jaga flash news

Friday 15 May 2015

கிணறுபோர்பூஜை

ஒரு கிணறு வெட்டும் போதோ அல்லது போர் போடும்போதோ நாம் பூஜை முடித்து வேலை ஆரம்பம் செய்யும் போது கணிக்கும் லக்னத்துக்கு சனி மூன்றிலும், சந்திரன் ஏழிலும், சூரியன் ஆறிலும், செவ்வாய் பதினொன்ரிலும், எட்டில் ராகு அல்லது கேது பகையின்றி இருந்தால் நீண்ட காலத்துக்கு நீர் வற்றாமல் இருக்கும்! புத்திர சம்பத்து உண்டாகும்!
ஒரு கிணறு வெட்டும் போதோ அல்லது போர் போடும்போதோ நாம் பூஜை முடித்து வேலை ஆரம்பம் செய்யும் போது கணிக்கும் லக்னத்துக்கு செவ்வாய் மூன்றிலும், சுக்கிரன் அஸ்தங்கமாயும், சூரியன் ஆறிலும், சனி பதினொன்றிலும், ஆறு, எட்டு, பனிரெண்டில் சுபர் நிற்க்கும் காலங்களில் ஜலசய நிர்மானம் செய்ய எஜமானனுக்கு ஆகாது! செய்யும் காரியமும் சித்திக்காது!
ஒரு கிணறு வெட்டும் போதோ அல்லது போர் போடும்போதோ நாம் பூஜை முடித்து வேலை ஆரம்பம் செய்யும் போது உள்ள லக்னத்துக்கு 1,4,7,10,12-ல் சந்திரன் இருந்தாலும்,லக்னத்தில் குரு,சுக்கிரன்,புதன்,இவர்கள் இருந்தாலும் நீர் தித்திப்பாகவும் மணமாகவும் இருக்கும்

No comments:

Post a Comment