jaga flash news

Sunday, 16 February 2025

டிவிடெண்ட் செலுத்தும் விகிதத்தை எவ்வாறு கணக்கிடலாம்?

 டிவிடெண்ட் வழங்கும் நிறுவனம் எப்படி?.. டிவிடெண்ட் செலுத்தும் விகிதத்தை எவ்வாறு கணக்கிடலாம்?

 பல நிறுவனங்கள் தங்களது லாபத்தில் ஒரு பகுதியை பங்குதார்களுக்கு டிவிடெண்டாக வழங்குகின்றன. இது முதலீட்டாளர்களுக்கு கூடுதல் வருமானமாகும். இதனால் பங்குச் சந்தை முதலீட்டாளர்களில் பலர் டிவிடெண்ட் வழங்கும் நிறுவன பங்குகளை தேர்வு செய்து முதலீடு செய்வார்கள். முன்னதாக, அந்நிறுவனத்தின் வருமானம் மற்றும் வளர்ச்சி குறித்து நல்ல ஆய்வு செய்வார்கள். ஒரு நிறுவனம் தங்கள் வருமானம் மற்றும் வளர்ச்சி முதலீட்டு உத்திகளுடன் ஒத்துப்போகிறதா என்பதை, அந்நிறுவனத்தின் டிவிடெண்ட் செலுத்துதல் சதவீதத்தை அல்லது விகிதத்தை பகுப்பாய்வு செய்வதன் முதலீட்டாளர்கள் தீர்மானிக்க முடியும். நிறுவனம் தனது லாபத்தில் பங்குதாரர்களுக்கு எவ்வளவு டிவிடெண்டாக விநியோக்கிறது மற்றும் மறுமுதலீடு செய்கிறது என்பதை புரிந்துகொள்ள டிவிடெண்ட் செலுத்தும் விகிதம் முதலீட்டாளர்களுக்கு ஒரு முக்கியான நிதி அளவீடு கருவியாகும். "12 மாதம் காத்திருந்தால் ஜாக்பாட் தான்.. இந்த 5 பங்குகள் உங்கிட்ட இருக்கா?" டிவிடெண்ட் செலுத்தும் விகிதத்தை நாம் எளிதாக கண்டுபிடிக்கலாம். ஈவுத்தொகை செலுத்தும் விகிதம்= (ஒரு பங்குக்கு டிவிடெண்ட் தொகை/ஒரு பங்குக்கு வருமானம்) x 100. ஒரு பங்குக்கு டிவிடெண்ட் (டிபிஎஸ்) என்பது ஒவ்வொரு நிலுவையில் உள்ள பங்குக்கும் செலுத்தப்படும் மொத்த டிவிடெண்ட் ஆகும் ஒரு பங்கிற்கான வருவாய் எ(இபிஎஸ்) என்பது நிறுவனத்தின் நிகர வருமானத்தை நிலுவையில் உள்ள மொத்த பங்குகளின் எண்ணிக்கையால் வகுத்தால் கிடைக்கும் தொகை ஆகும்.  அதேசமயம், உங்களிடம் நிறுவனம் வழங்கிய மொத்த டிவிடெண்ட் தொகை மற்றும் நிகர வருமான புள்ளிவிவரங்கள் மட்டுமே உள்ளது என்றால், டிவிடெண்ட் செலுத்தும் சதவீதத்தை கண்டுபிடிப்பதற்கான பார்முலா வேறு. டிவிடெண்ட் செலுத்தும் சதவீதம்= (மொத்த செலுத்திய டிவிடெண்ட் தொகை/நிகர வருமானம்) x 100.   உதாரணமாக ஒரு நிறுவனம் செலுத்திய மொத்த டிவிடெண்ட் தொகை ரூ.10 கோடி மற்றும் அதன் நிகர வருமானம் ரூ.40 கோடி என்று வைத்துக்கொள்வோம். டிவிடெண்ட் செலுத்தும் சதவீதம்= (10,00,00,000/40,00,00,000) x 100. அதாவது இந்நிறுவனம் தனது வருவாயில் 25 சதவீதத்தை பங்குதாரர்களுக்கு டிவிடெண்டாக வழங்குகிறது. அதிக டிவிடெண்ட் செலுத்தும் விகிதம்: ஒரு நிறுவனம் அதன் லாபத்தில் பெரும் பகுதியை (50 சதவீதத்துக்கு மேல்) பங்குதாரர்களுக்கு டிவிடெண்டாக வழங்குகிறது என்றால் அது அதிக டிவிடெண்ட் செலுத்தும் விகிதமாகும். இது வருமானத்தை மையமாக கொண்ட முதலீட்டாளர்களை ஈர்க்கக்கூடும். அதேசமயம் டிவிடெண்ட் வழங்கும் தொகை வருவாயை (100 சதவீதத்துக்கு மேல்) தாண்டினால் அது நிலைத்தன்மையின்மை மற்றும் சாத்தியமான நிதி நெருக்கடியை ஏற்படுத்தும். குறைந்த டிவிடெண்ட் செலுத்தும் விகிதம்: ஒரு நிறுவனம் லாபத்தில் 20 சதவீதம் அல்லது அதற்கு குறைவாக பங்குதாரர்களுக்கு டிவிடெண்ட் வழங்கினால் அது குறைந்த டிவிடெண்ட் செலுத்து்ம் விகிதம். அதேசமயம் குறைந்த டிவிடெண்ட் செலுத்தும் விகிதம் கொண்ட பெரும்பாலான நிறுவனங்கள் லாபத்தில் பெரும்பகுதியை வளர்ச்சிக்காக மீண்டும் முதலீடு செய்கிறது என்பதை குறிக்கும். "பங்குச்சந்தையில் 20 வருடம் முதலீடு செய்தாலும் லாபம் உத்தரவாதம் இல்லை.. நிபுணர் பேச்சால் அதிர்ச்சி..!" நிலையான டிவிடெண்ட் செலுத்துதல்: ஒரு நிறுவனம் தனது லாபத்தில் 30-50 சதவீதம் வரை டிவிடெண்ட் வழங்கினால் அது நிலையான டிவிடெண்ட் செலுத்துதல் விகிதம். இது எதிர்கால வளர்ச்சிக்கு போதுமான மூலதனத்தை வைத்துக் கொண்டு பங்குதாரர்களுக்கு வெகுமதி அளிக்க நிறுவனம் அனுமதிக்கிறது. .

No comments:

Post a Comment