jaga flash news

Sunday 31 May 2015

திருமணம் தாமதமாவதற்கு ஜாதகம் காரணமா?

திருமணம் தாமதமாவதற்கு ஜாதகம் காரணமா?
திருமணம் தாமதமாவதற்கு ஜாதகம் காரணமா?
திருமணத்திற்கு வரன் பார்க்கும் படலம் வருடக்கணக்கில் நீடிப்பதற்கு என்ன காரணம்?. நாம் எதிர்பார்ப்பது கிடைக்கவில்லை என்பது தான். எதிர்பார்ப்பு என்பது ஒரு குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் மாறு படலாம்.
படித்த வரனாக வேண்டும் என்பது பையனுடைய கனவாக இருக்கலாம். ஆனால் நகை அதிகம் போட்டு வரவேண்டும் என்பது அன்னையின் ஆசையாக இருக்கலாம். பெண் வீட்டுக்காரர்கள் அடக்கமாக இருக்க வேண்டும் என்று அப்பா நினைக்கலாம். இப்படி ஒவ்வொருவரும் ஒரு எதிர்பார்ப்புடன் தான் திருமணத்திற்கு வரன் தேடுகிறார்கள்.
இதற்கு பொதுவான காரணமாக ஜாதகம் சரியில்லை என்ற சொல்லை முன் வைக்கின்றனர். நாங்கள் பார்த்த இடத்தில் ஜாதகப் பொருத்தம் சரியாக உள்ளது என்று பெண் வீட்டில் கூறினால், இல்லை இல்லை எங்கள் ஜோசியர் செய்யக்கூடாது என்று கூறிவிட்டார் என்று ஜோதிடர் மீது பழியைப் போட்டுவிடுகின்றனர். ஜாதகப் பொருத்தம் மட்டும் பார்த்தால் நிச்சயமாக யாருக்கும் திருமணம் தாமதமாகாது. அதையும் தாண்டிய எதிர்பார்ப்புகள் தான் தாமதத்திற்கு காரணம். அந்த எதிர்பார்ப்புகள் எப்படி அமைகின்றன? யாரால் இந்தத் தாமதம்?
இந்தக் கட்டுரையின் நோக்கம் யாரையும் குறைசொல்லவது அல்ல. நம்முடைய சூழ்நிலையைப் புரிந்து கொள்வது தான். நம்மையும் மீறி சில செயல்கள் நடைபெறுகின்றன. நம் நம்பிக்கைக்குரிய நபர்கள் நமக்கு எதிராக செயல்படுவதும், நமக்கு ஆகாது என்று நினைப்பவர்கள் உண்மையில் நல்வர்களாகவும் இருக்க வாய்ப்புண்டு. நம்மால் உறுதியாக முடிவெடுக்க முடியாத நிலையில் ஜோதிடம் கைகொடுக்கிறது. உண்மையைப் புரிய வைக்கிறது. இது அனுபவத்தில் கண்ட உண்மை.
நன்கு படித்த வேலையில் உள்ள ஒரு ஜாதகருக்கு ஐந்து வருடத்திற்கு மேலாக வரன் தேடிக் கொண்டிருக்கிறார்கள். கிட்டத்தட்ட ஆயிரம் ஜாதகங்களுக்கு மேல் பொருத்தம் பார்த்தாகிவிட்டது. இன்னும் அமையவில்லை. காரணம் என்ன என்று கேட்டால் களத்திர தோச ஜாதகம் அதனால்
அமையவில்லை என்று பதில் வருகிறதாம். இதற்கான காரணம் என்ன? இதனை எப்படி சரிசெய்வது என்று அந்த ஜாதகர் கேட்டிருந்தார். அந்த ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்ததில் தாமதத்திருமண நிலைதான் இருந்தது. ஆனால் அதற்கான காரணம் என்ன என்பது தான் ஜாதகரின் கேள்வி.
ஜாதகத்தில் உள்ள நிலைகள்.
கேமத்துருவ யோகம். – சந்திரன் இருக்கும் இராசிக்கு முன்னும் பின்னும் கிரகங்கள் இல்லாத நிலை. இந்த நிலையில் உள்ளவர்கள் எளிதில் எதிலும் ஏமாறும் தன்மை உடையவர்கள்.
ஏழாம் இடத்தை பாதிக்கும் கிரகங்கள். – செவ்வாய், புதன், சந்திரன்.
செவ்வாய் – சகோதர சகோதரிகள்.
புதன் – கல்வி, மாமன்மார்க்ள.
சந்திரன் – சுய புத்தி – தாய்.
மேலே உள்ள நிலைகளை ஒன்று சேர்த்து பார்த்த போது ஒரு விடை கிடைத்தது. தாய் மற்றும் தாய் வழி மாமன்கள், சகோதர சகோதரிகள் மற்றும் அவரது கணவன் மற்றும் குடும்பம்., ஜாதகரின் சுய முடிவு. இந்த மூன்று பேரும் தான் திருமணம் தாமதமாவதற்கு காரணம். எப்படி இந்தக் காரணம் காரியமாக மாறுகிறது என்பதைப் பார்ப்போம்.
இந்த ஜாதகருக்கு வரும் வரன்களில் சரி பாதி பொருத்தம் உள்ள ஜாதகங்கள் தான் வருகிறது. இதில் தன் படிப்புக்கேற்ற வரன் இதுஇல்லை என்று ஜாதகர் சிலவற்றை மறுத்துள்ளார். பெண் அழகாக இல்லை என்று சில வரன்களை தாய் மறுத்துள்ளார். தனது மகளை திருமணம் செய்து கொள்ளச் சொல்லி மூத்த சகோதரி வற்புறுத்துகிறார். இப்படி இந்த சூழ்நிலைகள் தான் ஜாதகரின் திருமணத்தை தாமதப்படுத்திக் கொண்டு வருகின்றன.
ஜாதகருக்கு வாழ்க்கையில் நடந்து கொண்டிருப்பதைத் தான் ஜோதிடம் விளக்கியுள்ளது என்று விளக்கிய பின்பு தான் ஜாதகருக்கு தெளிவு பிறந்தது. இந்தப் பிரச்சனையை தீர்ப்பதற்கு என்ன வழி என்று கேட்டார்.
ஜாதகருடைய திருமண வாழ்க்கையில் மாமனார் குடும்பத்துடன் இணக்கமான சூழ்நிலையில் இருக்க முடியாது. இதனால் திருமணவாழ்வில் சங்கடங்கள் குழப்பங்கள் ஏற்படும். இதனை மாற்ற முடியாது. அனுபவித்துத்தான் ஆகவேண்டும். இது அவருடைய விதி.
ஜாதகப் பொருத்தம் சரியாக இருந்தால் சகோதிரியின் மகளை திருமணம் செய்துகொள்வது சரியான தீர்வாக இருக்கும். குடும்பத்தில் வரும் பிரச்சனைகளை முடிந்தளவு குறைப்பதற்கு இது சரியான முடிவாக இருக்கலாம் என்று கூறப்பட்டது.
ஜோதிட ரீதியாக தாமதத் திருமணத்திற்கான விளக்கமும் விடையும் கொடுத்துவிட்டோம். இதற்கான வேறு பல தீர்வுகளும் இருக்கலாம். அல்லது வேத ஜோதிடத்தின் தீர்வுகளில் திருத்தங்கள் இருக்கலாம். எதுவாக இருந்தாலும் உங்களின் கருத்தக்களை எதிர்பார்க்கிறோம். 

No comments:

Post a Comment