jaga flash news

Wednesday, 20 May 2015

இந்த உலகம் எப்படி உண்டானது


இந்த உலகம் எப்படி உண்டானது என்ற கேள்விக்கு மதங்கள் ரொம்ப காலமாக “இறைவன் என்ற ஒரு சக்தியால் படைக்கப் பட்டது” என்று பதில் சொல்லி வந்தன.

விஞ்ஞானம் வளர வளர தியரி ஆஃப் கிரியேசன் என்பது பின் தள்ளப் பட்டு தியரி ஆஃப் எவல்யூஷன் முன்னிலை பெற்றது. இன் பேக்ட், பிக் பேங் என்ற பெருவெடிப்பு நிகழ்ந்த முதல் மூன்று வினாடிகளுக்கு பிறகு துவங்கி, இப்போது இதை நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் இந்த நிமிடம் வரை என்ன நிகழ்ந்தது? எப்படி நிகழ்ந்தது? என்பதற்கு விஞ்ஞானம் துல்லியமான விளக்கங்கள் வைத்திருக்கிறது.

ஆனால், ஏன் இந்த பிரபஞ்சம் தோன்ற வேண்டும் என்பதற்கும், பிக்பேங்-கிற்கு முன்னாள் என்ன என்பதற்கும் வின்ஞானத்திடம் தற்பொழுது விடை இல்லை.

சரி. சுமார் பதினான்கு பில்லியன் வருடங்களுக்கு முன் நிகழ்ந்த பிக்பேங்-கிற்கு முன்னாள் என்ன என்ற கேள்விக்கு லாஜிகல் ரீசனிங்கில் “சிவம்” என்று ஒரு விடை வருகிறது.

இந்த சிவம் என்பது பூரணம், பேராற்றல், பேரறிவு என்ற மூன்று குணங்கள் கொண்ட ஒரு கருமை நிற பாய்ம(all penetrable fluid like substance) பொருள். அது தனது அளப்பரிய அழுத்தம் என்னும் ஆற்றலால் எல்லையற்ற தனது வடிவத்தின் ஒரு உத்தேச மையத்தை நெருக்கிக் கொண்டே இருக்கிறது. அதன் விளைவு...

சாதாரணமாக உலகின் மிகச் சிறிய பொருள் அணு என்பது வரை தெரியும். கொஞ்சம் விபரம் அறிந்தோர்களுக்கு அணுவின் உட்பொருள்களான, புரோட்டான், எலக்ட்ரான், நியூக்ளியஸ் என்பவை தெரியும்.

மனிதன் அறிந்த மிகச் சிறிய அலகு (கி.மீ, செ.மீ, மி.மீ போன்ற நீளம் குறித்த அலகு) எது என்பது தெரியுமா?அது "பிளான்க் டிஸ்டன்ஸ்". குவாண்டம் பிசிக்சில் பயன்படுவது. In physics, the Planck length, denoted ℓP, is a unit of length, equal to 1.616199(97)×10−35 metres.

சிறிய அலகுகள் நமது இலக்கியங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. கம்பன் ஓரிடத்தில் "அணுவை சதகூறிட்ட கோணிலும் உளான்" என்கிறார். அவர் சொல்லும் அணுவும, நமது அணுவும ஒன்றா தெரியவில்லை.

ஆனால், நமது சித்தர்கள் "பரமாணு" என்று ஒரு விஷயம் சொல்கிறார்கள். அது எத்தனை சிறியது? ஒரு பசுவின் ரோமத்தை எடுத்து அதன் கனத்தின் அளவு குறுக்கில் ஒரு துண்டு வெட்டி அந்த துண்டை நூறு துண்டுகளாக்கி அதிலிருந்து ஒன்றை எடுத்து பின் அதை ஒரு லட்சம் துண்டுகளாக ஆக்கினால் அதில் கிடைக்கும் ஒரு துண்டின் நீளமே ஒரு பரமாணுவின் நீளம்.

இவ்வளவு சிறிய அளவை யாரும் அளந்து சரி பார்க்க முடியாது.
smile emoticon
எளிய விளக்கம் என்னவென்றால், அதனிலும் சிறிய ஒரு அளவு கிடையாது. அந்த அளவுக்கு சிறியதான ஒரு விஷயம் இந்த பரமாணு.

இது எப்படி தோன்றுகிறது? கல்பகோடி ஆண்டுகளாய் தனது பேரழுத்தத்தால் தன்னை தானே நெருக்கிக் கொண்டிருந்த சிவம் ஒரு தினத்தில் தனது மையத்தில் "மடித்துக்" கொண்டது. (நமக்கெல்லாம் இடுப்பில் சுளுக்கிக் கொள்கிறது அல்லவா? அது போல).

இரு பரிமாணத்தில் ஒரு பொருளின் மீது 360 டிகிரியில் விசையை செலுத்தலாம். இது பரிமாணம் அற்ற வெட்டவெளியில் தோன்றிய மடிப்பு. அதன் சகல பக்கங்களிலும் மீண்டும் சிவத்தின் அழுத்தம் செயல்பட அந்த மடிப்பு சுழல ஆரம்பிக்கிறது. சுற்றிலும் அழுத்தத்தால் சூழப்பட்டு நெருக்கப்படும் மடிப்பு அளவில் சுருங்கிக் கொண்டே வருகிறது.

ஒரு சமயத்தில் அது முற்றிலும் கரைந்து சிவம் மட்டுமே மிஞ்ச வேண்டும். ஆனாலும் மிக மிக மிக சுருங்கி அதற்கு மேல் சுருங்க இயலாது என்ற நுண்ணிய நிலை வரும் போது ஒரு வினோதமான விஷயம் அதை தடை செய்கிறது.

அது அந்த மடிப்பின் சுழற்சிக்குள் சிறைப் பட்ட சிவம். இது எப்படி என்றால் காற்று ஊதப்பட்ட ஒரு பலூனை கற்பனை செய்யுங்கள். வெளியிலும் காற்று. பலூனுக்கு உள்ளேயும் காற்று. இரண்டையும் பிரிப்பது ஒரு மெல்லிய ரப்பர் படலம். அது போல் வெளியிலும் சிவம். உள்ளிலும் சிவம். இடையில் ஒரு சுழல் இயக்கம். அந்த இயக்கம் ஒரு பொருளா என்றால் இல்லை. அது வெறும் இயக்கம் மட்டுமே. இதை புரிந்து கொள்ள கடலில் தோன்றும் அலைகளை பாருங்கள். கடலலை என்பது ஒரு தனிப்பட்ட பொருளல்ல. அது கடல் நீரின் ஒரு இயக்க நிலை

அப்படி உள்ளுக்குள் சிவத்தை சிறை வைத்திருக்கும் ஒரு நுண்ணிய குறுகிய தற்சுழல் இயக்கம் பரமாணு என்றும் வேதான் என்றும், விண் என்றும் அறியப்படுகிறது.

ஒவ்வொரு வேதான் என்னும் தற்சுழல் இயக்கமும் தனது இருப்பிடத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட எல்லை வரை ஒரு விளைவை ஏற்படுத்துகிறது.

அது என்னவென்றால், தெருவில் கத்தி சாணை பிடிப்பதை எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? ஒரு சுழலும் கல்லின் மீது கத்தியை வைத்து அழுத்தும் போது பொறிகள் பறக்கும்.

அது போல் நிலையாய் இருக்கும் சிவத்தின் மீது தற்சுழல் இயக்கம் வேதான் உரசும் போது பொறிகள் தோன்ற அவை சிவத்தின் அழுத்தம் தாளாமல் குறுகிய நேரத்தில் கரைந்து மறைகின்றன. (இங்கு பொறிகள் என்பது உதாரணமே. நீங்கள் நெருப்பு பொறிகளை கற்பனை செய்து கொள்ளாதீர்கள்) இப்படி பொறிகள் தோன்றி மறையும் நிகழ்வு ஒரு தொடர் இயக்கமாக இருப்பதால் எப்போதும் வேதானை சுற்றி ஒரு சிறிய எல்லை வரை ஒருவித ஆற்றல் களம் அமைகிறது. அந்த ஆற்றலின் பெயரே காந்தம் புலம்.

சிவகளத்தில் வேதானின் தோற்றங்கள் ஒரு தொடர் நிகழ்வாக நடக்க கோடி கோடியாய் வேதான்கள் நிறைந்து சக்திகளம் ஒன்று உருவாகியது.

அதில் வேதான்களின் 'வயதிற்கு' ஏற்ப அதன் சுழல் வேகத்தில் வேறுபாடு ஏற்பட ஒரு வேதான் இன்னொரு வேதானை நெருங்கி அதனோடு இணைந்து சுழல துவங்கியது. இது எப்படி என்றால் பூமி தானும் சுழன்று கொண்டு சூரியனோடும் சேர்ந்து சுற்றுவது போல். இரண்டு சுழல் இயக்கங்கள் ஒன்றை ஒன்று குறிப்பிட்ட தூரத்தில் விலக்கியும் வைக்கும்.

இரண்டு பம்பரங்களை சுற்றி விட்டு ஒன்றை ஒன்று தொடும்படி நெருக்கிப் பாருங்கள். இப்படி விலகியும் அதே சமயம் சேர்ந்தும் இயங்குகிற கூட்டு இயக்கம் நமது அணுவுக்கான மூலப் பொருளாக உருப் பெறுகின்றன. இந்த மூலகங்கள் சேர்ந்து அணுக்களாகி அணுக்களின் சேர்க்கை பௌதிகங்கள் ஆகிறது.

உதாரணம், ஒரு புரோட்டானும், ஒரு எலக்ட்ரானும் இருந்தால் அது ஹைட்ரஜன் என்னும் வாயு அணு. எட்டு புரோட்டானும், எட்டு எலக்ட்ரானும் இருந்தால் அது ஆக்சிஜன் என்னும் வாயு அணு. இரண்டு ஹைட்ரஜன் அணுவும ஒரு ஆக்சிஜன் அணுவும இணைந்தால் அது நீர் என்னும் பௌதிகம்.

இதில் புரோட்டானும், எலக்ட்ரானும் வேதான்களின் கூட்டு இயக்கங்கள். இப்படியாக வெறும் வேதான் என்னும் சுழல் இயக்கம் விண் எனவும், அடுத்து தோன்றிய பௌதிகம் காற்று எனவும், அடுத்து அழுத்தக் காற்று(வெப்பம்), அடுத்து நீர், அடுத்து நிலம் எனவும் பெயர் பெறுகிறது. ஒவ்வொரு வேதானை சுற்றியும் ஒரு காந்த களம் இருக்கும் என்று பார்த்தோம். வேதான்கள் அணுக்களாக, பௌதிகமாக சேர்ந்து இயங்கும் போதும் அதில் இருக்கும் மொத்த வேதான்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வலிமை கொண்ட காந்த களமாக அந்த கூட்டு இயக்கத்தை சுற்றி அமையும்.

அந்த வகையில் காற்றுக்கு ஒரு காந்தக் களம் உண்டு. நீருக்கு, நெருப்புக்கு, நிலத்தில் நாம் கண்டு வைத்திருக்கும் 118 தனிமங்கள் வரை எல்லாவற்றுக்கும் ஒரு கா.க உண்டு. இதில் ஒரு பொருளில் தோன்றும் காந்தம் மற்ற பௌதிகங்களோடு தொடர்பு கொள்ளும் போது அழுத்தம், ஒளி, ஒலி, சுவை, மணம், என்ற விளைவுகளை தருகிறது.

நடிகர் நடிகைகளின் பேட்டிகளில் தவறாமல் இப்படி ஒரு பதிலை பார்க்கலாம், “நான் நடிக்க வந்ததே ஒரு விபத்து தாங்க”. அது போல் உலகில் உயிர் தோன்றியது ஒரு தற்செயல் விபத்தினால் தான் என்பது தெரிந்தால் நமக்கெல்லாம் ஆச்சரியம் வரலாம்.

ஜெமினி திரைப்படத்தில் கதாநாயகன் விக்ரமையும், வில்லன் கலாபவன் மணியையும் ஒரே செல்லில் சிறை வைப்பார்கள். இருவரும் அடித்துக் கொண்டு மடியட்டும் என்று. அவர்களோ புத்திசாலித்தனமாக தமக்குள் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு சிறையை விட்டு Escape ஆவார்கள்.

அது போல், (Pure vethaan ) தனி வேதான் விண்ணும், நிலம், நீர், வெப்பம், காற்று என்ற மற்ற நான்கு பௌதிகங்களான வேதான் தொகுப்புகளும், ஒற்றுமையாய் ஒரு குளோசுடு கண்டெயினரில் இருக்க முடியாத தன்மை உள்ளவை.

உதாரணம், நீரும், நெருப்பும் சேர்த்து வைத்தால் ஏதாவது ஒன்று தான் மிச்சமாகும். அது எந்த பௌதிகம் அளவில், வலிவில் பெரியதோ அதற்கு ஏற்ப இருக்கும்.

ஆனால் பூமி என்ற கிரகத்தின் ஓரிடத்தில் இந்த ஐந்து பௌதிகங்களும் ஒரு குறிப்பிட்ட அளவுகளில் ஒரு குளோசுடு கண்டெயினரில்(கு.க) சிறைப் பட்டன. அந்த கு.க ஆக நிலம் என்னும் பௌதிகம் அமைந்தது. மற்ற நான்கு பௌதிகங்களும் அதற்குள் சிறை இருந்தன.

ஆனால், எந்த முரண்பாடுகளும் இன்றி, ஹார்மணியாக தத்தமது சுழல் இயக்கத்தை தொடர்ந்து கொண்டிருந்தன. அது தான் ஒரு செல் உயிரி அமீபா தோன்றிய அதிசயம்.

அதிசயம் அதோடு நிற்கவில்லை. அமினோ ஆசிட், புரோட்டீன், ஆர்என்ஏ, டிஎன்ஏ, செல் மியுடேசன், இனப்பெருக்கம், ஓர் அறிவின் உணர்தல், பரிணாமப் பிழை, பல அறிவு உயிகளின் தோற்றம் என்று பலப் பல அதிசயங்களுக்கு அந்த அமீபாவின் தோற்றம் பிள்ளையார் சுழி போட்டது. அதையெல்லாம் விளக்கப் புகுந்தால் நான்கு பாகங்கள் போதாது. அதைப்பற்றி எல்லாம் பின்னொருநாள் பேசலாம்.

No comments:

Post a Comment