jaga flash news

Wednesday, 5 February 2025

செல்போன் பயன்பாடு கட்டுபடுத்த வழி


இந்த காலத்தில் செல்போன் என்பது கிட்டதட்ட ஆறாம் விரலைப் போலவே மாறிவிட்டது. செல்போன் இல்லாமல் யாராலும் இருக்க முடியாது என்ற நிலை உருவாகிவிட்டது. இதற்கிடையே செல்போன் பயன்பாட்டைக் குறைப்பதை ஊக்குவிக்கும் விதமாக இப்போது என்ற ஒரு சேலஞ்ச் டிரெண்டாகி வருகிறது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

இப்போதெல்லாம் நம்மில் பெரும்பாலானோரால் செல்போன் இல்லாமல் இருக்கவே முடிவதில்லை.. கிட்டதட்ட செல்போனுக்கு அடிமையாகிவிட்டோம் என்றே சொல்லலாம். நீங்களும் அப்படிப்பட்ட ஒருவர் என்றால் உங்களுக்காகவே இப்போது ஒரு சேலஞ்ச் டிரெண்டாகி வருகிறது.




இதன் மூலம் உங்களுக்கு செல்போன் பயன்பாட்டைக் குறைக்க முடியும் என்கிறார்கள். இப்போது இணையத்தில் டிரெண்டாகி வரும் இந்த சேலஞ்சில் ஒருவர் செல்போன் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். அதுவும் இந்த பிப்ரவரி மாதம் முழுக்க..! இந்த 28 நாட்கள் செல்போனை யூஸ் செய்யாமல் நீங்கள் இருந்துவீட்டீர்கள் என்றால் இந்த சேலஞ்ச்சை முடித்ததாக அர்த்தம். அதுதான்


இதுபோல இருப்பது சேலஞ்சை முடிப்பது மட்டுமின்றி உங்களின் மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும்.. மேலும், தேவையில்லாமல் செல்போனை பயன்படுத்துவதைக் கணிசமாகக் குறைக்கும். எனவே, நீங்கள் செல்போனுக்கு அடிமையாகிவிட்டது போல அல்லது செல்போன் இல்லாமல் இருக்கவே முடியாது என்பது போல நீங்கள் உணர்ந்தால் தாராளமாக இந்த சேலஞ்சை நீங்கள் எடுக்கலாம்.




தற்காலத்து இளைஞர்களுக்குக் கண்டிப்பாகத் தேவைப்படும் இந்த சேலஞ்சை குளோபல் சாலிடாரிட்டி அறக்கட்டளையின் கீழ் ஜேக்கப் வார்ன் என்பவர் உருவாக்கியுள்ளார். செல்போன் பயன்பாட்டைக் குறைத்து ஆரோக்கியமாக வாழ்க்கை நடத்த இதை அவர்கள் வடிவமைத்துள்ளனர். ஒட்டுமொத்தமாக செல்போன் இல்லாமல் ஒருவரால் ஒரு மாதம் வரை இருக்க முடியாது என்ற போதிலும், இதன் மூலம் செல்போன் பயன்பாட்டைக் கணிசமாக குறைக்கலாம்.




இரண்டு லெவல்:
இதில் மொத்தம் இரண்டு வகையான சேலஞ்கள் உள்ளன. முதலில் சேலஞ்ச். இதை முயற்சி செய்வோர் தாங்கள் செல்போனை பயன்படுத்தும் நேரத்தைக் குறைக்க வேண்டும். தேவையில்லாமல் செல்போனை பயன்படுத்தக் கூடாது. இதற்கு நமக்கு நாமே கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ள வேண்டும்.


இதில் ஒரு மாதம் செல்போனை யூஸ் செய்யாமல் இருக்க வேண்டும். முழுமையாக செல்போன் பயன்பாட்டை விட்டுவிட வேண்டும். அதற்குப் பதிலாகத் தூக்கத்தை மேம்படுத்துவது, வேலையில் கவனம் செலுத்துவது, சமூக தொடர்புகளை மேம்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.


வல்லுநர்கள் அட்வைஸ்:
செல்போன் பயன்பாட்டை எப்படிக் குறைக்க முடியும் என்பது குறித்துப் பேசும் வல்லுநர்கள், "இது நாம் நினைக்கும் அளவுக்கு எல்லாம் கடினம் இல்லை. தேவையில்லாமல் வரும் நோடிபிக்ஷன்களை பார்க்கவே நாம் அதிகம் செல்போனை எடுக்கிறோம். எனவே, அதை எல்லாம் முடக்கி செல்போனை முடிந்த வரை போரடிக்கும் ஒன்றாக மாற்றிவிடுங்கள். கலர் டிஸ்பிளேவை பிளாக் அண்ட் ஒயிட்டிற்கு மாற்றுங்கள். குறிப்பிட்ட நேரத்திற்கு செல்போனை எடுக்கக்கூடாது என ஒரு இலக்கை வைத்துக் கொண்டு அந்த நேரத்தை மெல்ல அதிகரியுங்கள்.




போரடிக்கிறது என செல்போனை எடுக்காதீர்கள். அந்த நேரத்தில் வேறு எதாவது ஆக்கப்பூர்வமாகச் செய்யுங்கள். தூங்கச் செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே செல்போனை வைத்துவிடுங்கள். அலாரம் வைக்க செல்போன் வேண்டுமா என்றால் அதற்கு ஒரு சின்ன அலாரம் கடிகாரத்தைப் பயன்படுத்துங்கள். இதன் மூலம் இரவு நேர செல்போன் பயன்பாட்டைக் குறைக்கலாம்" என்றார்.


பலன்கள் அதிகம்:
தியானம், நினைவாற்றலை அதிகரிப்பது உள்ளிட்ட பயிற்சிகளைச் செய்யலாம். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டு மனம் விட்டுப் பேசுங்கள். இதை எல்லாம் செய்வதன் மூலம் இந்த சேலஞ்சை ஈஸியாக செய்து முடிக்கலாம். அது மட்டுமின்றி உடல் பருமன், தூக்கப் பிரச்சனைகள் மற்றும் மனநலப் பிரச்சனைகள் என உடலுக்கும் கூட இது பல நலன்களை அளிக்கும் என்கிறார்கள் வல்லுநர்கள்.


No comments:

Post a Comment