jaga flash news

Saturday 2 January 2021

காளானில் உள்ள மருத்துவப் பயன்கள்!!

காளானில் உள்ள மருத்துவப் பயன்கள்!! 

இன்று பலரும் காளானைப் பயன்படுத்தி பலவகையான சுவையுடைய உணவுகளைத் தயார் செய்கின்றனர். ஆனால், இதைப் பயன்படுத்துவோருக்கு இதன் மருத்துவப் பயன்கள் பற்றி தெரிவதில்லை. காளானில் அதிகளவு இரும்புச்சத்து, துத்தநாகச்சத்து, காப்பர், வைட்டமின் கே, சி, டி, பி கனிமச்சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடென்டுகள், பொட்டாசியம் போன்றவை நிறைந்துள்ளது.

👉 காளானில் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட வகைகள் உள்ளது. ஆனால், இவை அனைத்துமே சாப்பிடக்கூடியது அல்ல. ஏனெனில் அதில் பலவகை காளான்கள் விஷத்தன்மையும் கொண்டவை. இப்போது காளான்களில் உள்ள மருத்துவக் குணங்களைப் பற்றி இங்கு காண்போம்.

காளானில் உள்ள நன்மைகள்.:
👉 காளானில் குறைந்த அளவு சோடியம் மற்றும் அதிகளவு பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளதால் இரத்த அழுத்தம் மற்றும் இரத்தத்தில் உள்ள கெட்டக் கொழுப்பைக் கட்டுப்படுத்தி, இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

👉 காளானில் உள்ள பாலிசாக்கரைடு, பலவகை நோய்களைத் தடுத்து ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது. மேலும் காளானில் உள்ள லென்டிசின், (Lentysine), எரிட்டாடெனின் (Eeritadenin)எனும் வேதிப்பொருட்கள், இரத்தத்தில் கலந்துள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து, இரத்தத்தை சுத்தமாக்கி, இதயத்தின் செயல்பாட்டை சீராக்க உதவுகிறது.

👉 தினந்தோறும் காளான் சூப் அருந்தி வந்தால் பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்றுநோய் தடுக்கப்படுவதாக காளான் பற்றிய சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர்.

👉 காளானில் ஆன்டி-ஆக்ஸிடென்டுகள் அதிகம் உள்ளதால், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

👉 பட்டாணி, பால், முட்டை, மீன், கோழி போன்ற உணவுப்பொருட்களைக் காட்டிலும் காளானிலேயே அதிகம் புரதச்சத்து உள்ளது. சராசரியாக 100 கிராம் காளானில் 35 சதவீதம் அளவுக்கு புரதச்சத்து உள்ளது.

👉 காளான் சாப்பிடுவதால், ஆஸ்துமா போன்ற சுவாசக்கோளாறு பிரச்சனைகளைத் தடுப்பதுடன், உடலில் ஏற்படும் காயங்களை எளிதில் குணமாக்கலாம்.

👉 நார்ச்சத்து காளானில் அதிகளவு உள்ளது. எனவே காளானை தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால், அது சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்க பெரிதும் உதவும்.

👉 மலச்சிக்கல், வயிற்றுப்புண், வாய்ப்புண் போன்றப் பிரச்சனைகளை குணமாக்க காளான், முட்டைகோஸ், பச்சைப் பட்டாணி ஆகியவற்றைச் சேர்த்து சு+ப் வைத்து சாப்பிடலாம்.

காளான் யாரெல்லாம் சாப்பிடக் கூடாது எனத் தெரியுமா.:

👉 கீல்வாதம் பிரச்சனை உள்ளவர்கள் காளானை அடிக்கடி உணவில் சேர்த்துச் சாப்பிடக் கூடாது.

👉 அதேபோல் காளான் உணவுகளை நன்றாக வேகவைத்து சாப்பிட வேண்டும். பச்சையாக சாப்பிடுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

👉 காளான் தாய்ப்பாலை வற்ற வைக்கும் தன்மை கொண்டதால், பாலு}ட்டும் தாய்மார்கள் காளான் சாப்பிடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

No comments:

Post a Comment