ஊமத்தங்காய் தீபம் ஏற்றினால் மகிழ்ச்சி, பணம், செல்வம் பெருகும்.. இன்று சிவராத்திரி இதை செய்து பாருங்க
வீட்டில் ஏற்படும் கஷ்டமும், வறுமையும் நமக்கு மனதில் பெரும் கவலையை உண்டுபண்ணிவிடும்.. இந்த கஷ்டங்களை போக்க சில பரிகாரங்களை செய்ய சொல்கிறார்கள் பெரியவர்கள்.. அந்தவகையில், சிவபெருமானுக்கு ஊமத்தங்காய் தீபம் ஏற்றினால் அற்புத மாற்றங்கள் ஏற்படும் என்கிறார்கள்.
ஊமத்தங்காய் பெரிய இலைகளுடன், காய்களின் வெளிப்பரப்பில், முட்கள் அதிகமாக காணப்படும்.. இந்த செடியின் வேர், இலை, பூக்கள், விதை என எல்லாமே மருத்துவ குணம் கொண்டவை. சித்தபிரம்மையையே நீக்கக்கூடிய இந்த ஊமத்தங்காய் வாத நோய்களை கட்டுப்படுத்தும். நரம்புகளைப் பலப்படுத்தும்.
Spirituality Oomathangai Dheepam Mahashivratri
இலை, காய், விதைகளில் மருத்துவ குணம்
இந்த இலைகளை விளக்கெண்ணை தடவி அடுப்பில் வதக்கி, உடம்பில் வலி, ரணங்கள் உள்ள இடங்களில் கட்டலாம். வலி, வீக்கம்.. மூட்டு வலிகள், மூட்டு வீக்கங்களுக்கும் இந்த இலையில் ஒத்தடம் தரலாம். பெண்களுக்கு பிரசவ நேரத்தில் தரப்படும் மயக்க மருந்துகளில், மூலப்பொருளாகவும், தாய்ப்பால் கட்டிக்கொண்டாலும் இந்த இலையே பயன்படுகிறது.
ஆன்மீகத்திலும் ஊமத்தங்காய்களுக்கு தனி இடம் உண்டு.. ஊமத்தை இலையால் சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்வதால் வீட்டிலுள்ள கஷ்டங்கள் தீரும் என்பது நம்பிக்கையாக உள்ளது.. மேல்பகுதியில் முட்கள் நிறைந்த இந்த ஊமத்தங்காயில் தீபம் ஏற்றினால், வாழ்வில் ஏற்றமும், வளமும் பெருகும்..
நிதி சிக்கலை போக்கும்
கையில் பணமின்றி திணறுபவர்கள், கடன், பணப் பிரச்சனையில் சிக்கியுள்ளவர்கள், இந்த தீபத்தை ஏற்றினால் 3 வாரங்களில் நல்ல மாற்றத்தை காணலாம்.. நாட்டு மருந்து கடைகளில் இந்த காய்கள் கிடைக்கின்றன.
வெள்ளிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில், ஒரு மஞ்சள் துணியில், 1 ரூபாய் நாணயம், ஊமத்தங்காய், ஊமத்தம்பூவை வைத்து, முடிச்சு போட்டு, வீட்டின் நிலைவாசலில் கட்டி தொங்க வைத்துவிட வேண்டும். வீட்டில் தீபம் ஏற்றி ஊதுபத்தி காண்பிக்கும்போது இந்த முடிச்சுக்கும் ஊதுவத்தி காண்பிக்க வேண்டும்.
விநாயகருக்கு ஊமத்தம் பூக்கள்
ஊமத்தம் பூக்களை ஒற்றை எண்ணிக்கையில், விநாயகருக்கு வீட்டில் சூட்டி வரலாம்.. 3 வார திங்கட்கிழமை விநாயகருக்கு ஊமத்தை இலை அர்ச்சனை, ஊமத்தம் பூவைச் சூட்டி, உங்கள் கஷ்டங்கள் தீர வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டாலும், விரைவில் நல்ல மாற்றத்தை காணலாம்.
இன்று சிவராத்திரி என்பதால், ஊமத்தங்காய் பரிகாரம் செய்யலாம். சிவராத்திரியில், நிஷிதா பூஜையின் போது, மகாதேவனை நினைத்து, சிவலிங்கத்தின் மீது ஒரு ஊமத்தங்காயை அர்ப்பணிக்க வேண்டும்.. பிறகு ஸ்ரீ சிவாய நமஸ்துப்யம் மந்திரத்தை உச்சரித்து, அரைமணி நேரம் வழிபாட்டிற்கு பிறகு, அந்த ஊமத்தங்காயை ஒரு துணியில் கட்டி உங்கள் வீட்டில் பாதுகாப்பாக வைத்துவிடலாம். இதனால் வீட்டிலுள்ள வறுமை நீங்கி உங்கள் செல்வமும் மகிழ்ச்சியும் பெருகும்.
கண்திருஷ்டிக்கு விளக்கு
அதேபோல, இந்த ஊமத்தங்காய்களின் காம்புகளை நீக்கி விட்டு, சிறிய துளை போட்டு, அதற்குள்ளிருக்கும் வீதைகளை நீக்கிவிட வேண்டும். பிறகு சிறிது வெண்கடுகு போட்டு, ஒரு சிறிய மண் அகல் விளக்கின் மீது உமத்தங்காய்களை, அதனுள் இலுப்பை எண்ணெய் மட்டுமே ஊற்றி பஞ்சு திரி போட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றிவைத்துவிட்டு சிவபெருமானை வேண்டிக் கொண்டால் போதும். தொடர்ந்து 9 ஞாயிற்றுக்கிழமை இந்த தீபத்தை ஏற்றி வந்தால், கண் திருஷ்டி, வறுமை, நிதி பற்றாக்குறை என அனைத்துமே விலகிவிடும்.
No comments:
Post a Comment