jaga flash news

Saturday, 22 February 2025

கேந்திரம்

ஜோதிட சாஸ்திரத்தைப் பொறுத்தவரை ஒருவர் ஜாதகத்தில் இருக்கும் எல்லா இடங்களுமே முக்கியமானவை. ஆனால், இதில் கேந்திரம் எனப்படும் 1, 4, 7, 10-ம் இடங்கள் ஒருவரின் சுகம், வாழ்க்கைத்துணை, ஜீவனம் ஆகியவற்றைக் குறிக்கிறது. 'முதன்மை கேந்திரங்கள்' என்று இவற்றைத்தான் சொல்வார்கள். 
கேந்திரங்கள் எனப்படும் லக்னம், 4-ம் இடம், 7-ம் இடம், 9-ம் இடம் ஆகியவற்றில் அமைந்திருக்கும் கிரகங்கள், ஆட்சி அல்லது உச்சம் பெற்று இருந்தால், அந்த அமைப்பு, 'பஞ்ச மஹா புருஷ யோகம்' எனப்படும். 

உதாரணமாக மேஷம் லக்னம் என்று வைத்துக்கொண்டால், மேஷத்தில் செவ்வாய் ஆட்சி பெற்றோ அல்லது சூரியன் உச்சம் பெற்றோ இருப்பதுடன், லக்னத்துக்கு 4-ம் இடமான கடகத்தில் சந்திரன் ஆட்சியாகவும் அல்லது குரு உச்சமாகவும்; 7-ம் இடமான துலாமில் சுக்கிரன் ஆட்சியாகவும் அல்லது சனி உச்சமாகவும்; 10-ம் இடமான மகரத்தில் சனி ஆட்சியாகவும் அல்லது செவ்வாய் உச்சமாகவும் அமைந்திருந்தால், 'பஞ்ச மஹா புருஷ யோக'மாகும்.

இதில் சுபகிரகங்களான குரு, சுக்கிரன், புதன், சந்திரன் ஆகியோர் அவர்களின் தசா புக்திகளில் 'கேந்திர ஆதிபத்ய தோஷம்' எனும் தோஷத்தையும் கொடுப்பார்கள். 
லக்னம் எனும் முதல் பாவம் 

உடல்வாகு, நிறம், மற்றவர்களைக் கவரும் அழகு, செல்வம், உடலில் உள்ள ரத்தத்தின் தன்மை, தலைப்பகுதி ஆகியவற்றுக்குப் பொறுப்பேற்கும். மேலும் புகழ், சுகம், சுபநிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்கும் பொறுப்பேற்கும் இடமாகும். 

அடித்தளம் பலமாக அமைந்தால்தான் கட்டடமும் உறுதியாக ஆண்டாண்டு காலத்துக்கு நிலைத்திருக்க இயலும். அதேபோன்று லக்னம் பலமாக அமைந்தால்தான் அனைத்தையும் அனுபவிக்கும் யோகமும் நீண்ட ஆயுளும் கிடைக்கும். வாழ்க்கையின் வசதிகளை அனுபவிக்க செல்வம் இருந்தால் மட்டும் போதாது. லக்னமும் லக்னாதிபதியும் பலமாக அமைய வேண்டும்.

சுகஸ்தானம் எனும் 4- இடம்

வசிக்கும் வீடு, வியாபாரம், தாய், தாயின் உறவு, உறவினர்களின் நிலை, உயர்கல்வி, வாகனம், வீட்டில் நடைபெறுகின்ற சுப நிகழ்ச்சிகள், புகழ், புதையல், பால், பசுக்கள், திருத்தல தரிசனம், பயணம், கனவுகள், மருந்துகள், அதிகாரம் ஆகியவற்றுக்கு 4-ம் இடம் பொறுப்பேற்கும்.

4 - ம் இடத்தையும் புதனின் பலத்தையும் அறிந்து ஒருவரின் கல்வி, மற்றும் உயர்கல்வி எப்படி அமையுமெனக் கூறி விடலாம்.

4 - ம் இடத்தையும் சுக்கிரனின் பலத்தையும் அறிந்து, ஒருவரின் வாகன யோகம், ஆபரணச் சேர்க்கை, ஆகியவற்றின் நிலையை அறியலாம்.

4 - ம் இடத்தையும் செவ்வாயின் பலத்தையும் அறிந்து ஒருவரின் அசையாத சொத்துகளான வீடு, நிலம், தோட்டம், பண்ணை வீடுகள் இவற்றை அறியலாம்.

களத்திரம் எனும் 7 - ம் இடம்

திருமணத்தைக் குறிக்கும் இடமாகும். ஆண்களுக்கு மனைவியைப் பற்றியும், பெண்களுக்கு கணவரைப் பற்றியும் அறிவிக்கும் பாவம். திருமணம் நடைபெறும் காலம், மனைவி, கணவன், ஆயுள், சுற்றுப்புறச் சூழ்நிலை, கூட்டு வியாபாரம், திருமணத்தால் ஏற்படும் சுகம், மகிழ்ச்சி, அரசாங்கத்தால் கிடைக்கும் கவுரவம், பட்டம், பதவி, சன்மானம் ஆகியவற்றுக்கு இந்த 7 -ம் இடம் பொறுப்பேற்கும். 

தவிர பஞ்சு, பருத்தி, தறி நெய்தல், கமிஷன் தொழில், தரகர் தொழில் இவற்றையும் குறிக்கும். களத்திரஸ்தானம் எனப்படும் இந்த 7-ம் இடம் வெளிநாடு செல்லும் வாய்ப்பையும் எடுத்துக் கூறும்.

ஜீவனம் எனும் 10 - ம் இடம்

'உத்தியோகம் புருஷ லக்ஷணம்' என்று கூறுவார்கள். பணியாற்றுதல், தொழிலால் பெறும் லாபம், புகழ், உயர் பதவி, அரசாங்க கௌரவம், புகழ், பட்டம், பதவி, அரசாளும் யோகம், தெய்வ வழிபாடு, உணவில் ஏற்படும் ஆர்வம், சுவையான உணவு கிடைத்தல் ஆகியவற்றுக்கு இந்த 10- ம் இடம் பொறுப்பேற்கும். 'தொழில் ஸ்தானம்', 'கர்ம ஸ்தானம்', 'ஜீவன ஸ்தானம்' எனப் பல பெயர்களில் இந்த இடத்தை அழைப்பார்கள். இந்த இடம்தான் ஒருவரின் ஜாதகத்தில் உயர்ந்த இடமாகும். 
ஜாதகத்தில் இடம் அமைவதை வைத்துத்தான் ஜாதகரின் வாழ்க்கையை உறுதிப்படுத்த முடியும். அரசுப்பணியா, தனியார்த்துறையா, சொந்தத்தொழிலா, கூலித்தொழிலா என்பதைத் தெளிவாகக் கூறும் இடம் இந்த 10-ம் இடம்'' என்று கூறினார்.

No comments:

Post a Comment