jaga flash news

Saturday, 22 February 2025

திரிகோணம்

லக்னத்தின் பொறுப்பு:

லக்னம் எனப்படும் 1 - ம் இடம், முகத்தோற்றம், அழகு, உடல் தோற்றம், அறிவு, சிந்தனை, எண்ணம், தீவிர யோசனை, பிறந்த இடம், அதன் சூழல், ஆயுள், பொதுவாழ்வு, புகழ், மரியாதை பெறுதல், சுயமரியாதை, மானம், கெளரவம், ஜீவனம், பிறருக்காக வேலை செய்தல், அவமதிப்பு உண்டாகுதல், முயற்சிகளின் தன்மை, முயற்சிகளில் சோர்வு, திறமைகளை வெளிக்காட்டுதல், மற்றவர்களால் ஓதுக்கி வைத்தல் போன்ற அனைத்தையுமே லக்னத்தை வைத்தும் லக்னாதிபதி இருக்கும் இடத்தை வைத்தும் தெரிந்துகொள்ளலாம்.




5 - ம் இடத்தின் பொறுப்புகள்

லக்னத்தில் இருந்து எண்ணி ஐந்தாவது ராசியாக வருவது பூர்வ புண்ணிய ஸ்தானம். இதன்மூலம், நமக்குப் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை மற்றும் ஆண் குழந்தையா? பெண் குழந்தையா? என்பதை அறியலாம். குழந்தைகளின் எதிர்காலம், தந்தை செய்த புண்ணியம், முன்னோர்கள் செய்த புண்ணியம், முன்னோர்கள் செய்த பாவம், கல்வி நிலை, அறிவு, புத்திக்கூர்மை, சமயோசித புத்தி, தெளிவான சாஸ்திர ஞானம், வயிறு, எதிர்காலம் பற்றி அறியும் தீர்க்க தரிசனம், மந்திர உபதேசம், குழந்தைகள் மூலம் வருவாய், இசைப் புலமை, பிறரிடம் தயவு காட்டுதல் இவை யாவற்றுக்கும் 5 - ம் இடமே பொறுப்பாகும்.

9 - ம் இடத்தின் பொறுப்புகள்:

லக்னத்தில் இருந்து எண்ணி 9 -வது ராசியாக வருவது பாக்கியஸ்தானம். பாக்கியம் என்றால், நமக்கு அமையும் யோகம், திடீர் அதிர்ஷ்டம், வாழ்வில் ஏற்படும் எதிர்பாராத முன்னேற்றம், திடீர் செல்வம், தான் செய்யும் தருமம், புண்ணிய காரியங்கள், கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்வது, அன்னதானம் செய்வது, தாய் தந்தை அமைவது, நல்ல மனைவி, நல்ல நண்பர்கள், விசுவாசமான வேலைக்காரர்கள், ராஜ விசுவாசம், உயிரைக் கொடுக்கும் தொண்டர்கள், தெய்வத் துணை, மனத்துணிவு, நல்ல குரு அமைவது, புனித யாத்திரை, தந்தை வழி சொத்து, பங்காளி வகையான சொத்துகளை அனுபவிப்பது, யானை, குதிரை, உயர் ரக சொகுசு வாகனம் அமைவது, வேதசாஸ்திர சடங்குகளைக் கடைப்பிடிப்பது, உடன் இருப்பவர்களை சுகமாக வைத்துக்கொள்வது இவை அனைத்துக்கும் 9-ம் இடமே பொறுப்பாகும்.

விதி, மதி, கதி?

இவற்றில் மற்றொரு வகையாகவும் பலன்கள் பார்க்கப்படுகிறது. அதாவது விதி, மதி, கதி என்று கூறும் மூன்றும் ஜோதிட ரீதியாக லக்னம் என்பது விதியாக, நமது தலையெழுத்தாக அமைகிறது. மதி என்பது நமது புத்தியாக 5-ம் இடமாக உள்ளது. கதி என்பது அவற்றால் நாம் அடையும் பலனாக 9-ம் இடம் உள்ளது.  

வாழ்வில் விதி, மதி, கதி நன்கு அமைந்தவர்களுக்குத்தான் சகல வெற்றிகளும் கூடி வருகின்றன. சாதாரணமாக இருப்பவர்கள்கூட மிக பெரிய சாதனை மனிதராக மாறுவது இத்தகைய அமைப்பினால்தான். திரிகோணம் என்னும் இந்த மூன்று இடங்களில் கிரகங்கள் அமைந்தால், அதற்குரிய பலன்கள் எப்படி இருக்கும் எனப் பார்ப்போம். பொதுவாக, ஜோதிட சாஸ்திரத்தில் வளர்பிறைச் சந்திரன், குரு, புதன், சுக்கிரன் ஆகியோர் சுபகிரகங்களாகவும், சூரியன், செவ்வாய் ஆகிய கிரகங்கள் அசுப கிரகங்களாகவும், சனி, ராகு, கேது ஆகியோர் குரூர கிரகங்களாகவும் சொல்லப்பட்டிருக்கின்றன. ஆனால், இதை நாம் அப்படியே எடுத்துக்கொள்ளக் கூடாது. காரணம் ஒவ்வொரு லக்னத்துக்கும் சுப கிரகங்கள், அசுப கிரகங்கள் தனித்தனியாக உள்ளன.

சுப கிரகம் நல்ல பலன்களையும், அசுப கிரகம் கெட்ட பலன்களையும் செய்யும் என்ற விதி இருந்தாலும், 1, 5, 9 - ம் பாவங்களில் உள்ள கிரகங்களைப் பொறுத்து பலன்கள் மாறுபடும்
* 1, 5, 9 -ம் இடங்களில் செவ்வாய் இருந்தால், அரசு வகையில் ஆதாயம், பூமியோகம், முயற்சிக்குத் தகுந்த பலன்கள் கிடைக்கும்

* 1, 5, 9 -ம் இடங்களில் புதன் இருந்தால், தொழிலில் வெற்றி கிடைக்கும். கணக்கு, எழுத்து வேலைகள் மூலம் ஆதாயம் வரும்.

* 1, 5, 9 -ம் இடங்களில் குரு இருந்தால், கோயில், பொதுச் சேவை, வங்கி மூலம் ஆதாயம், பைனான்ஸ், முன்னோர் சொத்துகள் மூலம் சுகமான வாழ்க்கை அமையும் 

* 1, 5, 9 -ம் இடங்களில் சுக்கிரன் இருந்தால், கலைகளில் வருமானம், புகழ், பெண்கள் மூலம் ஆதாயம், திடீர் லாட்டரி யோகம், எதிர்பாராத அதிர்ஷ்டம், பிறரது பணம் வந்து உயர்வு தரும்.

* 1, 5 , 9 -ம் இடங்களில் சனி இருந்தால் வாழ்க்கையே பலவிதமான போராட்டங்கள் நிறைந்ததாக இருக்கும். எதுவும் அவ்வளவு எளிதாக அமையாது. நினைப்பது எதுவும் நடக்காமல் போனாலும், நடப்பது யாவும் நன்மைக்கே அமையும்.

* 1, 5 ,9 -ம் இடங்களில், ராகு, கேது இருந்தால் திடீரென முன்னேற்றம் அடைவார்கள்" என்றார்

No comments:

Post a Comment