அள்ளி அள்ளி நன்மை தரும் நாவல் பழம்.. மருத்துவ குணமிக்க நாவல் இலை, பட்டை! சர்க்கரை நோயாளி சாப்பிடலாமா
நாவல் பழம் மட்டுமல்ல, நாவல் இலைகள், நாவல் விதைகள், நாவல் பட்டைகள் என அத்தனையும் மருத்துவ குணங்கள் நிறைந்தவை.. நாவல் தரும் நன்மைகள் என்னென்ன? நாவல் பழத்தை யார் யாரெல்லாம் சாப்பிடக்கூடாது? சுருக்கமாக பார்ப்போம்.
நாவல் பழங்களை பொறுத்தவரை, வைட்டமின்C, B, குளுக்கோஸ், புரோட்டீன், மெக்னீசியம், நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து என பல்வேறு சத்துக்களை கொண்டது.. அதிகமான நார்ச்சத்து உள்ளதால், செரிமான கோளாறு, மலச்சிக்கலை தீர்க்கும் அருமையான மருந்து இந்த நாவல் பழமாகும்.
jamun leaves jamun fruits
இந்தியர்களை டிரம்ப் நாடு கடத்தும் நேரத்தில்.. அமெரிக்காவே அஞ்சி நடுங்கும் ஒரு இந்தியர்.. யார் இவர்?
இந்தியர்களை டிரம்ப் நாடு கடத்தும் நேரத்தில்.. அமெரிக்காவே அஞ்சி நடுங்கும் ஒரு இந்தியர்.. யார் இவர்?
நாவல் பழத்தில் பொட்டாசியம் அதிகமாக உள்ளதே அதன் ஸ்பெஷாலிட்டியாகும்.. 100 கிராம் பழத்தில் 55 மில்லிகிராம் பொட்டாசியம் உள்ளதால், உயர் ரத்த அழுத்தம், இதய நோய், பக்கவாதம் போன்ற அபாயங்களை நெருங்கவிடுவதில்லை. தமனிகளை சீராக இயங்க செய்ய இந்த பழம் உதவுகிறது.
நார்ச்சத்துக்கள்: நார்ச்சத்து, நீர்ச்சத்தும் உள்ளதால், உடல் எடையை விரைந்து குறைக்க முடியும். இந்த பழத்தின் ஜூஸ் குடித்துவரும்போது, சிறுநீரக கற்கள் இருந்தாலும் கரைந்து வெளியேறும்.. தினமும் 2 நாவல் பழம் சாப்பிட்டால், மூலநோய் குணமாகும்.,. நினைவுத்திறன் பெருகும். ஈறுகள், பற்கள் உறுதிபெறும்.
நாவல் இலைகளை பொறுத்தவரை, புரதச்சத்து, கொழுப்புச்சத்து, நார்ச்சத்து, சாம்பல் சத்து, பாஸ்பரஸ் , சுண்ணாம்புச்சத்து உள்ளன.. பெண்களின் மலட்டுத்தன்மை குணமாக்குவதற்கு, வைட்டமின் E சத்துக்கள், நாவல் இலையில் உள்ளது. அந்தவகையில் நாவல் இலை சாற்றில், தேன் அல்லது வெண்ணெய் கலந்து சாப்பிடும்போது, மலட்டுத் தன்மை நீங்கும் என்பார்கள். அல்லது 3 நாவல் இலைகளை விழுதாய் அரைத்து, கெட்டித்தயிரில் கலக்கி விடிகாலையில் 3 மாதங்களுக்கு சாப்பிட்டாலும் குழந்தைப் பேறு உண்டாகும் என்பார்கள்.
நுண்கிருமிகள்: நுண்கிருமிகளை போக்கக்கூடிய தன்மை, இந்த இலைகளுக்கு உண்டு. இருமல், சளி, தொண்டை பிரச்சனைகளுக்கு, இந்த இலையே மருந்தாகிறது. வயிற்றுப்போக்கு, வயிற்று பொருமல் இருந்தாலும், நாவல் இலையை இடித்து சாறாக்கி 3 நாள் சாப்பிடுவதால் தீர்வு கிடைக்கும். சீதபேதி, ரத்தபேதி, வயிற்றுக்கடுப்பு, சிறுநீர் எரிச்சல் போன்றவற்றுக்கும் இந்த இலைகளே தீர்வை தருகின்றன.
நாவல் மர பட்டையை நீரில் கொதிக்க வைத்து ஆறவைத்து குடிப்பதால், பெண்களுக்கு அதிக ரத்தப்போக்கு கட்டுக்குள் வரும்.. நாவல் விதைகளை இடித்து தூளாக்கி, நாள்தோறும் 1 கிராம், காலையிலும், மாலையிலும் தண்ணீருடன் கலந்து சாப்பிட்டால் சிறுநீர்ப்போக்கு குறையும்..
சர்க்கரை நோயாளி: ரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க இந்த பழம் உதவுகிறது.. ஆனால், அதிகமாக சாப்பிட்டால், ரத்த சர்க்கரை அளவை குறைக்கக்கூடும். எனவே, இப்பழத்தைவிட, பழத்தின் விதைகளை நன்றாக இடித்து துாளாக்கி, தினமும் ஒரு கிராம் வீதம் காலையிலும், மாலையிலும் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து வந்தாலே நீரிழிவு நோய் குணமாகும்.
நாவல் கொட்டையை தூளாக்கி, அதில், வெந்தயப் பொடி, கடுக்காய் தோல் போன்றவற்றையும் சமபாகம் கலந்து வைத்து கொள்ள வேண்டும். இதில் 1 ஸ்பூன் சுடுநீரில் காலையில் கால் டம்ளர் குடித்து வருவதால் சர்க்கரை கட்டுக்குள் இருக்கும் என்பார்கள். எனவே, நாவல் விதை, பட்டை, இலை எதுவானாலும், டாக்டர்களின் முறையான ஆலோசனையை பெற்று மருந்தாக எடுத்து கொள்ள வேண்டும்.
தவிர்க்கலாம்: ரத்த சர்க்கரை குறைபாடு உள்ளவர்கள் நாவல் பழத்தை சாப்பிடக்கூடாது.. செரிமான பிரச்சனையை நாவல் பழம் போக்கும் என்றாலும், மலச்சிக்கல் உள்ளவர்கள் நாவல் பழத்தை அதிகமாக சாப்பிட கூடாது. சரும பிரச்சனைகள் உள்ளவர்கள், முகப்பரு, கரும்புள்ளி பிரச்சனை இருந்தால், நாவல் பழத்தை தவிர்க்க வேண்டும்.. கர்ப்பிணி பெண்களும் நாவல் பழத்தை அதிகமாக சாப்பிட்டால், பக்க விளைவுகள் வரலாம். எனவே, ஒரு நாளைக்கு அதிகபட்சம் 100 கிராம் நாவல்பழம் மட்டுமே சாப்பிட வேண்டும் என்கிறார்கள்.
No comments:
Post a Comment