உண்டியலில் தாலி கயிற்றை போடலாமா? தாலியில் ஹூக்கு மாட்டறீங்களா? தாலி சரடுக்கு மஞ்சள் முக்கியமா?
தாலிக்கயிறுகளில் ஊக்குகளை அதாவது சேஃப்டி பின்களை சிலர் மாட்டி வைத்திருப்பார்கள். இது சரியா? தவறா? தாலிக்கயிற்றில் மஞ்சள் கோர்த்திருக்க என்ன காரணம்? தாலி சரடு அணிந்திருப்பவர்கள் மஞ்சள் தேய்க்க வேண்டுமா? சுருக்கமாக பார்ப்போம்.
திருமணம் முடிந்து சில மாதங்களுக்கு, புது பெண்ணுக்கு தாலிக்கயிற்றில் மஞ்சளும் சேர்த்து கட்டப்படும்.. இதற்கு காரணம், இந்த மஞ்சள்தான், தாய்க்கும் சேய்க்கும் பாதுகாக்கும் கிருமிநாசினியாகும்.
மஞ்சள் தாலி: அதுமட்டுமல்ல, பெண்களின் மார்பகத்தில் எந்தவிதமான தொற்றையும் அண்டவிடாமல், இந்த மஞ்சள் தடுக்கின்றன. அதனால்தான், மஞ்சள் கயிறு அணியும் பெண்களை, மார்பக நோய்கள் தாக்குவதில்லை. இன்றைய காலகட்டத்தில், மஞ்சளுடன் தாலி அணிவது குறைந்துவருவதால்தான், மார்பக புற்றுநோய்களும், இதயநோய்களும் அதிகரித்து வருவதாக கூறுகிறார்கள்.
மஞ்சளின் மகிமையை வலியுறுத்திதான், தாலியை தங்கத்தில் அணிந்தாலும், மஞ்சள் கயிற்றில்தான் கட்ட வேண்டும் என்று முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர்.. அதேபோல, கழுத்தில் போடப்பட்டிருக்கும் மாங்கல்யம் நெஞ்சு குழிக்கு கீழே தொப்புள் இருக்கும் இடத்திற்கு சற்று மேலே இருக்க வேண்டும். தொப்புளுக்கு நேராக அணிந்திருப்பதும் தவறு.
'
தாலி மாற்றம்: சரடு தாலி அணிந்திருந்தால், மஞ்சள் தேய்க்க வேண்டிய அவசியம் இல்லை.. எனவே, வெள்ளிக்கிழமை, செவ்வாய் போன்ற விசேஷ நாட்களில் தாலிக்கு குங்குமம் வைத்து கும்பிடுவது நல்லது...இதனால், கணவனின் ஆயுள் நீடிக்கும்.
எக்காரணம் கொண்டும், தாலியில், ஊக்கு, சாவி போன்றவற்றை தொங்க விடக்கூடாது.. அதாவது, இரும்பினால் செய்யப்பட்ட எந்தவொரு சின்ன பொருளும், தாலியில் தொங்கவிடக்கூடாது.. காரணம், சனி பகவானின் பார்வை பெற்ற உலோகமாக இரும்பு உள்ளதால், நேர்மறை ஆற்றலை தராது. இது கணவனின் முன்னேற்றத்தையும் குலைத்துவிடும். குடும்பத்துக்கும் வறுமை சேர்ந்து கொள்ளும்..
கயிறு மாற்றலாம்: தாலிக்கயிற்றை அடிக்கடி மாற்றக்கூடாது. கயிறு மங்குவது போல, நூல் நைந்துவிட்டு இருந்தால், மட்டுமே, கயிறு மாற்றவேண்டும்.. அதிலும், சந்திர தரிசனம், சுபமுகூர்த்த நாள், மேல் நோக்கு நாள், சித்த யோகம், அமிர்த்த யோகம் என்று எல்லாமே கூடி வரக்கூடிய அம்சமான நாளில் கயிறு மாற்ற வேண்டும். திங்கள், செவ்வாய், வியாழக்கிழமைகளில் மாற்றுவது சிறப்பு.
அதேபோல, ஏற்கனவே அணிந்திருந்த பழைய கயிற்றை செடி, கொடிகள் இருந்தால் அதில் கட்டிவிடலாம். இல்லாவிட்டால் அருகிலுள்ள கோவிலில் உள்ள மரங்களில் கட்டிவிடலாம். ஆனால் எக்காரணம் கொண்டும் வெளியில் குப்பையில் தூக்கி போடக்கூடாது.
உண்டியலில் தாலியை காணிக்கையாக போடுவதும் தவறு என்கிறார்கள்.. புதிய தாலியை வாங்கி உண்டியலில் சேர்க்கலாம்... மற்றபடி, இறைவனை சாட்சியாக வைத்து திருமணத்தில் கணவன் கையால் கட்டப்பட்ட தாலியை கோயில் உண்டியலில் சேர்ப்பது சரியில்லை என்கிறார்கள்.
தாலி அறுவது கனவு: அதேபோல, திருமணம் ஆன பெண்ணிற்கு தாலி அறுவதுபோல கனவு வந்தால், அவருடைய கணவனின் மீது கோபம் இருக்கலாம். அல்லது வீட்டில் கணவன்மார்கள் பெண்ணிடம் கோபமாக இருக்கலாம்.. வீட்டில் சண்டை, மனஸ்தாபம் இருக்கலாம். மற்றபடி தாலி அறுவதுபோல கனவு வந்தால் பயப்பட தேவையில்லையாம்.
நல்ல பதிவு அருமை அய்யா வெ.சாமி அவர்களே ! ஆமா சிலர் வேறு கணவரை ஏற்றுக் கொள்ள தாலி கட்டிய கணவரை தெரு நாயாக்க அதாவது தெருக்கடையாக்க நினைக்கும் பெண்கள் தன் கணவன் கட்டிய தாலியை உண்டியலில் போடுகிறார்களே அதைப் பற்றியதான தங்களின் கருத்தை அடுத்த பதிவில் வெளியிடுங்கள் அய்யா.
ReplyDelete