பணபர ஸ்தானங்கள்
பணபர இல்லங்கள் (ஸ்தானங்கள்) என்பது ஒரு ஜாதக கட்டத்தில் தன ஸ்தானமான 2-ஆம் இடமும், பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் இடமும், ஆயுள் ஸ்தானமான எட்டாம் இடமும் மற்றும் லாப ஸ்தானமான 11-ஆம் இடமும் ஆகும்.
பணபர ஸ்தானங்கள் (2,5,8,11 ) என்பது கேந்திர ஸ்தானங்களுக்கு (1,4,7,10) அடுத்தடுத்த ஸ்தானங்கள் ஆகும்.
"காசேதான் கடவுளப்பா அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா!
கைக்கு கை மாறும் பணமே உன்னை கைப்பற்ற நினைக்குது மனமே !
ஒருவர் சாதகம் பார்க்க வரும்பொழுது கூட "நான் எப்ப பணக்காரன் ஆவேன்?" என கேள்வி கேட்பவர்களே பெரும்பாலனவர்கள் உள்ளனர்.
"திரை கடலோடியும் திரவியம் தேடு " என்பது தமிழர்களின் வாழ்வியல் இலட்சியம் அகும்.
பணபர ஸ்தானம் என்பது பணம் சேர்க்கும் யுக்தி அல்லது தந்திரம் ஆகும். மற்றவர் கைகளிலும் மற்றும் பைகளிலும் உள்ள பணத்தினை தனது பைகளுக்கும் மற்றும் கைகளுக்கும் வர வைக்கும் யோகம் ஆகும்.
ஒருவரால் சேர்க்கப்படும் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் அனைத்தையும் சாதக கட்டத்தில் பணபர ஸ்தானமான எந்த சாதக கட்டத்தில் அடங்கும் என்பதனை இப்பதிவில் விரிவாக காண்போம்.
இரண்டாம் இடம்
ஒருவன் தனது கடின உடல் உழைப்பால் சேர்க்கப்படும் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் அனைத்தையும் முதல் பணபர ஸ்தானமான அதாவது தன ஸ்தானமான இரண்டாம் இடத்தில் அடங்கும்.
ஒருவர் எந்த விதமான அடிப்படை இன்றி தனது உடல் உழைப்பையே மூலதனமாக கொண்டு சேர்க்கும் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் அனைத்தையும் இவ்வகையில் அடங்கும்.
ஐந்தாம் இடம்
ஒருவன் தனது புத்தியாலும் மற்றும் பூர்வீக வழியிலும் சேர்க்கப்படும் அசையும் மற்றும் அசையா சொத்துகள் அனைத்தும் இரண்டாம் பணபர ஸ்தானமான அதாவது பூர்வ புண்ணிய ஸ்தானம் எனப்படும் ஐந்தாம் இடத்தில் அடங்கும்.
ஒருவன் தான் கற்ற கல்வியாலோ அல்லது பெற்ற வித்தையாலோ சேர்க்கப்படும் பணம் இந்த ஸ்தானத்தில் சேரும்.
"கத்தியை தீட்டாதே புத்தியை தீட்டு " என்ற பாடல் வரிப்படி தனது புத்தி மற்றும் கற்பனை உணர்வு மற்றும் இராஜதந்திரம் முதலிய வகைகளில் சேர்க்கப்படும் பணம் இந்த வகைகளில் அடங்கும்.
எட்டாம் இடம்
ஒருவருக்கு மறைமுக வழிகளிலோ அல்லது எதிர்பாராத அதிர்ஷ்டம் மற்றும் வெளிநாடு சென்று பொருள் ஈட்டல் அனைத்தும் மூன்றாம் பணபர ஸ்தானமான ஆயுள் ஸ்தானம் என்று அழைக்கப்படும் எட்டாம் இடத்தில் அடங்கும்.
அதாவது ஒருவருக்கு லாட்டரி, ரேஸ், கமிஷன் போன்ற எதிர்பாராத அதிர்ஷ்டம் மூலமாகவும், வெளிநாடு சென்று பொருள் ஈட்டல் மற்றும் மனைவி வழியாக வந்து சேரும் செல்வம் ... இது போன்ற வகைகளில் சேர்க்கப்படும் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் இவ்வகையில் அடங்கும்.
பதினொன்றாம் இடம்
ஒருவர் தனது தொழில் ஸ்தானமான பத்தாமிடத்திற்கு ஏற்ற வகையில் மேற்கண்ட தொழில் மூலம் ஒருவர் அடையும் லாபத்தின் வழிநின்று சேர்க்கப்படும் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் அனைத்தையும் இவ்வகையில் அடங்கும்.
ஒருவர் தனது சாதக கட்டத்தில் தொழில் ஸ்தானமான பத்தாம் இடத்திற்கு ஏற்ப கர்ம வினைப் படி தொழில் செய்து லாபம் சேர்ப்பது ஆகும்.
No comments:
Post a Comment