jaga flash news

Friday 15 May 2015

பிரஹத் ஜாதகம்

“பிரஹத் ஜாதகத்” தின் படி, மேஷ இராசி முதல் மீன இராசி வரை காலபுருஷ தத்துவத்தின்படி ஒவ்வொரு இராசிக்கும், உடலின் ஒவ்வொரு பாகம் ஒதுக்கப்பட்டு உள்ளது. அவை முறையே தலை, முகம், மார்பு, இதயம், வயிறு, இடுப்பு, அடி வயிறு, ரகசிய உறுப்புக்கள், தொடைகள், முழங்கால், பட்டக்ஸ் மற்றும் பாதம் ஆகும்.
உதாரணமாக, சந்திரன் மேஷத்தில் இருக்கும் போது மிக்க அவசியம் ஏற்பட்டாலன்றி, மூளை சம்பந்தமான அறுவை சிகிச்சை செய்யக் கூடாது. அதுவே கோசாரச் சந்திரன், ஜனனச் சந்திரனைச் சந்திக்கும் போது, அபாயத்தின் அளவு அதிகமானதாக இருக்கும். இதே போன்று அந்தந்த பாகத்தை குறிக்கும் இராசிகளில் சந்திரன் இருக்க, அப் பாகத்தில் அறுவை சிகிச்சை செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

உடலின்பாகம் நட்சத்திரங்கள் கிழமை
தலை கார்த்திகை, விசாகம்,
அனுஷம்,பரணி. சனிக்கிழமை
கண்கள் ரோஹிணி, சுவாதி,
கேட்டை, அஸ்வினி. வெள்ளிக்கிழமை
கழுத்து மிருகசிரீடம், சித்திரை,
மூலம், ரேவதி. வியாழக்கிழமை
தோள்ப்பட்டை திருவாதிரை, ஹஸ்தம், பூராடம், உத்திரட்டாதி புதன் கிழமை
கைகள் புனர்பூசம்,உத்திரம்,
உத்திராடம்,பூரட்டாதி, செவ்வாய்கிழமை
வயிறு பூசம், பூரம், அபிஜித்,
சதயம். திங்கள் கிழமை
பாதம் ஆயில்யம், மகம்,
திருவோணம், அவிட்டம்- ஞாயிற்றுக்கிழமை
மேற்கண்ட அட்டவணைப்படி உள்ள நட்சத்திரத்தன்று, ஜன்ம நட்சத்திரம் வந்தால் அந்த நாளில், அந்த உடல் பாகத்தில் ஆப்ரேஷன் செய்யக் கூடாது.
அதே போன்று, உடலின் பாகத்திற்கு உரிய நட்சத்திரம், ஜாதகரின் ஜன்ம நட்சத்திரத்தைத் தொடும் அந்த நாளில் அறுவை சிகிச்சை செய்வது ஆபத்தைத் தரும். உதாரணமாக, ஜாதகரின் ஜன்ம நட்சத்திரம் பூசம் ஆனால், திங்கள் கிழமையன்று வயிற்றுப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அன்று செய்யும் ஆப்ரேஷன் வெற்றிகரமாக முடியாது.
இலக்னம் , இராசி மற்றும் நட்சத்திர சந்திகளில், அறுவை சிகிச்சை செய்யக் கூடிய இலக்ன நேரம் அமையக்கூடாது. ( கடகம், விருச்சிகம் மற்றும் மீனம் ஆகிய இராசி சந்திகள், ரிக்ஷசந்தி எனப்படும். ( ஆயில்யம், கேட்டை மற்றும் ரேவதி ஆகிய நட்சத்திரத்தின் 4 ஆம் பாதம் ரிக்ஷசந்தி ஆகும். ) இந்த நேரத்தில் பிறந்த குழந்தை உயிர் இழக்கும். ஆனால் இலக்னத்துக்கு சுபர் தொடர்பு இருக்கப் பிழைத்துக் கொள்ளும்.
அடுத்து கண்டாந்த நேரத்திலும் பிரசவத்தை வைத்துக் கொள்ளக் கூடாது. ( நீர் இராசியின் கடைசி 5° யும், நெருப்பு இராசியின் முதல் 5° யும் கண்டாந்தமாகும். கண்டாந்த காலத்தில் ஆப்ரேஷன் செய்வதும் ஆபத்தாகும்.
இலக்ன சந்தி, இராசி சந்தி மற்றும் நட்சத்திர சந்தி ஆகிய காலங்களில் பிரசவத்தை வைத்துக் கொள்ளக் கூடாது. அதுவும் குரு நீசமாக அல்லது செவ்வாயின் இராசியில் அவர் இடம் பெற்றிருக்கக் கூடாது – என “சர்வார்த்த சிந்தாமணி” குறிப்பிடுகிறது.

No comments:

Post a Comment