jaga flash news

Monday, 17 February 2025

பழனி முருகனை ஆண்டி கோலத்தில் தரிசித்தால் நாமும் ஆண்டி ஆகிவிடுவோமா?




பழனி முருகனை ஆண்டி கோலத்தில் தரிசித்தால் நாமும் ஆண்டி ஆகிவிடுவோமா?
 பழனி முருகனை ஆண்டி கோலத்தில் தரிசித்தால் நாமும் ஆண்டி ஆகிவிடுவோமா என்ற சந்தேகம் பல பக்தர்களுக்கு இருக்கும். இது உண்மையா என்பதை தெரிந்து கொள்வோம்.

 பழனி முருகனை ஆண்டி கோலத்தில் பக்தர்கள் தரிசிக்க சிலர் தயக்கம் காட்டுவதை கவனித்திருப்போம். பழனி முருகனை ராஜ அலங்காரத்தில் தரிசனம் செய்யவே பக்தர்கள் பெரும்பாலும் விரும்புவார்கள்.


ஆண்டி கோலத்தில் பழனி முருகனை தரிசித்தால் நாமும் ஆண்டி ஆகிவிடுவோமோ என்ற மூடநம்பிக்கை பக்தர்களிடம் உள்ளது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முக்கியமானது பழனி.

அவருடைய ஆண்டி கோலமானது அனைத்தையும் துறந்து ஞானத்தை விரும்பக் கூடிய நிலை ஆகும். தண்டாயுதபாணி சிலை வெறும் நவபாஷாணத்தால் ஆனது. முருகனை ஆண்டி கோலத்தில் பார்க்கும் போது நமக்குள் ஒரு மெய்ஞானம் உருவாகும்.

ஆண்டி கோலத்தில் இருக்கும் நவபாஷாண முருகனை தரிசிக்க வருபவர்களுக்கு நவபாஷாணத்தின் முழுமையான பாசிட்டிவ் கதிர்வீச்சு கிடைக்கும். திங்கள்கிழமை காலையிலேயே மலையேறி முருகனை ஆண்டி கோலத்தில் தரிசித்தால் தவறான வழியில் பொருளையும் செல்வங்களையும் தேட கூடாது. அது சங்கடங்களை தரும்.


எதையுமே வேண்டாம் என விட்டுவிட்டால் எதுவுமே உன்னை தேடி வரும் என்பதுதான் தண்டு கொண்டு கோவணத்துடன் நிற்கும் முருகனின் ஆண்டி கோலமாகும். அனைத்தையும் விட்டுவிட்டால் ராஜாவாக இருப்பாய் என உணர்த்துவது ராஜ அலங்காரம். எனவே இரு அலங்காரங்களுமே சிறப்பு வாய்ந்தவை ஆகும்.

பழனி முருகனை எந்த கோலத்தில் பார்த்தாலும் நமக்கு நற்பலன்கள் உண்டாகும். இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டிருந்தது.

நாரதர் தேவலோக மாங்கனியை சிவனிடம் கொடுத்து அதை யாருக்கு கொடுக்க வேண்டும் என கேள்வி எழுந்தது. அப்போது கணபதியும் முருகனும் தங்களுக்கு கொடுக்க வேண்டும் என கேட்டனர்.


அப்போது சிவபெருமான், உங்கள் இருவரில் யார் முதலில் உலகை சுற்றி வருகிறார்களோ அவருக்கே இந்த பழம் என்கிறார். உடனே முருகன் ஏழு உலகையும் சுற்றி வர தனது மயில் வாகனத்தை எடுத்துக் கொண்டு புறப்பட்டார்.

ஆனால் விநாயகரோ அம்மையப்பனே தனக்கு உலகம் என கூறி அவர்கள் சுற்றி வந்து அந்த கனியை கணபதி பெற்றுக் கொண்டார். அப்போது உலகை சுற்றி வந்த முருகன், கணபதியின் கையில் இருந்த கனியை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார்.

உடனே தனது தாய் தந்தையரிடம் இது எப்படி அவருக்கு கொடுக்கப்பட்டது என கேட்டார். அதற்கு அவர்கள் கணபதி தங்களை சுற்றி வந்து பழத்தை பெற்றுக் கொண்டதை கூறினர். தாய், தந்தையரே உலகம் என்ற உண்மை தனக்கு தெரியாமல் போனது ஏனோ என முருகன் எண்ணினார். தனது அண்ணன் கணபதியிடமே இந்த கேள்வியை கந்தன் முன் வைத்தார்.

அம்மையும் அப்பனும்தான் உலகம் என காணும் ஆற்றல் விநாயகருக்கு இருந்தது தவத்தினால்தான் என்பதை அறிந்த முருகன், பூலோகம் சென்று தவக்கோலம் பூண்டதே பழனியாண்டி ரூபமாகும். கனி கிடைக்கவில்லை என கோபித்து கொண்ட அவர் ஆண்டி கோலத்தில் காட்சித் தரவில்லை என்கிறார்கள். தன்னை வழிபடுவோருக்கு எல்லாம் கிடைக்கவே கந்தனின் தவக்கோலம் தொடங்கியது. அழகும் அறிவும் முருகனுக்குள் ஒளிவீசியது. எனவே பழனி ஆண்டிக் கோலத்தை பார்ப்பதில் தவறில்லை என்கிறார்கள்.


No comments:

Post a Comment