jaga flash news

Sunday 17 May 2015

பாலாரிஷ்ட தோஷம் என்றால் என்ன? அதன் பாதிப்பு என்ன ?

பாலாரிஷ்ட தோஷம் என்றால் என்ன? அதன் பாதிப்பு என்ன ?
==================================
அன்பர் ஒருவர் இதனை பற்றி கேட்டிருந்தார். அங்கு commentஇல் பதிவதைவிட இங்கு postஇல் பதிவது பலரிற்கு பயன்படும் என்று நினைக்கிறேன்.
குழந்தைகளின் பால்ய வயதில் ஏற்படும் தோஷம் பாலாரிஷ்ட தோஷம். ஜாதகத்தில் பாவக்கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை ஏற்படும் போது இத் தோஷம் ஏற்படும்.
முன்ஜென்ம பாப கர்மாவினால் பிறக்கும் குழந்தைகள், சமூகத்தில் வெறுக்கத்தக்கவர்களாக வளருவார்கள் அல்லது சிறு வயதிலேயே இறந்து விடுவார்கள். இதனைத் தான் பாலாரிஷ்ட தோஷம் என்று சொல்கிறார்கள்.
குழந்தை பிறந்தது முதல் 4 வயது வரை தாயினால் செய்யப்பட்ட பாபத்தினாலும், 4 வயதிற்கு மெல் 8 வயது வரை தந்தையினால் செய்யப்பட்ட பாவத்தினாலும், 8 வயதிற்கு மேல் 12 வயதுவரை ஜாதகர் தான் முற்பிறவியில் செய்த பாவத்தினாலும் பாதிப்பிற்கு உள்ளாக நேரிடும் என கூறப்படுகிறது.
எனவே, பொதுவாக பாலாரிஷ்ட தோஷம், ஒரு குழந்தைக்கு 12 வயது வரை என்று சொல்லப்படுவதுண்டு. இது சிலருக்கு மாறுபடும். ஒவ்வொரு ஜாதகத்திற்கும், அதற்கான கிரகநிலைகள் மாறுபடும். இதனை குழந்தையின் ஜனன கால ஜாதகத்தைப்பார்ப்பதை விட உங்கள் பூர்வ புண்ணியம் கெட்டுள்ளதா என்று பாருங்கள். அது கெட்டிருந்தால், குழந்தையின் ஆயுள் கேள்விக்குறியாகிவிடும்.
பூர்வ புண்ணியம் கடுமையாகப் பாதிப்படையும் போது குழந்தை பாக்கியம் கூட சிலருக்குக் கிடைக்காது. அப்படியே குழந்தை பிறந்தாலும் நிலைக்காது. இதனை நாம் கண் கூடாக சில வீடுகளில் பார்க்கலாம்.
ஜாதகத்தின்படி பொது அமைப்பு
______________________________________
ஜனன ஜாதகத்தின்படி, ராசி சந்திப்பில் பிறக்கும் குழந்தைகள், தீர்க்காயுள் பெறுவது கஷ்டம் பிரசவ நேரத்தில் தாய்க்கு கூட துன்பம் உண்டாகலாம். இதையும் மீறி பிழைக்கும் குழந்தைகள் வாழ்வில் மிக உயரிய நிலையை அடைவார்கள். நட்சத்திர சந்தி, திதி சந்தியில் பிறக்கும் குழந்தைகளுக்கும். இதே பிரச்சனை தான் பயங்கரமான சூறாவளிக் காற்று, இடி ஓசையுடன் பிறக்கும் குழந்தைகளுக்கும் ஆயுள் குறைவு. இதை மீறி பிழைக்கும் குழந்தைக்கு ராஜயோகம் தான்.
குழந்தையின் ஜனன காலத்தில் லக்னத்திலிருந்து 6, 8, 12 ஆம் இடங்களில் குறி நின்றாலும் சூரியன், சந்திரன் நின்றாலும் 8 ஆம் இடமான ஆயுள் ஸ்தானத்தில், ஆயுள் காரகளான சனி நின்றாலும் பாலாரிஷ்ட தோஷமாகும். இந்தக் குழந்தைகளுக்கு பிறந்ததிலிருந்து இரண்டு ஆண்டுகள் வரை நோய் நொடிகள் தொடர்ந்து கொண்டேயிருக்கும்.
லக்னாதிபதியும், சந்திரன் நின்ற ஸ்தானதிபதியும் அஸ்தமனம் அடைந்திருந்து, லக்னத்திலிருந்து துர்ஸ்தானமான மேற்கூறிய 6, 8, 12 ஆம் இடங்களில் தங்கினால் ஜாதகத்திற்கு பாலாரிஷ்ட தோஷமாகும்.
சந்திரன் நின்ற ராசியில் இருந்து 6 ஆம் இடத்தில் சனியும், கேதுவும் சேர்ந்து இருக்க 8 ஆம் இடத்தில் சூரியன், செவ்வாய் நின்றிருந்தாலும் பாலாரிஷ்ட தோஷம்தான்.
சனி நவாம்சத்தில், செவ்வாய் வீட்டில் இருக்கும் நிலையில், ராசியில் சனி இருக்கும் வீட்டை அதாவது சனியை, செவ்வாய் மற்றும் ராகு பார்த்தாலும் பாலாரிஷ்டம், லக்கினாதிபதி 5, 9 ஆம் அதிபதிகள் அம்சத்தில் உள்ள லக்னாதிபதிகள் 6, 8 இல் இருந்து பாபர்களுடன் சேர்ந்து இருப்பதும் பாலாரிஷ்ட தோஷமாகும்.
விருச்சிக லக்னத்தில் பிறந்த ஒரு குழந்தையின் ஜாதகத்தில் பாவ கிரகங்கள்யாவும், ரிஷப ராசிக்குள் இருந்து அதாவது ரிஷபம் முதல் துலாத்திற்குள் இருந் தாலும் பாலாரிஷ்ட தோஷம் தான். பூர்வ புண்ணியம் ஸ்தானம், புத்திர ஸ்தானமுமான 5ம் வீட்டில் சனி, ராகு அல்லது சனி, கேது இருந்தால் அரிஷ்டம் ஏற்படும். லக்னத்தில் செவ்வாய் அமர்ந்து லக்னாதிபதி பலவீனமாகி குரு பார்வையும் கிட்டவில்லை என்றால் பாலாரிஷ்டம் ஏற்படும். 4 ஆம் இடத்தில் ராகு, கேது தனியாக இருப்பது நல்ல அமைப்பல்ல

No comments:

Post a Comment