். ஆம்.. நேத்திரம் – ஜீவன் என்பது ஒரு நல்ல நாளுக்கு உயிரும், உடலும் போல.
நேத்திரம்– ஜீவன் இல்லாத நாளை முகூர்த்த நாளாக தேர்வு செய்ய மாட்டார்கள். நேத்திரம் என்பது உடல். ஜீவன் என்பது உயிர். சரி இந்த நேத்திரம்– ஜீவன் என்பது எதைக் குறிக் கிறது? ஒரு மனிதனுக்கு அடையாளம் என்பது உயிரும், உடலும் தான். உயிர் இல்லாத உடலை ‘பிணம்’ என்றும், உடல் இல்லாத ஜீவனை ‘ஆவி என்றும், ‘ஆன்மா’, ‘ஆத்மா’ என்றும் கூறுவார்கள். ஜோதிட சாஸ்திரத்தில் உயிரை ‘லக்னம்’ என்றும், உடலை ‘சந்திரன்’ என்று குறிப்பிடுகிறார்கள். ஜோதிடத்தில் லக்னம், சந்திரன் இவற்றைக் கொண்டே அனைத்து பலன்களும் கணிக்கப்படுகிறது. இந்த உலகில் தோன்றிய எல்லா உயிர்களும் ஏதோ ஒரு லக்னத்தில், ஏதோ ஒரு நட்சத்திரத்தில் பிறந்து இருக்க வேண்டும். லக்னம், சந்திரன் இன்றி எந்த விதமான ஜாதகமும் கணிக்கப்படுவதில்லை.

பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்ள 24 மணி நேரம் எடுத்துக் கொள் கிறது. ஒரு லக்னத்திற்கு 2 மணி நேரம் வீதம் 12 ராசிகளுக்கு 24 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது. ‘எண் சாண் உடலுக்கு தலையே பிரதானம்’ என்பார்கள். அதுபோல தான் 12 லக்ன பாவங்களுக்கு, லக்னமே பிரதானமாக உள்ளது. இந்த லக்னத்தைக் கொண்டு ஒரு மனிதன் தன்னுடைய வாழ்நாளில் அனுபவிக்கும் இன்பம், துன்பம், நோய்கள், வாழ்வின் உயர்வு– தாழ்வு என சகலவிதமான பலன்களை பற்றியும் பார்க்க முடிகிறது. ஒவ்வொரு மனிதனும் என்ன நோக்கத்திற்காக இந்த பூமியில் பிறந்தான் என்பதைக் கூட இந்த லக்னத்தைக் கொண்டே கணிக்கிறோம்.
லக்னத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி நிறையக் கூறலாம். ஆனால் நமக்குத் தேவையானதை மட்டும் இங்கே பார்க்கலாம். ஒருவரது எண்ணங்களில் எழும் அலைகள் நல்லதாக இருந்தால். அதுவே நல்ல ஆரோக்கியமான உடலைத் தரும். கெட்ட எண்ணங்கள் தோன்றி விட்டால், அதுவே பல நோய்களுக்கு வாசல் கதவை திறந்து விட்டு விடும். இதைத் தான் ‘எண்ணம் போல் வாழ்வு’ என் கிறார்கள். ஒரு மனிதன் தோற்றம், பிறந்த இடம், அந்த இடத்தின் சூழல், எந்த மாதிரியான உருவம் எடுத்து இருக்கிறார்கள் என்பதைப் பற்றி லக்னமே கூறுகிறது
ஒரு மனிதனுக்கு அறிவும், சமயோசித புத்தியும் கொடுப்பது இந்த லக்னம் தான். சிறிய காயம் ஏற்படும்போதே மருந்து சாப்பிட்டு விட வேண்டும், காய்ச்சல் லேசாக இருக்கும் போதே மருத்துவரை சந்தித்து விட வேண்டும் என்ற புத்தியைத் தருவது லக்னமே. ஒருவரது உடலில் எவ்விதமான நோய்களும் இருக்காது. ஆனால் தனக்கு ஏதோ ஒரு நோய் இருப்பது போல நினைக்க வைத்துக் கொண்டே இருப்பதற்கும் இந்த லக்னமே காரணம். எந்த நேரமும் சதா சிந்தனையில் மூழ்கி இருப்பதும், நிறைவேறாத கனவுகள் பற்றி நினைத்து உடலை வருத்திக் கொண்டும், கால நேரம் தவறி உணவு உட்கொண்டு பல நோய்களை வரவழைக்கும் தன்மைக்கும் முக்கிய காரணம் இந்த லக்னம் தான்.
ஒருவரது லக்னத்தை கொண்டே பிறந்த இடம், பிறந்த சூழல் பற்றி அறிந்து கொள்ள முடியும் என்பது போலவே, ஒருவரது மரணத்தின் அந்த கடைசி நிமிடங்கள், மரணம் அடையும் இடம், அதன் சூழல் பற்றியும் கூட இந்த லக்னத்தைக் கொண்டு கணித்துவிட முடியும். மேற்கண்ட நிகழ்வுகள் அனைத்தும் எதனை கொண்டு தீர்மானிக்கப்படுகிறது என்றால், ஜோதிட சாஸ்திரத்தில் லக்னம் நின்ற நட்சத்திர அதிபதியும், லக்னம் நின்ற ராசி அதிபதி அதாவது லக்னாதிபதியும் கொண்டே இவை தீர்மானிக்கப்படுகிறது.

இவற்றில் முக்கியமாக காண வேண்டியவை:– லக்னம் நின்ற நட்சத்திர அதிபதியும், லக்னாதிபதியும் நட்பு கிரகமாக அமைந்து விட்டால் அந்த ஜாதகரின் எண்ணங்கள் ஈடேறும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். அடிக்கடி நோய்கள் வராது. உடல் பொலிவு உண்டாகும். லக்னம் நின்ற நட்சத்திர அதிபதியும் லக்னாதிபதியும் பகை, நீச்சம் பெற்ற கிரகமாக அமைந்து விட்டால், அந்த ஜாதகருக்கு நோய்களுக்கு குறை இருக்காது. சதா சர்வ காலமும் மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொண்டே இருப்பார்.
லக்னம் நின்ற நட்சத்திர அதிபதி சந்திரன், குரு, புதன், சுக்ரன் ஆகிய கிரகங்களின் நட்சத்திரத்தில் நின்று, இந்த கிரகங்களில் ஒருவர் லக்னாதிபதியாக அமைந்து விட்டால் அந்த ஜாதகர் நோய்களின்றி இருப்பார். முதுமை காலத்தில் மட்டுமே நோய்கள் வரக்கூடும். லக்னம் நின்ற நட்சத்திர அதிபதி சூரியன் – செவ்வாய் கிரகங்களின் நட்சத்திரத்தில் நின்று, இவற்றில் எதாவது லக்னாதிபதியாக அமைந்தால், அந்த ஜாதகர்கள் கர்வம், ஆணவம், திமிர் கொண்ட போக்கால் நோய்களைத் தாங்களே தேடி கொள்வார்கள். பிடிவாதம்
முரட்டு குணம் போன்றவற்றால், ரத்த அழுத்தம், இதய நோய்கள் போன்றவற்றுக்கு ஆளாவார்கள்.
லக்னம் நின்ற நட்சத்திர அதிபதி சனி, ராகு, கேது ஆகிய கிரகங்களின் நட்சத்திரத்தில் நின்று சனியே லக்னாதிபதியாக அமைந்து விட்டால், அந்த ஜாதகருக்கு என்னவென்றே கண்டுபிடிக்க முடியாத நோய்கள் கூட வரலாம். அந்தந்த காலகட்டத்தில் தோன்றி வரக்கூடிய புதிய நோய்கள் இவர்களைத் தாக்கும். ஜாதகத்தில் உயிராக போற்றப்படும்


ஒரு சுபதினத்தை தேர்வு செய்வதற்கு முன் அன்றைய நாளில் நேத்திரம், ஜீவன் உள்ளதா?

ஒரு சுபதினத்தை தேர்வு செய்வதற்கு முன் அன்றைய நாளில் நேத்திரம், ஜீவன் உள்ளதா? என்று பஞ்சாங்கத்தில் கவனித்து பார்ப்பார்கள். ஏனெனில் சுபகாரியங்கள் நல்லபடியாக நடைபெற்று, அபரிவிதமான நல்ல பலன்களை அள்ளித்தர அந்த நாள் சக்தி வாய்ந்த நாளாக இருக்க வேண்டும்.

மனிதனுக்கு உயிர் எவ்வளவு முக்கியமோ அதுபோல ஒரு நாளுக்கு மிகுந்த சக்தியை கொடுப்பது நேத்திரமும், ஜீவனும் தான். ஆம்! ஒரு நல்ல நாளுக்கு உயிரும், உடலுமாக இருப்பது நேத்திரம், ஜீவன் மட்டுமே!

நேத்திரம் என்றால் என்ன?

நேத்திரம் என்றால் கண்கள் என்று பொருளாகும். பாதைகள் சிக்கலாக இருந்தாலும் விழிகள் இருந்தால் சிக்கலையும் எளிமையாக கடந்து செல்ல இயலும் அல்லவா! அதுபோல தான் ஒருநாள் எவ்வளவு சிக்கல்கள் நிறைந்ததாக இருந்தாலும் அந்த நாளில் நாம் மேற்கொள்ள போகும் செயலுக்கு ஒரு உதவியோ அல்லது தடையை நீக்குவதற்கான ஆலோசனைகள் கிடைத்தால் அது சிக்கலை குறைப்பதற்கு உதவும் அல்லவா!

ஒருநாளின் வலிமையை நேத்திரம் மூலம் மூன்று வகைகளில் நாம் அறிந்து கொள்ளலாம்.


1. இரண்டு கண் உள்ள நாட்கள்:

இந்நாட்கள் மிகச்சிறந்த பலன்களை வழங்கும் நாட்கள்.

எந்தவொரு சுப செயலையும் இந்த நாட்களில் மேற்கொள்ளலாம்.

2. ஒரு கண் உள்ள நாட்கள்:

இந்நாட்கள் மிதமான பலன்களை வழங்கும் நாட்கள்.

இந்த நாட்களில் சுப செயல்களை மேற்கொள்ள சற்று கவனமாக இருப்பது நல்லது.

3. குருட்டு நாட்கள்:

இந்நாட்கள் ஆபத்துகள் மற்றும் தடைகள் நிறைந்த நாட்கள்.

இந்த நாட்களில் முக்கிய செயல்களை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் பலவிதமான தடைகளை இந்நாட்களில் எதிர்கொள்ளலாம்.

ஆகவே, நாம் செய்யும் செயலுக்கு எந்த நாள் சரியாக இருக்கும் என்பதையும் நாம் இதன்மூலம் தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும்.

நேத்திரம் கணக்கிடும் முறை:

அஸ்வினி முதல் அன்றைய நட்சத்திரம் வரை உள்ள நாட்களை எண்ணி, அந்த எண்ணிக்கையை ஒன்பதால் வகுத்து மீதி வந்த எண்ணின் நிலையை பொறுத்து அந்த நாளின் வலிமையை அறிந்து கொள்ள முடியும்.

மீதியின் அடிப்படையில் வகைப்படுத்தல்:

மீதிகள் 1, 2, 3, 4 : இரண்டு கண் உடைய நாள் – சுபம்!

மீதிகள் 5, 6, 7 : ஒரு கண் உடைய நாள் – மத்தியமான சுபம்!

மீதிகள் 8, 9, 0 : குருட்டு நாள் – சுபம் தவிர்க்க வேண்டும்.

உதாரணத்திற்கு

ஒருநாள் 14வது நட்சத்திரம் ஆக இருந்தால்,

14 ÷ 9 = 1 மீதி 5

மீதி 5 என்பதால், ஒரு கண் உடைய நாள் – மத்தியமான பலன்களை கொடுக்கும்.

ஜீவன் என்றால் என்ன?

ஒருநாள் எவ்வளவு தான் சிறப்பு நிறைந்ததாக இருந்தாலும் அந்த நாள் ஜீவன் நிறைந்த நாளாக இருந்தால் நாம் செய்ய நினைக்கும் காரியங்களில் எதிர்பார்த்த அனைத்து வெற்றிகளும், லாபங்களும் கிடைக்கும்.

நேத்திரம் எப்படி மூன்று விதங்களில் பிரிக்கப்பட்டு இருக்கிறதோ அதேபோன்று தான் ஜீவனும் மூன்று விதங்களில் பிரிக்கப்பட்டுள்ளது. அதாவது,

முழு ஜீவன் – முழு வாழ்க்கை, மிகச்சிறந்த நாள்.

அரை ஜீவன் – அரை வாழ்க்கை, மத்தியமான பலன்களை தரும் நாள்.

ஜீவன் இல்லாத நாள் – உயிரற்ற நாள், நல்ல காரியங்களை தவிர்க்க வேண்டிய நாள்.

ஜீவன் கணிதமுறைகள் :

சூரியன் இருக்கும் நட்சத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு ஜீவன் வகைப்படுத்தப்படுகிறது.

சூரியன் இருக்கும் நட்சத்திரத்திற்கு முன், பின் உள்ள நட்சத்திரம் ஜீவன் இல்லாத நட்சத்திரங்கள். ஆகையால் இந்நாட்களை தவிர்க்க வேண்டும்.

சூரியன் இருக்கும் நட்சத்திரத்திற்கு 3, 4, 5, 6, 7, 8 முன், பின் உள்ள நட்சத்திரங்கள் அரை ஜீவன் உள்ள நட்சத்திரங்கள். மத்திம பலன்களை கொடுக்கும்.

சூரியன் இருக்கும் நட்சத்திரத்திற்கு 9-13 முன், பின் உள்ள நட்சத்திரங்கள் ஒரு ஜீவன் உள்ள நட்சத்திரங்கள். நன்மையை தரும்.

நேத்திரமும் ஜீவனும் ஏற்படுத்தும் தாக்கங்கள்:

முழுமையாக நேத்திரமும், ஜீவனும் இருக்கும் நாள்:

ஒரு நாளில் நேத்திரம் இரண்டு கண்கள், ஜீவன் முழுவாழ்க்கையாக இருந்தால், நினைத்த செயல்கள் எதிர்பார்த்த முறையில் நடைபெறும். வெற்றிகள் கிடைக்கும்.

இந்நாளில் என்ன செய்யலாம்?

தொழில், கல்வி, திருமணம் போன்ற அனைத்து முக்கிய சுப செயல்களை மேற்கொள்ளலாம்.

நேத்திரமும், ஜீவனும் மத்தியமான நாள்:

ஒரு நாளில் நேத்திரம் ஒரு கண்ணாகவும், ஜீவன் அரைவாழ்க்கையாகவும் இருந்தால், சிறு அளவிலான வெற்றிகள் கிடைக்கும். ஆனால் அவ்வளவு எளிதாக வெற்றி கிடைக்காது. சவால்கள் மற்றும் அலைச்சல்கள் ஏற்படும்.

இந்நாளில் என்ன செய்யலாம்?

சாதாரண செயல்கள், நுண்ணறிவு செயல்களை மேற்கொள்ளலாம்.

நேத்திரமும், ஜீவனும் இல்லாத நாள்:

ஒரு நாளில் நேத்திரம் குருட்டாகவும், ஜீவன் உயிரற்றவையாகவும் இருந்தால் எதிர்பார்த்த வெற்றிகள் பெற முடியாது.

இந்நாளில் முக்கிய செயல்களை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் பலவிதமான தடைகள் ஏற்படலாம்.

நேத்திரம் மற்றும் ஜீவன் ஆகியவை பஞ்சாங்கத்தின் முக்கிய அம்சங்களாகும். ஒரு நாளின் சிறப்புகளை, ஆபத்துகளை புரிந்து கொண்டு, சரியான நேரத்தில் சரியான செயல்களை மேற்கொள்ள இது உதவுகிறது. ஜோதிடர் ஆலோசனை பெறுவதன் மூலம், இந்த அம்சங்களை முழுமையாக பயன்படுத்தி, வாழ்க்கையில் சிறந்த முடிவுகளை எடுக்க முடியும்.


Tuesday, 25 February 2025

ஊமத்தங்காய் தீபம்


ஊமத்தங்காய் தீபம் ஏற்றினால் மகிழ்ச்சி, பணம், செல்வம் பெருகும்.. இன்று சிவராத்திரி இதை செய்து பாருங்க

 வீட்டில் ஏற்படும் கஷ்டமும், வறுமையும் நமக்கு மனதில் பெரும் கவலையை உண்டுபண்ணிவிடும்.. இந்த கஷ்டங்களை போக்க சில பரிகாரங்களை செய்ய சொல்கிறார்கள் பெரியவர்கள்.. அந்தவகையில், சிவபெருமானுக்கு ஊமத்தங்காய் தீபம் ஏற்றினால் அற்புத மாற்றங்கள் ஏற்படும் என்கிறார்கள்.

ஊமத்தங்காய் பெரிய இலைகளுடன், காய்களின் வெளிப்பரப்பில், முட்கள் அதிகமாக காணப்படும்.. இந்த செடியின் வேர், இலை, பூக்கள், விதை என எல்லாமே மருத்துவ குணம் கொண்டவை. சித்தபிரம்மையையே நீக்கக்கூடிய இந்த ஊமத்தங்காய் வாத நோய்களை கட்டுப்படுத்தும். நரம்புகளைப் பலப்படுத்தும்.

Spirituality Oomathangai Dheepam Mahashivratri
இலை, காய், விதைகளில் மருத்துவ குணம்
இந்த இலைகளை விளக்கெண்ணை தடவி அடுப்பில் வதக்கி, உடம்பில் வலி, ரணங்கள் உள்ள இடங்களில் கட்டலாம். வலி, வீக்கம்.. மூட்டு வலிகள், மூட்டு வீக்கங்களுக்கும் இந்த இலையில் ஒத்தடம் தரலாம். பெண்களுக்கு பிரசவ நேரத்தில் தரப்படும் மயக்க மருந்துகளில், மூலப்பொருளாகவும், தாய்ப்பால் கட்டிக்கொண்டாலும் இந்த இலையே பயன்படுகிறது.

ஆன்மீகத்திலும் ஊமத்தங்காய்களுக்கு தனி இடம் உண்டு.. ஊமத்தை இலையால் சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்வதால் வீட்டிலுள்ள கஷ்டங்கள் தீரும் என்பது நம்பிக்கையாக உள்ளது.. மேல்பகுதியில் முட்கள் நிறைந்த இந்த ஊமத்தங்காயில் தீபம் ஏற்றினால், வாழ்வில் ஏற்றமும், வளமும் பெருகும்..

நிதி சிக்கலை போக்கும்
கையில் பணமின்றி திணறுபவர்கள், கடன், பணப் பிரச்சனையில் சிக்கியுள்ளவர்கள், இந்த தீபத்தை ஏற்றினால் 3 வாரங்களில் நல்ல மாற்றத்தை காணலாம்.. நாட்டு மருந்து கடைகளில் இந்த காய்கள் கிடைக்கின்றன.

வெள்ளிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில், ஒரு மஞ்சள் துணியில், 1 ரூபாய் நாணயம், ஊமத்தங்காய், ஊமத்தம்பூவை வைத்து, முடிச்சு போட்டு, வீட்டின் நிலைவாசலில் கட்டி தொங்க வைத்துவிட வேண்டும். வீட்டில் தீபம் ஏற்றி ஊதுபத்தி காண்பிக்கும்போது இந்த முடிச்சுக்கும் ஊதுவத்தி காண்பிக்க வேண்டும்.

விநாயகருக்கு ஊமத்தம் பூக்கள்
ஊமத்தம் பூக்களை ஒற்றை எண்ணிக்கையில், விநாயகருக்கு வீட்டில் சூட்டி வரலாம்.. 3 வார திங்கட்கிழமை விநாயகருக்கு ஊமத்தை இலை அர்ச்சனை, ஊமத்தம் பூவைச் சூட்டி, உங்கள் கஷ்டங்கள் தீர வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டாலும், விரைவில் நல்ல மாற்றத்தை காணலாம்.

இன்று சிவராத்திரி என்பதால், ஊமத்தங்காய் பரிகாரம் செய்யலாம். சிவராத்திரியில், நிஷிதா பூஜையின் போது, மகாதேவனை நினைத்து, சிவலிங்கத்தின் மீது ஒரு ஊமத்தங்காயை அர்ப்பணிக்க வேண்டும்.. பிறகு ஸ்ரீ சிவாய நமஸ்துப்யம் மந்திரத்தை உச்சரித்து, அரைமணி நேரம் வழிபாட்டிற்கு பிறகு, அந்த ஊமத்தங்காயை ஒரு துணியில் கட்டி உங்கள் வீட்டில் பாதுகாப்பாக வைத்துவிடலாம். இதனால் வீட்டிலுள்ள வறுமை நீங்கி உங்கள் செல்வமும் மகிழ்ச்சியும் பெருகும்.

கண்திருஷ்டிக்கு விளக்கு
அதேபோல, இந்த ஊமத்தங்காய்களின் காம்புகளை நீக்கி விட்டு, சிறிய துளை போட்டு, அதற்குள்ளிருக்கும் வீதைகளை நீக்கிவிட வேண்டும். பிறகு சிறிது வெண்கடுகு போட்டு, ஒரு சிறிய மண் அகல் விளக்கின் மீது உமத்தங்காய்களை, அதனுள் இலுப்பை எண்ணெய் மட்டுமே ஊற்றி பஞ்சு திரி போட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றிவைத்துவிட்டு சிவபெருமானை வேண்டிக் கொண்டால் போதும். தொடர்ந்து 9 ஞாயிற்றுக்கிழமை இந்த தீபத்தை ஏற்றி வந்தால், கண் திருஷ்டி, வறுமை, நிதி பற்றாக்குறை என அனைத்துமே விலகிவிடும்.


Sunday, 23 February 2025

கொட்டைப் பாக்கு.


ஒரு கொட்டைப் பாக்கை இரவில் தண்ணீரில் ஊற வைத்து... கொலஸ்ட்ரால், மலச் சிக்கலுக்கு சூப்பர் தீர்வு
கொட்டைப் பாக்கை இரவில் தண்ணீரில் ஊற வைத்து குடித்தால், கொலஸ்ட்ரால், மலச் சிக்கலுக்கு தீர்வு கிடைக்கும் கொட்டைப் பாக்கை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை இங்கே பார்ப்போம்.

kottai paakku dr nithya
தாம்பூலத்தில் சேர்க்கப்படும் முக்கியமான ஒரு பொருள் கொட்டைப் பாக்கு. இந்த கொட்டைப் பாக்கிற்கு சித்த மருத்துவத்தில் ஒரு முக்கிய இடம் இருக்கிறது. குறிப்பாக பெண்களுக்கு கொட்டைப் பாக்கை மறந்துவிட வேண்டாம்.

கொட்டைப் பாக்கை இரவில் தண்ணீரில் ஊற வைத்து குடித்தால், கொலஸ்ட்ரால், மலச் சிக்கலுக்கு தீர்வு கிடைக்கும் என்று டாக்டர் நித்யா பரிந்துரைக்கிறார். கொட்டைப் பாக்கை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை இங்கே பார்ப்போம்.

கொட்டைப் பாக்கின் மருத்துவ குணம் குறித்து “பொதுவாக சாப்பிட்ட பிறகு வழக்கத்தில் இருந்த தாம்பூலம் தரிப்பது மறைந்து வருகிறது. அந்த தாம்பூலத்தில் சேர்க்கப்படும் முக்கியமான ஒரு பொருள் கொட்டைப் பாக்கு. இந்த கொட்டைப் பாக்கிற்கு சித்த மருத்துவத்தில் ஒரு முக்கிய இடம் இருக்கிறது. குறிப்பாக பெண்களுக்கு கொட்டைப் பாக்கை மறந்துவிட வேண்டாம்.

பெண்களுக்கு கர்ப்பப்பை தொடர்பான நோய்களுக்கு தரப்படும் சித்த மருந்துகளில் ஒரு முக்கிய மூலிகையாக கொட்டைப் பாக்கு இருக்கிறது.

பலரும் எடை குறைவாகத்தான் இருக்கிறேன், ரத்தத்தில் சுகர் இல்லை, ஆனால், கொலஸ்ட்ரால் இருக்கிறது என்று கூறுவார்கள். பொதுவாக துவர்ப்பு சுவை உள்ள பொருட்களுக்கு கொழுப்பை வெளியேற்றக்கூடிய ஆற்றல் இருக்கிறது. அந்த வகையில் துவர்ப்பு சக்தி உள்ள கொட்டைப் பாக்கிற்கு, உடலில் உள்ள கொழுப்பை வெளியேற்றக்கூடிய ஆற்றல் இருக்கிறது. ரத்த நாளங்களில் படிந்துள்ள கொழுப்பையும் கரைக்கக்கூடியது.

இந்த கொட்டைப் பாக்கை எப்படி பயன்படுத்தலாம் என்றால், கொட்டைப் பாக்கை பவுடர் மாதிரி அரைத்து வைத்துக்கொண்டு, இதை வெந்நீரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்துக்கொண்டு வர வேண்டும். அப்படி குடித்து வந்தால், கொலஸ்ட்ரால் பிரச்னை சரியாகும். பெண்களுக்கு தைராய்டு பிரச்னை, ஃபைப்ராய்டு யுட்ரெஸ் பிரச்னை இருந்தால், இந்த கொட்டைப் பாக்கு தண்ணீரை குடிக்கலாம்.

கொட்டைப் பாக்கை பவுடர் செய்ய முடியாது என்றால், அவர்கள் இரவில் ஒரு கொட்டைப் பாக்கை எடுத்து தூளாக நசுக்கி 300 மி.லி தண்ணீரில் ஊற வைத்துவிட வேண்டும். காலையில் அந்த தண்ணீரை நன்றாகக் கொதிக்க வைத்து, இதனுடன் சோம்பு, சீரகம் கொஞ்சமாக சேர்த்து, 100 - 150 மி.லி ஆக வர வரைக்கும் நன்றாகக் கொதிக்க வைத்து, வடி கட்டி குடிக்க வேண்டும். இப்படி கொட்டைப் பாக்கை தண்ணீரை தினமும் குடித்து வந்தால் தைராய்டு பிரச்னை, மாதவிடாய் பிரச்னை ஆகியவை சரியாகும்.

நெஞ்சில் சளி இருந்தால், கபம் இருந்தால் இந்த கொட்டைப் பாக்கு பவுடரை வெந்நீரில் கலந்து குடித்தால் வெளியேற்றும். மலச்சிக்கலைத் தீர்க்கும்

Saturday, 22 February 2025

மறைவு ஸ்தானம் தரும் பலன்கள்

 
மறைவு ஸ்தானம் தரும் பலன்கள்

 கேந்திரம் 1, 4, 7, 10 ஆகிய இடங்கள், திரிகோணம் 1, 5, 9 ஆகிய இடங்கள், பணபரம் 2, 5, 8, 11 -ம் இடங்கள், ஆபோக்லீபம் 1, 3, 6, 9, 12-ம் இடங்கள், மறைவு ஸ்தானங்கள் 3, 6, 8, 12 ஆகிய இடங்கள் சொல்லப்படுகிறது. இதில் கேந்திரம், திரிகோணம் ஆகியவை மிக முக்கிய சுப ஸ்தானங்கள் ஆகும். அதே போல் மறைவு ஸ்தானங்களை ‘துர்ஸ்தானம்’ என்கிறார்கள். ஒரு மனிதனுக்கு தன்னுடைய வாழ்வில் நடக்கும் கெட்ட சம்பவங்கள் அனைத்தும் மறைவு ஸ்தானத்தில் தான் சொல்லப்படுகிறது. நம்முடைய கண்களுக்கு புலப்படாத அனைத்துமே ‘மறைவு’ என்று பொருள் கொள்ளப்படுகிறது. கண்களால் காண முடியாத அனைத்தும் பொய் என்றும், அறியப்படாத பொருள் என்றும் கருதப்படுகிறது. இவ்வாறு அறியப்படாத விஷயங்கள் அனைத்தையும் மறைவு ஸ்தானத்தில் ஆதிபத்தியங்களாக வைத்திருக்கிறார்கள்.
ஒருவரது வாழ்வில் மறைந்து இருக்கும் விஷயங்களை கூட வெளிக்காட்டி கொடுக்கும் சக்தி ஜோதிடத்திற்கு உண்டு. அவ்வாறு மறைந்து இருக்கும் விஷயங்களை பற்றி தெரிந்து கொள்ளத் தான் மறைவு ஸ்தானம் என்பதை உருவாக்கினார்கள். ஒருவருக்கு நோய், ஆயுள், மனோபாவம் இவற்றை எல்லாம் மறைவு ஸ்தானத்தில் விரிவாக பார்க்கலாம்.மூன்றாம் பாவம் ஜாதகத்தில் உள்ள ராசி கட்டத்தில் லக்னத்தில் இருந்து மூன்றாவது கட்டமாக இருப்பதே மூன்றாம் பாவமாகும். இது சகோதர பாவமாக உள்ளது. இதில் ஜாதகருக்கு பின்னும் சகோதர, சகோதரிகள் இருக்கிறார்களா? என்பது பற்றியும், அந்த சகோதரர்கள் வாழ்க்கை தரம் பற்றியும், அவர்களுக்கு வரக்கூடிய நோய்கள் பற்றியும் அவர்களது மனோபாவ நிலைகளை பற்றியும் எடுத்துக் கூறலாம்.

அதே போல் ஜாதகரின் மனம், அந்த மனதின் நிலைபாடுகள் பற்றியும் பார்க்கலாம். கடல் அளவு துன்பம் வந்தாலும் அதனை தாங்கி நிற்கும் மனதைரியம் பற்றி பார்க்கலாம். இவரது மனதில் தோன்றும் ஆயிரம் ஆசைகள் மற்றும் கற்பனைகள், எண்ணங்களின் வடிவமாக தோன்றக்கூடிய கனவுகள், எதிர்பாராமல் நடக்கும் சில சம்பவங்கள் அதன் நினைவு அலைகள் பற்றி இந்த மூன்றாம் பாவம் தான் கூறுகிறது. நமது உடல் உறுப்புகளாக இருக்கும் கழுத்து பகுதி, காது மற்றும் குரல், தொண்டை, மூச்சுக் குழாய் மற்றும் உணவு குழாய் உள்ள பகுதி, நாசி இவற்றை எல்லாம் இங்குதான் காண முடிகிறது. நம்மை யாராவது நினைத்தால் உடனே நமக்கு தோன்றும் விக்கல், மனதிலும் எண்ணத்திலும் தோன்றும் கற்பனைகள் மற்றும் குண்டலினி சக்தியாக திகழும் தியான கலை போன்றவை கை கூடி வர இந்த பாவத்தையே பார்க்க வேண்டும்.

‘அக சுத்தம் ஆண்டவனின் சித்தம்' என்பார்கள். அவ்வாறு மனதை தூய்மையாக வைத்து இருக்க செய்வது இந்த பாவம் தான். மேலும் மனம், தைரியம், எண்ணம், கற்பனை, நினைவுகள், குரல் தோன்றும் இடம் இவையாவும் நம் கண்களில் காண முடியாது என்பதால், ஜோதிடத்தில் இந்த மூன்றாம் பாவத்தை மறைவு ஸ்தானமாக வைத்து இருக்கிறார்கள். இந்த மூன்றாவது ஸ்தானத்தில் நின்ற கிரகங்களின் பலன்களைப் பற்றி பார்ப்போம். * மூன்றாம் பாவத்தில் சூரியன் நின்றால், ஜாதகருக்கு சிம்ம குரல் இருக்கும். அவசியமற்ற தேவையற்ற சிந்தனைகள், கற்பனைகளை வளர்த்துக் கொள்ள மாட்டார்கள். அசுரத்தனமான மன தைரியம் கொண்டவர். இவரது மனமும், உடலும் வேகமாக இருக்கும். இவருக்கு பின் சகோதரர் இருப்பார்.

* மூன்றாம் பாவத்தில் சந்திரன் நின்றால், ஜாதகருக்கு மெல்லிய குரல் இருக்கும். கற்பனைத் தேரில் பறந்து கொண்டே இருப்பார். சந்திரன் மூன்றில் மறைவதால், ஏதாவது நோய் தொல்லை இருந்து கொண்டே இருக்கும். சமயத்திற்கு தகுந்தாற்போல் தங்களை மாற்றிக் கொள்வார்கள். ஆன்மிகம், தியானம் இவற்றில் மனம் நாடும். ஜாதகருக்கு பின் சகோதரி ஒருவர் இருப்பார். * மூன்றாம் பாவத்தில் செவ்வாய் நின்றால், அந்த ஜாதகர் எப்போதும் டென்ஷனாக இருப்பார். பேச்சுகளில் அதட்டல் குரல் வெளிப்படும். மனதில் கள்ளம் கபடம் இன்றி நேர்மையாக இருப்பார்கள். இவர்களுக்கு உடல் சூடு இருக்கும். இவர்களுக்கு மனம் ஒருநிலை கொள்ளாது இருப்பதே ஒருவகை நோய் தான். நாசி பகுதியிலும், கழுத்துப் பகுதியிலும் வலிகள் வந்து போகும்.
* மூன்றாம் பாவத்தில் புதன் நின்றால், நடைமுறைக்கு சாத்தியப்படாத கற்பனையில் வாழ்வார்கள். இவர்களுக்கு மூச்சுக்குழாய் இறுகிக் கொள்வது, உணவு உண்பதில் சிரமம், அடிக்கடி தொண்டை குழி வறண்டு போவது, தொண்டை வலி போன்றவை உண்டாகும். சில சமயம் மூச்சு திணறல் மற்றும் தூசி படலத்தால் ஒவ்வாமை இருக்கும். கழுத்தில் மருக்கள், மச்சம் இருக்கும். இந்த ஜாதகர் சாந்தமான குரல் கொண்டிருப்பார். * மூன்றாம் பாவத்தில் குரு நின்றால், கழுத்து பகுதியில் சதை பற்று அதிகமாக இருக்கும். கணீர் என்ற வெண்கல குரல் இருக்கும். காதுகளில் நமைச்சல் உணர்வு இருக்கும். மன வசீகர சக்தி இருக்கும். சுவாச கோளாறுகள் வரக்கூடும். வயது ஆகும் போது சில இடங்களில் வாயுத்தொல்லை ஏற்படும்.
* மூன்றாம் பாவத்தில் சுக்ரன் நின்றால், இனிமையான குரலில் பேசும் தன்மை கொண்டவராக இருப்பார். இவர்களுக்கு நாசியில் பிரச்சினை வரக்கூடும். காதுகளிலும் நரம்புகளிலும் பிரச்சினை வரலாம். கற்பனைகள், கனவுகளுக்கு அளவு இல்லை என்றாலும், அவை எல்லைகடந்ததாக இருக்கும். முதுமை காலத்தில் சில பிரச்சினைகள் வரும். * மூன்றாம் பாவத்தில் சனி நின்றால், ஜாதகர் கழுத்து மற்றும் நாசி பகுதியில் பிரச்சினைகள் வரும். மனம் கெட்டவைகளை பற்றியே சிந்திக்கும். காது மந்தமாக கேட்கும். மூச்சு பிடிப்பு, கழுத்து பிடிப்பு இருக்கக்கூடும். அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுவதால் தொண்டையில் எலும்புகள், மீன் முள் அடிக்கடி மாட்டிக் கொள்ள வாய்ப்பு உண்டு. பேசுவது கூட பிறருக்கு கேட்காதபடி மந்தக்குரலாக இருக்கும்.
* மூன்றாம் பாவத்தில் ராகு நின்றால், கழுத்து நீண்டு இருக்கும். நல்ல குரல் ஓசை இருக்காது. அடிக்கடி விக்கல் வரும். உணவு குழாய் சீராய் வைத்து கொள்ள வேண்டும். மனக்குழப்பம், மனதைரியம் இல்லாமல் இருப்பதாலேயே பாதி நோய்க்கு ஆளாகி விடுவார்கள். * மூன்றாம் பாவத்தில் கேது நின்றால், மனம் கெட்டதையே நாடும். பொறாமை, சூது, வஞ்சம் என்கிற மனப்போக்கில் இருப்பார்கள். மன தைரியம் குறைந்தாலும், காரியத்தில் கண்ணாக இருப்பார்கள். உணவும், சுவாசமும் இவற்றில் மிகுந்த அக்கறை கொள்ள வேண்டும். கழுத்து வலி, கழுத்தில் மருக்கள், மச்சம் இருக்கும். குரல் ஓசை கேட்கும்படியாக இருக்காது.
மூன்றாம் பாவம் என்னும் மறைவு ஸ்தானங்களில், நவக்கிரகங்களும் நின்றால் என்ன பலன் கிடைக்கும் என்பதை இங்கே பார்த்தோம். இந்த பாவத்தில் கூட்டுக் கிரகங்கள் இருந்தால் அவற்றுக்கு ஏற்றபடி பலன்கள் மாறுபடும். மூன்றாம் பாவத்தில் எந்த கிரகமும் இல்லையென்றாலும் மூன்றாம் பாவ அதிபதி எங்கு உள்ளார் என்பதைப் பொறுத்தும், எந்த கிரகத்தோடு சேர்ந்து இருக்கிறாரோ அவற்றுக்கு ஏற்றபடியும் பலன்கள் மாறுபடும். அதாவது மூன்றாம் பாவாதிபதி மற்றும் மூன்றாம் பாவத்தை பார்க்கும் கிரகத்தை விட மூன்றாம் பாவத்தில் நின்ற கிரகமே வலிமையான கிரகமாக இருக்கும்.
மூன்றாம் பாவத்தில் சூரியன், சந்திரன், புதன், குரு, சுக்ரன் இந்த கிரகங்கள் நின்றால் நல்லது. இவை தவிர செவ்வாய், சனி, ராகு, கேது நிற்கக் கூடாது. மறைந்த இடத்தில் கெட்ட கிரகங்கள் நின்றால் நல்லது என்றாலும் அதன் பாதிப்புகள் துன்பத்தைத் தருவதாக அமைந்து விடும். மூன்றாம் பாவம், சுப கிரக பார்வையில் இருந்தால் சில நன்மைகள் நடைபெறும் வாய்ப்பு உண்டு. ஜோதிட நூல்கள் மூன்றாம் பாவத்தை மறைவு ஸ்தானமாக எடுத்துக் கொள்வதில்லை. இந்த மூன்றாம் பாவத்திற்கு பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதும் இல்லை. ஏனெனில் மூன்றாம் பாவத்திற்கு எதிர் பாவமாக பாக்கிய ஸ்தானமாக 9-ம் பாவம் உள்ளது. இந்த ஒன்பதாம் பாவம் சிறப்பாக அமைந்தால், அது மூன்றாம் பாவத்தின் பிரச்சினைகளை குறைத்து விடும் என்பது ஜோதிட விதியாகும்.


பணபர ஸ்தானங்கள்



பணபர ஸ்தானங்கள்



பணபர இல்லங்கள் (ஸ்தானங்கள்) என்பது ஒரு ஜாதக கட்டத்தில் தன ஸ்தானமான 2-ஆம் இடமும், பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் இடமும், ஆயுள் ஸ்தானமான எட்டாம் இடமும் மற்றும் லாப ஸ்தானமான 11-ஆம் இடமும் ஆகும்.

பணபர ஸ்தானங்கள் (2,5,8,11 ) என்பது கேந்திர ஸ்தானங்களுக்கு (1,4,7,10) அடுத்தடுத்த ஸ்தானங்கள் ஆகும்.

"காசேதான் கடவுளப்பா அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா!

கைக்கு கை மாறும் பணமே உன்னை கைப்பற்ற நினைக்குது மனமே !

ஒருவர் சாதகம் பார்க்க வரும்பொழுது கூட "நான் எப்ப பணக்காரன் ஆவேன்?" என கேள்வி கேட்பவர்களே பெரும்பாலனவர்கள் உள்ளனர்.

"திரை கடலோடியும் திரவியம் தேடு " என்பது தமிழர்களின் வாழ்வியல் இலட்சியம் அகும்.



பணபர ஸ்தானம் என்பது பணம் சேர்க்கும் யுக்தி அல்லது தந்திரம் ஆகும். மற்றவர் கைகளிலும் மற்றும் பைகளிலும் உள்ள பணத்தினை தனது பைகளுக்கும் மற்றும் கைகளுக்கும் வர வைக்கும் யோகம் ஆகும்.

ஒருவரால் சேர்க்கப்படும் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் அனைத்தையும் சாதக கட்டத்தில் பணபர ஸ்தானமான எந்த சாதக கட்டத்தில் அடங்கும் என்பதனை இப்பதிவில் விரிவாக காண்போம்.

இரண்டாம் இடம்

ஒருவன் தனது கடின உடல் உழைப்பால் சேர்க்கப்படும் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் அனைத்தையும் முதல் பணபர ஸ்தானமான அதாவது தன ஸ்தானமான இரண்டாம் இடத்தில் அடங்கும்.

ஒருவர் எந்த விதமான அடிப்படை இன்றி தனது உடல் உழைப்பையே மூலதனமாக கொண்டு சேர்க்கும் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் அனைத்தையும் இவ்வகையில் அடங்கும்.

ஐந்தாம் இடம்



ஒருவன் தனது புத்தியாலும் மற்றும் பூர்வீக வழியிலும் சேர்க்கப்படும் அசையும் மற்றும் அசையா சொத்துகள் அனைத்தும் இரண்டாம் பணபர ஸ்தானமான அதாவது பூர்வ புண்ணிய ஸ்தானம் எனப்படும் ஐந்தாம் இடத்தில் அடங்கும்.

ஒருவன் தான் கற்ற கல்வியாலோ அல்லது பெற்ற வித்தையாலோ சேர்க்கப்படும் பணம் இந்த ஸ்தானத்தில் சேரும்.

"கத்தியை தீட்டாதே புத்தியை தீட்டு " என்ற பாடல் வரிப்படி தனது புத்தி மற்றும் கற்பனை உணர்வு மற்றும் இராஜதந்திரம் முதலிய வகைகளில் சேர்க்கப்படும் பணம் இந்த வகைகளில் அடங்கும்.

எட்டாம் இடம்

ஒருவருக்கு மறைமுக வழிகளிலோ அல்லது எதிர்பாராத அதிர்ஷ்டம் மற்றும் வெளிநாடு சென்று பொருள் ஈட்டல் அனைத்தும் மூன்றாம் பணபர ஸ்தானமான ஆயுள் ஸ்தானம் என்று அழைக்கப்படும் எட்டாம் இடத்தில் அடங்கும்.



அதாவது ஒருவருக்கு லாட்டரி, ரேஸ், கமிஷன் போன்ற எதிர்பாராத அதிர்ஷ்டம் மூலமாகவும், வெளிநாடு சென்று பொருள் ஈட்டல் மற்றும் மனைவி வழியாக வந்து சேரும் செல்வம் ... இது போன்ற வகைகளில் சேர்க்கப்படும் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் இவ்வகையில் அடங்கும்.

பதினொன்றாம் இடம்

ஒருவர் தனது தொழில் ஸ்தானமான பத்தாமிடத்திற்கு ஏற்ற வகையில் மேற்கண்ட தொழில் மூலம் ஒருவர் அடையும் லாபத்தின் வழிநின்று சேர்க்கப்படும் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் அனைத்தையும் இவ்வகையில் அடங்கும்.

ஒருவர் தனது சாதக கட்டத்தில் தொழில் ஸ்தானமான பத்தாம் இடத்திற்கு ஏற்ப கர்ம வினைப் படி தொழில் செய்து லாபம் சேர்ப்பது ஆகும்.






பணபரம்

ஜாதகத்தில் பணம் சம்பாதிக்கும் தன்மை, செல்வம், செழிப்பு ஆகியவற்றை பணபரம் என்கிறார்கள். ஒருவரின் வாழ்க்கையில் செல்வம் செழிப்புடன் அமையுமா அல்லது வறுமையில் கஷ்டப்பட நேரிடுமா என்பதை பணபரம் மூலம் அறியலாம். 
ஜாதகத்தில் செல்வ கேந்திரம் எனப்படும் 2, 5, 8, 11 ஆகிய இடங்களைக் கொண்டே ஒருவரின் பணபரத்தை அறியலாம். இந்த இடங்களின் அமைப்பை வைத்து, ஒருவருக்கு சுயதொழில் மூலம் செல்வம் சேர்க்கை ஏற்படுமா அல்லது வேலை மூலம் செல்வம் சேர்க்கை ஏற்படுமா என்பதை அறியலாம். 
நல்ல முகூர்த்தங்களில் ஆரம்பிக்கப்படும் செயல்கள் நல்ல பலன்களைத் தரும் என்பது நம்பிக்கை. தீய முகூர்த்தங்களில் ஆரம்பிக்கப்படும் செயல்கள் துன்பத்தை விளைவிக்கும் என்பது நம்பிக்கை. 

பணபரம்

பணபரம்

பணபரம் என்ற சொல் ஜோதிடத்தில் ஒருவருடைய ஜாதகப்படி ஒருவருக்கு பணம் வரும் வழிகளை ஆராய்வதற்கு பயன்படுகிறது. லக்னத்தில் இருந்து 2,5,8,11 போன்ற இடங்கள் பணபர ஸ்தானம் என்று கருதப்படுகிறது. இதில் இரண்டாமிடம் ஒருவரின் பண வருவாய் விகிதத்தினை சொல்கிறது, ஐந்தாமிடம் ஒருவர் முற்பிறவியில் செய்த நல்வினை சார்ந்து இப்பிறவியில் ஏற்படும் தனயோகத்தினை குறிப்பிடுகிறது. எட்டாமிடம் எதிர்பாராத மற்றும் மறைவான தனங்களை சுட்டி காட்டுகிறது. பதினொன்றாம் இடம் தனது தொழில் மற்றும் உத்தியோகம் மூலம் ஏற்படும் தனவரவு மற்றும் லாபத்தினை குறிக்கிறது.
பணபரம் கொண்டு ஒருவருடைய பொருளாதார நிலைமையை அறிந்து கொள்ள இயலும்.

உப ஜெய ஸ்தானம்


வாழ்வில் உச்சம்தொட வைக்கும் உப ஜெய ஸ்தானம் பற்றி உங்களுக்கு தெரியுமா?

lucky Rasi after age of 40 | 40 வயதிற்கு மேல் அதிஷ்டம் பெறும் ஜாதகம் என்ன என்பதை இங்கு தெரிந்துக்...மேலும் படிக்கவும்


உபஜெய ஸ்தானமான 3, 6, 10, 11 ஆகிய இடங்களில் குரு, சுக்கிரன், புதன், சந்திரன் ஆகிய சுபக்கிரகம் நிற்பது உபஜெய யோகமாகும். முன்னேற்றமும் செல்வமும் இவர்களைத் தேடி தானே வரும். சூரியனுக்கு இருபுறமும் சுபக்கிரகங்கள் இருப்பது, உபசரி யோகமாகும்.
40 வயதிற்கு மேல் உங்களுக்கு அதிர்ஷடம் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அப்படி இருக்கும் போது, உப ஜெய ஸ்தானத்தில் இருந்து ஒரு கிரகம் திசை நடத்தினால் அது நிச்சயமாக உங்களை வாழ்க்கையின் உயரத்தை நோக்கி பயணம் செய்ய வைக்கும். இதில் எந்த தசா புத்தியாக வேண்டுமென்றாலும் நடக்கலாம். கெட்டதாக இருந்தால் வாட்டி வதைக்கும். நல்லதாக இருந்தால் அள்ளி கொடுக்கும்.

உப ஜெயம் அப்படி என்றால் வெற்றிக்கு பக்க துணையாக இருக்கக்கூடிய பாவங்கள். நீங்கள் எந்த லக்னமாக வேண்டுமென்றாலும் இருங்கள். உங்களுக்கு மூன்றாம் இடம், ஆறாம் இடம், பத்தாமிடம், பதினொன்றாம் இடம் ஆகியவை உப ஜெய ஸ்தானங்கள் ஆகும்.







உப ஜெய ஸ்தானத்திலிருந்து ஒரு கிரகம் நல்ல பாவாதிபதியாக இருந்து திசை நடத்திக் கொண்டிருந்தால் உங்களுக்கு என்ன தேவையோ எல்லாமே கிடைக்கும்.

ஆனால் அவர் லக்னத்திற்கு பாவியாக இருந்தால் கொஞ்சம் அது குறைய வாய்ப்பு இருக்கிறது. ஆனால் கொடுப்பது குறையவே குறையாது. 40 வயதிற்கு முன்னதாகவும் இது போன்ற விஷயங்கள் உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது.

ஆனால் 40 வயதிற்கு கண்டிப்பாக நடக்கும். இதற்கு திரி சூனியம், அஸ்தங்கம், பாதகம் என பலவை இருக்கிறது. அதை பொறுத்து கூடவோ குறையவோ கிடைப்பதற்கான வாய்ப்பு உருவாகும்.



பணபரம்

பணபரம்

பணபரம் என்ற சொல் ஜோதிடத்தில் ஒருவருடைய ஜாதகப்படி ஒருவருக்கு பணம் வரும் வழிகளை ஆராய்வதற்கு பயன்படுகிறது. லக்னத்தில் இருந்து 2,5,8,11 போன்ற இடங்கள் பணபர ஸ்தானம் என்று கருதப்படுகிறது. இதில் இரண்டாமிடம் ஒருவரின் பண வருவாய் விகிதத்தினை சொல்கிறது, ஐந்தாமிடம் ஒருவர் முற்பிறவியில் செய்த நல்வினை சார்ந்து இப்பிறவியில் ஏற்படும் தனயோகத்தினை குறிப்பிடுகிறது. எட்டாமிடம் எதிர்பாராத மற்றும் மறைவான தனங்களை சுட்டி காட்டுகிறது. பதினொன்றாம் இடம் தனது தொழில் மற்றும் உத்தியோகம் மூலம் ஏற்படும் தனவரவு மற்றும் லாபத்தினை குறிக்கிறது.
பணபரம் கொண்டு ஒருவருடைய பொருளாதார நிலைமையை அறிந்து கொள்ள இயலும்.

கேந்திரம்

ஜோதிட சாஸ்திரத்தைப் பொறுத்தவரை ஒருவர் ஜாதகத்தில் இருக்கும் எல்லா இடங்களுமே முக்கியமானவை. ஆனால், இதில் கேந்திரம் எனப்படும் 1, 4, 7, 10-ம் இடங்கள் ஒருவரின் சுகம், வாழ்க்கைத்துணை, ஜீவனம் ஆகியவற்றைக் குறிக்கிறது. 'முதன்மை கேந்திரங்கள்' என்று இவற்றைத்தான் சொல்வார்கள். 
கேந்திரங்கள் எனப்படும் லக்னம், 4-ம் இடம், 7-ம் இடம், 9-ம் இடம் ஆகியவற்றில் அமைந்திருக்கும் கிரகங்கள், ஆட்சி அல்லது உச்சம் பெற்று இருந்தால், அந்த அமைப்பு, 'பஞ்ச மஹா புருஷ யோகம்' எனப்படும். 

உதாரணமாக மேஷம் லக்னம் என்று வைத்துக்கொண்டால், மேஷத்தில் செவ்வாய் ஆட்சி பெற்றோ அல்லது சூரியன் உச்சம் பெற்றோ இருப்பதுடன், லக்னத்துக்கு 4-ம் இடமான கடகத்தில் சந்திரன் ஆட்சியாகவும் அல்லது குரு உச்சமாகவும்; 7-ம் இடமான துலாமில் சுக்கிரன் ஆட்சியாகவும் அல்லது சனி உச்சமாகவும்; 10-ம் இடமான மகரத்தில் சனி ஆட்சியாகவும் அல்லது செவ்வாய் உச்சமாகவும் அமைந்திருந்தால், 'பஞ்ச மஹா புருஷ யோக'மாகும்.

இதில் சுபகிரகங்களான குரு, சுக்கிரன், புதன், சந்திரன் ஆகியோர் அவர்களின் தசா புக்திகளில் 'கேந்திர ஆதிபத்ய தோஷம்' எனும் தோஷத்தையும் கொடுப்பார்கள். 
லக்னம் எனும் முதல் பாவம் 

உடல்வாகு, நிறம், மற்றவர்களைக் கவரும் அழகு, செல்வம், உடலில் உள்ள ரத்தத்தின் தன்மை, தலைப்பகுதி ஆகியவற்றுக்குப் பொறுப்பேற்கும். மேலும் புகழ், சுகம், சுபநிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்கும் பொறுப்பேற்கும் இடமாகும். 

அடித்தளம் பலமாக அமைந்தால்தான் கட்டடமும் உறுதியாக ஆண்டாண்டு காலத்துக்கு நிலைத்திருக்க இயலும். அதேபோன்று லக்னம் பலமாக அமைந்தால்தான் அனைத்தையும் அனுபவிக்கும் யோகமும் நீண்ட ஆயுளும் கிடைக்கும். வாழ்க்கையின் வசதிகளை அனுபவிக்க செல்வம் இருந்தால் மட்டும் போதாது. லக்னமும் லக்னாதிபதியும் பலமாக அமைய வேண்டும்.

சுகஸ்தானம் எனும் 4- இடம்

வசிக்கும் வீடு, வியாபாரம், தாய், தாயின் உறவு, உறவினர்களின் நிலை, உயர்கல்வி, வாகனம், வீட்டில் நடைபெறுகின்ற சுப நிகழ்ச்சிகள், புகழ், புதையல், பால், பசுக்கள், திருத்தல தரிசனம், பயணம், கனவுகள், மருந்துகள், அதிகாரம் ஆகியவற்றுக்கு 4-ம் இடம் பொறுப்பேற்கும்.

4 - ம் இடத்தையும் புதனின் பலத்தையும் அறிந்து ஒருவரின் கல்வி, மற்றும் உயர்கல்வி எப்படி அமையுமெனக் கூறி விடலாம்.

4 - ம் இடத்தையும் சுக்கிரனின் பலத்தையும் அறிந்து, ஒருவரின் வாகன யோகம், ஆபரணச் சேர்க்கை, ஆகியவற்றின் நிலையை அறியலாம்.

4 - ம் இடத்தையும் செவ்வாயின் பலத்தையும் அறிந்து ஒருவரின் அசையாத சொத்துகளான வீடு, நிலம், தோட்டம், பண்ணை வீடுகள் இவற்றை அறியலாம்.

களத்திரம் எனும் 7 - ம் இடம்

திருமணத்தைக் குறிக்கும் இடமாகும். ஆண்களுக்கு மனைவியைப் பற்றியும், பெண்களுக்கு கணவரைப் பற்றியும் அறிவிக்கும் பாவம். திருமணம் நடைபெறும் காலம், மனைவி, கணவன், ஆயுள், சுற்றுப்புறச் சூழ்நிலை, கூட்டு வியாபாரம், திருமணத்தால் ஏற்படும் சுகம், மகிழ்ச்சி, அரசாங்கத்தால் கிடைக்கும் கவுரவம், பட்டம், பதவி, சன்மானம் ஆகியவற்றுக்கு இந்த 7 -ம் இடம் பொறுப்பேற்கும். 

தவிர பஞ்சு, பருத்தி, தறி நெய்தல், கமிஷன் தொழில், தரகர் தொழில் இவற்றையும் குறிக்கும். களத்திரஸ்தானம் எனப்படும் இந்த 7-ம் இடம் வெளிநாடு செல்லும் வாய்ப்பையும் எடுத்துக் கூறும்.

ஜீவனம் எனும் 10 - ம் இடம்

'உத்தியோகம் புருஷ லக்ஷணம்' என்று கூறுவார்கள். பணியாற்றுதல், தொழிலால் பெறும் லாபம், புகழ், உயர் பதவி, அரசாங்க கௌரவம், புகழ், பட்டம், பதவி, அரசாளும் யோகம், தெய்வ வழிபாடு, உணவில் ஏற்படும் ஆர்வம், சுவையான உணவு கிடைத்தல் ஆகியவற்றுக்கு இந்த 10- ம் இடம் பொறுப்பேற்கும். 'தொழில் ஸ்தானம்', 'கர்ம ஸ்தானம்', 'ஜீவன ஸ்தானம்' எனப் பல பெயர்களில் இந்த இடத்தை அழைப்பார்கள். இந்த இடம்தான் ஒருவரின் ஜாதகத்தில் உயர்ந்த இடமாகும். 
ஜாதகத்தில் இடம் அமைவதை வைத்துத்தான் ஜாதகரின் வாழ்க்கையை உறுதிப்படுத்த முடியும். அரசுப்பணியா, தனியார்த்துறையா, சொந்தத்தொழிலா, கூலித்தொழிலா என்பதைத் தெளிவாகக் கூறும் இடம் இந்த 10-ம் இடம்'' என்று கூறினார்.

திரிகோணம்

லக்னத்தின் பொறுப்பு:

லக்னம் எனப்படும் 1 - ம் இடம், முகத்தோற்றம், அழகு, உடல் தோற்றம், அறிவு, சிந்தனை, எண்ணம், தீவிர யோசனை, பிறந்த இடம், அதன் சூழல், ஆயுள், பொதுவாழ்வு, புகழ், மரியாதை பெறுதல், சுயமரியாதை, மானம், கெளரவம், ஜீவனம், பிறருக்காக வேலை செய்தல், அவமதிப்பு உண்டாகுதல், முயற்சிகளின் தன்மை, முயற்சிகளில் சோர்வு, திறமைகளை வெளிக்காட்டுதல், மற்றவர்களால் ஓதுக்கி வைத்தல் போன்ற அனைத்தையுமே லக்னத்தை வைத்தும் லக்னாதிபதி இருக்கும் இடத்தை வைத்தும் தெரிந்துகொள்ளலாம்.




5 - ம் இடத்தின் பொறுப்புகள்

லக்னத்தில் இருந்து எண்ணி ஐந்தாவது ராசியாக வருவது பூர்வ புண்ணிய ஸ்தானம். இதன்மூலம், நமக்குப் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை மற்றும் ஆண் குழந்தையா? பெண் குழந்தையா? என்பதை அறியலாம். குழந்தைகளின் எதிர்காலம், தந்தை செய்த புண்ணியம், முன்னோர்கள் செய்த புண்ணியம், முன்னோர்கள் செய்த பாவம், கல்வி நிலை, அறிவு, புத்திக்கூர்மை, சமயோசித புத்தி, தெளிவான சாஸ்திர ஞானம், வயிறு, எதிர்காலம் பற்றி அறியும் தீர்க்க தரிசனம், மந்திர உபதேசம், குழந்தைகள் மூலம் வருவாய், இசைப் புலமை, பிறரிடம் தயவு காட்டுதல் இவை யாவற்றுக்கும் 5 - ம் இடமே பொறுப்பாகும்.

9 - ம் இடத்தின் பொறுப்புகள்:

லக்னத்தில் இருந்து எண்ணி 9 -வது ராசியாக வருவது பாக்கியஸ்தானம். பாக்கியம் என்றால், நமக்கு அமையும் யோகம், திடீர் அதிர்ஷ்டம், வாழ்வில் ஏற்படும் எதிர்பாராத முன்னேற்றம், திடீர் செல்வம், தான் செய்யும் தருமம், புண்ணிய காரியங்கள், கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்வது, அன்னதானம் செய்வது, தாய் தந்தை அமைவது, நல்ல மனைவி, நல்ல நண்பர்கள், விசுவாசமான வேலைக்காரர்கள், ராஜ விசுவாசம், உயிரைக் கொடுக்கும் தொண்டர்கள், தெய்வத் துணை, மனத்துணிவு, நல்ல குரு அமைவது, புனித யாத்திரை, தந்தை வழி சொத்து, பங்காளி வகையான சொத்துகளை அனுபவிப்பது, யானை, குதிரை, உயர் ரக சொகுசு வாகனம் அமைவது, வேதசாஸ்திர சடங்குகளைக் கடைப்பிடிப்பது, உடன் இருப்பவர்களை சுகமாக வைத்துக்கொள்வது இவை அனைத்துக்கும் 9-ம் இடமே பொறுப்பாகும்.

விதி, மதி, கதி?

இவற்றில் மற்றொரு வகையாகவும் பலன்கள் பார்க்கப்படுகிறது. அதாவது விதி, மதி, கதி என்று கூறும் மூன்றும் ஜோதிட ரீதியாக லக்னம் என்பது விதியாக, நமது தலையெழுத்தாக அமைகிறது. மதி என்பது நமது புத்தியாக 5-ம் இடமாக உள்ளது. கதி என்பது அவற்றால் நாம் அடையும் பலனாக 9-ம் இடம் உள்ளது.  

வாழ்வில் விதி, மதி, கதி நன்கு அமைந்தவர்களுக்குத்தான் சகல வெற்றிகளும் கூடி வருகின்றன. சாதாரணமாக இருப்பவர்கள்கூட மிக பெரிய சாதனை மனிதராக மாறுவது இத்தகைய அமைப்பினால்தான். திரிகோணம் என்னும் இந்த மூன்று இடங்களில் கிரகங்கள் அமைந்தால், அதற்குரிய பலன்கள் எப்படி இருக்கும் எனப் பார்ப்போம். பொதுவாக, ஜோதிட சாஸ்திரத்தில் வளர்பிறைச் சந்திரன், குரு, புதன், சுக்கிரன் ஆகியோர் சுபகிரகங்களாகவும், சூரியன், செவ்வாய் ஆகிய கிரகங்கள் அசுப கிரகங்களாகவும், சனி, ராகு, கேது ஆகியோர் குரூர கிரகங்களாகவும் சொல்லப்பட்டிருக்கின்றன. ஆனால், இதை நாம் அப்படியே எடுத்துக்கொள்ளக் கூடாது. காரணம் ஒவ்வொரு லக்னத்துக்கும் சுப கிரகங்கள், அசுப கிரகங்கள் தனித்தனியாக உள்ளன.

சுப கிரகம் நல்ல பலன்களையும், அசுப கிரகம் கெட்ட பலன்களையும் செய்யும் என்ற விதி இருந்தாலும், 1, 5, 9 - ம் பாவங்களில் உள்ள கிரகங்களைப் பொறுத்து பலன்கள் மாறுபடும்
* 1, 5, 9 -ம் இடங்களில் செவ்வாய் இருந்தால், அரசு வகையில் ஆதாயம், பூமியோகம், முயற்சிக்குத் தகுந்த பலன்கள் கிடைக்கும்

* 1, 5, 9 -ம் இடங்களில் புதன் இருந்தால், தொழிலில் வெற்றி கிடைக்கும். கணக்கு, எழுத்து வேலைகள் மூலம் ஆதாயம் வரும்.

* 1, 5, 9 -ம் இடங்களில் குரு இருந்தால், கோயில், பொதுச் சேவை, வங்கி மூலம் ஆதாயம், பைனான்ஸ், முன்னோர் சொத்துகள் மூலம் சுகமான வாழ்க்கை அமையும் 

* 1, 5, 9 -ம் இடங்களில் சுக்கிரன் இருந்தால், கலைகளில் வருமானம், புகழ், பெண்கள் மூலம் ஆதாயம், திடீர் லாட்டரி யோகம், எதிர்பாராத அதிர்ஷ்டம், பிறரது பணம் வந்து உயர்வு தரும்.

* 1, 5 , 9 -ம் இடங்களில் சனி இருந்தால் வாழ்க்கையே பலவிதமான போராட்டங்கள் நிறைந்ததாக இருக்கும். எதுவும் அவ்வளவு எளிதாக அமையாது. நினைப்பது எதுவும் நடக்காமல் போனாலும், நடப்பது யாவும் நன்மைக்கே அமையும்.

* 1, 5 ,9 -ம் இடங்களில், ராகு, கேது இருந்தால் திடீரென முன்னேற்றம் அடைவார்கள்" என்றார்

மறைவு ஸ்தானம்

ஜாதகத்தில் குறிப்பிடப்படும் மறைவு ஸ்தானம்
பொதுவாக ஒரு ஜாதக அமைப்பில் மறைவு ஸ்தானம் என்பது ஆறு, எட்டு மற்றும் பனிரெண்டாம் பாவகம் ஆகும். மறைவு ஸ்தானங்களின் திசா மற்றும் புத்தி நடக்கும் போது கெடுதல் மட்டுமே நிகழும் என்பது பாரம்பரிய ஜோதிட முறையில் சொல்லப்படும் ஒரு கூற்றாகும்.

உண்மையில் மறைவு ஸ்தானம் என குறிப்பிடப்படும் ஆறு, எட்டு மற்றும் பனிரெண்டாம் பாவகத்திற்கும், லக்னம் முதல் 12 பாவகத்திற்கும் இரண்டு விதமான குணங்கள் உள்ளன : அவை 

1. சுபர்களின் சேர்க்கை மற்றும் பார்வை

2. அதிபதிகள் பெறும் பலம் 

சுய ஜாதகத்தில் மேற்கண்ட மறைவு ஸ்தானங்கள் மற்றும் மறைவு ஸ்தானங்களுக்கு அதிபதிகளின் திசைகள் நல்ல பாவகங்களுடன் தொடர்பு பெற்று பலனை நடத்தினால் நன்மையை தரும்.

மறைவு ஸ்தானங்கள் திசையில் ஒரு மனிதன் முழுமை அடைகிறான். அவர்களின் வாழ்க்கையில் உள்ள துன்ப காலங்களில் மனதில் உண்டாகும் தைரியம், போராடும் குணம் மற்றும் தனக்கு ஆதரவானவர்களை அடையாளம் கண்டு கொள்கிறார்கள். 


வாழ்க்கையில் ஏட்டுக்கல்வியை விட அனுபவ கல்வியே சிறந்தது. ஆனால், அதற்கு நாம் அளிக்கும் விலையோ சற்று அதிகமானது. 


ஆனாலும், மறைவு ஸ்தானங்கள் திசையில் தீமையே நடக்கும் என்று கூறவும் இயலாது. எல்லாம் நாம் செய்த வினைகளின் அடிப்படையை பொறுத்தே உள்ளது. மறைவு ஸ்தானங்களின் திசைகளில் நன்மைகளும் உண்டாகும். அதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஆகவே, மறைவு ஸ்தானங்கள் நல்ல நிலையில் இருந்து, இதன் அதிபதிகளின் திசை மற்றும் புத்திகள் தரும் பலன்களை பற்றி பார்ப்போம்.

ஆறாம் வீடு மற்றும் அதிபதி சுய ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்து அதன் திசை நடந்தால் ஜாதகர் பெரும் நன்மைகள் :

திசை முழுவதும் சிறு சிறு அதிர்ஷ்டங்களை ஜாதகர் பெற்றுக்கொண்டே இருப்பார்.

உடலில் ஏற்படும் உடல்நல குறைவுகள் விரைவில் குணமாகும்.

கடன் பெறுவதாலும், கொடுப்பதாலும் ஜாதகர் நன்மை பெறுவார். எதிரிகளின் சொத்து ஜாதகருக்கு கிடைக்கும்.

எதிரிகள் கூட நண்பர்கள் ஆகும் சூழ்நிலை உண்டாகும், எதிரிகளின் செயல்பாடுகள் ஜாதகருக்கு சாதகமாக மாறிவிடும், ஜாதகரை எதிர்ப்பவர்கள் தோல்வியை தழுவ வேண்டி வரும், தொழிலில் முன்னேற்றம் என்பது மிக விரைவானதாக இருக்கும்.

ஜாதகரின் வளர்ச்சி என்பது எவராலும் அறிந்து கொள்ள இயலாத அளவில் இருக்கும்.

தனது தாய்மாமன் வழியில் இருந்து அதிக நன்மை பெரும் யோகம் உண்டாகும்.

எட்டாம் வீடு மற்றும் அதிபதி சுய ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்து அதன் திசை நடந்தால் ஜாதகர் பெரும் நன்மைகள் :

திடீர் அதிர்ஷ்டம் மூலம் ஜாதகருக்கு குபேர சம்பத்து உண்டாகும். லாட்டரி, புதையல் போன்ற அதிர்ஷ்டங்கள் கிடைக்க பெறுவார்.

குறிப்பாக ஆயுள் காப்பீடு மற்றும் இன்சூரன்ஸ் துறைகளில் ஜாதகர் கொடிகட்டி பறக்கும் அளவிற்கு வருமான வாய்ப்புகளை பெறுவார்.

மேலும் திடீர் பொருள் வரவும், சொத்து சேர்க்கையும், எதிர்பாராத பண வரவும் நிச்சயம் ஏற்படும்.

பனிரெண்டாம் வீடு மற்றும் அதிபதி சுய ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்து அதன் திசை நடந்தால் ஜாதகர் பெரும் நன்மைகள் :

ஜாதகர் செய்த சிறு முதலீடு மூலம் மிகப்பெரிய வருமானத்தை பெரும் யோகம் உண்டாகும்.

தொழில், நிலம், நகை மற்றும் வாகனம் போன்ற விஷயங்களில் முதலீடு செய்வதால் எதிர்பாராத செல்வாக்கு மற்றும் பணவரவு கிடைக்கும்

ஆன்மீக வாழ்க்கையில் கிடைக்கும் வெற்றி, இறை நிலை பற்றிய தெளிவு, தன்னை பற்றி தெரிந்து கொள்ளும் ஆற்றல், மற்றவர்களின் மனநிலையை தெளிவாகத் தெரிந்து கொள்ளும் சிறப்பு தகுதிகள், மன தத்துவ நிபுணர் ஆகும் யோகம்.

ஜாதகர் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே மன எண்ண ஆற்றல் மூலம் உலகில் நடப்பவைகளை தெரிந்துகொள்ளும் ஆற்றல், முன் ஜென்ம நினைவுகள், கர்ம வினை பதிவின் தன்மைகள் போன்றவைகளை பெற்றிருப்பார்கள்.


Friday, 21 February 2025

நல்லூழ் அள்ளித்தரும் திரிகோண அதிபதிகள்!

  நல்லூழ் அள்ளித்தரும் திரிகோண அதிபதிகள்!


நல்லூழ் அள்ளித்தரும் திரிகோண அதிபதிகள்!
நல்லூழ் அள்ளித்தரும் திரிகோண அதிபதிகள்!
 
நல்லூழ் அள்ளித்தரும் திரிகோண அதிபதிகள்!
இந்த புவியில் வாழும் அனைத்து உயிரினங்களும், ஐந்து வகை திறன்களை (நீர் , நெருப்பு, நிலம், காற்று, ஆகாயம்) உள்ளடக்கிய தத்துவங்களான, நல்லொழுக்கம் (சாத்விக), தீய சிந்தனை (தாமச) மற்றும் பேராசை (ராஜச) என்ற மூன்று அடிப்படை குணங்களை உள்ளடக்கிய உயிருடன் கூடிய உடல் எனலாம். இதை நாம் முக்கோண (1, 5, 9) முக்குணங்கள் என்கிறோம். வடமொழியில் இதை திரிகோணம் என்கின்றனர்.

கணிதத்தில் ஒரு வட்டம் என்பது 360 பாகை (டிகிரி) கொண்டது. ஒரு உயிரின் வாழ்க்கை என்பது ஆருட கணக்கீட்டின்படி 360 பாகை கொண்டது. அதாவது, ஒரு இராசிக்கு 30 பாகைகள். 12 ராசிக்கும் 30 * 12 என 360 பாகைகள். உயிரிகளை 360 பாகையில் சுற்றிவரும் கோள்கள், நாம் குறிப்பிட்ட அந்த மூன்று அடிப்படை குணங்களையும் ஒவ்வொரு உயிருக்கும் சீர்படுத்தி தருகிறது என ஆருடம் கொள்கிறது.


ஆருட முக்கோணம் (திரிகோணம்) விளக்கம் மற்றும் பாகை என்றால் என்ன?:

முற்பிறப்பில் செய்த பலன்கள் மற்றும் வாழுகின்ற வாழ்வில் செய்கின்ற நற் செயல்களும் தீயவைகளும், புவியில் வாழும் ஒவ்வொரு உயிரின் வாழ்க்கையின் வெற்றி தோல்வியை முடிவு செய்கிறது என இறையியல் தத்துவங்கள் விளக்குகின்றன.

ஒரு உயிர் செய்கின்ற நன்மை தீமைகள் அனைத்தும் அட்டவனையாக பதியப்பட்டு, அவை அந்த உயிர் இந்த புவியில் மீண்டும் மீண்டும் பிறக்கும்போது, நிலைகொண்டிருக்கும் முக்கோண (ராசிக்கட்டத்தில் 1, 5 மற்றும் 9) கோள்கள் இருப்பிடத்தை முடிவு செய்வதாக ஆருடம் கணிக்கிறது.

முக்கோணம் என்றால் மூன்று கோணங்கள் கொண்ட ஒரு வடிவம். கணிதத்தில் ஒரு முக்கோணத்திற்கு மூன்று கோணத்தின் பாகை அளவை கூட்டினால் 180 பாகை கிடைக்கப்பெறும். ஆரூடத்தில், இந்த முக்கோண குணங்களுக்கு, ஒரு குணத்திற்கும் மற்றொரு குணத்திற்குமான பாகை 120 என கணக்கிடப்படுகிறது. அதாவது முதல் இராசி கட்டத்தில் இருந்து 120 (30 பாகை கொண்டது ஒரு இராசி என 120/30 என்றால் 4 ராசிகள்) பாகை தள்ளி இருக்கும் கட்டம் 5 ஆம் கட்டமாகும். அதில் இருந்து 120 பாகை தள்ளி இருக்கும் கட்டம் 9 ஆம் கட்டம் ஆகும். ஆக மொத்தம் 360 பாகைகளை கொண்டது ஆருட முக்கோணம் (திரிகோணம்).

ஒரு உயிர் என்பது, மறுபிறப்பில்லா தெய்வ நிலையை அடைவதை நோக்கி இருக்கவேண்டும் என்கிறது இறையியல் தத்துவம். முக்கோண கோள்களின் இருப்பிடத்தை வைத்து, ஒரு ஜாதகரின் வாழ்க்கை நோக்கம் எதை நோக்கி உள்ளது என கணித்து விட இயலும்.


முக்கோணத்தின் கட்டங்கள்

1, 5 மற்றும் 9 ஆகிய ராசி வீடுகளில் வீற்றிருக்கும் கோள்கள், அவற்றின் கதிர் வீச்சின் மூலம், முற்பிறப்பில் செய்த நன்மை தீமைகள், பெண்களுக்கு செய்த நன்மை தீமைகள், தாய் தந்தை மற்றும் மூதாதையருக்கு செய்த நன்மை தீமைகள், ஆகியவற்றைக் கணக்கிட்டு பலன் தரும்.

இந்த முக்கோணத்தின் கட்டங்களை நான்காக பிரித்து, அறம் - பொருள் - இன்பம் - வீடு ஆகியவற்றை உள்ளடக்கியதாக கணிக்கலாம்.

அறத்தை குறிப்பது, 1 - 5 - 9 ஆகிய ராசி கட்டங்கள்.

பொருள் (செய்த வினை) குறிப்பது, 2 - 6 - 10 ஆகிய ராசி கட்டங்கள்.

இன்பம் (திருமணம் மற்றும் மக்கட்பேறு) குறிப்பது, 3 - 7 - 11 ஆகிய ராசி கட்டங்கள்.

வீடு (விண்ணுலக வாழ்வு) குறிப்பது, 4- 8- 12 ஆகிய ராசி கட்டங்கள்.

ஜாதகர் முற்பிறப்பில் செய்த நன்மை தீமைகள் மற்றும் அவரின் மூதாதையர் செய்த நல்லவை கெட்டவை ஆகியவை சேர்ந்து இந்த ராசி கட்டங்களில் கோள்கள் அமையப் பெறுவதாக ஆருடம் கணிக்கிறது.


1 - 5 - 9 கட்டங்கள்

ஒரு ஜாதகர் மன அமைதி கொண்ட வாழ்க்கையை இப்புவியில் வாழவேண்டும் என்றால் அவரின் ஜாதக ராசிக்கட்டத்தில் 1 - 5 - 9 ஆகிய கட்டங்களில் கோள்கள் பலம் பெற்றிருக்க வேண்டும்.

அப்படி பலம் பெற்றிருக்கும் அமைப்பானது பெரும்பாலானோருக்கு கிடைக்கப் பெறாது.

சில ஜாதகர்களுக்கு செல்வச் செழிப்பிற்கு குறைவில்லாமல் வாழ்கை இருந்தாலும் அறத்தை குறிக்கின்ற இந்த ராசி கட்டங்கள் வலுவிழந்து அவர் மனதளவில் மிகுந்த துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருப்பார்.

ஒரு ஜாதகரின் வாழ்க்கையை கணிப்பதாக இருந்தால், 1 - 5 - 9 ஆகிய கட்டங்களில் கோள்களின் நிலையை பார்ப்பதுடன், 10 -ம் கட்டத்தின் நிலையையும் கூர்ந்து ஆய்தல் வேண்டும். இந்தப் 10 -ம் கட்டம் தான், செய்தவினைக்கான பலனை இப்பிறப்பில் எடுத்துச் சொல்கின்ற நிலை.

இந்தப் 10 -ம் இடத்தில் பகை கோள்கள் அல்லது ஜாதகருக்கு தீங்கான கோள்கள் அல்லது பகைவர்கள் அல்லது ராசிக்கட்டத்தில் 8 அல்லது 11 ஆம் இடத்தின் உரிமையாளரோ (அதிபதி) பார்வையோ அல்லது சேர்க்கையோ பெறாமல் இருந்தால் அவர் அரசருக்கு ஈடான நல்லூழ்களை பெற்று இருப்பார்.

அப்படிப்பட்ட ஜாதகத்திற்கு உடையவர், தன் வாழ்நாளில் நினைப்பதெல்லாம் செய்து முடித்து பெரும்புகழ் பெற்று நல்லூழ் கொண்டவராக விளங்குவார்.

சிலர் பிறந்ததிலிருந்து துன்ப மனநிலையிலேயே வாழ்நாள் முழுவதையும் கழிப்பதை காண்கிறோம். இவர்களின் ஜாதக ராசி கட்டத்தை உற்றுநோக்கினால், அவர்களின் 5 - 9 ஆகிய கட்டங்கள் பாதிப்புடன் இருப்பதை அறியலாம்.


ஜாதகரின் 5 -ம் கட்டம்

ஜாதகரின் 5 -ம் கட்டமானது, மக்கட்பேறு குறித்து நிலையை எடுத்துறைப்பதாகும். இது அடுத்த சந்ததி குறித்த கட்டமாகும். இந்தக் கட்டத்தில் வியாழன் அல்லது தீங்கிழைக்கும் கோள்கள் அமையப் பெற்று இருந்தாலோ அல்லது 5 -ம் இடத்திற்கு உரியவர் மறைந்திருந்தாலும் குழந்தைப்பேறு கட்டாயம் கிடையாது.

ஆசைக்கு (பெண் குழந்தை) ஒன்று ஆஸ்திக்கு (ஆண் குழந்தை) ஒன்று என்கின்ற பழமொழிக்கு ஏற்ப குழந்தைச் செல்வம் உள்ள குடும்பமே, சிறந்த குடும்பம். இப்படி அமைய வேண்டுமென்றால் ஒன்பதாம் இடத்தில் வியாழன் இருக்க வேண்டும் என்று ஒரு விதி உள்ளது.

முக்கோண கட்டங்களின் உரிமையாளர்கள் மற்றும் பத்தாம் இடத்தின் உரிமையாளரை வைத்து ஜாதகர் யாருடைய அருளைப் பெற்றிருக்கிறார் என்பதை நன்றாக கணிக்க இயலும்.

தம்பதியர் இருவருக்கும் மூதாதையரின் பழிப்பு, பெண் பழிப்பு மற்றும் மற்ற பல்வேறு பழிப்புகள் 1 - 5 - 9 கட்ட கோள்கள் மூலம் தொடர்பு பெற்றால் குழந்தை வரம் அறவே கிட்டாது.

ஆகவே ஒரு ஜாதகரின் வாழ்க்கை நிலையை கணிப்பதாக இருந்தால் ஜாதகரின் முக்கோண கட்டங்களின் உரிமையாளர்கள் நிலை குறித்து அறிவதோடு தசா புத்தி பலன்களையும் கணக்கிட்டுக் கொள்ள வேண்டும்.



தர்மதிரிகோண, அர்த்ததிரிகோண, காமதிரிகோண, மோட்ச திரிகோண வீடுகள்


தர்மதிரிகோண, அர்த்ததிரிகோண, காமதிரிகோண, மோட்ச திரிகோண வீடுகள்




 காலபுருஷனுக்கு தர்மதிரிகோணம் 

1 மேஷம்

5 சிம்மம்

9- தனுசு

காலபுருஷனுக்கு அர்த்த திரிகோணம்

2 ரிஷபம்

6- கன்னி

10 -மகரம்

காலபுருஷனுக்கு காம திரிகோணம்

3 மிதுனம்

7 -துலாம்

11- கும்பம்

காலபுருஷனுக்கு மோட்ச திரிகோணம்

4 - கடகம்

8 -விருச்சிகம்

12-மீனம்



தர்மதிரிகோணம்

தர்மதிரிகோண வீடுகளில் லக்ன / ராசி அமைய பெற்றவர்கள் தர்ம சிந்தனைகள் அதிகம் இருக்கும்.

அர்த்ததிரிகோணம்

அர்த்ததிரிகோண வீடுகளில் லக்ன / ராசி அமைய பெற்றவர்கள் பொருள் தேடும் சிந்தனைகள் அதிகம் இருக்கும்.

காமதிரிகோணம்

வீடுகளில் லக்ன / ராசி அமைய பெற்றவர்கள் காம எண்ணங்கள் அதிகம் இருக்கும்.

மோட்ச திரிகோணம்

வீடுகளில் லக்ன / ராசி அமையப் பெற்றவர்கள் பிறவியை தீர்க்கும் எண்ணம் மேலோங்கி இருக்கும்.



அர்த்த திரிகோணா - பொருள்

அர்த்த திரிகோணா - பொருள் 
செழிப்பின் பாதை,
இரண்டாவது வீடு குடும்பம் மற்றும் செல்வம், ஆறாவது சவால்கள் மற்றும் அன்றாட வாழ்க்கை ஆகியவற்றுடன் எதிரொலிக்கிறது, பத்தாவது நமது தொழில்முறை நோக்கங்களையும் சமூக அங்கீகாரத்தையும் குறிக்கிறது.

தர்ம திரிகோணம்

ஜோதிட சாஸ்திரத்தில், லக்னம் அல்லது பிறப்பு-ஏறுவரிசை, ஐந்தாம் மற்றும் ஒன்பதாம் பாவம் ஆகியவற்றை தர்ம திரிகோணம் என்கிறார்கள். தர்ம திரிகோணம், மனிதப் பிறவியில் முக்கியமானது. 
தர்ம திரிகோணம் பற்றிய தகவல்கள்
தர்ம திரிகோணம், அறம் (தர்ம) சார்ந்தது. 
தர்ம திரிகோணம், நம்முடைய பாதையின் பார்வை தர்ம திரிகோணம் (1,5,9) 
திரிகோணஸ்தானங்கள் அல்லது திரிகோணங்கள், லக்னத்திலிருந்து கணக்கிடப்படுகிறது. 
கேந்திரத்தின் அதிபதியும் திரிகோணத்தின் அதிபதியும் இணைவு ஏற்படுவதால் சிலருக்கு மிகப்பெரிய மாற்றங்கள் உண்டாகும். 

Thursday, 20 February 2025

தர்ம அர்த்த காம மோக்ஷம் என்று நான்கு விளக்கம்


விவாஹம் தர்மத்துக்காகவே ஏற்பட்டது தர்ம அர்த்த காம மோக்ஷம் என்று நான்கு புருஷார்த்தங்களைச் சொல்கிறோம் இதிலே முதலாவதான தர்மம் எப்போதுமே விட்டுப் போகக்கூடாது

காமகோடி
விவாஹம்
தர்மத்துக்காகவே ஏற்பட்டது.


தர்ம அர்த்த காம மோக்ஷம் என்று நான்கு புருஷார்த்தங்களைச் சொல்கிறோம். இதிலே முதலாவதான தர்மம் எப்போதுமே விட்டுப் போகக்கூடாது. அர்த்தம் (பணம்) சம்பாதிப்பதும் காம அநுபவமும் ஒரு காலத்தில் விட்டு விடுபவை. ஆனால் இவற்றை அநுபவிக்கும் காலத்திலும் தர்மத்திலிருந்து விலகக்கூடாது. சாஸ்திர தர்மங்களையும் விட்டு ஸந்நியாஸியாகிறபோதுகூட, ஒருத்தன் தர்மத்துக்கு அப்பாற்பட்டவனாகி விடுகிறானே தவிர, அதை ஆக்ஷேபிக்கிறவனாகவோ, அதர்மத்தைச் செய்கிறவனாகவோ ஆகிவிடவில்லை. 'ஸந்நியாஸ தர்மம்' என்றுதானே அவன் பின்பற்ற வேண்டியவைகளையே சொல்கிறோம்?


பூர்வ மீமாம்ஸை என்ற கர்ம காண்டம், உத்தர மீமாம்ஸை என்ற ஞான காண்டம் முதலியவைகளைப் பற்றி முன்பே சொன்னேன். இவற்றில் பூர்வ மீமாம்ஸை ஸ¨த்ரம் "அதாதோ தர்ம ஜிக்ஞாஸா" என்று ஆரம்பிக்கும். "தர்மத்தைப் பற்றிய விசாரணை இனி ஆரம்பிக்கிறது"என்று அர்த்தம். உத்தர மீமாம்ஸா ஸ¨த்ரம் (பிரம்ம ஸ¨த்ரம்) 'அதாதோ ப்ரஹ்ம ஜிக்ஞாஸா'- அதாவது 'பிரம்மத்தைப் பற்றிய விசாரணை இனி ஆரம்பிக்கிறது'என்று முதல் ஸ¨த்ரத்தில் சொல்கிறது. பிரம்மத்தையே விசாரித்து தியானிக்கிற போது தர்மத்தைப் பற்றிய நினைவும் போய்விடுகிறது. கர்மம் உள்ள த்வைதமான லோகத்துக்குத்தான் தர்மம். அத்வைதமான ஞானத்தில் லோகமில்லாததால் தர்மத்தைப் பற்றிய விசாரணையில்லை. அதனால் அது தர்ம விருத்தமானது (தர்மத்துக்கு முரணானது) என்று அர்த்தமில்லை.


அதற்கு மேலே போனது, அதற்கு அதீதமானது என்றே அர்த்தம். கீதையில் பகவான் 'ஸர்வ தர்மான் பரித்யஜ்ய (எல்லா தர்மத்தையும் விட்டுவிட்டு) என்னையே சரணடை'என்று சொல்கிறாரென்றால், 'அதர்மக்காரனாக ஆகி என்னிடம் புகலடை'என்பதாகவா அர்த்தம் பண்ணுவது?'தர்ம அதர்மங்களை பற்றின விசாரணையை விட்டுவிட்டு, அவற்றுக்கு மேலே எழும்பி, இரண்டுக்கும் மூலமான வஸ்துவிலேயே பிடிப்பை வைத்துக் கொள்'என்றுதான் அர்த்தம். இது உள் அநுபவம். இந்த அநுபவத்தைப் பெற்ற ஞானிகள் வெளியிலே செய்கிற காரியங்கள், தானாகவே தர்ம மயமாகத்தான் இருக்கும். அதானால்தான் மஹாத்மாக்களாக உள்ள ஸந்நியாஸிகள் conscious - ஆக (புத்தி பூர்வமாக) தர்மத்தைப் பண்ண வேண்டும் என்று உத்தேசிக்கா விட்டாலும் அவர்கள் செய்வதெல்லாம் தர்மமாகவே இருப்பது.


மொத்தத்தில் தர்மம் என்பது ஒருவனை எப்போதுமே விடுகிறதில்லை. உயர்ந்த நிலையை அடைகிறபோது இவன் அதைப் பற்றிய எண்ணத்தை விட்டுவிட்டாலும், அது இவனை விடாமல் இவன் காரிய ரூபத்தில் செய்கிறதில்

பிரகாசித்துக் கொண்டேதான் இருக்கும்.


தர்ம- அர்த்த-காம-மோக்ஷத்தில் அர்த்தம் (பொருள்) சம்பாதிப்பது தர்மப்படிதான் இருக்க வேண்டும். அப்படியே காமமும் தர்மத்தோடு சேர்ந்தே இருக்க வேண்டும். இதைத்தான் காளிதாஸன் 'ரகுவம்ச'த்தில் திலீபனைக் கொண்டாடிச் சொல்கிறபோது, "அப்யர்த்த காமௌ தஸ்யாஸ்தாம் தர்ம ஏவ மநீஷிண:"என்கிறான். "நல்லறிவு பெற்ற அவனுடைய (திலீபனுடைய) அர்த்தம், காமம் இரண்டும்கூட தர்மமாகவே இருந்தன"என்று அர்த்தம்.


அர்த்த-காமங்களை இப்படி தர்மப்படி ஆண்டு அநுபவிக்கிறதே கிருஹஸ்தாச்ரமம் (இல்லறம்) . அதற்கு ஆரம்பம் தான் விவாஹம். பிரம்மசாரிக்கும்

ஸந்நியாஸிக்கும் அர்த்த (பொருள்) ஸம்பாதனம், காம அநுபோகம் இரண்டும் இல்லை. அந்த இரண்டு ஆசிரமங்களுக்கு நடுவே பாலம் போடுகிற மாதிரி அமைந்துள்ள கிருஹஸ்தாச்ரமத்தில் இந்த இரண்டும் அநுமதிக்கப்பட்டிருக்கின்றன.


உயிர் வாழ்வதற்குப் பொருள் வேணத்தான் வேண்டும். கர்மாப்படி பல உயிர்கள் பிறப்பதற்குக் காமமும் வேணத்தான் வேண்டும். கர்மாவைத் தீர்த்துக் கொள்வதற்காகவே நாமும் அது தீருகிறவரை லோகத்தில் வாழத்தான் வேண்டும். இதே மாதிரி மற்றவர்களுக்கு 'சான்ஸ்'கொடுப்பதற்காக அவர்களுக்கு ஜன்மாவைத் தரவேண்டும் என்றால் பொருள் சேர்க்கவும் காமத்தை அநுபவிக்கும் வேண்டும்தானே?கர்மாவை விட்டு ஸந்நியாஸியானவர்களுக்கும் ஆஹாரம் வேண்டியிருப்பதால் அதைப் போடுவதற்கு கிருஹஸ்தன் இருந்துதானே ஆகவேண்டும்?ஆகவே எப்படிப் பார்த்தாலும் கிருஹஸ்தாச்ரமம் இருக்கத்தான் வேண்டும். லோகத்தில் எல்லாரும் ஸந்நியாஸியாவது நடக்காத காரியம். ஆகையால் இதிலே தர்மத்தோடு வாழ்ந்து, பிரம்மச்சாரிக்கும் ஸந்நியாஸிக்கும்கூட வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து தருகிற கிருஹஸ்தாச்ரமியைத்தான் சாஸ்திரங்கள் ரொம்பவும் சிறப்பித்து, ஸமூஹத்தின் back-bone என்று கொண்டாடுகின்றன.


பிரம்மச்சரிய ஆசிரமத்தில் படித்து முடித்து, விஷயங்களைத் தெரிந்து கொண்டு, நல்லறிவையும் நற்குணங்களையும் பெற்றபின் தர்மப்படி கர்மாநுஷ்டானம் பண்ணுவதற்காக விவாஹம் செய்து கொள்ள வேண்டும்.


விவாஹத்தை நாற்பது ஸம்ஸ்காரங்களில் ஒன்றாக வைத்திருக்கிறது - அதாவது ஜீவனைப் பரிசுத்தி பண்ணுகிற புண்ணிய கர்மாவாக வைத்திருக்கிறது.


இந்திரியத்தை நெறிப்படுத்தி ஒரே ஒருத்தர் விஷயமாகப் போகும்படி சீராக்கித் தருவது என்பதோடு, ஸகல தர்மங்களையும் நடத்துவதற்கும் ஒரு ஆச்ரமமாக அமைந்த கிருஹஸ்தாச்ரமத்துக்குப் பூர்வாங்கமே விவாஹம் - பிரம்மச்சர்யாச்ரமத்துக்கு உபநயனம் போல.

காம அநுபோகத்தோடு கூட மற்ற லோகக்ஷேமமான தர்மங்களை

அநுஷ்டிப்பது என்பது மட்டுமல்லை. காமத்திலேயே தர்மத்தை அநுஷ்டிக்கும்படியாகவும் கிருஹஸ்தாச்ரமத்தை சாஸ்திரம் அமைத்திருக்கிறது. 'தர்மம்'என்பது எதையும் வரையறை மீறாமல் ஒழுங்குபடுத்துவதுதானே?இப்படி இந்திரிய வேகத்தைக் கட்டுப்படுத்தி தாம்பத்தியம் பண்ணுவதுதான் காமத்திலேயே தர்மத்தை அநுஷ்டிப்பதென்பது. இதனாலேயே படிப்படியாக இந்த வேகம் குறைந்த பக்குவம் உண்டாகிறது. அது பிற்பாடு. அதற்கு முதலில், பலாத்காரமில்லாமல், காமத்தை கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டுப்படுத்துவது கிருஹஸ்தாச்ரமத்தில். இதற்கு முன்னால் பின்பற்றிய பிரம்மசரிய ஆசிரமத்தின் கடும் நியமங்கள் ( strict disciplines) ஒருவனை இப்படிக் கட்டுப்பாட்டில் கொண்டு வருகின்றன. எப்போதும், வேளை போது கவனிக்காமல், பசு வேகத்தில் இவனை அடித்துக் கொண்டு போகாமல் அது காப்பாற்றுகிறது.


பசு வேகம் என்று சொன்னாலும் வாஸ்தவத்தில் பசுக்கள்-மிருகங்கள் - அதற்கான ஒரு பருவத்தில் மட்டும் தான் ஸங்கமம் பண்ணுகின்றன. கர்ப்பம் தரிக்கக்கூடிய ஒரு காலத்தில் மட்டுமே அவற்றுக்கு இந்த வேகம் உண்டாகிறது. 'பசு வேகம்''பசு தர்மம்' என்றெல்லாம் அவற்றை வைத்துப் பெயர் சொல்கிற மநுஷ்யன்தான் அவற்றைவிட மட்டமாக இருக்கிறான். இந்த உணர்ச்சி வேகம் ஏற்படுகிற ஆரம்ப காலத்திலேயே இதை மட்டுப்படுத்த பிரம்மச்சரியம் இருக்கிறது. அப்புறம் இவனுக்கு காமத்திலேயே தர்மத்தோடு ஒழுங்காக, வியவஸ்தைக்கு உட்பட்டு இருப்பதற்கு கிருஹஸ்தாச்ரமமும், அதற்கு ஆரம்பமாக விவாஹம் என்ற ஸம்ஸ்காரமும் ஏற்படுகின்றன.


அந்த வேகம் பல பேரிடம் போக விடாமல் ஒருத்தரிடமே போகப் பண்ணுகிற வியவஸ்தையை எல்லா மதங்களுமே விவாஹச் சடங்கினால் செய்திருக்கின்றன.


அதோடு, கூடுதலாக நம்முடைய மத சாஸ்திரம் செய்திருக்கிற வியவஸ்தை என்ன என்றால்:ஸ்திரீ ரிதுவான தினம் முதல் நாலு நாட்களில் ஸங்கமம் செய்யக்கூடாது. அப்புறம் பன்னிரண்டு தினங்கள் மட்டுமே செய்யலாம். அப்புறமும் அடுத்த முறை ரிதுவாகும் வரையில் கூடாது. நடுவே சொன்ன பன்னிரண்டு நாட்களிலும் அமாவாஸ்யை மாதிரியான சில திதிகள், சில நக்ஷத்ரம் முதலியவற்றில் கூடாது. இதையெல்லாம் தள்ளி மிச்ச நாட்களில்தான் கர்ப்பாதானம்

செய்யலாம் என்று விதி. இதை அநுஸரித்தால் தம்பதிகளின் தேக-மனோ புஷ்டிகள் என்றைக்கும் குறையாது.


குடும்பக் கட்டுப்பாடும் பெண் தொகைப் பெருக்கமும்


எல்லாவற்றுக்கும் மேலாக, இப்போது குடும்பக் கட்டுப்பாடு என்று அஸங்கியமாகப் பல காரியங்களை தண்டோரா போட்டுக் கொண்டு பண்ணுகிறார்களே, இதற்கு அவசியமே இல்லாமல், தன்னால் இயற்கையாகவே

குழந்தைகள் பிறப்பது ரொம்பவும் மட்டுப்படும். முடிந்த மட்டில் சமைத்த ஆஹாரங்களுக்குப் பதில் பழங்களைச் சாப்பிடுவது, சாஸ்திரப்படி நிஷேதனமான (விலக்கப்பட்ட) நாட்களில் பிரம்மச்சரியத்தோடு இருப்பது என்பதாக தம்பதிகள் இருக்க ஆரம்பித்து விட்டால் ஆர்டிஃபீஷியலாக (செயற்கை முறைகளில்) குடும்பக் கட்டுப்பாடு செய்ய வேண்டிய அவசியமே ஏற்படாது.


இங்கே இன்னொரு விஷயம் சொல்கிறேன். பொதுவாக பாபுலேஷனை குறைக்க வேண்டும் என்கிற அபிப்ராயத்தோடு இது ஸம்பந்தமில்லஎன்று தோன்றினாலும் உண்மையில் ஸம்பந்தம் உள்ளதுதான். வரதட்சிணைப் பிரச்சனைக்கு 'ஸொல்யூஷன்' (தீர்வு) தான் நான் சொல்ல வந்த விஷயம். வரதட்சிணைக்கும் பாபுலேஷனுக்கும் என்ன ஸம்பந்தம்? பாபுலேஷனில் பெண் பிரஜைகளின் விகிதாசாரம் ஜாஸ்தியானதால்தான் வரதட்சிணைப் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. பொருளாதார சாஸ்திரப்படி, குறைச்சலாக உள்ள சரக்குக்குத்தான் கிராக்கி ஜாஸ்தி. இதன்படி, பாபுலேஷனில் புருஷப் பிரஜைகள் குறைவாகி, பெண்கள் அதிகமாக ஆரம்பித்தபோதுதான், பெண்களுக்கு ஸம எண்ணிக்கையில் பிள்ளைகள் இல்லாததால் பெண்ணைப் பெற்றவர்கள் போட்டி போட்டுக் கொண்டு வரதக்ஷிணை கொடுக்கிற பழக்கம் ஏற்பட்டது. இது ஸமீபகால வழக்கந்தான். இது ஏற்பட்ட சந்தர்பத்தை நான் ஆராய்ச்சி பண்ணிப் பார்த்ததில், வெள்ளைக்கார ஆட்சி ஏற்பட்டு பிராம்மணர்கள் குமாஸ்தாக்களாக நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு வெறும் பேனாவால் உழுகிற sedantry வேலைகளை ஆரம்பித்த பின்தான் இந்த நிலை உண்டானதாகத் தெரிந்தது. அதாவது உடல் வருந்த இவன் யக்ஞ கர்மாநுஷ்டானம் பண்ணின காலம் போய் உட்காரந்து உத்தியோகம் பண்ண ஆரம்பித்த பின்தான் இவனுக்குப் புருஷ பிரஜைகளைவிட அதிகமாகப் பெண் குழந்தைகள் பிறக்க ஆரம்பித்தன. கடைசியில் அதன் விளைவாகப் பிள்ளைகளுக்கு கிராக்கி ஏற்பட்டு வரதட்சிணை என்கிற பெரிய களங்கம் உண்டாகி விட்டது. யக்ஞம் மட்டுமில்லாமல், 'பூர்த்த தர்மம்'என்ற பெயரில் முன் காலங்களில் பிராம்மணன் ஸோஷல் ஸர்வீஸ் செய்த போது வெட்டுவது, கொத்துவது, உழுவது முதலான காரியங்களிலும் மற்றவர்களோடு ஒரளவு பங்கு எடுத்துக் கொண்டு சரீர சிரமம் நிறையப்பட்ட வரையில் அவனுக்கு ஆண் பிரஜையே அதிகமாகப் பிறந்தது.


இப்படி நான் சொல்வதற்கு பலன் தருவதாக இன்னொன்றும் சொல்கிறேன். முன்பு பிராம்மணர்களிடம் மட்டுமிருந்த வரதட்சிணை வழக்கம் மெதுவாக இப்போது மற்ற சில ஜாதியார்களிடமும் ஏற்பட்டு வருகிறதல்லவா?இவர்கள் யார் என்று பார்த்தால், அநேகமாக இவர்களும் சரீர உழைப்பை விட்டுவிட்டு, உட்கார்ந்து வேலை பார்க்கிற முறைக்குத் திரும்பினவர்களாகவே இருக்கிறார்கள்.


ஆனபடியால் இப்போது ஆபீஸ்களில் வேலை செய்கிறவர்களும், லீவ் நாட்களிலாவது குளம் வெட்டுவது, ரோடு போடுவது, கோவிலுக்கு மதில் கட்டுவது முதலான ஸோஷல் சர்வீஸ்களை உடல் வருந்தப் பண்ணினால் ஆண் பிரஜைகள்

அதிகம் பிறந்து, முடிவில் வரதட்சிணைப் பழக்கம் தொலையும் என்று நினைக்கிறேன். ஆனால் அது வேறு ஸப்ஜெக்ட்.


இந்திரிய ஸுகத்திலும் வியவஸ்தை வேண்டும் என்பதில் ஆரம்பித்தேன்.



விவாஹமே பெண்டிருக்கு உபநயனம்

இதற்குப் பிரம்மச்சரியம் ஒருத்தனைத் தயார் பண்ணுகிறது என்றால் பெண்ணின் கதி என்ன?அவளுக்கு உபநயனமோ, பிரம்மச்சரிய ஆச்ரமமோ இல்லையே!புருஷன் மனசு கட்டுப்பட்டிருக்கிற மாதிரி அவளையும் கட்டுப்பாட்டில் கொண்டு வராமல் இருக்கலாமா?சீர்திருக்காரர்கள் சொல்கிற மாதிரி ஸ்திரீகளுக்கு உபநயனமும் பிரம்மச்சரிய ஆச்ரமமும் இல்லாமல் அநீதிதான் இழைத்திருக்கிறது என்றால் - இல்லை.


புருஷனுக்கு உபநயன-பிரம்மச்சரியங்களுக்கு அப்புறம் ஏற்படுகிற விவாஹ ஸம்ஸ்காரமேதான் ஒரு பெண்ணுக்கு உபநயன ஸ்தானத்தில் அமைகிறது. அந்தக் குழந்தை பிராயத்திலிருந்து இவளுக்கு வயது வந்து தாம்பத்தியம் ஆரம்பிக்கிற வரையில், குருவிடம் பிரம்மச்சாரி மனஸை அர்ப்பணம் பண்ணின மாதிரி இவள் பதியிடம் பண்ண வேண்டும்.


"ஸ்த்ரீணாம் உபநயன ஸ்தானே விவாஹம் மநுரப்ரவீத்"என்பது மநுஸ்மிருதி. இதற்கு ஒரு வெளி அடையாளம் காட்டு என்றால் சட்டென்று, 'உபநயனத்திலே ஒரு பையனுக்குப் பூணூல் போடுகிற மாதிரி விவாஹத்திலே பெண்ணுக்கு மங்கள் ஸ¨த்திரம் கட்டப்படுகிறது என்று சொல்லிவிடலாம்.


உப-நயனம் என்றால் 'கிட்டே அழைத்துப் போவது', அதாவது 'குருவினடம் அழைத்துப் போய் குருகுல வாஸத்தில் பிரம்மசரியம் அநுஷ்டிக்கும்படிப் பண்ணுவது'என்று அர்த்தம் சொன்னேன். ஸ்திரீகளுக்குப் பதியே குரு. அவனிடம்

கொண்டு சேர்க்கிற விவாஹம்தான் அவளுக்கு உபநயனம்.


அதாவது சாஸ்திரப் பிரகாரம், ஒரு பிள்ளைக்கு உபநயனம் செய்கிற ஏழாவது வயசில் பெண்ணுக்கு விவாஹம் செய்துவிட வேண்டும். காமம் தெரிகிற முன்பே இவள் பதியை குருவாக வரித்துவிடும்படி செய்ய வேண்டும். காமம் தெரியாவிட்டால்தான் இப்படி குருவாக வரிக்கவும் முடியும்!குருவை ஒருத்தன் தெய்வமாகவே மதிக்க வேண்டும் என்பதும் சாஸ்திரம் அல்லவா? அப்படியே இந்தப் பெண் குழந்தை சின்ன வயசில் பதியை குரு-தெய்வமாக பாவித்து ஹ்ருதயத்தை அவனுக்கு ஸமர்ப்பணம் பண்ணிவிட வேண்டும். அந்த இள வயசில்தான் இது ஸாத்தியமும் ஆகும். பிற்பாடு புத்தியால் எதிர்க்கேள்வி கேட்பது, அஹம்பாவத் தடிப்பு எல்லாம் உண்டாகிவிடும்.

ஹ்ருதய-ஸமர்ப்பணம் - சரணாகதி - தான் ஜன்மாவைக் கடைத்தேற்றுகிற

பெரிய ஸாதனம். கீதையின் சரம ச்லோகத்தில் சொன்ன இந்த சரணாகதியை தெய்வமோ, குருவோ, பதியோ, யாரிடமோ பண்ணிவிட்டால் போதும். அப்புறம் தனக்கென்று ஒன்றும் இல்லை. நாம் யாரிடம் சரணாகதி பண்ணினோமோ அவர்கள் மூலம் ஈச்வரன் அநுக்ரஹம் பண்ணிவிடுவான்.


இம்மாதிரியாகப் பிள்ளையாகப் பிறந்த ஒருத்தனை குருவிடம் சரணாகதி பண்ணும்படியாக உபநயனத்தையும், அவன் கல்யாணம் செய்துகொள்ளும் போது அந்தக் கல்யாணத்தையே பெண்ணாய்ப் பிறந்தவள் பதியிடம் சரணாகதி பண்ணும்படியாக விவாஹ ஸம்ஸ்காரத்தையும் ரிஷிகள் ஏற்பாடு செய்து தந்திருக்கிறார்கள்.


அதாவது, பெண்ணை மட்டும் மட்டம் தட்டி அவளைப் புருஷனுக்கு சரணாகதி பண்ணச் சொல்லவில்லை. அந்தப் புருஷனையும் விவாஹத்துக்கு முந்தியே குருவுக்கு சரணாகதி பண்ணச் சொல்லியிருக்கிறது. அவன் எந்த வயசில் இந்த சரணாகதியைச் செய்கிறானோ அநத வயசில் இவள் அவனைக் கல்யாணம் பண்ணிக் கொண்டு சரணாகதி பண்ணவேண்டும் என்பது சாஸ்திரத்தின் அபிப்ராயம்.


உசத்தி-தாழ்த்தி, உரிமை (right) , ஸ்தானம் (position) முதலான விஷயங்களைவிட சித்த சுத்தியைப் பெரிதாக நினைத்தால் அப்போது சரணாகதிதான் முக்கியமாகிறது. அதற்கு வழியாகத்தான் புருஷனுக்கு உபநயனமும் பெண்ணுக்கு விவாஹமும் விதிக்கப்பட்டிருக்கின்றன என்று புரிந்து கொள்ள வேண்டும்.

விவாஹ வயதும் சட்டமும்

உபநயனம் மாதிரிப் பெண்ணின் ஏழாவது வயசில் கல்யாணம் பண்ண வேண்டும்;அப்போதுதான் சரணாகதி புத்தி வரும் - என்று சொன்னால், 'இது இந்த காலத்தில் ஸாத்தியமா?சட்ட விரோதமல்லவா?என்று கேட்பீர்கள்.


'ராஜாங்கத்தின் சட்டத்தை மீறு'என்று சொல்லக் கூடாதுதான். அப்படிச் சொல்லவில்லை. சட்ட மறுப்பு (civil disobedience) என்று இப்போது ஆட்சி நடத்துகிறவர்களே ஒரு காலத்தில் பண்ணிக் காட்டித்தான் இருக்கிறார்கள். 'சட்டம் என்று யாரோ எழுதினதற்காக எங்கள் ஸ்வாதந்தரியத்தை விட மாட்டோம்'என்று அப்போது சொன்னார்கள். அதே மாதிரி, "ஜெயிலில் போட்டாலும் பரவாயில்லை;பிராணன் போனாலும் பரவாயில்லை;ஆத்ம க்ஷேமத்துக்காக ஏற்பட்ட விவாஹ ஸம்ஸ்காரத்தை வெறும் லௌகிக விஷயமாக்கிச் சட்டம் பண்ணினால் ஏற்கமுடியாது"என்று கிளம்புகிற வேகம் நம் ஜனங்களுக்கு இல்லை. அப்படி இல்லையே என்பது மட்டும் நான் 'சட்டத்தை மீற வேண்டாம்'என்று சொல்வதற்குக் காரணமில்லை. ஒரு விஷயத்தில் மீறினால், மற்றவற்றிலும் மீறுகிற எண்ணம் உண்டாகி, கட்டுப்பாடே போய்விடும். அதனால்தான் (சட்டத்தை மீறும்படிச்) சொல்லவில்லை. ஆனாலும் சட்டத்தை மீறாமலே ராஜாங்கத்துக்கு சாஸ்திர

அபிப்ராயத்தை விடாமல் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும். ராஜாங்கத்துக்கு மட்டுமில்லை;ஜனங்களிலும் நூற்றுக்குத் தொண்ணூறு பேருக்கு மேல் சாஸ்திர அபிப்ராயத்தை விட்டு விட்டார்களே!அவர்களுக்கும் பாக்கியிருக்கிற ஸ்வல்ப சாஸ்திரக்ஞர்கள் எடுத்துச் சொல்லிக் கொண்டேயிருக்க வேண்டும். சட்டத்தை மீறாமலே, முன்னேற்றம் எத்தனை நிதானமாக ஏற்பட்டாலும் அதனால் மனம் தளராமல் நூறு வருஷம் ஆனாலும் ஆகட்டும்!இன்னம் அதிகமானாலும் ஆகட்டும்!உன்னதமான இந்த தேசாதாரம் மறுபடி பழக்கத்தில் வரப் பண்ணுவதற்கு

நம்மாலானதை சாந்தமான வழியிலேயே செய்வோம் என்று செய்ய வேண்டும். பலனை பார்க்க நாம் (உயிரோடு) இருக்க வேண்டும் என்பதில்லை. ஆயிரம் வருஷத்துக்கு அப்புறம்தான் பலன் உண்டாகும் என்றாலும், அதற்கு இப்போதே நம்மாலான விதையைப் போட்டுவிட வேண்டும். யத்தனத்தை இப்போது ஆரம்பித்தால்தான், என்றைக்கோ ஒரு நாளாவது பலன் கிடைக்கும். பிரயத்தனமே இல்லாவிட்டால் என்றைக்கும் பலன் ஏற்பட முடியாதல்லவா?விதையே போடாவிட்டால் எப்படி மரம் உண்டாகும்?


தர்மசாஸ்திரமே பெரிய சட்டம் என்று ராஜாங்கத்தாருக்கும், பொதுஜனங்களுக்கும் புரியும்படியாக, ஹிதமான முறையில் (by persuasion) வற்புறுத்திக் கொண்டேயிருக்க வேண்டும்.


விவாஹ வயது குறித்த விவாதம்

'பால்ய விவாஹம் கூடாது;பெண்கள் ரிதுவான பின்தான் கல்யாணம் பண்ணவேண்டும்'என்று இந்த நூற்றாண்டு ஆரம்பத்திலேயே நம் மதஸ்தர்களில் ரொம்பவும் செல்வாக்காக இருந்தவர்கள் வாதம் செய்து மகாநாடுகள் நடத்தி resolutions (தீர்மானங்கள்) போட்டிருக்கிறார்கள். இவர்கள் வேதத்தில் நம்பிக்கையில்லாதவர்கள் அல்ல. மாறாக தாங்கள் சொல்வதுதான் வேத ஸம்மதமான விவாஹம், பால்ய விவாஹம் என்பது வேத ஸம்மதமானதில்லை என்று இவர்கள் சொன்னார்கள்.


எம். ரங்காச்சாரியார், சிவஸ்வாமி அய்யர், ஸுந்தரமய்யர், கிருஷ்ணஸ்வாமி அய்யர் மாதிரியான பெரிய புள்ளிகள் இவர்களில் இருந்தார்கள். அப்புறம் ரைட் ஆனரபிள் (வி.எஸ். ஸ்ரீநிவாஸ) சாஸ்திரி இந்த விஷயத்தில் விசேஷமாக வாதம் பண்ணினார்.


நல்ல சாஸ்திர பாண்டித்தியம் பெற்றிருந்தவர்களிலேயே வைஷ்ணவர்கள் காஞ்சிபுரத்திலும், ஸ்மார்த்தர்கள் திருவையாற்றிலும் இரண்டு ஸபைகள் நடத்தி, வேதப் பிரகாரம் பூர்வத்தில் விவாஹ வயசு உயர்வாகத்தான் இருந்தது, ரிதுமதி விவாஹந்தான் நடந்திருக்கிறது என்று அபிப்ராயம் சொன்னார்கள்.


அப்புறம் ஏன் இப்படி பால்ய விவாஹம் வந்தது என்பதற்கும் ஒரு காரணம் சொன்னார்கள். அதாவது:துருக்கர்கள் இந்த தேசத்துக்கு வந்த புதிதில் ஹிந்து

மதத்தைச் சேர்ந்த கன்யாப் பெண்களைத் தூக்கிக் கொண்டு போய் பலாத்காரம் பண்ணுவது அதிகமாயிருந்ததாம். ஆனால் ஒருத்தன் 'தொட்ட'தை (பொட்டுக் கட்டினதை) அவர்கள் பலாத்காரம் பண்ணமாட்டார்களாம். அதனாலேயே பெண்கள் குழந்தைகளாக இருக்கும்போதே கல்யாணம் பண்ணிவிடுகிற புது வழக்கத்தை ஆரம்பித்தார்களாம். இப்படி இந்தக் கல்யாணச் சீர்திருத்தக்காரர்கள் சொல்லி, 'இப்போது நாம் மறுபடி வேதத்தில் இருந்த பிரகாரமே மாற்ற வேண்டும். Pre-puberty marriage (வயசு வரும் முன் கலியாணம்) என்ற அநாகரிகத்தைத் தொலைந்து விடவேண்டு"என்று வாதம் செய்தார்கள்.


தாங்கள் சொல்வது வாஸ்தவத்தில் சாஸ்திரோக்தமானது என்பதற்கு ஆதரவாக இவர்கள் குறிப்பாக இரண்டு சான்றுகளை காட்டினார்கள். ஒன்று விவாஹ சடங்கிலேயே வருகிற சில வேத மந்திரங்கள். மற்றது நம்முடைய தர்ம சாஸ்திரங்களிலெல்லாம் மிகச் சிறந்ததாக கருதப்படும் மநுஸ்மிருதி.


விவாஹப் பிரயோக மந்திரமான வேத வாக்கியத்தில் என்ன சொல்லியிருக்கிறது?இதைச் சொல்லுமுன் இன்னொரு விஷயம் சொல்ல வேண்டும். நம் ஒவ்வொரு தேகத்திலும் அங்கங்களுக்குள்ளே அவை ஒவ்வொன்றுக்கும் அதி தேவதையாக ஒரு தேவன் இருக்கிறான். கண்ணில் ஸ¨ரியன், கையில் இந்திரன் என்றிப்படி நமக்குள் ஆத்யாத்மிகமாக தேவ சக்திகள் இருக்கின்றன. இது தவிர ஒவ்வொரு வயோவஸ்தையிலும் (வயசுக்கட்டத்திலும்) ஒவ்வொரு தேவதைக்கும் நம் மேல் ஆதிக்கம் இருக்கிறது. இவ்விதத்திலே ஒரு பெண்ணானவள் பிறந்ததிலிருந்து வஸ்திரம் கட்டிக் கொள்ளத் தெரிகிற வரையில் 'ஸோமன்'என்ற தேவதையின் ஆதீனத்தில் இருக்கிறாள். (புருஷர்கள் கட்டிக் கொள்ளும் வேஷ்டிக்கே 'சோமன்'என்று பேர் இருக்கிறது!) அதற்கப்புறம் ரிதுவாகும் வரையில் அவள் கந்தர்வனின் ஆதீனத்தில் இருக்கிறாள். வயசு வந்ததிலிருந்து மூன்று வருஷம் அக்னியின் ஆதிக்கத்தில் இருக்கிறாள். ஸோமன் என்றால் சந்திரன். ஸோமன் ஒரு பெண்ணை ஸ்வீகரித்துக் கொண்டிருக்கிற குழந்தைப் பிராயத்தில் அதனிடம் நிலா மாதிரியான குளிர்ச்சி இருக்கிறது. அப்புறம்

கந்தர்வன் என்ற உல்லாஸ ஜீவியான, நல்ல ஸுந்தரமான தேவதையிடம் இருக்கிற சிறுமிக்கு லாவண்யம் விசேஷமாக இருக்கிறது. பிறகு அக்னியின் அதிகார காலம் உண்டான போது காமாக்னியை ஏற்படுத்தும் சக்தி உண்டாகிறது. மூன்று தேவதைகளுடைய அதிகாரத்துக்கு இப்படி லௌகிகமாக அர்த்தம் பண்ணுவதுண்டு. இது இருக்கட்டும்.


சீர்திருத்தக்காரர்கள் சான்று காட்டும் வேத மந்திரங்களின் அர்த்தம் என்ன?வரன் எனப்படும் கல்யாணப்பிள்ளை வதூ எனப்படும் கல்யாணப் பெண்ணைப் பார்த்து சொல்லும் இந்த வேத வாக்கியங்களுக்கு அர்த்தம் என்ன என்றால், "முதலில் ஸோமன் உன்னை அடைந்தான்;இரண்டாவதாக கந்தர்வன் அடைந்தான்;

மூன்றாவதாக அக்னி உனக்கு அதிபதி ஆனான். மநுஷ்ய வர்க்கத்தைச் சேர்ந்த நான் நான்காமவனாக உன்னை ஆளுவதற்கு வந்திருக்கிறேன். உன்னை ஸோமன்

கந்தர்வனிடம் கொடுத்தான்;அக்னி என்னிடம் இப்போது கொடுத்திருக்கிறான்"என்று அர்த்தம்.


விவாஹத்தின் போதே சொல்லப்படுகிற மந்திரத்தில் இப்படி வருவதால் கல்யாணப் பெண்ணானவள் ரிதுமதியாகி அக்னியின் ஆதினத்தில் மூன்று வருஷம் இருந்த பிறகுதான் அவளை ஒருத்தன் கல்யாணம் பண்ணிக் கொள்கிறான் என்றுதானே அர்த்தம் ஆகிறது?


இதைச் சொல்லித்தான் சீர்திருத்தக்காரர்கள், "நாங்கள் ஒன்றும் சாஸ்திர விரோதமான reform (சீர்திருத்தம்) கொண்டு வரவில்லை. ஆதியிலிருந்த சாஸ்திரத்துக்கு விரோதமாகத் துருக்க ராஜ்யத்தில் ஏற்பட்ட வழக்கத்தை மாற்றிப் பழையபடி சாஸ்திரோக்தமாகப் பண்ண வேண்டும் என்றுதான் சொல்கிறோம். வேத வாக்கியத்தைவிட பெரிய பிரமாணம் இருப்பதாக எந்த ஸநாதனியும் சொல்ல முடியாதே!அதைத்தான் நாங்கள் 'அதாரிடி'யாகக் காட்டுகிறோம் என்று சொன்னார்கள்.


இதோடு மநுஸ்மிருதியிலிருந்து இவர்கள் ஒன்றை மேற்கோள் காட்டினார்கள்.


த்ரீணி வர்ஷாண்யுதீக்ஷேத குமாரீ ரிதுமதி ஸதீ |

ஊர்த்வம் து காலாத் ஏதஸ்மாத் விந்தேத ஸத்ருசம் பதிம்||


இதற்கு அர்த்தம், "வயசுக்கு வந்த பெண் அதற்கப்புறம் மூன்று வருஷம் வரன் தேடி வருகிறானா என்று காத்திருந்து பார்க்கவேண்டும். வராவிட்டால் அதன்பின் அவளே பதியைத் தேடிக் கொள்ளலாம்"என்பது. இங்கே post-puberty marriage (ரிதுமதி ஆனபின்பே விவாஹம்) என்றுதானே தெரிகிறது?அது மட்டுமில்லை. "பெரியவர்கள் பார்த்துத்தான் பண்ணி வைக்க வேண்டும் என்றுகூட இல்லாமல் ஒரு பெண் அநுமதிக்கிற அளவுக்கு அவ்வளவு 'மாடர்னாக' மநுதர்மம் இருக்கிறது. நடுவாந்திரத்தில் வந்த வைதிகக் குடுக்கைகளும், மடிஸஞ்சிகளுந்தான் எல்லாவற்றையும் மாற்றிக் காட்டுமிராண்டித்தனமாகச் செய்துவிட்டார்கள்"என்று சீர்திருத்தக்காரர்கள் சொன்னார்கள்.


"வேத மந்திரங்கள், தர்ம சாஸ்திர ச்லோகம் இவற்றின் அர்த்தத்தைப் பார்த்தால் அவர்கள் சொல்வது சரிதானே?இதற்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள், ஸ்வாமிகளே!என்று கேட்டால், பதில் சொல்கிறேன்.


எட்டு வித விவாஹங்கள்

மநுஸ்மிருதி உட்பட்ட தர்ம சாஸ்திரங்களில் எட்டு விதமான விவாஹங்கள் சொல்லியிருக்கிறது.


ப்ரஹ்மோ-தைவ-ஸ்ததைவார்ஷ :

ப்ரஜாபத்ய-ஸ்ததாஸுர :|

காந்தர்வோ ராக்ஷஸச்சைவ

பைசாசாஷ்டம : ஸ்ம்ருத :


அதாவது பிராம்மம், தைவம், ஆர்ஷம், பிரஜாபத்தியம், ஆஸுரம், காந்தர்வம், ராக்ஷஸம், பைசாசம் என்று கல்யாணத்தில் எட்டு தினுசு.


'பிராம்மம்'என்பது குருகுலவாஸம் முடித்து வந்த உத்தம பிரம்மசாரிக்காக அவனுடைய மாதா-பிதாக்கள் ஒரு நல்ல குலத்துப் பெண்ணின் மாதா பிதாக்களிடம் வந்து கன்யாதானம் பண்ணித் தரச்சொல்லிக் கேட்டுக்கொள்வது. பிள்ளைக்குப் பெண் வீட்டார் வரதக்ஷிணை தருவது, பெண்ணுக்குப் பிள்ளை வீட்டார் பரிசம் தருவது என்று இரண்டும் இதில் இல்லை. வியாபாரக் கொடுக்கல் வாங்கலாக இல்லாமல் இரண்டு குலங்கள் அபிவிருத்தியாக வேண்டும் என்ற உயர்ந்த லக்ஷ்யம் ஒன்றிலேயே பண்ணப்படுவது பிராம்ம விவாஹம். தர்ம சாஸ்திரங்கள் எட்டு வித விவாஹங்களில் இதைத்தான் மிகவும் சிரேஷ்டமாகச் சொல்லியிருக்கின்றன.


'தைவம்'என்பது ஒரு யாகத்திலேயே அதைப் பண்ணுகிற ரித்விக்குக்குப் பெண்ணைக் கல்யாணம் செய்து தருவது. உரிய காலத்தில் பெண்ணைத் தேடி வரன் வராததால், பெண் வீட்டுக்காரர்கள் அவனைத் தேடிப் போய் யாகசாலையிலே மாப்பிள்ளை பிடிப்பதென்பது, பிராம்ம விவாஹத்தை விடத் தாழ்த்தி என்பதே அபிப்ராயம். பெண்ணைப் பிள்ளை வீட்டுக்காரன் தேடிவருவதுதான் சிலாக்கியமான விவாஹம் என்பதாக ஸ்திரீகுலத்தை சாஸ்திரம் உயர்த்தி வைத்திருக்கிறது.


மூன்றாவதான ஆர்ஷ விவாஹம் என்பது KS ஸம்பந்தமானது என்று பொருள் படுவது;சியவன ரிஷிக்கு ஸுகன்யாவைக் கல்யாணம் செய்து கொடுத்த மாதிரி இருக்கும் என்று 'ஆர்ஷ'என்றே வார்த்தையைப் பார்த்தால் தோன்றுகிறது. ஆனால் தர்ம சாஸ்திரப்படி, வரனிடமிருந்து இரண்டு பசுக்களை வாங்கிக்கொண்டு பெண்ணை பதிலுக்குத் தருவது 'ஆர்ஷம்'என்று தெரிகிறது. ஆர்ஷம் என்றால் ரிஷிக்குக் கொடுப்பது என்று அர்த்தம் செய்துகொண்டால், இதுவும் உரிய காலத்தில் பிராம்ம விவாஹம் ஆகாத கன்னிகையை ஒரு வயசான ரிஷிக்காவது சுசுரு¬க்ஷ செய்யும் பொருட்டுப் பத்தினியாக கொடுப்பது என்று ஆகும். வரனிடமிருந்து கோ வாங்கிக் கொண்டு கல்யாணம் செய்வது என்கிற போதும், அவனிடம் விசேஷமான சீலங்கள் இல்லாததால்தான் பசுவைக் கொடுத்துப் பெண் கேட்கிறான் என்றும், இந்தப் பெண் வீட்டுக்காரனுக்கும் பிராம்ம விவாஹப்படியான நல்ல ஸம்பந்தம் கிடைக்காததால்தான் திரவியத்தை வாங்கிக் கொண்டு பிரதியாகப் பெண்ணைக் கொடுக்கிறான் என்றும் ஏற்படுகிறது. உத்தமமான விவாஹத்தில் பண சம்பந்தமே, பிஸினஸ் அம்சமே கூடாது என்பது சாஸ்திர தாத்பரியம்.


நாலாவது பிராஜாபத்தியம். பிரஜாபத்தியம் பிஸினஸ் கொடுக்கல் வாங்கலாக இல்லாமல் ஒரு பிரம்மச்சாரிக்கு கன்யாதானம் பண்ணித் தருகிற

விவாஹ முறைதான். ஆனால், பிராஜாபத்தியம் என்கிற பெயரில் பிரஜையை உண்டு பண்ணுவது என்ற நோக்கம் அவஸரமாகத் தெரிவதால், தன் குமாரி சீக்கிரமே ரிதுவாகிவிட இருக்கிறாள் என்பதால் அவளுக்குக் கல்யாணம் பண்ணித்தர அவளுடைய தகப்பனார் அவஸரப்பட்டு வரனைத் தேடிக் கொண்டு தாமே போகிறார் என்று ஏற்படுகிறது. அதாவது, பிராம்மம் மாதிரி இல்லாமல் இங்கே பெண் வீட்டுக்காரர்களே பிள்ளையைத் தேடிக்கொண்டு போய்க் கல்யாணம் செய்து தருகிறார்கள். இது இரண்டாம் பக்ஷந்தான். கிருஹலக்ஷ்மியாக இருக்க வேண்டியவனை வரனின் கிருஹத்தார் தேடிவந்து, கேட்டுப் பண்ணிக் கொள்கிற பிராம்மம்தான் இதைவிட உசத்தி.


'ஆஸுரம்'என்றால் 'அஸுரத்தனமான'அர்த்தம். ஒரு பெண்ணுக்குப் பொருத்தமில்லாத (மாட்ச் ஆகாத) ஒரு வரனானவன் நிறையப் பணத்தை அவளுடைய தகப்பனாருக்கோ பந்துக்களுக்கோ கொடுத்து, அவர்களை அதனால் வசப்படுத்திக் கட்டாயப்படுத்தி அவளைக் கொடுக்கும்படிப் பண்ணுவதுதான் ஆஸுரம். ஆர்ஷப்படி கோவைக் கொடுத்துப் பெண் வாங்கினவன் வலுக்கட்டாயப்

படுத்துபவனில்லை. ஆஸுரக் கல்யாணம் பண்ணிக் கொள்கிறவனைப் போல் அவனைப் பணமோ, அதிகாரமோ கொழுத்தவன் என்றும் சொல்ல முடியாது. ஆஸுரம் (அசுர சம்பந்தமானது) என்ற வார்த்தையே ஆர்ஷம் (KS சம்பந்தமானது) என்ற வார்த்தைக்கு விரோதமாகத்தானே இருக்கிறது?அநேக பணக்காரர்கள் இரண்டாதாரம் கல்யாணம் செய்து கொண்டது ஆஸுரம்தான்.


அடுத்ததான காந்தர்வ விவாஹம் என்றவுடன் சகுந்தலைக்கும் துஷ்யந்தனுக்கும் நடந்தது என்று உங்களுக்கு நினைவு வரும். இந்தக் காலத்தில் 'ஒஹோ'என்று கொண்டாடும் காதல் கல்யாணம் இதுதான்.


'ராக்ஷஸம்'பெண் வீட்டுக்காரர்களோடு யுத்தம் செய்து ஜயித்துப் பெண்ணை எடுத்து கொண்டு போய்க் கலியாணம் பண்ணிக் கொள்வது. கிருஷ்ண பரமாத்மா ருக்மணியை இப்படித்தான் விவாஹம் செய்து கொண்டார்.


கடைசி, எட்டாவது தினுசு விவாஹம், பைசாசம், அசுரத்தனமானது, ராக்ஷஸத்தனமானது, இவற்றுக்கெல்லாம் முடிவிலே பிசாசுத்தனமான பைசாசத்தைச் சொல்லியிருக்கிறது. ஆஸுரத்தில் பெண்ணின் ஸம்மதத்தை எதிர்பார்க்காவிட்டாலும், அவளுடைய மநுஷ்யர்களுக்காவது பணத்தைக் கொடுத்தான். ராக்ஷஸத்தில் அவளுடைய மநுஷ்யர்களை ஹிம்ஸித்த போதிலும் அவளுடைய இஷ்டத்தை மீறிக் கல்யாணம் செய்து கொள்ளமாட்டான். ருக்மிணி கிருஷ்ணரிடம் ஆசை வைத்துத் தானே இருந்தான்?பைசாசத்திலோ பெண்ணுடைய இஷ்டத்தையும் பார்ப்பதில்லை. அவளுடைய பெற்றோர்களுக்கும் திரவியம் தருவதில்லை. பெண் வீட்டுக்காரர்களைப் பகைத்துக் கொண்டு, கல்யாணப் பெண்ணையும் பலவந்தப்படுத்தி விவாஹம் பண்ணிக் கொள்வதைத்தான் பைசாசம் என்று வைத்திருக்கிறது.


ஒரு பக்கம் பைசாசம், இன்னொரு பக்கம் பிராம்மம். பிராம்மம் என்பது தைவத்தைவிட உயர்ந்தது. ஆனாலும் லோகத்தில் எல்லாருக்கும் ஒரே மாதிரி வியவஸ்தை செய்துவிடக்கூடாது. இதை உணர்ந்து அதிகாரி பேதம் சொல்லியிருப்பதுதான் நம் சாஸ்திரத்தின் பெருமை. இதை உணராத இக்காலத்திய அபேத வாதங்களால்தான் எல்லா அனர்த்தங்களும் வந்திருக்கின்றன.


காட்டுக் கட்டைகளாக, கடூரமான பழக்க வழக்கங்களோடு உள்ள வனவாஸிகளும் இருக்கிறார்கள். உள்ளூர அவர்களிடம் நாகரிகவாஸிகளைவிட உயர் பண்புகள் இருக்கும். இவர்களாலும் சமூகத்துக்கு அநேகப் பிரயோஜனம் இருக்கும். ஆனால் இவர்களுக்குள் எப்போதும் தங்களுக்குள்ளே சண்டை சச்சரவு, family feud நிறைய இருப்பதுண்டு. இம்மாதிரி சந்தர்ப்பங்களில் இவர்களுக்கு ராக்ஷஸ, பைசாச விவாஹங்களைக் கூட அநுமதித்தாக வேண்டியிருக்கிறது. விவாஹத்துக்கு ஏற்பாடு தன்னால் சண்டையெல்லாம் போய் ஸெளஜன்யமாகி விடுவார்கள். இதே மாதிரி சரீர புஷ்டி, பௌதிகமான ஸந்தோஷங்கள் முதலியவற்றை விசேஷமாகக் கொண்ட க்ஷத்ரியர் போன்றவர்களுக்கு காந்தர்வமும் அநுமதிக்கப்பட்டிருக்கிறது. அந்தப் பெண்கள் தாங்களாகவே விவரமறிந்து புருஷனைத் தேடி மாலையிடுகிற 'ஸ்வயம்வர'உரிமையைக் கூடப் பெற்றிருக்கிறார்கள்.


இதனால்தான் வேதத்தை அடியற்றிய Hindu Law -ஆன தர்மசாஸ்திரங்களில் எட்டு விதமான விவாஹங்களையும் அநுமதித்திருக்கிறது. மந்திர பூர்வமாக விவாஹம் செய்து கொள்வதற்கு இந்த எட்டு விதமான வதூவரர்களுக்கும் ரைட் கொடுத்திருக்கிறது.


இவற்றிலே பிராம்ம விவாஹம் தான் சிரேஷ்டமானது. அது பெண்ணானவள் ரிதுவாவதற்கு முன்பே செய்யப்பட வேண்டியது. "ப்ரதானம் ப்ராக் ரிதோ:"என்று தர்ம ஸ¨த்திரத்திலேயே இருக்கிறது. பையனின் உபநயன ஸ்தானத்தில் பெண்ணுக்கு ஏழாவது வயசில் (கர்ப்பத்தைக் கூட்டி எட்டாவது வயசில்) செய்ய வேண்டிய விவாஹம் அது.


துரதிருஷ்டவசமாகச் சில பெண்களுக்குப் பிள்ளையாகத் தேடி வந்து செய்துகொள்ளும் பிராம்ம விவாஹம் நடக்காதபோது வயசு ஏறிவிடுகிறது. பிறகு தைவமாகவோ, ஆர்ஷமாகவோ, பிராஜாபத்யமாகவோ நடக்கிறது. இவை மட்டுமே பிராம்மணருக்கு ஏற்பட்டவை. இதரர்களுக்கு இவற்றோடு வேறு விதமான கல்யாணங்களும் - வயசு வந்த பெண்ணே ஸ்வயம்வரமாகத் தேர்ந்தடுப்பது, அல்லது காந்தர்வமாகச் செய்து கொள்வது உள்பட - அநுமதிக்கப் பட்டிருக்கிறன்றன.


கல்யாண மந்திரங்களில் பல எட்டு வகையாரவையும் உத்தேசித்தவை. அவை

எல்லாருக்கும் பொதுவாக இருக்கப்பட்டவை. அதாவது ரிதுமதியான பெண்ணை விவாஹம் செய்து கொடுப்பதற்கும் உரியவனான மந்திரங்கள் விவாஹ ப்ரயோகத்தில் வருகின்றன.


இம் மாதிரி அனைவருக்கும் பொதுவாக இருக்கிற மந்திரங்களில் தான் முன்னே சொன்ன இரண்டும் இருக்கின்றன. ஸோமன், கந்தர்வன், அக்னி ஆகியோரின் ஆதீனத்திலிருந்து தன்னை வந்தடைந்த ரிதுமதியான வதூவைப் பற்றி வரன் சொல்கிற அந்த மந்திரங்கள், பிராம்மமாக மட்டுமின்றி மற்ற எல்லா விதமான விவாஹங்களையும் உத்தேசித்துச் சொல்லப்ட்டவையே ஆகும்.


அதையே பால்ய விவாஹம் செய்துகொள்ளும் வரனும் சொல்கிறான். இப்போது குழந்தையாயிருப்பவளை இவன் பாணிக்கிரஹணம் செய்து கொண்டாலும், பிற்பாடு அவள் யுவதியாக ஆன பிறகுதானே இவன் தாம்பத்தியம் நடத்தப் போகிறான்?அப்போது ஸோமன்-கந்தர்வன்-அக்னி ஆகிய மூவரின் ஆதிக்கத்திலிருந்தும் தனக்குக் கொடுக்கப்பட்டவளாக்தானே அவளை இவன் அடையப் போகிறான்? அதனால் அப்போது சொல்ல வேண்டிய மந்திரத்தை முன்கூட்டியே (in advance) இப்போது விவாஹத்தில் சொல்லி விடுகிறான்.


நாம் இக்காலத்தில் பிள்ளை பிறந்தவுடன் செய்ய வேண்டிய ஜாதகர்மா, நாம கர்மா, சௌளம் முதலியவற்றை யெல்லாம் சேர்த்து வைத்து அவனுடைய விவாஹத்துக்கு முன் இருபது, இருபத்தி இரண்டு வயசில் பூணூல் போடும் போது காலம் தள்ளிச் சொல்லுகிறோமல்லவா?இப்படிப் பின்னால் காலம் தள்ளுவதற்குப் பதில், முன்பாகவே (அட்வான்ஸாகவே) பிராம்ம விவாஹக்காரன் இந்த மந்திரங்களைச் சொல்லி விடுகிறான்.


இதற்கு ஒரு example (உதாரணம்) சொல்கிறேன். பிரம்மசாரி செய்கிற ஸமிதாதானத்தில் தனக்கு நல்ல பிரஜை ஏற்படவேண்டும் என்பதும் அநேக வேண்டுதல்களில் ஒன்றாக வருகிறது. இதைப் பார்த்து நம் சீர்திருத்தக்காரர்கள், "பிரம்மச்சாரியாக இருக்கும்போதே தகப்பனாராகிவிட்டு அப்புறம்தான் விவாஹம் பண்ணிக் கொண்டு கிருஹஸ்தனாக வேண்டும் என்பதே வேதத்தின் அபிப்ராயம்"என்று சொன்னால் எத்தனை அஸம்பாவிதமாக இருக்கும்?பிற்பாடு என்றைக்கோ உண்டாக வேண்டியதற்கு இப்போதே ஒரு பிரம்மச்சாரி பிராத்தனை பண்ணுகிறான் என்பதுதானே சரியான அர்த்தம்?அப்படித்தான் விவாஹ விஷயமாகச் சீர்த்திருத்தக்காரர் காட்டும் வேத வாக்கியமும்.


இந்த மந்திரங்கள் பெண்ணுக்கு வயசு வந்த பின் நடக்கிற மற்ற விதக் கல்யாணங்களிலோ விவாஹ ஸந்தர்ப்பத்திலேயோ யதார்த்தமாகச் சொல்வதற்குப் பொருத்தமாக இருக்கின்றன.


இதுதான் ரைட் ஆனரபிள் சாஸ்திரி கட்சிக்கு நாம் சொல்கிற பதில்.

பெண்ணுக்கு வயசு வந்த பின்னும் செய்யப் படும் சில வகைக் கல்யாணங்களை அங்கீகரித்து மேற்படி மந்திரங்கள் விவாஹத்தில் சேர்க்கப்பட்டிருப்பதால், எல்லா விவாஹமும் வயசு வந்த பின்தான் செய்ய வேண்டும் என்று அர்த்தம் ஆகாது என்று சொல்கிறோம்.


விவாஹங்களில் மிக உத்தமமானதாக சாஸ்திரங்களில் சொல்லப்படும் 'பிராம்மம்'என்பதன்படி, கல்யாணப் பெண் ரிதுவாகாதவளே என்பதற்கு அழுத்தமான சான்றாகவும் விவாஹச் சடங்கின் கடைசியில் ஒரு வேத மந்திரமே இருக்கிறது.


வஸ்திரம் கட்டிக் கொள்ளத் தெரிந்த பின் ரிதுவாகும் வரையுள்ள இடைக்காலத்தில் ஒரு பெண் குழந்தை கந்தர்வனின் ஆதிக்கத்தில் இருக்கிறாள் என்று சொன்னேனல்லவா?அந்த கந்தர்வனின் பெயர் விச்வாவஸு. இந்த விச்வாவஸுவைப் பார்த்து கல்யாணப் பிள்ளை சொல்கிற மந்திரம் தான் நான் இங்கே குறிப்பிடுவது. "ஏ விச்வாவஸுவே! உன்னை நமஸ்காரம் பண்ணுகிறேன். c இந்தப் பெண்ணை விட்டு எழுந்திருந்து போ. வேறொரு பெண் குழந்தையிடம் போய்ச் சேரு. இவளுக்கு நான் பதியாகி விட்டேன் அல்லவா?அதனால் என்னிடம் இவளைக் கொடுத்து விட்டு c, தகப்பனாரின் வீட்டில் இருப்பவளும் விவாஹம் ஆகாதவளுமான இன்னொரு பெண்ணைச் சென்றடைவாயாக" என்று இங்கே கல்யாணப்பிள்ளை வேண்டிக் கொள்கிறான்.


வரனானவன் விவாஹத்தின் போது கல்யாணப் பெண்ணை விட்டுப் போகுமாறு கந்தர்வ பூஜை பண்ணி அந்த கந்தர்வனிடம் பிரார்த்திக்கிறான் என்பதிலிருந்து அவள் இன்னம் அக்னியின் ஆதிக்கத்தின் கீழே வரவில்லை, கந்தர்வனின் ஆதிக்கத்தில் இருக்கிறாள், அதாவது வயசுக்கு வரவில்லை என்றுதானே தீர்மானமாக முடிவாகிறது?


"எல்லாம் சரி. ஆனால் மநுஸ்மிருதியிலிருந்து சீர்திருத்தக்காரர்கள் quote செய்தார்களே!ரிதுவாகி மூன்று வருஷம் வரனை எதிர்பார்த்துவிட்டு, அப்புறம் ஒரு பெண் தானே புருஷனைத் தேடிக் கொள்ளலாம் என்று அந்த ச்லோகம் சொல்கிறதே!அதற்கென்ன ஸமாதானம்?"


ஸமாதானம் இருக்கிறது. "வயசுக்கு வருமுன் கல்யாணம் பண்ணிக் கொடுத்துவிட வேண்டும்" (ப்ரதானம் ப்ராக்ரிதோ:) என்பதே தர்மசாஸ்திரத்தின் பொது விதி. அந்த விதி தப்பிப் போகிற கேஸ்களில் என்ன செய்வது?ஒரு பெண்ணை வரனாகத் தேடி வராவிட்டால் அவளுடைய பிதாவோ, பிராதாவோதான் பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணித் தரவேண்டும். ஆனால் இப்படிச் செய்யாமல் அவர்கள் பாட்டுக்கு பொறுப்பில்லாமலிருந்தால்?அல்லது ஒரு பெண் நாதியில்லாமல், கார்டியன் இல்லாமல் இருந்தால்?அப்படிப்பட்டவளைப் பற்றித்தான் ரிதுவானதற்கு மூன்று வருஷத்திற்கு பின் தானே புருஷனைத் தேடலாம்

என்று மநுஸ்மிருதியில் சொல்லியிருக்கிறது. அதாவது, நாதியே இல்லாதவளுங்கூட, வயசுக்கு வந்தபின் உடனே தானாக புருஷனுக்காகப் புறப்படாமல், யாராவது பந்து மித்ரர்களோ, அண்டை அசலாரோ, அபிமானமுள்ளவர்களோ தனக்காக மாப்பிள்ளை தேட மாட்டார்களா என்று பொறுத்திருந்து பார்த்துவிட்டு, அப்புறம்தான் தானாகவே தேடலாம் என்று சொல்லியிருக்கிறது.


Context (ஸந்தர்ப்பம்) -ஐப் பார்க்காமலும், முன்னுக்குப் பின் வருவதை comparitive -ஆக (ஒப்பிட்டுப் பார்க்காமலும் சாஸ்திர வசனங்களையும் வேத மந்திரங்களையும் துண்டாக எடுத்து வைத்துக்கொண்டு பார்ப்பதால்தான் சீர்திருத்தக்காரர்கள் ஆசாரசீலர்களாக உள்ளவர்களின் வழக்கத்திலிருப்பதற்கு மாறானதையே சாஸ்திரோக்தமானது என்று வாதிக்கும்படி ஆகியிருக்கிறது.


சாக்ராயண உஷஸ்தி என்ற ரிஷிக்கு பால்ய (ரிதுவாகாத) மனைவியிருந்ததாக உபநிஷத்திலேயே (சாந்தோக்யம் 1.10.1) இருக்கிறது. இம்மாதிரி விஷயங்களை ஆர அமர சரியாகப் பார்க்காமல் சீர்த்திருத்தக்காரர்கள் பதட்டப்பட்டுப் பேசி விடுகிறார்கள்.


இருந்தாலும் முன்பெல்லாம் சீர்திருத்த வாதங்களுக்கு எதிர் வாதம் செய்ய ஜனங்களுக்குத் தெரியாவிட்டாலுங்கூட, "இதுவரை பெரியவர்கள் எப்படிப் பண்ணி வந்திருக்கிறார்களோ அப்படியே போவோம்;புதிதாக ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டாம்"என்ற அபிப்ராயம் இருந்தது. அதனால்தான் ஸ்ரீநிவாஸ சாஸ்திரி இந்த கல்யாண வயசு reform விஷயமாக இரண்டு முறை கவுன்சிலில் மசோதா கொண்டு வந்தும் அது நிறைவேறவில்லை. அப்புறம் தான் ஸார்தா என்பவர், இப்போது நாம் "சாரதா சட்டம்"என்று ஒரு அம்மாள் போட்ட சட்டம் மாதிரி நினைத்துக் கொண்டிருக்கிற இந்த சட்டத்தைக் கொண்டு வந்தார். அதற்குக்கூட சரிக்குச் சமன் ஆதரவாக 50%, எதிர்தரப்பில் 50% என்றுதான் வோட் விழுந்தது. அந்த ஸந்தர்பத்தில் பிரிட்டிஷ் ஸர்க்காரானது, "காங்கிரஸ் கேட்கிற ஸ்வயராஜ்யத்தைத்தான் நாம் தரவில்லை;அவர்களுக்குத் திருப்தியாக, மதத்தைக் கெடுப்பதற்காவது ஸஹாயம் செய்யலாம்"என்று நினைத்து நாமினேட்டட் மெம்பரை வைத்து இந்த மசோதாவுக்கு ஆதரவாக வோட் பண்ணச்சொல்லி, விவாஹ வயதை உயர்த்தியேயாக வேண்டும் என்பதைச் சட்டமாகச் செய்து விட்டார்கள். அதாவது public opinion (பொது ஜன அபிப்ராயம்) -ஐ eP கவர்மென்ட் பலத்தினாலே அந்த மசோதா 'பாஸ்'ஆயிற்று.



இப்போது நிலைமை ரொம்பவும் மாறிவிட்டது பழைய பழக்கங்களில் பக்தி விச்வாஸம் போய்விட்டது. பிரிட்டிஷ் ராஜ்யத்தில் சாரதாச் சட்டம் அமுலானவுடன், அவர்கள் கொடுத்திருந்த மஹாமஹோத்பாத்யாய டைட்டிலை "வேண்டாம்"என்று துறந்த பண்டிதர்கள் உண்டு. வங்காளத்திலிருந்த பஞ்சாணன தர்க்க ரத்ன பட்டாசார்யரும், திருவிசநல்லூரிலிருந்து காசிக்குப் போய் ஸெட்டில் ஆகிவிட்ட

லக்ஷ்மண சாஸ்திரி (தமிழ்நாட்டு பிராம்மணர் என்று தெரிவதற்காக 'லக்ஷ்மண சாஸ்திரி திராவிட்'என்றே பெயர் வைத்துக் கொண்டவர்) என்பவரும் இப்படிப்பட்ட தியாகத்தைச் செய்தார்கள். இப்போது நம் ஸ்வதந்திர இந்தியாவில் ராஜாங்கத்தால் சாஸ்திர விஷயங்களில் செய்யப்படும் மாறுதல்களைப் பார்த்து இப்படிக் குமறி எழுகிற உணர்ச்சி யாருக்கு இருக்கிறது?


நம் குழந்தைகளுக்கு சாஸ்திர தாத்பரியங்களை முழுக்கவும் நன்றாகச் சேர்ந்துப் பிடித்துப் பார்த்துச் சொல்ல வேண்டும். இங்கே ஒன்றும், அங்கே ஒன்றும் பார்த்தால் conflicting -ஆக (முரணாக) த்தான் இருக்கும். 'வேதத்தில் love marriage தான் சொல்லியிருக்கிறது என்கிற அளவுக்கு அரை குறை ரிஸர்ச் கொண்டு விட்டு விடுகிறது!சாஸ்திரங்களைப் பூராவாகப் பார்க்கவேண்டும். ஒன்றை எடுத்துக் கொள்ளும்போது அது சொல்லப்பட்ட ஸந்தர்பத்தைப் பார்க்க வேண்டும்;அதற்கு முன்னும் பின்னும், மற்றும் இதே விஷயமாக இதர இடங்களிலும் என்ன சொல்லியிருக்கிறது என்றெல்லாம் தீர்க்கமாகப் பார்த்து, விசாரித்தே, முடிவு சொல்ல வேண்டும்.


பிராம்ம விவாஹம் எல்லா ஜாதியாருக்கும் உண்டு. ஆனால் பிராம்மணர் தவிர மற்ற ஜாதியாருக்கு வேறு விதமான விவாஹமும் உண்டு. அதாவது ரிதுமதி விவாஹமும் அநுமதிக்கப்பட்டிருக்கிறது. சரீர ஸம்பந்தமான ஸெளக்கியங்களுக்கு முக்கியத்வம் தருவதானால் மற்ற விவாஹங்களும் செய்யலாம். ஆத்மாபிவிருத்திக்கு பிராம்ம விவாஹமே எடுத்தது.


ஏன் பாலிய விவாஹம் ?

விவாஹம் என்ற ஸம்ஸ்காரத்துக்குப் பல உத்தேசங்கள் உண்டு. அதிலே முக்யமான ஒன்று, ஸ்திரீகளுக்குச் சித்த பரிசுத்தி ஏற்படப் பதி என்ற ஒரு பிடிப்பை ஏற்படுத்தித் தருவது. அதைப் பிடித்துக் கொண்டே அவர்கள் கடைத்தேறி விடுவார்கள். குருவிடம் பிரம்மசாரி சிஷ்யன் சரணாகதி பண்ணிப் பாப நிவிருத்தியடைந்து சுத்த மனஸோடு இருக்கிற மாதிரி இந்தக் கன்னிகையும் இவனிடம் இருக்க வேண்டும். நம்முடைய கர்மா, ஜன்மா எல்லாவற்றுக்கும் காரணம்

மனஸின் சேஷ்டைதான். இந்த மனஸை வைத்துக் கொண்டு அதனுடைய இச்சைகளைப் பூர்த்தி பண்ணப் பாடுபடுவதில் தான் பாபங்கள் ஸம்பவிக்கின்றன;ஜன்மாக்கள் ஏற்படுகின்றன. மனஸை நிறுத்திவிட்டால் கர்மா இல்லை, ஜன்மா இல்லை, மோக்ஷம்தான். மனஸை நிறுத்துவது மஹாசிரமமான காரியம். அஷ்ட மஹாஸித்திகளைக் கூட அடைந்து விடலாம்;சிந்தையை அடக்கிச் சும்மா இருப்பதுதான் முடியாத காரியம் என்று (தாயுமானவர்) பாட்டுக்கூட இருக்கிறது. மனஸை நிறுத்த முடியாவிட்டாலும், அதைச் சொந்த விருப்பு, வெறுப்புகளுக்காக ஆடும்படி விடாமல் இன்னோரிடத்தில் அர்ப்பணம் பண்ணி விட்டால், அப்போது 'தனக்காகப் பண்ணிக் கொள்வது'என்பதால் ஏற்படும் பாபமும் ஜன்மமும் இல்லாமல் போகும். இன்னொருத்தர் ஆட்டி வைக்கிறபடி அவரிடம் மனஸை ஸமர்ப்பித்து விட்டோமானால் நமக்கு கர்த்தா என்கிற பொறுப்பில்லை. அதனால்

ஏற்படும் பாப புண்யமும் ஜன்மாவில் இல்லை. "என் செயலாவது யாது ஒன்றுமில்லை"என்று ஈச்வரனிடத்தில் இப்படித்தான் மனஸை அர்ப்பிக்கச் சொல்கிறார்கள். ஆனால் அதைச் செய்பவர் கோடியில் ஒருத்தர்தான். இதையே ஒரு பெண்ணுக்குப் பதியை ஈச்வரனாகக் காட்டியிருக்கிற நம் தர்மத்தில் ஏராளமான ஸ்திரீகள் ஸுலபமாகச் செய்து கடைத்தேற்றியிருக்கிறார்கள்.புருஷனை ஈச்வரனாக நினைப்பது கணவணே கண் கண்ட தெய்வம் என்ற கொள்கை, கல்லானாலும் கணவன் என்ற அடக்க ஸ்வபாவம், பாதிவ்ரதயம் (கற்பு) , ஸெளமங்கலியம் (சுமங்கலித் தன்மை) , ஸுமங்கலியாகவே செத்துப் போக வேண்டும் என்ற தீவர பிரார்த்தனை ஆகிய இவைகள் அநாதி காலமாக நம் தேசத்து vFg தர்மமாக, நம் தேசத்துப்பெண்களின் உத்தம ஜீவனத்துக்கு உயிர் நிலையாக இருந்து வந்திருக்கின்றது.


எந்தத் தேசத்திலும் உத்தம ஸ்திரீகள் இருந்திருப்பார்கள்தான். எந்த மதத்திலும் உயர்ந்த குணசாலினிகள் தோன்றியிருப்பார்கள். என்றாலும் மேலே சொன்ன விஷயங்கள் நம் தேசத்தின், நம் மதத்தின் நம் கல்ச்சரின் ஜீவாதாரமான ஒரு அம்சமாக இருப்பது போல் மற்ற இடங்களிலே சொல்ல முடியாது. 'நாகரிகம்' என்று சொல்லி கொண்டு இதை மாற்ற நினைப்பது நம்முடைய மஹோன்னதமான பண்பாட்டுக்கே ஆதாரமாக இருக்கப்பட்ட ஒரு ஆணிவேரை வெட்டி விடுகிற மாதிரியாகும்.


காதல் கீதல் என்று சித்த விகாரம் ஏற்படாமல், சரீர நினைப்பும் காமமும் வருகிறதற்கு முந்தியே ஒருத்தனை பர்த்தாவாக அடைந்தால்தான் குழந்தை உள்ளத்தில் உண்டாகிற பணிவினால் அங்கே உண்மையான சரணாகதி செய்து, "இவனே நமக்கு குரு;இவனே நமக்கு ஈச்வரன்"என்று இருக்க முடியும்.


ஆந்திர தேசத்திலும் மஹராஷ்டிரத்திலும் இன்றைக்கும் ஸ்திரீகளுக்கு விரதங்கள் அதிகம். அவற்றில் ஒன்று கன்னிகைகள் பரமேச்வரனையே பதியாக நினைத்துப் பூஜிப்பது. பிறகு ஒருத்தன் பதியாக வருகிறான். அவனையே பரமேச்வரனாகப் பூஜிப்பது, இப்போது பத்னியாகிவிட்ட அந்த கன்னிகைக்கு விரதமாக ஆகிறது. பரமேச்வரனைப் பதியாகப் பூஜித்து, முடிவில் எவன் பதியாக வந்தாலும் அவனே பரமேச்வரன் என்று பாவித்துவிட வேண்டியது.


கேள்வி கேட்காமல், நம்பிக்கையின் பேரில்தான், அதாவது பால்யத்தில்தான் ஒருத்தனைப் பரமேச்வரனாக நினைக்க முடியும். விவரம் தெரியாத போது வந்த இந்த நம்பிக்கை மனஸில் ஊறி ஊறி, நம் ஸ்வாபாவிகமான vFg தர்மத்தினால் மனஸில் உறுதிப்பட்டு விடுவதால், விவரம் தெரிந்த பின்னும் பதியே பரமேச்வரன் என்ற பக்தி நிலைத்து நின்றுவிடும். அவனிடத்திலேயே தன் மனஸை அர்ப்பணம் பண்ணித் தனக்கென்று மான அவமானம் எதுவும் இல்லாமல் ஒருத்தி இருந்துவிட்டால் அவளுடைய அஹம்பாவம் கரைந்து போய்விடுகிறது. அதுதான் ஜனன நிவிருத்தி, அது தான் மோக்ஷம். பக்தி, ஞானம், தபஸ், பூஜை, யக்ஞம்,

யோகம் என்ற எல்லாம் இந்த அஹங்கார நாசத்தைத்தான் உத்தேசமாகக் கொண்டிருக்கின்றன. இது ஒரு ஸ்திரீக்குப் பதிபக்தியால் ஸுலபமாக, இயற்கையாக ஸித்தித்து விடுகிறது.


இப்படி பாவித்து சரணாகதி பண்ணின நளாயினி, அநஸ¨யை, ஸாக்ஷ£த் மஹாலக்ஷ்மியான ஸீதாதேவி, ஸதி என்ற பெயர் பெற்ற தாக்ஷ£யிணியான பராசக்தி, ஸாவித்ரி, கண்ணகி, திருவள்ளுவரின் பத்தினி வாஸுகி முதலானவர்களைத்தான் நம் தேசத்தில் தெய்வங்களுக்கும் மேலாக வைத்திருக்கிறது. அவர்களை நினைத்தாலே நமக்கு வேறெதிலும் உண்டாகாத பெருமைப் புளகாங்கிதம் உண்டாகிறது- நமஸ்காரம் பண்ணுகிறோம். ஏன் இப்படி இருக்க வேண்டும் என்றால் சொல்லத் தெரியாது!"பதியே ஈச்வரன் என்பது பேத்தல்;ஸ¨பர்ஸ்டிஷன்;பெண்களை அடக்கி, நசுக்கி வைக்கிற கொடுமை" என்று

எத்தனை ஆக்ஷேபித்தாலும், இப்படி இருப்பதுதான் இந்த தேசாசாரம். பாரத தேசம் என்றால் இங்கே ஹிமோத்கிரியும் கங்கையும் இருக்கிறதோ இல்லையோ?ஏன் இருக்க வேண்டும் என்றால் என்ன சொல்வது?அப்படித்தான் நம் தேசத்துக் கற்பரசிகளின் சரணாகதி வாழ்க்கையும். ஆல்ப்ஸ் மலையை ஐரோப்பியர்கள் நினைக்கிற மாதிரிதானா நாம் கைலாஸத்தை நினைக்கிறோம்?மிஸிஸிபியை அமெரிக்காக்காரன் நினைக்கிற மாதிரி தானா நாம் கங்கையை நினைக்கிறோம்?அதற்கெல்லாம் மேலாக இவற்றிலே தெய்விகத்தை அநுபவிக்கிறோம் அல்லவா?அப்படியேதான் அவர்களுக்கு ஒரு குடும்ப ஏற்பாடாக மட்டும் உள்ள தாம்பத்தியத்தில் நம் சாஸ்திரங்கள் ஒரு பெண்ணுக்கு ஆத்மாவையே சுத்தப்படுத்தித் தருகிற பரம ஸாதனமான சரணாகதியைப் பிசைந்து வைத்திருக்கிறது. சமூக ரீதியில் பெண்களுக்கு நல்லது செய்வதாக நினைத்துக் கொண்டு இதற்குக் காரணமான பால்ய விவாஹத்தை மாற்றுவதனால் அவர்களுடைய ஆத்மாபிவிருத்திக்கு பெரிய ஹானியை உண்டாக்குகிறோம். சின்ன ஸெளகரியத்தை ஏற்படுத்திக் கொடுத்து மஹா பெரிய பிரயோஜனத்தை நஷ்டப்படுத்துகிறோம்.

பால்ய விவாஹம் பௌதிகமாகக் கெடுதல் என்பது வெறும் பேச்ச. குழந்தையாகக் கல்யாணம் பண்ணிக் கொண்டாலும் அப்புறம் அவள் சரீர ரீதியில் பக்குவமான பிறகுதான் தாம்பத்தியம் பண்ண அழைத்துக் கொள்ளப்படுவாள். அதுவும் தவிர தர்ச பூர்ணம் (அமாவாஸ்யை, பௌர்ணமி) போன்ற அநேக தினங்களில் பிரம்மசரிய நியமம் சொல்லியிருப்பதால் சரீரம், சித்தம் இரண்டுமே புஷ்டியோடு இருக்கும். இப்போதுதான் இந்தக் கட்டுப்பாடுகள் போய், சித்தவிகாரம், தேக பலஹீனம் இரண்டும் அதிகமாகி நரம்பு ஸம்பந்தமான டாக்டர்கள் நன்றாக விருத்தியாகும்படி ஆகியிருக்கிறது.


பால்ய விவாஹத்தினால் பால்ய விதவைகள் என்ற கொடூரமான களங்கம் ஏற்பட்டு ஹிந்து மதத்தையே மாசுபடுத்திவிட்டது என்பதுகூட மிகையான வாதம்தான் ( exaggeration ) பால்ய விதவைகள் இருக்க வேண்டுமானால் அவர்களுடைய கணவன்மார்கள் உயிரோடு இருந்தால் பதினைந்து வயசிலிருந்து

இருபத்தைந்து வயசுக்குள் இருப்பார்கள். நான் கேட்டறிந்த மட்டில் இந்த 15-25 வயசு age-group -ல் சாவு ஏற்படுவது ரொம்பவும் குறைச்சல்தான். எனவே பால்ய விதவைகள் சொல்பமாகவே இருந்திருப்பார்கள். இல்லவே இல்லை என்று நான் சொல்லவில்லை. ஒரு குழந்தை வைதவ்யம் அடைந்தது என்றால்கூட மனஸுக்கு வேதனையாகத் தான் இருக்கிறது. ஆனால் மொத்த பலனை பார்க்கும்போது இதற்கெல்லாம் விட்டுக் கொடுக்க வேண்டியதுதான்.


இப்போது பெண்ணுக்கு இருபது வயசுக்கு மேல் கல்யாணம் செய்து கொடுக்கிறபோதும் விதி இருந்தால் உடனே வைதவ்யம் வரத்தான் செய்கிறது. ஒரு ரயில் ஆக்ஸிடென்ட், ப்ளேன் ஆக்ஸிடென்ட் என்கிறபோது கல்யாணமாகி ஒன்று, இரண்டு மாஸங்களிலேயே ஜீவனை இழந்தவர்களும் அதில் பலர் இருப்பதைப் பார்த்து ரொம்பவும் கஷ்டப்படுகிறோம், வைதவ்யத்தைத் தடுப்பதற்காக பால்ய விவாஹத்தைத் தடுத்து விடலாம் என்றால், பிற்பாடு விவாஹத்தைத் தடுத்து விடலாம் என்றால், பிற்பாடு வயசு வந்தபின் கல்யாணமானவுடனே வைதவ்யம் வராமல் 'காரன்டி'தர நமக்குச் சக்தியில்லையே!


நம் தேசாரப்படி ஸ்திரீகள் பதியை ஈச்வரனாக பாவித்து அதன் மூலமாக மஹா பெரிய பலனான ஜன்ம நிவிருத்தியை அடைய வேண்டுமானால் சாஸ்திரத்தில் சொல்லியிருப்பதுதான் வழி. அதை விட்டுவிட்டு, "பெண்கள் நிறையப் படிக்கிறார்கள்;உத்யோகம் பார்க்கிறார்கள்;தங்கள் மனசுப்படி கல்யாணம் பண்ணிக் கொள்கிறார்கள்;இதெல்லாம் நம்முடைய progress (முன்னேற்றம்) "என்று சொல்பவர்கள் சொன்னாலும், எனக்கென்னவோ இந்தப் பெண்கள் இப்படிப் பலர் கண்ணில் பட்டுக்கொண்டு, சித்த விகாரங்களுக்கு ரொம்பவும் ஆளாகிற சூழ்நிலையிலே மாட்டிக் கொண்டிருக்கிறார்களே என்றுதான் ஒயாத கவலையாக, பயமாகக் கூட, இருக்கிறது.

'கட்டுப்பெட்டிகளாக இருந்து கொண்டு இப்படி பெண்களை கட்டுப்பாடு பண்ணி, பால்ய விவாஹம், பால்ய வைதஹவ்யம் போன்ற கொடூரங்களுக்கு ஆளாக்குகிறார்களே'என்று சீர்திருத்தக் காரர்கள் கோபித்துக் கொண்டு, பெண்களுடைய சமூக உரிமை போகிறது என்று அழுதால், எனக்கோ, 'இவர்கள் சீர்திருத்தம் என்கிற பெயரில் நம் பெண்களின் மகத்தான குலதனமான கற்புக்கு ஹானி உண்டாகும்படியான ஹேதுகளை ஏற்படுத்துகிறார்களே' என்று அதைவிடக் கோபம் வருகிறது;அழுகை வருகிறது. 'ஸ்திரீகள் கெட்டுப் போனால் குலக்ஷயம்தான்;லோகமே போய் விடும்;எல்லாரும் நரகத்துக்குப் போகவேண்டியதுதான்:

'ஸ்த்ரீஷ§துஷ்டாஸு வார்ஷ்ணேய ஜாயதே வர்ண ஸங்கர:|

ஸங்கரோ நரகாயைவ'


இக்காலப் பெண்களும் இதற்கு ஸம்மதித்திருக்கிறார்களே, பெற்றவர்களும் அங்கீகரித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார்களே என்பதுதான் மனஸைச் சுடுகிறது.


எல்லா ப்ராக்ரெஸ்ஸையும் எல்லா அட்வான்ஸையும் விட நம் பெண் குழந்தைகள் கெட்டுப் போய்விடக் கூடாதே என்பதுதான் எனக்குப் பெரியதாக, அதே கவலையாக, இருக்கிறது. படிப்பதாலும் உத்யோகம் பார்ப்பதாலும் அப்படியன்றும் நம் பெண்கள் சித்தம் கெட்டு விடவில்லை என்று எனக்கு ஆறுதல் சொல்கிறார்கள். எனக்கும் அந்த நம்பிக்கை போகவில்லை. ஆனாலும் இப்படி கண்டபடி திரிகிறார்களே, கெட்டுப் போக நிறைய சான்ஸ் இருக்கிறதே, கெடுப்பதற்கு என்றே ஸினிமாவும் நாவலும் பத்திரிகைகளும் இருக்கிறதே என்று பயப்படுகிறேன். அவ்வப்போது கன்னாபின்னா என்று நடந்து விடுகிற சங்கதிகளும் வருகின்றன. தப்பு நடந்து பிறகு அதை என்ன பண்ணி மாற்றுகிறது? இப்படி ஒன்று, இரண்டு கேஸ்கள் கூட நசக்க இந்த தேசத்தில் விடலாமா? என்று மனஸு கொதிக்கிறது. தாயார் - தகப்பனார்களுக்குத் தாஙகள் பெண்களைப் பற்றி இருக்க வேண்டிய கவலை, பயம் எல்லாவற்றையும் சேர்த்து வைத்து நான்தான் படுகிறேன் போலிருக்கிறது. எல்லாரும் கெட்டுப் போக வேண்டாம். ஆனாலும் ஒரு பால்ய விதவை உண்டானால்கூட களங்கம் என்று சீர்திருத்தக்காரர் சொன்னால், ஒரே ஒரு பெண் கெட்டுப் போனால்கூட அதைவிட ஆயிரம் மடங்கு களங்கம் என்று நான் பயப்படுகிறேன்.


வேதம் ஒதிய வேதியர்க்கோர் மழை

cF மன்னர் நெறியினர்க்கோர் மழை

மாதர் கற்புடை மங்கைக்கோர் மழை

மாதம் மூன்று மழையெனப் பெய்யுமே.

என்று சொல்லியிருக்கிறது. இதிலே 'cF மன்னர் நெறி' என் ஜூரிஸ்டிக்ஷனில் (அதிகார எல்லைக்குள்) இல்லாத விஷயம். அதனால் அதைப் பற்றி நான் கவலையோ, ஸந்தோஷமோ படுவதற்குப் பொறுப்பாளி இல்லை. ஆனால் வேதியரை வேதம் ஒதப் பண்ணுவதும், மாதர்களை கற்பு நெறி தவறக்கூடிய 'சான்ஸ்'களுக்குக் காட்டிக் கொடுக்காமல், காமம் புகுமுன்பே பதியை ஈச்வரனாக பாவிக்கக் கொடுத்து, அப்புறம் அவன் ஒருத்தனையன்றி மனஸ் கொஞ்சங் கூடச் சலிக்காத பாதிவ்ரயத்தை ஏற்படுத்தித் தருவதும் என் பொறுப்புதான். இந்த இரண்டுக்கும் என்னாலானதைச் செய்ய வேண்டும் என்றுதான் ஒயாமல் நினைத்துக் கொண்டு எதையாவது திட்டங்களைப் போட்டுக் கொண்டிருக்கிறேன். Goal ரொம்பவும் எட்டத்தில்தான் இருக்கிறது. என் பிரயத்தனத்தைவிட ஜாஸ்தி வேகத்தோடு அது விலகி விலகிப் போய்க் கொண்டேயிருக்கிறது. அதற்காக இந்த ரேஸில் நான் ஒய்ந்து விடக்கூடாது. அல்லது இப்போது வந்திருக்கிற நாகரிகப் போக்குகள் தான் சரி என்று 'ஆமாம் பூசாரி' யாகத் தலையாட்டி விடவும் கூடாது. 'போனது போனது தான்;சீர் செய்து சாத்தியப்படாது. இப்போது ஏற்பட்டிருக்கிற கலிப் பிரவாஹத்தைத் தடுத்து மாற்றுவது நடக்காத காரியம்'என்று விட்டு விடுவதற்காக என்னை இங்கே (பீடத்தில்) உட்கார்த்தி வைத்திருக்கவில்லை. அநாதி காலமாக இந்த தேசத்தில் உயர்ந்த நிலையில் இருந்து வந்திருப்பதும், இரண்டாயிரம் வருஷமாக இந்த மடம் பரிபாலித்து வந்திருப்பதுமான வேத அபிவிருத்தியையும் vFg தர்மங்களையும் என் காலத்தில் நான் வாயை மூடிக்கொண்டு வாரிக்

கொடுத்துவிட்டு 'ஜகத்குரு'பட்டம் சூட்டிக்கொண்டு, ஸாக்ஷ£த் பகவத்பாதாளின் பெயரை வைத்துக் கொண்டிருந்தால் அதைவிடப் பெரிய தோஷம் இல்லை. பகவான் (கீதையில்) சொன்ன மாதிரி ஜயாபஜயம் அவன் கையில் இருக்கிறது என்று விட்டு விட்டு, நான் பாட்டுக்கு முன் வைத்த காலைப் பின் வைக்காமல், என் பிரயத்தனத்தை விடாமல் பண்ணிக் கொண்டேதான் போக வேண்டும். ரிஸல்ட் என்னுடைய 'ஸின்ஸரிடி'யையும், அந்தரங்க சுத்தத்தையும், தபஸையும் பொறுத்து அமையும். கணிசமான பலன் இதுவரைக்கும் ஏற்படவில்லை என்றால் என் ஸின்ஸிரிடி போதவில்லை, என் மனஸ் சுத்தமாகவில்லை, என் தபஸ் குறைச்சல் என்றுதான் அர்த்தம். லோகம் என்னை எத்தனை ஸ்தோத்திரம் பண்ணினாலும் எனக்கு இப்படித்தான் தோன்றுகிறது.


எல்லாம் போய்விட்டது என்றால் நான் இதைக்கூடச் சொல்ல வேண்டாம்;ஒரு யத்தனமும் பண்ணவேண்டாம், மடத்தைக் கலைத்து விடலாம். ஆனால், போய்விட வில்லை. ஒரு சின்ன பொறி அளவுக்காவது இருக்கிறது. அதுகூட இல்லையானால் நான் இத்தனை சொல்வதைக் கேட்டுக் கொண்டு நீங்கள் இவ்வளவு பேர் உட்கார்ந்து கொண்டேயிருக்க மாட்டீர்கள். நான் சொல்கிறபடி நீங்கள் செய்வதோ, செய்யாததோ ஒரு பக்கம் இருக்கட்டும். என்னை இவ்வளவு தூரம் சொல்லவாவது விட்டு எதிர்த்து கோஷம் போடாமல், பொறுமையோடு கேட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்கிறீர்களோ இல்லையோ?அதனால்தான் ஒரு பொறியாவது இருப்பதாக நம்பிக்கொண்டு, அதை எப்படியாவது விலா வெடிக்கிற மட்டும் ஊதி ஊதிக் கொஞ்சம் ஜ்வாலை வரும்படிச் செய்ய முடியுமா என்று முயன்று கொண்டிருக்கிறேன். ஜனங்களின் புதுப்போக்குப்படியே நானும் போவது என்றால் அது பகவத்பாதாளுக்குப் பண்ணுகிற துரோகந்தான்.


மனஸிலிருப்பதைக் கொட்டித் தீர்த்தால்தானே நல்லது?பரஸ்பரம் நீங்கள் என்னிடம் பக்தி செய்வதும், நான் ஆசீர்வாதம் செய்வதும் இருக்கட்டும். அது இருந்து கொண்டேதான் இருக்கும். ஆனாலும் இந்த மடம் எதற்காக ஏற்பட்டது என்று சொல்லி, அந்த வழியில் உங்களைப் போகப் பண்ணாமல், உங்கள் பணத்தை மட்டும் நான் வாங்கிக் கொண்டால் அது பிடுங்கியடித்துத் தின்கிற காரியந்தான் என்பதால் மனஸை விட்டுச் சொன்னேன்.


வேத ரக்ஷணத்துக்காகப் பண்ணின முயற்சிகளில், போட்ட திட்டங்களில், பராசக்தியின் அநுக்கிரஹத்தால் ஒரளவு நல்ல பலன் ஏற்பட்டிருக்கிறது. வீட்டுக்கு வீடு அத்யயனம் இருக்கும்படி பண்ண முடியாவிட்டாலும், அடுத்த தலைமுறைக்கு அத்யயனம் என்ற ஒன்றே இல்லாமல் போய் விடுமோ என்ற நிலைமை மாறி, இப்போது அநேக வித்யார்த்திகள் தேசம் முழுதும் பல பாடசாலைகளில் அத்யயனம், வேத பாஷ்யம் எல்லாம் படித்துப் பாஸ் செய்து வருகிறார்கள்.


இந்தக் கன்யா விவாஹந்தான் சட்டமாகவே வந்து கையை ரொம்பவும் கட்டிப் போட்டுவிட்டது. அரசாங்கச் சட்டத்துக்கு அடங்கித்தான் ஆகவேண்டும். ஒரு

பெண்ணுக்கு மனோபாவ விகாரம் இல்லாத காலத்திலேயே 'இதுதான் தெய்வம், என்று நினைக்கும்படியாக ஒரு புருஷனின் கையில் பிடித்துக் கொடுத்து, அந்தப் பழக்கம் ஊறிய பிறகு அதாவது விகாரம் உண்டாகிற காலத்தில் தன் சரீரத்தை அர்ப்பணம் செய்து கொள்ளும்படிச் செய்யவேண்டும் என்கிற தர்ம சாஸ்திரத்தின் நிரந்தரமான சட்டத்துக்கு விரோதமாகத்தான் அரசாங்கச் சட்டம் இருக்கிறது. என்றாலும்கூட சட்ட மறுப்பு பண்ணு என்று சொல்வது சரியில்லைதான். அதனால் எறும்பு ஊறக் கல் தேயும் என்கிற மாதிரி நாம் விடாமல் எடுத்துச் சொல்லிக் கொண்டேயிருந்து அவர்களுடைய மனஸ் மாறுகிறதா என்று பார்க்க வேண்டியதுதான்.


நாம் இப்போதே செய்ய வேண்டியது


அது ஆகிற போது ஆகட்டும். நாம் உடனே பண்ண வேண்டியது என்ன?அவர்கள் 14 வயசு, 16 வயசு, 18 வயசு என்று ஏதோ ஒரு வரம்பு வைத்திருந்தால், அந்த வரம்பு தாண்டின உடனேயாவது கல்யாணத்தைப் பண்ணி விடுவதற்கு முன் கூட்டியே வரன் பார்த்து மற்ற ஏற்பாடுகளையெல்லாம் பண்ணி வைத்துக் கொள்ள வேண்டும்.


எவ்வளவுக்கெவ்வளவு குறைந்த வயசில் கல்யாணம் பண்ண இடமிருக்கிறதோ அவ்வளவு குறைந்த வயசில் பண்ணி விட வேண்டும்.பெண்கள் நீண்ட கால்ம் மனோவிகாரப்பட்டுக் கொண்டிருக்கும்படி விட்டால் அது நமக்கு பாபம் என்கிற பய உணர்ச்சியோடு இந்த விஷயத்தில் இனியாவது காரியம் செய்யவேண்டும். தானே தட்டிப் போனால் வேறு விஷயம். புருஷ யத்தனம் இல்லாமலிருந்தால் அது பெரிய தப்பு.


அப்படியே எவ்வளவுக்கெவ்வளவு குறைந்த செலவில் பண்ண வேண்டுமோ அப்படிப் பண்ண வேண்டும்.


விவாஹத்தில் எளிமை

சாஸ்திரம் விதிக்கிற வயஸை மீறுவதற்குச் சட்டம் காரணம் என்றால், சட்டம் போட்டிருக்கிற 'லிமிட்'டையும் eP 25 வயசு, 30 வயசுக்குக்கூடப் பெண்கள் கல்யாணமாகாமல் நிற்பதற்குக் காரணம் விவாஹத்தை பண சம்பந்தமான விஷயமாக்கியிருப்பதுதான். இப்போது கல்யாணத்தில் நடக்கிற ஆடம்பரங்களும் வரதக்ஷிணை வாங்குவதும் சீர் செனத்தி கேட்பதும் சாஸ்திர ஸம்மதமானதல்ல. செலவழிப்பதற்கு பெண் வீட்டுக்காரன் என்று ஒருத்தன் ஏற்பட்டிருக்கிறான் என்பதால் அவனிடம் ஒட்டக் கறக்க வேண்டும் என்பதற்காகவே பிள்ளைக்கு 'ஸ¨ட் வாங்கித் தா; பூட்ஸ் வாங்கித் தா;ரிஸ்டச் வாட்ச் வாங்கித் தா"என்று பறிமுதல் மாதிரிப் பண்ணி, இந்த அலங்காரங்களோடு ஜானவாஸ் ஊர்வலம் என்று ரொம்பவும் அத்யாவசியமான அம்சம் மாதிரி விவாஹத்துக்கு முதல் தினம் பண்ணுகிறார்களே, இது சாஸ்திரத்தில் அடியோடு இல்லாத விஷயம். இதற்கு ஒரு

மந்திரமும் கிடையாது.


பழைய நாளில் அதிபால்யத்தில் குழந்தைகளை உத்ஸாஹப்படுத்த வேண்டும், ஹோமப் புகையில் கஷ்டப்படுகிறதுகளே!என்று விளையாடல், நலுங்கு, ஊர்வலம் என்றெல்லாம் வைத்தார்கள், அவ்வளவு தான்.


"கன்யாம் கனக ஸம்பந்நாம்"என்று சாஸ்திரத்தில் சொல்லியிருப்பதால், தங்கமானது லக்ஷ்மி பிரஸாதத்தை உண்டாக்குவது என்பதால், தங்கத்திலே திருமாங்கல்யம் மட்டும் பண்ணினால் மட்டும் பண்ணினால் போதும். மற்ற நகைகள், வைரத் தோடு முதலியன வேண்டாம். பட்டும் வேண்டாம். நூலில் கூறைப் புடவை வாங்கினால் போதும். ஆந்திர தேசத்தில் இப்படித்தான் செய்கிறார்கள். எல்லாவற்றையும் விட வரதக்ஷிணை தொலைய வேண்டும். ஊர் கூட்டி சாப்பாடு, பாட்டு, சதிர், பந்தல் என்று விரயம் பண்ணுவது போகவேண்டும்.



தாய்க்குலத்தின் பெருமை

வைரத்திலும் பட்டிலும் நம் ஸ்திரீகளுக்கு எப்படியாவது மோஹம் போய்விட்டால் போதும், நம்முடைய குடும்ப வாழ்க்கையையும் சமூக வாழ்க்கையும் மட்டுமில்லாமல் ஸ்திரீதர்மமே பிழைத்துப் போய்விடும். 'லக்ஷக்கணக்கான பட்டுப் பூச்சிகளைக் கொன்று அதிலிருந்து எடுக்கிற பட்டினால் நமக்கு ஒரு அலங்காரமா? சாப்பாட்டிலே நாம் சைவம் என்று சொல்லிக் கொண்டால் போதுமா?இத்தனை பட்டுப் பூச்சிகளின் கொலை பாவத்துக்கு ஆளாகிறோமே!'என்கிற எண்ணம் பெண்களுக்கு வந்துவிட்டால் போதும். இதிலே இன்னொரு அம்சம், இதனால் வசதியில்லாதவர்களுக்கும் பட்டிலும், வைரத்திலும் ஆசையைத் தூண்டி விடுவது. பிள்ளை வீட்டுக்காரர்கள் "இத்தனை பட்டுப் புடவைகள் வாங்க வேண்டும், வைரத் தோடு போட வேண்டும்"என்றெல்லாம் நிர்ப்பந்தப்படுத்தி அநேகப் பெண்களை கல்யாணமாகாது நிறுத்தி வைக்கும்படி பண்ணுவது பாபம்.


கல்யாணத்தை economic problem (பொருளாதாரப் பிரச்சனை) -ஆகப் பண்ணியிருப்பது அக்கிரமம். "அக்கிரமம்"என்கிற வார்த்தையைத்தான் சொல்ல வேண்டும். அவரவரும் ஆணோடு பெண்ணோடு பிறந்தவர்கள்தானே?நமக்கும் பெண்கள் இருக்கிறார்கள். அப்படியிருக்க பிள்ளையகத்துக்காரன் என்று ஆனவுடன், "வரதக்ஷிணை கொண்டா, பாத்திரத்தைக் கொண்டா, நகையைக் கொண்டா, வைரம் போடு, பட்டு வாங்கு"என்று ஷைலக்மாதிரி கன்டிஷன் போட்டுப் பெண் குழந்தைகளை கல்யாணமாகாமல் கண்ணைக் கசக்கும்படியாகப் பண்ணுவதை மன்னிக்கிறதற்கேயில்லை. பெண்ணின் குணம், குலம் திருப்தியாயிருக்கிறதா?'நம் அகத்தை விளங்க வைக்க கிருஹலக்ஷ்மியாக இந்தக் குழந்தை வரவேண்டும்'என்று ஸந்தோஷமாக நினைத்து, எந்த கண்டிஷனும் போடாமல், பணம் காசைப் பற்றி நினைக்காமல் கலியாணம் பண்ணிக்கொள்கிற நல்ல மனஸ் நம் ஜனங்களுக்கு வரவேண்டும்.


இதில் ஸ்திரீகளின் பங்கு விசேஷமானது. பெண்ணாக பிறந்தவர்களுக்குத்தான் தங்கள் மாதிரியானவர்களிடம் அபிமானமும் அநுதாபமும்

இருக்க வேண்டும். தங்கள் பிள்ளைகளுக்குக் கல்யாணம் பண்ணுகிற ஸமயத்தில் பெண்டுகள் குறிப்பாக நான் சொன்ன விதத்தில் உயர்ந்த பண்போடு நடந்து கொள்ளவேண்டும். 'அந்த அகத்தில் அப்படிச் சீர் செய்தார்களே;அந்த பிள்ளைக்கு அவ்வளவு செய்தார்களே;அந்த மாதிரி நம் பிள்ளைக்கு நடக்காவிட்டால் எப்படி?அது நமக்குக் குறைவு இல்லையா?என்ற மாதிரி அசட்டு எண்ணங்களை விட்டுவிட்டு, மற்றவர்கள் செய்த ஜம்பத்துக்கும் டாம்பீகத்துக்கும் நாம் இடம் கொடுக்காமல், இனிமேல் கல்யாணம் பண்ணப் போகிற மற்ற பிள்ளையகத்துக்காரர்களுக்கு நாமே வழிகாட்டியாக இருக்க வேண்டும். 'இதுவரை மற்றவர்வர்கள் செய்த ஜம்பத்துக்கும் டாம்பீகத்துக்கும் நாம் இடம் கொடுக்காமல், இனிமேல் கல்யாணம் பண்ணப் போகிற மற்ற மாதிரி அசட்டு எண்ணங்களை விட்டுவிட்டு, மற்றவர்கள் செய்த ஜம்பத்துக்கும் டாம்பீகத்துக்கும் நாம் இடம் கொடுக்காமல், இனிமேல் கல்யாணம் பண்ணப் போகிற மற்ற பிள்ளையகத்துக்காரர்களுக்கு நாமே வழிகாட்டியாக இருக்க வேண்டும். 'இதுவரை மற்றவர் பண்ணின தப்பை, அக்ரமத்தை ஏன் நாம் follow பண்ண வேண்டும்?இனிமேலே மற்றவர்கள் நம்மை follow பண்ணும்படியாக இப்போது நாம் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தினால் இதுவேயல்லவா நமக்குப் பெருமை?'இப்படிப்பட்ட உணர்ச்சி தாய்க்குலத்துக்கு உண்டாக வேண்டும்.


'நம்மகத்துப் பெண்ணுக்கு நாம் வரதக்ஷிணை கொடுத்தோமே!நமக்கே நம் அப்பாவும் அந்த காலத்தில் வரதக்ஷிணை கொடுத்தாரே!அதனால் இப்போது நாமும் வாங்கினால் தப்பில்லை'என்று தாங்களாக நியாயம் கற்பித்துக் கொண்டுவிடக் கூடாது. இந்தக் கெட்ட பழக்கம் - நம் தர்மத்தைச் சிதைக்கிற பழக்கம் எப்படியாவது நிற்க வேண்டும். இதற்காக யாராவது இப்போது தியாகியாக முதலடி எடுத்து வைத்துத்தான் ஆகவேண்டும். எதெதற்கோ தியாகம் என்று கிளம்புகிறார்களே! ஒரு ஊர் இந்த ஜில்லாவில் இல்லாமல் இன்னொரு ஜில்லாவுக்குப் போகிறது என்றால் அதற்காக நூறு பேர், ஆயிரம் பேர் மறியல் செய்து ஜெயிலுக்குப் போகிறார்கள்;எவனாவது ஒருத்தன் கெரஸினைத் தன் மேலே கொட்டிக் கொளுத்திக் கொண்டு, உயிரையே விடுகிறான்!நம்முடைய உயர்ந்த vFg தர்மத்தைக் காப்பாற்ற நாம் கொஞ்சம் பண நஷ்டம் படக் கூடாதா?


"ஸெளந்தர்யலஹரி சொல்கிறோம். அபிராமி அந்தாதி சொல்கிறோம்"என்று பல பெண்கள் என்னிடம் வந்து ஆசிர்வாதம் கேட்கிறார்கள். நல்ல காரியம்தான். ஆசீர்வாதம் பண்ணுகிறான். ஆனால் இதையெல்லாம் விட அதிகமாக அம்பாளுடைய பிரீதியை சம்பாதித்துக் கொள்ள வேண்டுமானால் இவர்கள் வரதக்ஷிணை, வைரத் தோடு, சீர் ஸெனத்தி என்ற கண்டிஷன் இல்லாமல் நான் சொன்ன மாதிர்க கலியாணங்களுக்கு மனப்பூர்வமாக சம்மதித்தால்தான் முடியும். தங்கள் மாதிரியான பெண்கள் வயசு வந்தும் கலியாணமாகாமல் நிற்பது, அதனால்

மனோ விகாரப்படுவது, மானபங்கப்படுவது, அப்புறம் மான உணர்ச்சியும் மரத்துப் போய் விடுவது என்றிப்படி ஆகியிருக்கிற நிலைமையை மாற்றுவதற்கு இவர்களுக்கு மனசு இரங்கினால் இவர்களிடம் அம்பாளுக்கு மனசு தானாக இரங்கும்.


'நாங்கள் கேட்காமல் பெண் வீட்டுக்காரர்களாகவே இத்தனை கொடுக்கிறோம் என்று ஸ்வயேச்சையாக வந்ததால் வாங்கிக் கொண்டோம்'என்று சொல்வதுகூட தப்பு. ஏனென்றால் ஒருத்தர் பண்ணுவதிலிருந்து இன்னொருத்தர் என்று இது செயின் மாதிரிப் போய்க் கொண்டிருக்கிற வழக்கம். கட்டாயப்படுத்தாமலே ஒருத்தர் வரதக்ஷிணை கொடுத்தாலும் இதனால் அவர் தன் பிள்ளைக்கும் கலியாணம் பண்ணும்போதும் வரதக்ஷிணை எதிர்பார்க்கத்தான் செய்வார். அதனால் அவர்களாகவே கொடுத்தாலும்கூட, "வேண்டாம்"என்று சொல்லுகிற உயர்ந்த மனோபாவம் வரவேண்டும். பெண்வீட்டாருக்கு மிதமிஞ்சிப் பணம் இருந்தால் கூட, "எங்களுக்குப் பணம் தராதீர்கள்". உங்கள் பெண்ணுக்கே ஸ்ரீ தனமாகப் போட்டு வையுங்கள்"என்று சொல்ல வேண்டும்.


பிள்ளை வீட்டுக்காரர்களின் செலவுக்கு - அதாவது பிள்ளையின் உறவுக்காரர்களுக்கு துணிமணி வாங்குகிறது;இவர்கள் கலியாணத்துக்குப் போகிற பிரயாணச் செலவு முதலானதுகளுக்கு - பெண் வீட்டுக்காரர் 'அழ'வேண்டும் என்பது துளிக்கூட நியாயமே இல்லை. நம் பிள்ளைக்கு தானே கல்யாணம்?நாமே ஏன் அதற்கு செலவழிக்கக் கூடாது?எவனோ கொடுக்கிற பணத்தில் நாம் டிரஸ் வாங்கிக் கொள்வது அவமானம்தான். நமக்கு வக்கில்லை என்றுதான் அர்த்தம். இதையே 'பிள்ளையகத்து ஸம்பந்தி'என்று பெரிய பெயரில் தங்கள் 'ரைட்'மாதிரி மிரட்டி உருட்டிச் செய்து வருகிறோம்!வரதக்ஷிணை நாமாகக் கேட்டாலும் சரி, அவர்களாகக் கொடுத்தாலும் சரி. திருட்டுச் சொத்து மாதிரி என்ற பயம் வேண்டும். இது இரண்டு தரப்போடு நிற்காமல் vicious circle -ஆக (விஷ வட்டமாக) ஸமூஹத்தையே பாதிப்பதால் எப்படியாவது இதை ஸமாப்தி பண்ண வேண்டும்.


மணப்பிள்ளையின் கடமை

வரனாக இருக்கப்பட்ட பிள்ளைகளும் இதற்கு ஸஹாயம் செய்ய வேண்டும். சாதாரணமாக, மாதா பிதாக்களின் வார்த்தைக்குப் புத்திரர்கள் மாறு சொல்லவே கூடாதுதான். அப்படிச் சொல்லும்படி நான் புத்திரர்களுக்கு உபதேசம் செய்யக்கூடாதுதான். ஏற்கெனவே முன்னாளைப் போலப் பிள்ளைகள் அப்பா, அம்மாவுக்குக் கட்டுப்பட்டிராத இக்காலத்தில் நானும் அவர்களைக் கீழ்ப்படியாமல் இருப்பதில் ஊக்கக்கூடாதுதான். இதெல்லாம் எனக்குத் தெரிந்தாலும், விவாஹ விஷயத்தைப் பண ஸம்பந்முள்ளதாகப் பண்ணிப் பிராசீனமான நம் vFg

தர்மத்துக்கு உண்டாக்குகிற பெரிய ஹானியைப் பார்க்கிறபோது, இந்த ஒரு விஷயத்தில் மட்டும் பிள்ளைகள் எனக்கு ஆதரவாக அப்பா, அம்மாவிடம் வாதம் பண்ணி, "வரதக்ஷிணையும், சீரும் கேட்காவிட்டால்தான் கல்யாணம் செய்து கொள்வேன்'என்று ஸத்யாக்ரஹம் பண்ண வேண்டும் என்று சொல்லத்

தோன்றுகிறது. நிஜமான ஸத்யாக்ரஹமாக இருக்கவேண்டும். பெற்றோர் கேட்கவில்லை என்பதற்காக பிள்ளை அவர்களை ஒதுக்கிவிட்டு கல்யாணம் பண்ணிக் கொண்டால் அது ஸத்யாகிரஹம் இல்லை. ஸத்யாக்ரஹம் என்றால் அதிலே தியாகம் இருக்கவேண்டும். அதனால் வரதக்ஷிணை இல்லாமல் கல்யாணம் பண்ணிக் கொள்ள மாட்டீர்களா?ஸரி, அப்படியானால் நான் கல்யாணமே பண்ணிக் கொள்ளாமல் பிரம்மசாரியாக இருந்து விடுகிறேன்'என்று தியாகமாக எதிர்ப்பு செய்தால்தான் ஸத்யாக்ரஹம். இப்படி பண்ணினால் எந்தத் தாயார்-தகப்பனார் மனசும் மாறாமல் போகாது. இதுதான் இப்போது இளைஞர்கள் செய்ய வேண்டிய பெரிய சீர்திருத்தம். கலப்பு மணம், காதல் கல்யாணம் பண்ணிக் கொள்வது மாதிரியான சாஸ்திர விரோதமான காரியங்களைச் செய்து பெருமைப்படுவதற்கு பதில் சாஸ்திரோக்தமான இந்த வரதக்ஷிணையழிப்புக்கு நம்முடைய இளைஞர்கள் உறுதியோடு சகாயம் செய்தால் இதுவே பெரிய சீர்திருத்தமாயிருக்கும்.


மாதா-பிதா-குரு என்று மூன்றை வேதமே சொல்லியிருக்கிறதோ இல்லையோ?அதனால் மாதா-பிதாவைத் தானாக ஒரு புத்திரன் எதிர்த்துக் கொள்ளக் கூடாது என்றாலும் இப்போது நான் - குரு என்று பேர் வைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறன் - சொல்வதால் வரதக்ஷிணை விஷயத்தில் மட்டும் மாதா பிதாவின் அபிப்ராயம் சாஸ்திரப்படி இல்லாவிட்டால் பிள்ளைகள் அவர்கள் எதிர்த்து வாதம், ஸத்யாக்ரஹம் பண்ண வேண்டும்.


இது நம் யுவர்கள், கான்ஸர் மாதிரி நம் சமூகத்தில் புரையோடி அரிக்கிற ஒரு கொடுமையை அகற்றி நம் ஸமுதாய மறுமலர்ச்சிக்குச் செய்கிற மகத்தான தொண்டாக இருக்கும். நம் மதத்தின் மேன்மையில் உள்ள நம்பிக்கைக்காக மட்டும் இன்றி, மனிதாபிமானக் கடமையாகவும் இதை நம் இளைஞர்கள் செய்ய முன்வர வேண்டும்.


நெடுங்காலப் பயிராகவும், எதிர்காலத்துக்கு உத்தரவாதமாயும், தார்மிகப் பாதுகாப்பாகவும் இருக்கிற விவாஹம் என்ற விஷயத்தில் பெரியவர்கள் பார்த்துப் பெண்ணை நிச்சயம் செய்கிறபடிதான் பிள்ளைகள் செய்யவேண்டும். ஆனால் அந்தப் பயிரையே பூச்சி அரிக்கிற மாதிரி வந்திருக்கிற வரதக்ஷிணை கொடுமைக்கு உடந்தையாக இருந்து விடக்கூடாது. அப்பா, அம்மா சொற்படி கேட்பதோடு சமூகத்துக்குச் செய்ய வேண்டிய கடமையும் இருக்கிறதல்லவா?வரதக்ஷிணை கேட்டால் கல்யாணத்துக்குக் கண்டிப்பாக மறுத்துவிட வேண்டியது பிள்ளையின் கடமை. இது குடும்பத்துக்கு, மடத்துக்கு, சமூகத்துக்கு, பெண் குலத்துக்கு எல்லாவற்றுக்கும் செய்கிற தொண்டு. இப்படியாக இளைஞர்கள் எல்லாரும் சபதம் செய்து, அதை நிறைவேற்ற வேண்டும்.


மடத்தில் செய்துள்ள ஏற்பாடு

ஏழெட்டு வயசில் கல்யாணம் பண்ண முடியாவிட்டாலும், சட்டம்

அநுமதிக்கிற வயசு வந்தவுடனேயாவது கல்யாணத்தைப் பண்ணிவிட வேண்டும் என்பதற்காக "கன்னிகாதான ட்ரஸ்ட்"என்று ஒன்றை ஆரம்பித்திருக்கிறோம். ஏழையான பெண் குழந்தைகளுக்குப் பணம் இல்லாததால் கல்யாணம் நடக்கவில்லை என்று இருக்கக்கூடாது என்று உத்தேசத்தோடு இந்த டிரஸ்டிலிருந்து வசதியில்லாதவர்களுக்குப் பரம சிக்கனமாகச் செலவுக்குப் பணம் கொடுத்துக் கல்யாணம் பண்ணி வைக்கிறோம். இதற்கு உபகாரம் பண்ணுவது பெரிய புண்ணியம். நம்முடைய தர்மத்துக்கு சேவை செய்கிற பாக்கியத்தை இது தரும்.


மற்ற ஜாதிகள் பிராம்மணர்களைப் போல இத்தனை கிரிசை கெட்டுப் போகவில்லை. அந்த ஜாதிகளில் இத்தனை வரதக்ஷிணைக் கொடுமையோ, பெண்கள் இத்தனை பெருவாரியாகக் காலேஜ் படிப்பு, உத்யோகம் என்று போய் ஸ்வயேச்சையாகத் திரியும்படித் 'தண்ணி தெளித்து' விட்டிருக்கிற நிலைமையோ இல்லை. ஆதலால் ஏழைப் பிராம்மணப் பெண்களை உத்தேசித்தே இந்த டிரஸ்ட் ஏற்படுத்தப் பட்டிருக்கிறது.


இந்த கன்னிகாதான டிரஸ்டுக்கும் சரி, வேதரக்ஷண நக்ஷத்திரக் காணிக்கைக்கும் சரி, பிராம்மணர்களைத் தவிர மற்றவர்களிடம் பணம் வாங்கக் கூடாது என்பது என் அபிப்ராயம். காரணம், இவன் பண்ணின தப்புக்கு மற்றவர்களை penalty (அபராதம்) செலுத்தும்படிப் பண்ணக்கூடாது என்பதுதான். வேதத்தை விட்டது இவன் பண்ணின பெரிய தப்பு. சட்டத்துக்கு உட்பட்டுகூட அதன்படியான மினிமம் வயசிலும் பெண்களுக்குக் கல்யாணம் பண்ணாமல் விட்டிருப்பது, அதே மாதிரி அல்லது அதைவிடப் பெரிய தப்பு. அதனால் இந்தத் தப்புக்களை நிவருத்தி பண்ணுவதற்காகச் செய்திருக்கிற ஏற்பாடுகளுக்கு இவனேதான் பணம் கொடுக்க வேண்டும். மற்றவர்களை உபத்ரவிக்கக் கூடாது. அப்படிச் செய்தால் இது இரண்டோடு மூன்றாவது தப்பாகும். பிராம்மணன்தான் இப்பொழுது எந்தத் தொழிலுக்கு வேண்டுமானாலும் போய் சம்பாதிக்கிறானே! கேளிக்கைகளுக்கும் யதேஷ்டமாகச் செலவழிக்கிறானே!வேண்டாத க்ளப்களுக்கும் கேளிக்கைகளுக்கும் யதேஷ்டமாகச் செலவழிக்கிறானே!அதனால் இவனேதான் இந்த இரண்டுக்கும் கொடுக்க வேண்டும் என்பது என் அபிப்ராயம்.




திருமாங்கல்யம், கூறைப்புடவை, மூஹ§ர்த்த வேஷ்டி இவை கொடுத்து வெகு சிக்கனமாகக் கல்யாணத்தை முடிப்பதற்கு கன்னிகாதான டிரஸ்டின் மூலம் திரவிய ஸஹாயம் செய்யப்படுகிறது.


வேதரக்ஷணத்துக்காகப் பண்ணிய ஏற்பாடுகளின் அளவுக்குக் கூட இந்தக் கன்யாதான ஏற்பாடு திருப்திகரமாகப் பிரச்சனையைத் தீர்க்கவில்லை. இதை ரொம்ப வருத்தத்தோடு சொல்கிறேன். கடப்பாரையை முழுங்கினவனுக்கு சுக்குக் கஷாயம் கொடுத்த மாதிரி, குட்டிச் சுவராகப் போன பிராம்மண சமூகத்துக்கு ஏதோ துளிதான்

இதனால் பண்ண முடிந்திருக்கிறது. இப்போது கரை புரண்டு வந்திருக்கிற அதர்மப் பிரவாஹத்துக்கு அணை போட வேண்டும் என்ற எண்ணமே பெண்ணைப் பெற்றவர்களுக்கு இல்லாததால் ட்ரஸ்டை utilise செய்து கொள்ள (பயன்படுத்திக் கொள்ள) போதுமானவர்கள் வரவில்லை. காலத்தில் கல்யாணமாகவில்லையே என்ற கவலை பெண்ணைப் பெற்றவர்களுக்கு விட்டுப் போய், அவர்கள் பாட்டுக்குப் பெண்ணை சம்பாத்தியத்துக்கு விட்டுவிடலாம் என்று ஹாய்யாக நினைக்கிற பொழுது, நாங்கள் 'டிரஸ்ட்'வைத்து என்ன பண்ணுவது?இப்போது பெண்ணைப் பெற்றவர்கள் பிள்ளை தேடுவதற்குப் பதில் அவளுடைய உத்தியோகத்துக்குத்தான் ரெகமன்டேஷன் தேடுவதாக நம் தேசத்தில் துர்த்தசை ஏற்பட்டிருக்கிறது. மிஞ்சினால் வருஷத்தில் ஐம்பது கலியாணத்துக்கு உதவி செய்கிறோம். ஒரு வருஷத்தில் ஐயாயிரம் பெண்கள் வேலைக்குப் போகிறார்கள். அதைப் போலப் பத்து மடங்கு பெண்கள் உத்தியோகம் தேடி அலைகிறார்கள் என்றால் நாங்கள் சொல்கிற வயசில் கல்யாணம் பண்ணிக்கொள்ள 50 பேர்தான் கிடைக்கிறார்கள்!இந்த டிரஸ்ட் வைத்தது, ஏதோ என் duty -ல் நான் fail ஆகவில்லை என்று என்னை நானே ஸமாதானப் படுத்திக் கொள்ளத்தான் கொஞ்சம்

பிரயோஜனப்படுகிறது!


சட்ட வரம்பு தாண்டினவுடனேயே கல்யாணம் பண்ணிக் கொடுக்கும்படியாகவாவது முன்னேற்பாடுகளைத் தயாராகச் செய்துவைத்துக் கொள்ளும்படி தாயார் தகப்பனார்மார்களுக்கு ஒரு மானம், வேகம், சுரணை பிறக்காதா என்பதால் இப்படி பச்சையாகச் சொல்கிறேன்.


வாஸ்தவமான சீர்திருத்தம்

இத்தனை வயசுக்குக் கீழே பண்ணக் கூடாது என்று flooring (அதம பக்ஷ

வரம்பு) வைத்த சட்டத்திலே இத்தனை வயசுக்கு மேலே போகக் கூடாது என்று ceiling -ம் (உச்ச வரம்பும்) வைத்திருக்கக் கூடாதா என்று நினைக்கும்படியாக இருக்கிறது!


இப்போது 25 வயசு, 30 வயசு என்று பெண்கள் கலியாணமாகாலிருப்பதற்குச் சட்டத்தைக் குறை சொல்வது துளிக்கூட நியாயமே இல்லை. நம்முடைய அசிரத்தைதான் இன்றைய கோளாறுகளுக்கெல்லாம் காரணம். பூணூல் போடுவதற்கு சாரதா சட்டம் இல்லையே!ஏன் முப்பது வயசுக்குக் கல்யாணத்தோடு சேர்த்து (பூணூல்) போடுகிறோம்?சாஸ்திர விஷயத்தில் நமக்கு அத்தனை அலட்சியம்?


இந்தப் பொதுவான அசிரத்தையோடு, கல்யாணம் பூணூல் முதலான காரியங்களைப் பெரிய தடபுடல் உத்ஸவமாகச் செய்வதற்குப் பணம் தயார் பண்ணிக் கொள்வது, எல்லாவற்றிலும் பெரிய தீமையாக கலியாணம் என்றால் ஒரு ஆயுஸுகால சேமிப்பும் போதாத அளவுக்கு வரதட்சினைக்காகவும், சீர் செனத்திக்களுக்காகவும் செலவழிக்க வேண்டியிருப்பது ஆகியனவும் சேர்ந்து சாஸ்திரோக்தமான கால கெடுவின்படி இந்த ஸம்ஸ்காரங்களைப்

பண்ணுவதற்கேயில்லை என்ற ஸ்திதிக்குக் கொண்டு விட்டிருக்கிறது.


வேத சாஸ்திரங்களில் இவற்றுக்குப் பண ஸம்பந்தமே கூறப்படவில்லை. இது நாமாகப் பண்ணிக் கொண்டே அனர்த்தம். நான் மேலே சொன்ன எட்டுக் கல்யாணங்களில் எதிலுமே பெண்ணையும் கொடுத்துப் பணமும் கொடுப்பதாக இல்லை. ஆஸுர விவாகத்தில்கூட பெண் வீட்டுக்காரர்களுக்குத் தான் பணம் கொடுத்துப் பதிலுக்கு பெண் வாங்கிக் கொள்கிறான். அந்த வியாபாரமே அஸுரத்தனம் என்றால், "பெண்ணையும் கொடுத்துப் பணத்தையும் கொடு"என்று கேட்பது நம் தர்ம சாஸ்திரக்காரர்கள் கற்பனைகூடச் செய்து பார்க்காத ஒன்றுதான். 'கன்யா சுல்கம்'என்பதாக பெண்ணுக்குக் கொடுப்பதையாவது கொஞ்சம் சாஸ்திரத்தில் ஒப்புக் கொண்டிருக்கிறதே தவிர, பிள்ளை வீட்டாருக்கு வரதட்சினை கொடுப்பதற்கு அதில் ஆதாரமேயில்லை. நிஜமான கல்யாணச் சீர்திருத்தம் வரதட்சினை ஒழிப்புதான்.


அதைப் பண்ணாமல் வயசு விஷயத்துக்குச் சீர்திருத்தம் கொண்டு வந்ததில் நம்முடைய குடும்ப-சமூக வாழ்க்கை முறையே புரண்டு விட்டிருக்கிறது. பெண்கள் உத்யோகத்துக்குப் போவதைதான் சொல்கிறேன். வரதட்சிணைக்கும், சீருக்கும், ஆடம்பரக் கல்யாணத்துக்கும் வேண்டிய அளவு பணம் சேர்க்க முடியாதபோது, சாரதா சட்டம் ரொம்ப அநுகூலமாக வந்து கல்யாணத்துக்கு அவசரமில்லாமல் அவகாசம் தந்தது.

பெண்கள் உத்தியோகம் பார்ப்பது

அப்புறம், கல்யாணமும் ஆகாமல் வெறுமே வீட்டில் உட்கார்ந்து கொண்டிருக்கிற பெண், படித்து வேலைக்குப் போய் இரண்டு காசுதான் கொண்டு வரட்டுமே, கல்யாணச் செலவுக்கும் அது உதவுமே என்கிற எண்ணத்தில் பெண்களை உத்யோகத்துக்கு அனுப்புகிற வழக்கம் ஆரம்பித்தது. முதலில் வெட்கப்பட்டுக் கொண்டு, அவளே சம்பாதித்துக் கல்யாணம் பண்ணிக் கொள்ளும்படியாக விடுவது தகப்பனாருக்கு ரொம்ப அவமானம் என்ற உணர்ச்சியோடு வேலைக்கு அனுப்பினார்கள். நல்ல யௌவனத்தில் சித்த விகாரங்களைத் தூண்டி விடுகிற சூழ்நிலையில் இப்படிப் பெண்களை விடுகிறோமே என்று அப்போது கொஞ்சம் பயம், கவலை எல்லாமும் இருந்தது. ஆனாலும் போகப் போக என்ன ஆகியிருக்கிறது என்றால் 'குளிர்' விட்டு விட்டது. ஜனகர் மாதிரியான ராஜ ரிஷிகளே கன்யாப் பெண்ணைக் கல்யாணமாகாமல் வைத்துக் கொண்டிருப்பது வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருக்கிற மாதிரி என்று பயந்ததாகப் புராணங்களில் பார்க்கிறோம். அந்த விவஸ்தை இப்போது கெட்டுவிட்டது;கட்டுவிட்டுப் போச்சு!அவமானமாக முதலில் நினைத்தே இப்போது நாகரிக முன்னேற்றத்துக்கு அடையாளமாக ஆகிவிட்டிருக்கிறது. பெண்ணைப் பெற்றவர்கள் தங்கள் பொறுப்பு உறைக்காமல், கூச்சம், கவலை, பயம் எல்லாவற்றையும் விட்டு விட்டுத் தங்கள் பெண் பெரிய உத்தியோகம் பார்க்கிறாள் என்று பெருமைப்படுகிற அளவுக்கு நம் தர்மம் ஹீன vFF அடைந்திருக்கிறது. உத்யோகம் பார்க்கிற பெண்கள் என்னிடம் ப்ரமோஷன் ஆவதற்கு அநுக்கிரஹம்

கேட்கிறதும், நானும் கண்டும் காணாத மாதிரி இருந்து கொண்டு எல்லோருக்கும் நல்ல சாமியாராகப் பெயர் வாங்கிக்கொள்வதாகவும் ஆகியிருக்கிறது!


சீர்திருத்தக்காரர்கள், ஸ்திரீகள் காலேஜில் படித்து உத்தியோகம் பண்ணுவது பெரிய முன்னேற்றம்;இதனால் முன்னே பண்ணின அநீதி போய்விட்டது'என்கிறார்கள். முன்னே ஸ்திரீகளுக்கு அநீதி பண்ணவேயில்லை என்பது என் கட்சி.

அப்படிப் பண்ணியிருந்தால், புருஷனுக்குத்தான் பண்ணியிருந்தது என்றுகூட வேடிக்கையாகச் சொல்வேன். ஏன்?ஒரு புருஷப் பிரஜையானவன் பிரம்மச்சரிய ஆசிரமம் முடித்ததிலிருந்தே கிருஹஸ்தாச்ரம தர்மங்களை மேற்கொண்டு ஒளபாஸனாதி ஸம்ஸ்காரங்களைப் பண்ணினால்தான் அவனுடைய ஜன்மா கடைத்தேறும். ஸ்திரீப் ப்ரஜைக்கோ புருஷன் பண்ணுகிற ஸம்ஸ்காரங்களுக்கெல்லாம் மேலாக அவனிடம் இவள் மனஸை அர்ப்பணம் பண்ணி பதிவிரதையாயிருப்பதே ஜன்மாவைக் கடைத்தேறச் செய்கிறது. இது பெண்களுக்கு இழைத்த அநீதி என்று சீர்திருத்தக்காரர்கள் சொன்னாலும், எனக்கோ புருஷனைவிட பெண்ணுக்குத் தான் ரொம்பவும் ஸாதகமாக நம் சாஸ்திரத்தில் பண்ணியிருக்கிறது என்று தோன்றுகிறது. ஏனென்றால் அநேக ஸம்ஸ்காரங்களையும், அப்புறம் சிரவண, மனன, நிதித்யாஸனாதிகளையும் பண்ணித்தான் ஒரு புருஷனுக்கு மனோநாசம் உண்டாகி ஆத்ம ஸாக்ஷ£த்காரம் ஸித்திக்கிறது. அந்த ஸாதனையின் முடிவான மனோநாசம் ஒரு பதிவிரதைக்குப் பதியிடம் சரணாகதி பண்ணுவதாலேயே ரொம்ப சீக்கிரத்தில் ஈஸியாக ஏற்பட்டு விடுகிறது. பதியின் இஷ்டத்தை அநுஸரிப்பதால் இவளுக்குத் தன்னிஷ்டம், மானாவமானம் எல்லாம் போய் அஹங்காரம் கரைந்து, மனோநாசத்துக்கு ரொம்பவும் கிட்டே போய் விடுகிறாள். மனஸை எங்கேயோ பூர்ணமாக அர்ப்பணம் பண்ணி, சரணாகதி என்று இருந்துவிட்டால் அப்புறம் மனோநாசம் பக்கத்திலேயே தானே?இன்றைக்கு உத்தியோகம் பார்க்கிற பெண்கள் பெறுகிற ப்ரமோஷனுக்கெல்லாம் மேலான ப்ரமோஷன் இப்படி அவளை ஆத்மபரிசுத்தி பண்ணி உச்சத்துக்குத் தூக்குவதுதான். இப்படி பதியிடம் மனஸை அர்ப்பணம் பண்ணியே தான் மஹா பெரிய ரிஷிகளை விட அதிகமான சக்திகளை நம் தேசத்து பதிவிரதா ஸ்திரீகள் பெற்றிருக்கிறார்கள். அவள் பெய் என்றால் மழை பெய்கிறது என்று திருவள்ளுவர் சொல்கிறார். ஸ¨ரியனை உதிக்காதே என்று அவள் சொன்னால் உதிப்பதில்லை!செத்த புருஷனை யமதர்ம ராஜாவிடமிருந்து அவளால் திரும்பவும் வாங்கிக் கொண்டு வர முடிகிறது. எந்த ரிஷிக்கும், தெய்வத்துக்குமே கூட கொடுக்காத உசந்த ஸ்தானத்தை இப்பேர்ப்பட்ட பதிவிரதைகளுக்குத்தான் நம் சாஸ்திரமும் சம்பிரதாயமும் தருகிறது. அவள் தெய்வங்களின் மேலேயே தண்ணியைத் தெளித்து தன் குழந்தைகளாக்கிக் கொண்டு விடுகிறாள் என்று புராணத்தில் பார்க்கிறோம். ஆகையால் பெண் எப்படியிருந்தால் நிஜமான உயர்வைப் பெறுவாளோ, அதைச் சொல்லி அப்படிப்பட்டவளைக் கோவில் எடுத்துக் கும்பிடுகிற நம் சாஸ்திரம் ஒரு நாளும் ஸ்திரீயை மட்டம் தட்டவில்லை. சீர்திருத்தவாதிகள் தான் அவளை அப்படி வளர முடியாதபடி மட்டப்படுத்துகிறார்கள் என்று எனக்குத் தோன்றுகிறது.


ஆக விவாஹம் என்பது புருஷனை சுத்தப்படுத்துகிற அநேக ஸம்ஸ்காரங்களில் ஒன்று என்றால், ஸ்திரீயையோ அத்தனை ஸம்ஸ்காரங்களில் ஒன்று என்றால், ஸ்திரியையோ அத்தனை ஸம்ஸ்காரங்களும் இல்லாமலே அவற்றின் முடிந்த பயனான பூர்ணத்துவத்தைப் பெறப் பண்ணுவதாகும். இப்பேர்ப்பட்ட ஸம்ஸ்காரத்தின் ஸாரத்தை விட்டுச் சக்கையாக ஒப்புக்கு ஏதோ இப்போது நடக்கிறது. விவாஹம் என்ற ஸம்ஸ்காரமும் கிருஹஸ்தாச்ரமும் லாவண்யம், வீர்யம், இந்திரிய ஸெளக்யம் இவற்றை மட்டும் குறித்த விஷயமல்ல என்பதையும், ஜன்மா கடைத்தேற வழியாகவே அது வகுக்கப்பட்டிருக்கிறது என்பதையும் புரிந்து கொண்டால் சாஸ்திரம் சொல்லியிருப்பதே சரி என்ற அறிவு உண்டாகும்.


பெண்கள் உத்தியோகம் பார்ப்பதால் பொருளாதார ரீதியிலேயே உண்டாகியிருக்கிற ஒரு அனர்த்தத்தை யாரும் கவனித்ததாக தெரியவில்லை. Employment problem (வேலையின்மைப் பிரச்சனை) -ஐ தான் சொல்கிறேன். சில வருஷங்களுக்கு முந்தி 'கலியாணமாகிற வரையில் பெண் வேலைப் பார்க்கட்டும்;இதனால் அவள் கல்யாணமாகவில்லையே என்பதை நினைத்து நினைத்து அழுது கொண்டு வீட்டோடு இருக்காமல் அவளுக்கு ஒரு போக்காக இருக்கும். அதோடுகூட, பணசம்பந்தமானதாகப் பண்ணப்பட்டுவிட்ட கல்யாணத்தில் வரதட்சிணை, மற்ற செலவுகளுக்கு அவளுடைய சம்பாத்தியத்திலிருந்தே மிச்சம் பிடித்துச் சேமிக்கலாம்'என்ற எண்ணத்தில் ஒரு பெண்ணை விவாஹம் வரையில் வேலைக்கு விடுவதாகவும், அப்புறம் நிறுத்தி விடுவதாகவும் இருந்தது. புக்ககத்துக்காரர்களும் புருஷனும் அந்தப்பெண் கல்யாணத்துக்குப் பிறகு வேலைக்குப் போவதை நிஷித்தமாக (இழுக்காக) நினைத்தார்கள். ஆனால் வரவர இந்த பிராம்மண சமூகத்துக்கு இந்த ஒரு நூற்றாண்டாக ஏற்பட்டிருக்கிற பணத்தாசையில் இதுவும் மாறி, இப்போது கல்யாணமான பிற்பாடும் அவள் உத்தியோகத்திற்குப் போவது என்ற வழக்கம் வந்திருக்கிறது. இதனால் சிசு ரக்ஷணை (குழந்தை வளர்ப்பு) முதலான தாய்க் குலத்தின் உயர்ந்த கடமைகள் கெட்டுப்போய், வெள்ளைக்கார தேசங்கள் மாதிரி குடும்பம், பெற்றோர், குழந்தை என்பதெல்லாமே ஹ்ருதயபூர்வமாகக் கட்டுப்பட்டில்லாமல் பிஸினஸ் போல் ஆகியிருப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். எகனாமிக் (பொருளாதார) ரீதியில் இதனால் உண்டாகியிருக்கிற கெடுதலைப் பார்க்கலாம். இப்போது வேலையில்லை, வேலையில்லை என்று லட்சக்கணக்கில் ஆண்கள் திண்டாடுகிறார்கள். அதே சமயம் இன்னொரு பக்கம் பல குடும்பங்களில் புருஷன் உத்தியோகம் பார்ப்பது மட்டும் இல்லாமல் ஸ்திரீயும் வேலைக்குப் போகிறாள். அவன் மட்டில் வேலைக்குப் போய் இவள் வீட்டிலிருந்தால் இவள் பார்க்கிற வேலை உத்யோகமில்லாத ஒரு ஆணுக்கு கிடைக்குமல்லவா?ஆனாலும் தன் பொண்டாட்டியைத் தன் சம்பாத்தியத்துக்குள்ளேயே கட்டும் செட்டுமாக வைத்துக் காப்பாற்றுவதுதான் கௌரவம் என்றில்லாமல் புருஷன் அவளையும் வேலைக்கு விட்டு அவளும்தான் காசு கொண்டு வரட்டுமே என்று இருக்கிறான். முதலில் தாயார் தகப்பனார்

மானமில்லாமல் பெண்களை வேலைக்கு விடுகிறார்கள். அப்புறம் புருஷனும் அதையே பண்ணுகிறான். அந்த பெண்ணும் இதை ஒரு பெருமையாகவே நினைக்கிறது. ஆபீஸுக்குப் போய் உத்தியோக புருஷியாக இருந்த பிறகு வீட்டில் அடைபட்டுக் கிடக்கப் பிடிக்க மாட்டேன் என்கிறது. ஸ்வயமாக ஸம்பாதித்தால் புருஷன் தட்டிக் கேட்காமல் தன் இஷ்டப்படி செலவழித்துக் கொள்ளலாமே என்று இருக்கிறது.


வீட்டோடு இருந்தால் அடைபட்டுக் கிடப்பது என்று அர்த்தமேயில்லை. நம்முடைய சாஸ்திரங்கள், புராணங்கள் தாய் பாஷையிலும் ஸம்ஸ்கிருதத்திலும் இருப்பதற்குக் குறைவேயில்லை. அவற்றிலே ஒரு ருசியை ஏற்படுத்திக் கொண்டால் நாளெல்லாம் படித்தாலும் போதாமல் ஜன்மா முழுதும் படித்துக் கொண்டு ஸந்தோஷமாக இருக்கலாம். பல பெண்கள் ஸத்ஸங்கமாகச் சேர்ந்து ஒவ்வொரு வீட்டில் இவற்றைப் படிக்கலாம். கிளப் என்றோ ஸ்தாபனம் என்றோ போர்டு போட்டுக் கொண்டு காரியாலயம் மாதிரி இல்லாமல் வீடுகளிலேயே இதைச் செய்யவேண்டும். மெம்பர், பிரஸிடென்ட் மாதிரிப் பதவிகள் உண்டாகாமல், இவற்றுக்காகப் போட்டிச் சண்டைகள் இல்லாமல் இருக்க வேண்டுமென்பதால் (இப்படிச்) சொல்கிறேன். இதோடுகூட மடம், ஆலயம் முதலியவற்றுக்காக சுத்தமான மஞ்சள் குங்குமம் பண்ணிக் கொடுப்பது, முனை முறியாத அக்ஷதை பொறுக்கிக் கொடுப்பது போன்ற காரியங்களைச் செய்தால் பெரிய சமூகத் தொண்டாகவும் இருக்கும். ஸ்திரீத்வம் (பெண்மை) என்ற உயர்ந்த சரக்கு பறிபோகாமலே இப்படிப் பட்ட ஸத்காரியங்களைப் பண்ணி வந்தால் வீட்டோடு இருப்பது அடைபட்டிருப்பதாக இருக்காது. ஆதம ஸ்வதந்திரத்துக்கு வழியாக ஆனந்தமாகவே இருக்கும். ஸ்திரீத்வத்தயும் இழந்து கொண்டு துராசைகளைப் பெருக்கிக் கொண்டு உத்யோகத்திற்குப் போவதைவிட இதுதான் சிரேயஸ். ஸ்வாபாவிகமாகவும் (இயல்பாகவும்) பெண்களுக்கு எடுத்தது இதுவே. வீட்டில் அடைபட்டில்லை என்று ஆபீஸுக்குப் போவதால் எத்தனை தப்புக்களுக்கு இடம் கொடுத்துப் போகிறது?'பெண் விடுதலை'என்று பெரியதாகச் சொன்னாலும் ஆபீஸில் எத்தனை பேருக்கு அடங்கிப் பதில் சொல்லும்படி இருக்கிறது? இப்படி-

யிருப்பதில் வாழ்க்கையில்தான் நிம்மதி உண்டா?நிம்மதியாகச் சமைத்துப் போட்டுச் சாப்பிடுவது;குழந்தை குட்டிகளின் வாத்ஸல்யத்தை பூர்ணமாக அநுபவிப்பது என்பதெல்லாம் இந்த 'விடுதலை'யில் உண்டா?


சொல்லி என்ன பிரயோஜனம்?அவரவர்க்கும் ஸ்வயநலம் என்று அவரவரும் நினைத்துக் கொண்டிருக்கிற ஒன்று தான் முக்கியமாக இருக்கிறதே தவிர சமூகத்தில் பிறத்தியார் கஷ்டப்பட நாம் காரணமாய் இருக்கக் கூடாது என்ற நியாய உணர்ச்சி கொஞ்சங்கூட இல்லை. புருஷன் பெண்டாட்டி என்று சில குடும்பங்களில் இரட்டை சம்பாத்தியமும், வேறு சில குடும்பங்களிலோ இரண்டு பேரில் ஒருத்தருக்கும் உத்தியோகம் இல்லாமல் பரிதாபமாகவும் இருக்கிற நிலையில் கல்யாணமான பிறகாவது பெண்கள் வேலைக்குப் போவதை நிறுத்திக் கொண்டால், அத்யாவசியமாக வேலை பார்த்தே ஜீவிக்க வேண்டிய ஒரு புருஷனுக்கு அந்த

வேலை கிடைத்து அந்தக் குடும்பம் உருப்படுமே என்ற பிரக்ஞை வரவேண்டும். பெண்களை சரி-சமம் பண்ணுகிறோம் என்கிறவர்களும் இந்த விஷயத்தைக் கவனிக்க வேண்டும்.


சரி நிகர் சமம் என்கிற வாதம் எதில் வரலாம், எதில் வரக்கூடாது என்ற வியவஸ்தையே இக்காலத்தில் தெரியவில்லை. ஒவ்வொன்றும் ஒரு விதமாக இருக்க வேண்டும். அப்படித்தான் பிரபஞ்ச வாழ்க்கை ஏற்படுத்தப் பட்டிருக்கிறது. எல்லாம் ஒரே விதமாக ஆகவேண்டும்;அதுதான் சரி சமம் என்ற வாதமே அடியோடு தப்பு. அப்படி ஆக்கினால் இயற்கையான வாழ்க்கைமுறையே பாழாகிவிடும். ஒன்றொன்றும் இயற்கைப்படி, ஸமூஹத்தின் மொத்த வாழ்வுக்கு அநுகூலமாக எப்படியிருக்க வேண்டுமோ அப்படியிருப்பது தான் அதற்கு நிறைவு. அதிலேதான் அதற்கு நிஜமான ஸெளக்கியம் உண்டு. இந்த நிறைவை விட்டு விட்டு, செயற்கையாக ஸமத்வம் என்று ஒன்றை ஏற்படுத்திக் கொண்டு அதற்காக ஒடுவதில் individual ஆகவும் (தனி நபரளவிலும்) நிஜமான நிறைவு அவரவர்க்கு உண்டாவதில்லை;குடும்பமும், ஸமூஹம் இவற்றின் வாழ்க்கையும் இதனால் கெட்டே போகிறது.


இயற்கைப் படி பெண்கள்தானே பிள்ளை பெற வேண்டும் என்று வைத்திருக்கிறது?நாம் எவ்வளவு ஸமத்வச் சண்டை போட்டாலும் அதை மாற்றமுடியாதல்லவா?பிள்ளையைப் பெற்றவளே அதை சவரக்ஷணை பண்ணுவது, அதற்காக கிருஹலக்ஷ்மியாக இருப்பது என்பதுதான் பெண்களுக்கு ஸ்வாபாவிக (natural) தர்மம். அதைப் பண்ணுவதால் அவர்களுக்கு ஒரு குறைவும் இல்லை. அதை விட்டதால் உயர்வும் இல்லை. அதனால் ஸமப்படுத்துகிற பேச்சுக்கு இங்கே அர்த்தமேயில்லை.


எடுத்துச் சொல்லிப் பயனுண்டா ?

மிளகாய்க்கு நெய்விட்டுக் காரத்தை சமனம் பண்ணுகிறாற்போல் பிரகிருதி வேகங்களுக்கு விவாஹாதி ஸம்ஸ்காரங்களால் சமனம் உண்டாக்கப்படுகிறது. மிளகாயே இல்லாமல் இல்லை. அது இருக்கிறது. ஆனால் அதன் காரம் குடலை எரிக்காதபடி நெய் விட்டிருக்கிறது. லௌகிகமான, சரீர சம்பந்தமான ஸெளக்யம் கிருஹஸ்தாச்ரமத்தில் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அது கொழுந்து விட்டெரியாமல் ஏகப்பட்ட ஸம்ஸ்காரங்களால் புருஷனை ஒர் அளவில் கட்டுப்படுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. ஸ்திரீக்கோ பாதி வ்ரத்யத்தோடு (கற்போடு) கூடின கிருஹரக்ஷணை என்ற ஒன்றே இத்தனை ஸம்ஸ்காரத்துக்கும் ஸமமாயிருக்கிறது. இது நமக்கு மனஸில் பட்டுவிட்டால் போதும். நாம் இந்த தேசத்தில் ஆத்ம சிரேயா லட்சியம் எந்த நாளும் வீணாகி விடக் கூடாது என்று ஹ்ருதய சுத்தத்தோடு நினைத்து பகவானைப் பிரார்த்தனை பண்ணிக் கொண்டு, அருள் துணையை நம்பி, எடுத்துச் சொல்லிக் கொண்டேயிருந்தால் என்றைக்காவது ஒரு நாள் வழி பிறக்கும். இப்போது போகிற போக்கிலே முடிவான ஒரு நிலையில் போய் முட்டிக் கொண்டு கடைசியில் இது அத்தனையும் அனர்த்தம்தான் என்று

என்றைக்காவது ஜனங்கள் விழித்துக் கொள்கிறபோது, மீள்கிற வழி எது என்று தெரிவதற்காக நாம் சாஸ்திரத்திலுள்ளதைச் சொல்லிக் கொண்டேதான் இருக்க வேண்டும்.

'வர்ணாச்ரமம், பால்ய விவாஹம் முதலானதுகளைப் பற்றிச் சொல்லி என்ன பிரயோஜனம்?அநேகமாக இவற்றில் முக்காலே மூணுவீசம் போயே போய்விட்டதே! பல விஷயங்களில் ராஜாங்கச் சட்டமே சாஸ்திரத்துக்கு மாறாக வந்துவிட்டதே!என்று கேட்கலாம். வாஸ்தவம்தான். அநேக விஷயங்களில் சட்டமே வந்து கையைக் கட்டித்தான் போடுகிறது.


Secular State என்று நம் ராஜாங்கத்துக்குப் பேர் சொல்கிறார்கள். 'மதச்சார்பில்லாதது'என்று இதற்கு அதர்த்தம் சொல்கிறார்கள். அதாவது ஸமூஹ (social) விஷயங்களில் ஸர்க்கார் தலையிடலாமே தவிர, மத (religious) விஷயங்களில் தலையிடக் கூடாது என்று சொல்கிறார்கள். ஆனால் நம்முடைய மதத்திலே இப்படி மதம்-சமூகம் -வீடு-தனி மனுஷ்யன் என்று தனித்தனியாகப் பிரிக்காமல், எல்லாவற்றையும் சேர்த்துப் பின்னி integrate பண்ணி (ஒருங்கிணைத்து) அல்லவா வைத்திருக்கிறது?அதனால் சமூக விஷயம் என்று ஸர்க்கார் போடுகிற சட்டமும் மதத்தையே அல்லவா பாதிக்கிறது?இதை ஒப்புக்கொள்ளாமல் 'இன்னின்ன விஷயங்களோடு மதம் முடிந்துவிடுகிறது;மற்றதெல்லாம் ராஜாங்கம் ஸம்பந்தப்பட்ட ஸமூஹ விஷயம்'என்கிறார்கள்.


சரி, எல்லா மதத்திலுமே சில அம்சங்களிலாவது ஸமூஹ ஸமாசாரங்களும் வந்து விடுகிறதே, அவற்றின் விஷயத்திலும் இந்தக் கொள்கையைக் கடைபிடிக்கிறார்களா என்று பார்த்தால்- இங்கே தான் ரொம்ப வேதனையாயிருக்கிறது. 'ஸெக்யூலர் ஸ்டேட்'டில் எல்லா மதமும் ஸமம் என்று சொன்னாலும், சிறுபான்மை மதஸ்தர்கள் social reform சட்டங்களை ஆக்ஷேபித்து,

"இது எங்கள் மதத்தில் சொன்னதற்கு விரோதமாயிருக்கிறது. இது குரானுக்கு விரோதம்;கிறிஸ்துவக் கோட்பாட்டுக்கு முரணாணது"என்று சொன்னால் உடனே அந்த மதஸ்தர்கள் விஷயத்தில் இந்தச் சட்டங்களுக்கு விலக்கு தந்துவிடுகிறார்கள். இம்மாதிரிச் சிறுபான்மை மதஸ்தருக்கு மட்டும் குடும்பக் கட்டுப்பாடு போன்ற ஒன்றில் விலக்குத் தந்துவிடுகிறார்கள். இம்மாதிரிச் சிறுபான்மை மதஸ்தருக்கு மட்டும் குடும்பக்கட்டுப்பாடு போன்ற ஒன்றில் விலக்குத் தந்தால் எதிர்காலத்தில் அவர்களே பெரும்பான்மையாகி விடவும் இடமேற்படுகிறது. ஆநால் 'ஸெக்யூலர்ஸ்டேட்' டாக இருந்தும் ஹிந்து மத விஷயமாக மட்டும் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற தீர்மானம் ஏற்பட்டிருக்கிறது. 'மைனாரிட்டி ரிலிஜன்'காரர்கள் போல் நம்மிலே ஒரு சூடு பிறந்து ஆட்சேபிக்கிறவர்களே இல்லை. அப்படியே நாலு, பேர் எதிர்ப்புத் தெரிவித்தாலும், பிற்போக்குக்காரர்கள், பத்தாம் பசலிகள் ( obscurantist ) என்று அவர்களுக்குப் பெயர் கொடுத்துவிட்டுச் சட்டத்தைக் கொண்டு வந்துவிடுகிறார்கள்.


'ஸெக்யூலர் ஸ்டேட்என்றால் மதச் சார்பில்லாத ஸர்க்கார் என்றே அர்த்தம்.

மத விரோதமான என்று அர்த்தமில்லை. ஒரு மதம் மட்டுமின்றி எல்லா மதமுமே அபிவிருத்தியாவது ஸெக்யூலர் ஸ்டேட்டுக்கு ஸம்மதமானதுதான்'என்றெல்லாம் பெரிசாகப் பிரஸங்கம் பண்ணுபவர்கள் பண்ணினாலும், பிரத்யக்ஷத்தில் ஹிந்து மதத்தைத் தவிர மற்ற மதங்களுக்கு விரோதமில்லாத காரியங்களைப் பண்ணுவதுதான் இங்கே ஸெக்யூலர் ஸ்டேட் எனறு நடந்து வருகிறது!தர்க்காஸ்து நிலம் மாதிரி ஹிந்து மதம் இருந்து வருகிறது.


"இது தெரிந்தும் ஏன் ஸாத்தியமில்லாத சாஸ்திர விஷயங்களை நச்சு நச்சு என்று சொல்கிறாய்?"என்றால் -


இப்போது இப்படி இருந்தாலும் இன்னும் எப்படி எப்படி போகும் என்று சொல்ல முடியாது. 'அமெரிக்காவில் டாலரே விளைகிறது;அங்கே ஜனங்களுக்கு ஒரு குறையும் இல்லை'என்றுதானே போன தலைமுறையில் நினைத்தோம். ஆனால் இப்போது எப்படியிருக்கிறது?அந்த தேசத்து ஜனங்களுக்கு இருக்கிற குறை மாதிரி, சூன்ய உணர்ச்சி மாதிரி, வேறு யாருக்குமே இல்லை என்று தெரிய வருகிறது. டாலரினாலேயே இத்தனை குறையும் என்றும் தெரிகிறது!லௌகிக ஸெளக்கியத்தின் உச்சாணிக்குப் போன பிறகுதான் அவர்கள் இதிலே ஆத்மாவை எப்படி சூன்யமாக்கிக் கொண்டு விட்டோம் என்று விழித்துக் கொண்டிருக்கிறார்கள். டாலரில் மிதந்ததால் எத்தனை குடி, கொள்ளை, கொலை, விபசாரம் முதலிய தப்புகளில் போய் விழுந்து விட்டோம் என்று உணர ஆரம்பித்திருக்கிறார்கள். . கடைசியில் மனஸில் நிம்மதியில்லையே, சாந்தி இல்லையே என்று நம்முடைய யோகம், ஞான விசாரம், பஜனை முதலானவற்றுக்கு கூட்டம் கூட்டமாக வந்து கொண்டிருக்கிறார்கள்.


இதிலிருந்து, இரண்டு மூன்று தலைமுறைகளுக்கு நல்லதாகவே தோன்றி வந்த ஒன்று , அப்புறம் தலைதெறிக்கப் போன பிறகு அனர்த்தமானது என்று தெளிவாகிறது;அப்போது ஜனங்கள் விமோசனத்துக்கு ஒடுகிறார்கள் என்று தெரிகிறதல்லவா?இப்படியே இந்த இரண்டு தலைமுறைகளாக நல்லது என்று நினைத்து, பெரும்பாலும் நல்ல எண்ணத்துடனேயே, நம் தேசத்தில் பண்ணப்பட்டிருக்கிற சாஸ்திரத்துக்கு முரணான விஷயங்களாலும் எத்தனை ஹானி ஏற்பட்டிருக்கிறது என்பதை என்பதை இன்னொரு தலைமுறை உணரக்கூடும்.


இப்போதுகூட ஆங்காங்கே இந்த உணர்ச்சி கொஞ்சம் தலை தூக்கிக் கொண்டுதான் இருக்கிறது. ஆரம்பத்தில் நன்றாகியிருந்து குதிரைக்குட்டி மாதிரியாயிருந்து போகப் போக ஸ்வயரூபத்தை காட்டுகிற மாதிரிதான் சீர்திருத்தக் காரியங்கள் நடந்திருக்கின்றன என்று முடிவிலே முட்டிக்கொள்கிற ஸ்திதியில் தெரிய வரலாம். கீதையில் பகவான் இரண்டு வித ஸெளக்கியங்களைச் சொன்னார். 'யதக்ரே விஷமிவ, பரிணாமே அம்ருதோபமம்'என்பது ஒன்று. ஆரம்பத்தில் விஷம் போல இருந்துவிட்டு முடிவிலே எது அமிருதமாகிறதோ அதுதான் உயர்ந்த ஸாத்விக ஸெளக்யம். முதலில் ஆலஹாலம் வந்து விட்டுப் பிறகு அமிருதம் வந்தது

இப்படித்தான். சாஸ்திரம், தனி மநுஷ்யன், குடும்பம், ஸமூஹம் எல்லாவற்றையும் கட்டுப்படுத்துகிறதே என்று ஆரம்பத்தில் விஷம் மாதிரிக் கசந்தாலும், போகப் போக இதுதான் எல்லாக் கட்டுகளும் தெறித்துப் போகிற ஆத்ம ஸ்வதந்திரம் என்கிற பேரானந்தத்தைத் தருகிற அமிருதம் என்று தெரியும். இதிலே விஷம் தற்காலிகம்;அமிருதம் சாச்வதம். இன்னொரு ஸெளக்யம், 'யதக்ரே அம்ருதோபமம், பரிணாமே விஷமிவ'என்பது. முதலில் அமிருதமாகத் தித்தித்து விட்டுப் போகப்போக விஷமாகிவிடுவது. இங்கே அம்ருதம் தாற்காலிகம்;விஷம் சாச்வதம். அமெரிக்காவில் டாலர் இப்படித்தான் முதலில் அம்ருதமாயிருந்துவிட்டு இப்போது விஷமாகியிருப்பதை அவர்களே தெரிந்து கொண்டிருக்கிறார்கள். இப்படியே இங்கும் எதிர்காலத்தில் தனி மனித நிறைவு, ஸமூஹக் கட்டுக்கோப்பு இரண்டும் ஹானியடைந்து, சாஸ்திர விரோதமாகப் பண்ணினதெல்லாம் முதலில் அம்ருதமாயிருந்தாலும் பிறகு இப்படி விஷமாகி விட்டதே என்று புரிந்து கொண்டு அழுகிற காலம் வரக்கூடும். அப்போது அமிருதத்தைத் தேடுகிறவர்களுக்கு அது எங்கேயிருக்கிறது என்று தெரியவேண்டும் அல்லவா?இப்போது நாம் பண்ணுகிற மாறுதல்கள்தான் முற்றி அவர்களுக்கு விஷம் தலைக்கேறிய vFF ஏற்படப் போகிறபடியால் இதை (அமிருதம் எங்கேயிருக்கிறது என்பதை) அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டியது நம் கடமை. அதற்காகத்தான், இப்போது நாமே இந்த சாஸ்திரோக்தமான ஸமாசாரங்கள் என்ற அமிருதத்தைக் குடிக்காவிட்டாலும், பின்தலைமுறைகளில் நம்மைவிட க்ஷீண தசைக்குப் போய் விஷம் தலைக்கேறி விமோசனம் தேடுகிறவர்கள் தேடும்போது அவர்களுக்கு உதவுவதற்காகவது இந்த

ஸமாசாரங்கள் என்ற அமிருதத்தைக் குடிக்காவிட்டாலும், பின்தலைமுறைகளில் நம்மைவிட க்ஷீணதசைக்குப் போய் விஷம் தலைக்கேறி விமோசனம் தேடுகிறவர்கள் தேடும் போது அவர்களுக்கு உதவுவதற்காகவாவது இந்த ஸமாசாரங்களை (குழி தோண்டிப் புதைத்து விடாமல்) சொல்லிக் கொண்டிருக்க வேண்டும். இந்த தீபம் வருங்காலத்திலாவது வழிகாட்ட விடவேண்டும்.


இந்த எண்ணத்தில்தான், காரியத்தில் செய்ய முடியாமல் கையைக் கட்டிப் போட்டிருந்தாலும் இன்னம் வாயைக் கட்டவில்லையே என்பதால் சாஸ்திர விதிகளை ஒயாமல் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.




செலவில் சாஸ்திரோக்தம்

வயசு விஷயத்தில் சாஸ்திரோக்தமாகப் பண்ணுவதற்கு முன்னால் பண விஷயத்தில் சாஸ்திரோக்தமாகப் பண்ணுவதற்காவது இப்போதே ஆரம்பித்து விடவேண்டும். முன்னேயே சொன்னாற் போல் சாஸ்திரப்படி விவாஹம் என்பது பணத்தைப் பற்றிய விஷயமில்லை.


வேறொன்றும் சாஸ்திரோக்தமாகப் பண்ண நமக்கு மனஸோ, தைரியமோ இல்லாவிட்டாலும் கலியாணத்தை economic problem -ஆகப் பண்ணாமல் இது

ஒன்றையாவது சாஸ்திரப்படி வெகு சிக்கனமாக நடத்தப் பார்க்கலாம்.


விவாஹம் என்பது ஸந்தியாவந்தனம் மாதிரியான செலவில்லாத ஒரு வைதிக கர்மாதான். இதில் நூதன தம்பதிக்கு (புது மணமக்களுக்கு) புது வஸ்திரம் - நூலே போதும் - தங்கத்தில் லேசாக திருமாங்கலியம், ரொம்பவும் நெருங்கின பந்துக்களை மட்டும் அழைத்துச் சாப்பாடு போடுவது, முஹ¨ர்த்த சமயத்தில் ஒரு மங்கள வாத்திய சப்தம் கேட்கப் பண்ணி அதற்காக ஏதோ கொடுப்பது, வாத்தியார் தக்ஷிணை ஆகியவற்றை மட்டுமே செய்தால் போதும். இது பூர்ணமாக சாஸ்திர சம்மதமானதுதான். இப்படிப் பண்ண ஒரு குமாஸ்தாவுக்கும் முடியாமல் போகாது.


பணம் கொழித்தவர்களுங்கூட தடபுடல் பண்ணாமல் இப்படிச் சிக்கனமாகவே பண்ணவேண்டும். ஏனென்றால் அவர்கள் பண்ணுகிற டாம்பிகம் மற்றவர்களுக்கு ஒரு கெட்ட precedent (முன்மாதிரி) ஆகிவிடுகிறது!ஆகையால் கச்சேரி, ஃபீஸ்ட் என்று தாங்கள் செலவிடக் கூடிய இந்தப் பணத்தைக் கொண்டு வசதியில்லாத ஒரு ஏழைப் பெண்ணுக்கு கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும். இப்படிப் பண்ணினால் தண்டச் செலவாகப் போகக்கூடியதை தர்மக் கரென்ஸியாக மாற்றிக் கொண்டதாகும். ஒவ்வொரு பணக்காரரும் தம் பெண்ணுக்குக் கல்யாணம் பண்ணுகிறபோதே அதில் செலவைக் கட்டுப்படுத்தி இன்னொரு ஏழைப் பெண் கண்ணைக் கசக்காமல் வழி திறந்து விடலாம். 'மாஸ்'உபநயனம் மாதிரியே பல பேருக்கு ஒரு பொது இடத்தில் பொதுச் செலவில் கல்யாணங்கள் நடத்த ஏற்பாடு செய்யலாம். இதனால் அவரவருக்கும் செலவு நிரம்பக் குறையும்.


இப்போதெல்லாம் கல்யாண மண்டபங்களின் வாடகையே பாதிச் செலவை விழுங்கி விடுகிறது என்கிறார்கள். எத்தனை சின்ன கல்யாணமானாலும் இக்கால பிளாட் குடித்தனத்தில் வீட்டிலேயே பண்ண முடியாதுதான். அதனால் தர்மிஷ்டர்கள் ஒன்று சேர்ந்து வசதியில்லாதவர்களுக்காக அங்கங்கே சின்ன சின்ன கல்யாண மண்டபங்கள் கட்டித்தர வேண்டும்.


கல்யாணம் என்றாலே வெட்கப்பட்டுக்கொண்டு ஒடின பெண்கள், அப்புறம் (கல்யாணம்) ஆகுமா ஆகுமா என்று வாய்விட்டுக் கதறுகிற பரிதாப நிலை ஏற்பட்டு, இப்போது நிலைமை முற்றி கல்யாணமே இல்லாமல் உத்தியோக புருஷியாக ஸ்வயேச்சையாக இருக்கலாமென்று ஏற்பட்டிருக்கிறது. இதனால் நம் பண்பாட்டின் ஜீவநாடியான vFg தர்மம் வீணாகி வருகிறது. நடக்கக் கூடாததெல்லாம் ஒவ்வோரிடத்தில் நடந்து விடுகிறது.


இதிலே வயிற்றரிச்சல் என்னவென்றால், இந்தத் தப்புக்களைத் திருத்தல் வேண்டும் என்ற வேகம் யாருக்கும் வராதது மட்டுமில்லை;'ஸைகாலஜி', அது இது என்று சொல்லிக் கொண்டு இந்தத் தப்புக்களையே விஸ்தாரம் பண்ணி, அவற்றுக்கு ஸமாதானமும் சொல்லி, கதைகள் எழுதி, ஸினிமாக்கள் எடுத்து, இதனாலேயே இதை நன்றாக அபிவிருத்தியும் பண்ணி வருகிறார்கள்! கேட்டால் (கேட்பதற்கே

ஆளில்லை!) 'எழுத்து ஸ்வதந்திரம், கல்பனை ஸ்வதந்திரம், கலா ஸ்வதந்திரம்'என்பார்கள். சாஸ்திரத்தைத் தவிர எல்லாவற்றுக்கும் குடியரசு யுகத்தில் ஸ்வதந்திரம் ஏற்பட்டிருக்கிறது!


விவாஹம் சாஸ்திரப்படிப் பொருளாதார விஷயமில்லை என்பதில் ஆரம்பித்தேன். 'எல்லாம் ஸரி!ஆனால் சாஸ்திரத்தில் நாலு நாள் கல்யாணம் சொல்லியிருக்கிறதே!நாலு நாள் விருந்துச் சாப்பாடு, சத்திர வாடகை என்றால் செலவாகுமே!என்கலாம்.


நாலு நாள் கல்யாணத்தைப் பற்றிச் சொல்கிறேன்:சாஸ்திரத்தில் தாரித்திரியம் உண்டாக்குவதற்காக கர்மாநுஷ்டானங்கள் சொல்லப்படவில்லை. விவாஹம் பண்ணுகிறது ஒரு நாள்தான். அப்புறம் மூன்று நாள் மாப்பிள்ளை தன் சொந்த வீட்டில் பிரம்மசரிய தீ¬க்ஷயோடு இருக்கவேண்டும். அந்தக் காலத்தில் மேளம் வேண்டாம். நலுங்கு வேண்டாம். மாற்ற விரும்புகிறவர்கள் இப்படி மாற்றலாம். இதுதான் வாஸ்தவமான சீர்திருத்தம் ( reform ) பிள்ளையகத்துக்காரர் இதைச் செய்யலாம். "ஒருநாள் கல்யாணம் உங்கள் அகத்தில் செய்வேன். பாக்கி மூன்று நாள் எங்கள் அகத்தில் செலவில்லாமல் பண்ணவேன்"என்று சொல்லிவிடலாம். கல்யாணம் ஆன மறுநாள் கிருஹஸ்தன் ஒளபாஸனாக்னியைத் தன் வீட்டிற்குக் கொண்டு வர வேண்டும். அப்படி ஒளபாஸன குண்டத்தை எடுத்துக் கொண்டு வரும் போதும், வண்டியில் வைக்கும் போதும், நுகத்தடியில் மாடுகளைப் பூட்டும்போதும், வழியில் வைக்கும் போதும், மறுபடியும் வண்டியில் வைக்கும்போதும் சொல்ல வேண்டிய மந்திரங்கள் இருக்கின்றன. இப்பொழுது மந்திரோக்தமாகவே மோட்டாரிலோ, ரயிலிலிலோ வைத்துக் கொண்டு வரலாம். அதனால் ஒரு தோஷமும் இல்லை. அந்த நாளில் பக்கத்து ஊர்களிலேயே சம்பந்தம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். அதனால் ஒரு தோஷமும் இல்லை. அந்த நாளில் பக்கத்து ஊர்களிலேயே சம்பந்தம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். அதனால் ஒளபாஸன குண்டத்தை கொண்டு போவது ஸெளகரியமாக இருந்தது. அல்லது நாலு நாள் கலியாணத்தை இன்னொரு விதம் பண்ணலாம். இப்பொழுது கலியாணம் நடத்துகிற இடத்திலேயே பிள்ளையகம் என்று ஒன்று வைத்துக் கொள்கிறோமே, அங்கேயோ, வாடகை அதிகமானால் யாராவது உறவினர் வீட்டிலோ மூன்று நாளும் பண்ணவேண்டியதைப் பண்ணலாம். யாரையும் சாப்பிடச் சொல்லவேண்டாம். ஸம்பந்திக்குக்கூடச் சாப்பாடு போட வேண்டாம். உபாத்தியாயருக்கு மட்டும் ஸம்பாவனை பண்ணினால் போதும். ஒரு நாளில் எல்லாவற்றையும் முடித்துவிடுவது சாஸ்திர சம்பந்தமே இல்லை.


விவாஹத்துக்கு ஸம்வத்ஸர தீ¬க்ஷ, அதாவது விவாஹமாகி ஒரு வருஷம் பிரம்மசரிய நியமம்;பிறகே சாந்தி கல்யாணம் - என்கிற நிலைமை பிற்பாடு மாறி, நாலு நாலாவது இப்படி நியமத்தோடு இருப்பதாக ஏற்பட்டது. கழுதை கட்டெறும்பாகத் தேய்ந்து அப்புறம் கட்டெறும்பும் இல்லை என்று இப்போது நடப்பதுபோல் ஒரே நாளோடு தீர்த்து விடக்கூடாது. மூன்று நாள் ஒளபாஸனம்

நிச்சயம் செய்ய வேண்டும்.


தெலுங்கர்கள் கல்யாணத்தில் வதூ-வரர்கள் (மணமக்கள்) வெள்ளை நூல் வஸ்திரத்தை மஞ்சளில் நனைத்துக் கட்டிக் கொள்ளுகிறார்கள். அது சிக்கனமாக இருக்கிறது. எத்தனை தனிகரானாலும் அதைத்தான் கட்டிக் கொள்ள வேண்டுமென்று வைத்துக் கொண்டிருக்கிறார்கள். உத்தர தேசத்திலும் ஸாதாரணமாக ஸாமான்ய வஸ்திரங்களைத்தான் பெண்கள் கட்டிக் கொள்ளுகிறார்கள். இங்கே நாமும் அப்படிச் செய்ய ஆரம்பிக்கலாம்.


பிரவேச ஹோமம் என்று விவாஹ காலத்தில் ஒன்று செய்வதுண்டு. இது வரன் தன் வீட்டில் பிரவேசிப்பதற்குப் பண்ணுவது. விவாஹாக்கினியை எடுத்துக் கொண்டுபோய் ஒளபாஸன ஹோமத்தைத் தன்னுடைய வீட்டில் அவன் பண்ண வேண்டும். அங்கே பண்ணுவதற்குத்தான் ஒளபாஸனம் என்று பெயர். ஸெளகர்யத்தை உத்தேசித்தும் சாஸ்திர சம்மதமாகவும் நான் முன்னே சொன்னபடி பிள்ளையகத்தார் வந்து தங்கும் ஜாகையிலே செய்யலாம். கோவிலுக்குப் போய் ஒரு-நாள்-கல்யாணம் பண்ணிவிட்டு வந்து விடுவது என்பது தப்பான காரியம். பார்ட்டி, ரேஸ் என்று செலவழிக்கிற பணக்காரர்களும் நாலு நாள் ஒரு சாஸ்திரோக்த சடங்கு செய்யப் பிடிக்காததாலே இப்போதெல்லாம் கோயிலில் போய் தாலிகட்டி ஒரு வேளையோடு முடிக்கிறார்கள். பணக்காரர்கள் அப்படிச் செய்ய ஆரம்பித்தால் ஏழைகளும் பின்பற்றிக் கெட்டுப்போவார்கள். நான் சொல்வதை அநுஸரித்தால் நாலு நாள் பண்ணுவதில் செலவு இல்லை.


பெண் ரிதுமதியான பின் விவாஹம், அதுவும் ஒரு நாள் கலியாணம், மறுநாளே அவளை (புத்தகத்துக்கு) அழைத்துப் போவது என்பதில் ஏற்பட்டிருக்கிற இன்னொரு விபரீதந்தான் விவாஹத்தன்றே சாந்தி கல்யாணம் பண்ணுவது.


விவாஹமானவன் திரிராத்திர தீ¬க்ஷயோடு இருக்க வேண்டுமென்பது அத்யாவசியம். அதாவது மூன்று நாட்களும் பூர்ண பிரம்மசரிய நியமத்தை அநுஷ்டிக்க வேண்டும். பிரம்மசரியம் எட்டு விதம். எப்போதுமே பிரம்மசரியம் இருக்க முடியாதவனும் சிற்சில தினங்களில் அந்த நியமத்துடன் இருக்கும்படியாக இந்த எட்டு விதிக்கப்பட்டிருக்கின்றன. அதமபக்ஷமாக, கல்யாணமான முதல் மூன்று

தினங்கள் இப்படி இருக்க வேண்டும். இதுவும் போய், அன்றே நிஷேகம் என்பது மஹாதோஷம்.


மறுபடி மறுபடி சம்பந்திகளைக் கூப்பிடுவது, சாப்பாடுக்குச் செலவழிப்பது, மேளத்துக்குச் செலவழிப்பது என்றில்லாமல் ஒன்றாக பண்ணிவிடலாமே என்று இப்படிப் பட்ட தோஷத்தைச் செய்கிறார்கள். சாஸ்திரத்தில் இல்லாத தடபுடல்களைக்

கொண்டு வந்து விட்டு, அப்புறம் இவைகளைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காகப் பெண்ணின் கல்யாணம் வரையில் (அவளுடைய ஸஹோதரனான) பிள்ளையின் பூணூலை ஒத்திப் போடுவது, கல்யாணத்தன்றே ஸாந்தி கல்யாணத்தையும்

(மந்திரோக்தமாகக் கூட இல்லாமல்) பண்ணிவிடுவது என்றெல்லாம் முறை கெட்டுச் செய்து வருகிறோம்.


உற்றமும் சுற்றமும் செய்ய வேண்டியது

ஆகையால் இந்த வைதிக ஸம்ஸ்காரங்களில் செலவை எப்படியும் குறைத்தாக வேண்டும். இதில் பந்து மித்ரர்கள் செய்யக்கூடிய ஒரு உபகாரமும் உண்டு. அதாவது, கல்யாணம், உபநயனம் என்று அழைப்பு வந்தால் நண்பர்கள், உறவினர்கள் எல்லோரும் போகத்தான் வேண்டும் என்பதில்லை. பிரயாணத்துக்குச் செலவிட்டு ரயில்காரனும், பஸ்காரனும் வாங்கி கொள்வதில் என்ன பிரயோஜனம்?அதையெல்லாம் சேர்த்து வைத்துக் கல்யாணம் பண்ணிகிறவனுக்கு ரொக்கமாக அனுப்பிவிட வேண்டும். இதனால் விருந்துச் சாப்பாடு என்று ஒரு செலவு குறைவது ஒரு பக்கம்;அவசியமான செலவும் சீரும் செய்ய கல்யாணம் பண்ணிகிறவனுக்கு வரவினம் வலுப்பது இன்னொரு பக்கம்.


சிக்கனத்துக்கு மூன்று உபாயம்

பண சம்பந்தத்தால் சாஸ்திரோக்த வாழ்க்கையே கெட்டுப் போய்விட்டது. சாஸ்திரோக்தமாக மாறுவதற்கு நாம் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்றில்லாமல் பண்ணிக் கொண்டு விட்டால் போதும்.


எனக்கு மூன்று விதத்தில் செலவைக் குறைக்கலாம் என்று தோன்றுகிறது

(1) எல்லோரும் - நல்ல பணக்கார வீட்டு ஸ்திரீகளுல்பட - பட்டு முதலான பகட்டுத் துணிகளைவிட்டு கடைசித்தரமான வஸ்திரந்தான் வாங்குவது என்று வைத்துக் கொள்ள வேண்டும். (2) காப்பிக்குத் தலைமுழுகிவிட்டு காலையில் கோதுமைக் கஞ்சிதான் சாப்பிடுகிறதென்று வைத்துக் கொள்ளவேண்டும். அல்லது மோர் சாப்பிடலாம். காப்பி சாப்பிடுவது என்ற ஒரு பழக்கத்தைப் பண்ணிவிட்டதால் Substitute அதை மாற்ற ஏதாவது ஒன்று) வேண்டுமல்லவா?தக்ரம் (மோர்) அமிருதமென்று வைத்திய சாஸ்திரம் சொல்கிறது. இப்படிச் செய்வதனால் அநேக குடும்பங்களில் செலவில் நூற்றுக்கு அறுபது பங்கு குறைந்துவிடும் என்று தோன்றுகிறது. 'அரிசி எவ்வளவு ரூபாய்த்து வாங்குகிறோம்?பால், காப்பிக் கொட்டை எவ்வளவு வாங்குகிறோம்?என்று கணக்கு பார்த்தால் பால், காப்பிக்கொட்டைக்குத்தான் அதிக செலவு.

(3) விவாஹத்துக்காகப் பணத்தைக் கொண்டு வா என்று வரதக்ஷிணை வாங்குவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.


இப்படிப் பண்ணினால் டம்பம் போவது ஒன்று;நல்ல ஆரோக்கியமும் மனஸின் அபிவிருத்தியும் ஏற்படுவது இன்னொன்று;மூன்றாவதவாக சாஸ்திரோக்தமான வாழ்க்கையையும் வழங்களையும் நிலை நிற்கும்படிப் பண்ணுவது.


விவாஹத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்ததில் இத்தனை கதையும் வந்து

சேர்ந்து விட்டது. இன்னொரு கதை விட்டுப் போச்சு. அதையும் சொல்கிறேன். புருஷப் பிரஜைகளைவிட பெண் பிரஜைகள் அதிகமாக இருப்பதற்கு ஒரு காரணம் சொன்னேன். மெய்வருந்தி உழைக்காமல் உட்கார்ந்து வேலை செய்வது காரணம் என்றேன். இன்னொன்று தோன்றுகிறது. அதையும் சொல்கிறேன். எனக்குத் தோன்றுவது மட்டுமல்ல, சாஸ்திரத்திலேயே சொல்லியிருப்பதுதான். அதாவது ஒளபாஸனாதிகளைப் பண்ணிக் கொண்டு ஆசார சீலனாகப் புருஷன் இருந்தால் அவன் ஆரோக்கியமாகவும் நல்ல மனவிருத்தியோடும் இருப்பதோடு ஆண் சந்ததி உண்டாகும்.


பிராசீனமான ஆசாரம் உடையவர்களுக்கு துர்பலம் இல்லை;வியாதி இல்லை. பிராசீன ஆசாரத்தை இப்பொழுது கொஞ்சமாவது அநுஷ்டித்து வருகிறவர்கள் ஸ்திரீகள்தாம். அதனால் அவர்களிடம் உண்டாகிற பிரஜைகளிலும் அதிகமாகப் பெண்களே இருக்கிறார்கள். புருஷர்களும் அதிகமாகப் பிராசீன ஆசாரத்தை வைத்துக் கொண்டிருந்தால் இப்போதைவிட ஆண் ஸந்ததி அதிகமாக உண்டாகும். இரண்டும் ஸமவிகிதமாகும். ஸ்தல தரிசனம், தீர்த்த ஸ்நானம், பூஜை முதலியவைகளைப் புருஷர்கள் பண்ணி வந்தார்கள். இப்பொழுது அவர்களுக்கும் சேர்த்து ஸ்திரீகள் பண்ணுகிறார்கள்!புருஷர்கள் ஆசாரத்தை விட்டதனால் புருஷப்

பிரஜைகள் குறைவாக ஆகிவிட்டார்கள். ஆகவே பாக்கி எதற்காக இல்லாவிட்டாலும் குடும்ப வாழ்க்கை எகனாமிகலாக நன்றாக இருக்க வேண்டுமென்பதற்காவது புருஷர்கள் ஆசார அநுஷ்டானங்களை வைத்துக் கொள்ள வேண்டும். தாரித்திரிய நிவர்த்திக்கும் வரசுல்க (வரதக்ஷிணை) நிவர்த்திக்கும் ஆசார அநுஷ்டானந்தான் வழி


கூட்டங்கூடி, சீர்திருத்தம் என்று சொல்லிக் கொண்டு யோஜிக்காமல் கையெழுத்துப் போடுகிறார்கள். அநத மாதிரிக் காரியங்களெல்லாம் தற்கால சாந்தியானவையே. பரிகாரம் நிரந்தரமார இருப்பதற்கு இதுதான் மருந்து.






விவாஹத்தின் உத்தேசங்கள்

பிரம்மசரிய ஆச்ரமத்தில் வேதங்களை ஒருவன் கிரஹித்து விடுகிறான். அப்புறம் 'தியரி'யை 'ப்ராக்டிகல்'ஆக்க வேண்டும். வேதத்தில் சொன்ன கர்மாக்களை, யஜ்ஞங்களைப் பண்ணவேண்டும். அதற்கு தன்னோடு பிரிக்க முடியாத சொத்தாக ஒரு துணையைச் சேர்த்துக் கொள்ளவேண்டும். இவனுடைய வீட்டில் சமையல் முதலான காரியங்கள் நடப்பதற்கும், இவனுடைய இந்திரிய சுகத்தைப் பூர்த்தி பண்ணுவதற்காகவும் மட்டும் ஏற்பட்டவள் அல்ல பத்தினி என்பவள். தர்ம பத்தினி, யஜ்ஞ பத்தினி என்று அவளுக்குப் பெயர். இவன் செய்யும் தர்மத்தைக் கூட இருந்து உத்ஸாஹப் படுத்தி நடத்த வேண்டியவள்

அவள், யஜ்ஞத்தில் இவன் கூட நிற்க வேண்டியவள். இப்படியாக தேவ சக்திகளை லோகத்துக்கு அநுகூலம் பண்ணித் தருகிற கர்மாக்களுக்கு அவள் பக்கபலமாயிருக்கிறாள்.


இவனுக்கு சமையல்காரியாக, இவனுக்கு சரீர ஸெளக்கியம் கொடுக்கிறவளாக

இருக்கிறபோதுங்கூட அதிலேயே லோக க்ஷேமத்தைச் செய்கிறவள் அவள். எப்படியென்றால்:இவன் வீட்டுச் சமையல் இவனுக்கு மட்டுமில்லை. 'ஆதித்யம்', 'வைச்வதேவம்'என்பதாக தினமும் அதிதிக்கும், தீனர்களுக்கும், பிராணிகளுக்கும் கிருஹஸ்தன் அன்னம் போட வேண்டும். அதற்கும்தான் அவள் சமைப்பது. இவளுக்குப் பிரஜை உண்டாவதும் தம்பதியுடைய ஸெளக்கியத்தினால் ஏற்பட்டதென்பதோடு முடிந்துவிடுவதில்லை. வேத தர்மம் என்றைக்கும் லோகத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, வேத தர்மத்தை அநுஷ்டிப்பதற்கே இவள் பிரஜைகளைப் பெற்றுத் தரவேண்டும். புத்ரோத்பத்தியைக் கூட இப்படி எதிர்கால தர்ம வாழ்வை உத்தேசித்த ஸம்ஸ்காரமாகப் பண்ணுவதை வேறெந்த மதத்திலும் பார்க்க முடியாது. இப்படியாக ஐதிக (இஹலோக) சம்பந்தம் மட்டுமின்றி ஆத்ம சம்பந்தமும், லோக க்ஷேம உத்தேசமும் கொண்டதாக இருக்கிறது நம் மதத்தில் பதி-பத்னி உறவு. மற்ற மதங்களிலும் சர்ச் மாதிரியான இடத்தில் தெய்வ ஸாக்ஷியாகத்தான் விவாஹம் நடக்கிறதென்றாலும் அதற்கு இத்தனை உயர்ந்த லட்சியங்கள் கொடுக்கப்படவில்லை. புருஷனை மேலும் ஸம்ஸ்காரங்களில் செலுத்தி சுத்தப் படுத்தவோ, ஸ்திரீயைப் பதிவிரதத்தினால் பூர்ணத்வமே அடையப் பண்ணவோ அந்த விவாஹங்களில் இடமில்லை. மற்ற தேச விவாஹங்களில் இடமில்லை. மற்ற தேச விவாஹங்கள் ஒரு குடும்ப அல்லது சமூக ஒப்பந்தம் (contract) மாதிரித்தான். இங்கே அது ஆத்ம பந்தம். பந்தப்பட்டிருக்கிற ஆத்மாவை விடுவிப்பதற்காகவே ஏற்பட்ட பந்தம். அதனால்தான் இங்கே அது ஆத்ம பந்தம். அதனால்தான் இங்கே divorce (விவாஹரத்து) என்பதற்கு இடமேயில்லாமலிருக்கிறது. அந்த எண்ணம் வந்துவிட்டாலே நமக்குப் பயம்.


இத்தனை உத்தமமான விவாஹ ஸம்ஸ்காரத்தின் முக்யமான மூன்று உத்தேசங்கள்:ஒன்று, வேதத்தைப் படித்து முடித்து வந்த ஒருத்தனின் குடும்பம் நடக்க வழி செய்து கொடுத்து, அவன் வேத தர்மங்களை அநுஷ்டிப்பதற்குத் துணை சேர்த்துக் கொடுப்பது. இரண்டு, நல்ல ஸம்ஸ்காரமுடையவர்களுக்கே உத்தம தம்பதிகளாக இருந்து, உன்னதமான வேத தர்மத்துக்கு எதிர்கால வாரிசுகளை உற்பத்தி செய்து தருமாறு பண்ணுவது;அதாவது வரப்போகிற காலத்தில் லோகத்தில் உயர்ந்த மனோபாவமுள்ள ஜனங்கள் இருக்கும்படியாக ஏற்பாடு செய்வது. மூன்றாவது ஸ்திரீகள் கடைத்தேறப் பெரிய பிடிப்பாக ஒன்றை உண்டாக்கிக் கொடுப்பது. பரிபக்குவமடையாத நிலையில்தான் புருஷன் யக்ஞாதி அநுஷ்டானங்களைப் பண்ணுவது. அவன் அப்படிச் செய்வதற்குத் துணையாக வருகிற பத்தினியோ தன்னுடைய பாதி விரத்யத்தாலேயே அவனையும்விடப் பரிபக்குவம் அடைந்து விடும்படி நம்முடைய வைதிக தர்மம் பண்ணிவிடுகிறது!இந்த மூன்றோடு, அல்லது மூன்றுக்குப் பிறகு நாலாவதாக வருவதுதான் தம்பதியின்

இந்திரிய ஸெளக்கியம் என்பது.


முக்கியமான மூன்றும் எடுபட்டுப் போய் நாலாவது மட்டுமே முழுக்கப் பிரதானமாகிவிட்ட இன்றைய கால ஸ்திதியிலிருப்பவர்கள் நான் சொன்ன சாஸ்திரோக்தமான அந்த உத்தேசங்களைப் புரிந்து கொண்டால் நாம் நல்லதற்கு மாறுவதற்கு வழி பிறக்கும். அப்படிப் புரிந்து கொள்வதற்கு சந்திரமௌலீச்வரர் அநுக்ரஹம் செய்யவேண்டும்.


பாணிக்ரஹணம் (மணமகள் மணமகளுடைய கையைப் பிடித்தல்) , மாங்கல்ய தாரணம், ஸப்த பதீ என்று புது தம்பதி ஏழடி எடுத்துவைப்பது இவை விவாஹத்தில் பிரதானமான அம்சங்கள். மாங்கல்ய தாரணம் வேதத்திலேயே உண்டா, இல்லையா என்று பெரிய சர்ச்சைகள் செய்வதுண்டு. இது அவசியமில்லாத சர்ச்சை. எத்தனையோ ஆயிரம் காலமாக இருந்து வந்திருக்கிற மாங்கல்ய தாரணம் அவசியம் செய்ய வேண்டியதே!

























© 2017 Shri Kanchi Kamakoti Peetham | Privacy Policy | Terms of Service