பிரம்ம முகூர்த்த நேரம் ஸ்பெஷல் இதுதான்.. குளிச்சிட்டுதான் பூஜை செய்யணுமா?
பிரம்ம முகூர்த்தத்தின் சிறப்புகள் என்னென்ன? இந்த குறிப்பிட்ட நேரத்தில் விளக்கேற்றி வழிபாடு செய்ய சொல்வது ஏன்? குளிக்காமல் பூஜைகள் செய்யலாமா? விளக்கு ஏற்றலாமா? வயதானவர்கள் என்ன செய்யலாம்? இவைகள் குறித்து, ஆன்மீகத்தில் சொல்லப்பட்டிருப்பது என்ன? அவைகளை இங்கே சுருக்கமாக பார்க்கலாம்.
எப்போதுமே பெண்கள் விடிகாலையிலேயே எழுந்துவிடவேண்டும்.. பிரம்ம முகூர்த்தத்தில் கண்விழித்து, யார் முகத்தையும் பார்க்காமல் வாய் கொப்பளித்து விட்டு, சிறிது குளிர்ந்த நீர் குடித்துவிட்டால், லஷ்மி கடாட்சம் எப்போதும் வீட்டில் கிடைக்கும் என்பார்கள்.
பிரம்ம முகூர்த்தத்தின் முக்கியத்தும்
இதற்கு காரணம், இந்த நேரத்தில்தான் தேவர்களும், பித்துருக்களும், வீடு தேடி வருவார்கள் என்பது நம்பிக்கையாகும். அதுமட்டுமல்ல, பிரம்ம முகூர்த்தத்தில்தான் லட்சுமிதேவி வீதி வலம் வருவதாக நம்பப்படுகிறது.. எந்த வீட்டில் விளக்கேற்றி வைத்திருக்கிறார்களோ, அந்த வீட்டில் லட்சுமி நுழைவாள் என்பார்கள். இதன்மூலம் மகாலட்சுமியின் அருளும், ஆசியும் கிடைக்கும்.
இதற்கு அறிவியல் காரணமும் உள்ளது.. பிரம்ம முகூர்த்தம் என்று சொல்லப்படும் இந்த விடிகாலை நேரத்தில், காற்று மண்டலம் மிகவும் தூய்மையாக இருக்கும்.. இந்த தூய்மையான காற்றை சுவாசிப்பது, உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்கும்.
தூங்கி எழுந்து வாசற்கதவை திறக்கும்போது, "மகாலஷ்மியே வருக" என்று 3 முறை சொல்லி கதவை திறக்கலாம. காலை 4.30 லிருந்து 6 மணிக்குள் வீட்டு வாசலில் சாணம் தெளித்து, அரிசி மாவினால் கோலம் போட வேண்டும்... ஒரு சிட்டிகை மஞ்சளை நீரில் கலந்து குளிப்பதால், விஷ்ணு பகவான், பிரஹஸ்பதியின் அருள் விலகாமல் இருக்கும்.
உடல்நிலை கோளாறு, வயதானவர்கள்
ஆனால், காலையில் பலரால் குளிக்க முடியாத சூழல் ஏற்படலாம்.. உடல்நிலை கோளாறு, தண்ணீர் பிரச்சனை உள்ளிட்ட பல சூழல்கள் ஏற்படலாம்.. ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பிரதேசங்களிலும் இந்த பிரச்சனை ஏற்படலாம்.. இதுபோன்ற நேரங்களிலும், குளித்துவிட்டுதான் விளக்கேற்ற வேண்டுமா? குளிக்காமல் விளக்கேற்றி, பூஜை செய்தால் பலன் கிடைக்குமா? என்ற சந்தேகம் பலருக்கும் எழலாம்.
உடல்நிலை காரணமாக குளிக்க முடியாதவர்கள், பல் துலக்கி, கை, கால், முகத்தை சுத்தமாக கழுவி விட்டு வந்து பூஜை அறையில் விளக்கேற்றலாம்... பிறகு நெற்றியில் திருநீறு பூசிக்கொண்டு, வழக்கமான வேலைகளில் ஈடுபடலாம்..
குளிக்காமல் பூஜை செய்யலாமா
இதில் வயதானவர்களாக இருந்தால், முடிந்தவரை "கண்ட ஸ்நானம்" எனப்படும் கழுத்தோடு குளித்தபிறகு பூஜிப்பது நல்லது.. ஒருவேளை அதுவும் முடியாத நிலையில், கை, கால்களை தூய்மை செய்தபிறகு, ஆடை மாற்றி, ஆண்கள் திருநீறும், பெண்கள் மஞ்சள் நீரை தலையில் தெளித்தும் கொள்ளும் பூஜை செய்யலாம் ஆனால், இது தீட்டு காலங்களுக்கு பொருந்தாது.
அதேபோல, மந்திரங்கள் உச்சரித்து, பூஜை செய்ய வேண்டும் என்றாலோ அல்லது பரிகாரத்திற்காக விளக்கேற்றி பூஜை செய்ய வேண்டும் என்றாலோ, பிரம்மமுகூர்த்த என்றில்லாமல் எந்த நேரத்திலும் கட்டாயம் குளித்து விட்டு தான் விளக்கேற்ற வேண்டும்.. அதேபோல, குறிப்பிட்ட நாள் விரதம் இருக்க நேரிட்டாலும், உடலுக்கு மட்டும் குளித்துவிட்டுத்தான் வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும். விரதம் ஆரம்பிக்கும் நாள், விரதம் நிறைவு செய்யும் நாட்களில் மட்டும் தலைக்கு குளிக்கலாம்.
குளிக்காமல் விளக்கேற்றலாமா
அதேபோல, பிரம்ம முகூர்த்தம் இல்லாமல், வழக்கமான நாட்களில் குளிக்காமல் விளக்கேற்றலாமா? என்ற சந்தேம் எழலாம்.. திருமணம் ஆகாத கன்னியர், வயது முதிர்ந்த பெண்கள் குளிக்காமல் விளக்கு ஏற்றலாம்.. ஆனால், தாம்பத்ய வாழ்வில் உள்ளவர்கள் குளித்த பிறகே விளக்கேற்ற வேண்டும்.
குளிக்காமல் சாமி கும்பிடலாம்.. அதேபோல காலையில் எழுந்தவுடன் கை, கால் கழுவி நெற்றியில் திருநீறு பூசலாம்.. ஆனால் காலையில் விளக்கேற்றி பூஜை செய்பவர்கள், கோயில் வழிபாடு செய்பவர்கள் அவசியம் குளிக்க வேண்டுமாம்..
No comments:
Post a Comment