கோடையின் கொடை மா இஞ்சி! புற்றுநோய் முதல் ஆஸ்துமா வரை! ஆல் கிளியர் செய்யும் மாங்காய் சுவையிலான இஞ்சி
புளிப்பு சுவை கொண்ட மா இஞ்சி / மாங்காய் இஞ்சியில் ஏராளமான மருத்துவ குணங்கள் கொட்டி கிடக்கின்றன.
மா இஞ்சி, பார்ப்பதற்கு இஞ்சியை போன்றே இருக்கும். சுவையோ மாம்பழம் போன்று இருக்கும். இது இஞ்சி குடும்பத்தை சேர்ந்தது. அதே நேரம் மஞ்சளுடன் தொடர்புடையது. அதனால்தான் இது இஞ்சி போன்ற மஞ்சள் கிழங்கை போல் மெல்லியதாக இருக்கும்.
What are the health benefits of Maa Ingi
இந்த மா இஞ்சியை தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளிலும் பரவலாக பயன்படுத்துகிறார்கள். அது போல் இந்தியாவில் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, மேற்கு வங்கம், கேரளா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பரவலாக மா இஞ்சி பயன்படுத்தப்படுகிறது.
இந்த மாங்காய் இஞ்சியை காய்ச்சல், தோல் நோய்கள், ஆஸ்துமா, வயிறு சம்பந்தமான வியாதிகளுக்கு பயன்படுத்துகிறார்கள். இந்த மா இஞ்சியை ஊறுகாய் போல், துவையல் போல் பயன்படுத்தலாம். இதில் ஆன்டி பைரிடிக் தன்மை உள்ளது. அது போல் நோய் எதிர்ப்பு தன்மையும் கொண்டிருக்கிறது.
மாங்காய் இஞ்சி: மலமிளக்கியாகவும் இது பயன்படுகிறது. மாங்காய் இஞ்சியில் வேதியியல் பொருளான ஸ்டார்ச், ஃபைபர்ஸ், பினோலிக் அமிலங்கள், எண்ணெய்கள், குர்குமினாய்டுகள் மற்றும் டிஃபுரோகுமெனோனால் அமடானுலன் மற்றும் அமடால்டிஹைட் போன்றவை உள்ளன. அது போல் மாங்காய் நறுமணமே இந்த இஞ்சி வீசும். இதற்காக இதில் பினீன், டெல்டா கேர்ன், பீட்டா ஒசைமின், மைர்சீன் போன்ற பொருட்கள் உள்ளன.
பசியை தூண்டும்: இந்த மா இஞ்சி பசியை தூண்டும். இதில் குர்குமின், டைமெத்தாக்ஸி குர்குமின், டெஸ் மெத்தாக்ஸி குர்குமின் போன்றவை உள்ளன. இது சமையலில் சேர்ப்பதால் பசியை தூண்டும். இந்த மா இஞ்சியில் மனதை அமைதிப்படுத்தும் பண்புகள் உள்ளன. நரம்பு மண்டலத்தை அமைதிப்படுகிறது. கவலை, தலைவலி, மனச்சோர்வை போக்குகிறது. இதன் வாசனையே மனதிற்கு இதமளிக்கிறது.
மாங்காய் இஞ்சியில் புற்றுநோய் எதிர்ப்பு தன்மை உள்ளது. மரபணு செயல்பாட்டால் ஏற்படும் புற்றுநோய் கட்டிகளைத் தடுக்கிறது. கீமோதெரபி போன்ற புற்றுநோய் சிகிச்சைகளுடன் சேர்த்து இதையும் பயன்படுத்தி வரலாம். அது போல் புற்றுநோய் கட்டியின் வளர்ச்சியை தடுக்க உதவுகிறது.
உடல் சூட்டை குறைக்கும்: மா இஞ்சியில் ஆன்டி பைரிடிக் பண்பு இருப்பதால் உடலில் உள்ள அதிகபடியான சூட்டை குறைக்கிறது. காய்ச்சலை உண்டாக்கும் நோய்க் கிருமிகளை எதிர்த்து போராட உதவுகிறது. பாலியல் ஆசைகளையும் இது தூண்டும். ரத்த ஓட்டத்தை ஊக்குவிக்க பயன்படுகிறது. விந்துகள் சேதமடையாமல் காக்கவும் இந்த மா இஞ்சி உதவுகிறது.
உடல் பருமனுக்கு தீர்வு: மூட்டு வலிக்கு அருமருந்து. நீரிழிவு மற்றும் இதயநோய் போன்ற வளர்சிதை மாற்ற கோளாறுகளுக்கு உடல் பருமன் மிக முக்கியமான காரணம். மாங்காய் இஞ்சியில் குர்குமின் இருப்பதால் இது உடல் பருமனை தடுக்கிறது. மா இஞ்சியில் சளியை தடுக்கும் தன்மை இருப்பதால் இருமலுக்கு நல்ல தீர்வாக இருக்கிறது. இது சுவாச பாதையில் உள்ள சளியையே குறைக்கிறது. இதனால் மூச்சுக்குழாய் அழற்சி, ஆஸ்துமா போன்ற சுவாச நோய்களுக்கு சிகிச்சை அளிக்கவும் உதவுகிறது.
மலமிளக்கி: எல்லாவற்றுக்கும் மேல் பெரும்பாலானவர்களின் முக்கிய பிரச்சினையான மலச்சிக்கலை போக்குகிறது. மா இஞ்சியில் நார்ச்சத்து நிறைந்திருக்கிறது. இதனால் மலத்தில் தண்ணீர் சத்தை அதிகரித்து மலம் எளிதாக வெளியேற உதவுகிறது. இது மட்டும் இல்லாமல் வயிறு தொடர்பான அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்கிறது. சரும நோய்களுக்கும் தீர்வை ஏற்படுத்துகிறது. இந்த மா இஞ்சி கோடை காலத்தில் அதிகமாக கிடைக்கும். இதை வாங்கி பயன்பெறுங்கள்.
No comments:
Post a Comment