jaga flash news

Friday 15 May 2015

பஞ்சாங்கம் அர்த்தம்

பஞ்சாங்கம்னா என்ன? பஞ்சாங்கம்னா ஐந்து அங்கங்கள்னு அர்த்தம்.
அந்த ஐந்து அங்கங்கள்:
1. வாரம் / நாள்
2. திதி
3. நட்சத்திரம்
4. யோகம்
5. கரணம்
ஞாயிற்றுக்கிழமை முதல் சனிக்கிழமை வரை உள்ள ஏழு நாட்கள்தான் வாரம்.
----------------------------------------------------------------------------------------------
திதி என்பது வளர்பிறைப் பிரதமை முதல் பெள்ர்ணமி
வரை உள்ள பதினைந்து நாட்களும், தேய்பிறைப்
பிரதமை முதல் அமாவாசை வரை உள்ள பதினைந்து
நாட்களும், அதாவது அந்த முப்பது நாட்களும் திதியாகும்
திதியில் இருந்து பிறந்ததுதான் தேதி
வானவெளியில் சூரியனுக்கும், சந்திரனுக்கும் உள்ள தூரத்தைச் சொல்வதுதான் திதி
விரதங்கள் இருப்பவர்கள், இறைவனுக்கு அபிஷேகம் செய்பவர்கள் இந்தத் திதி பார்த்துத்தான் செய்வார்கள்
அதேபோல் புதுக் கணக்குப் போடுபவர்கள் அதிகம் விரும்புவது தசமித் திதி
3. திருமணம், இடம் வாங்குவது போனற சுப காரியங்களைச் செய்பவர்கள் அஷ்டமி, நவமி திதியில் செய்வதில்லை.
4. ஒரு மனிதனின் மரணத்தை திதியை வைத்துதான் குறிப்பிடுவார்கள். ஒருவன் ஐப்பசி மாதம் வளர்பிறை நவமி திதியில் காலமானால், ஒரு ஆண்டு கழித்து அல்லது வருடா வருடம் அவனது சந்ததியினர்அதே ஐப்பசி மாதம் வளர்பிறை நவமி திதியில் தான் அவனுக்கு நினைவுச் சடங்குகளைச் செய்வார்கள்.கிராமங்களில் தங்கள் வீட்டில் படையல் போடுவார்கள். இதுபோன்று இன்னும் பல பழக்கங்கள் இந்தத் திதியை வைத்துப் பல சமூகங்களில் பலவிதமாக உள்ளது.
----------------------------------------------------------------------------------------------
நட்சத்திரம் என்பது அஸ்வினி முதல் ரேவதி வரையுள்ள 27 நட்சத்திரங்கள். பூமியை சுற்றி சந்திரன் செல்லும் பாதையில் எந்த நட்சத்திரம் உள்ளதோ அதுதான் அன்றைய ந்ட்சத்திரம். 27 நாட்களில் சந்திரன் வானவெளியில் ஒரு சுற்றை முடித்துவிட்டு அடுத்த சுற்றை அரம்பித்துவிடும்
தினசரி ஒரு நட்சத்திரம் என்பதால் ஒவ்வொரு நாளும் சந்திரனை வைத்துப் பிறந்த நட்சத்திரம் மாறும், அதேபோல 2.25 நாட்களுக்கு ஒருமுறை பிறந்த ராசியும் மாறும்.
மொத்தம் இருக்கிற 27 நட்சத்திரங்களைப் பற்றி நாம் ஏற்கனவே பார்த்து இருக்கிறோம்.. இல்லையா?
----------------------------------------------------------------------------------------------
கரணம் - என்பது திதியில் பாதி தூரத்தைக் குறிக்கும்.
கரணங்கள் மொத்தம் 11-ஆகும். அவையாவன:1. பவ, 2. பாலவ, 3. கெலவ, 4. தைதூலை, 5. கரசை, 6. வணிசை, 7. பத்தரை, 8. சகுனி, 9. சதுஷ்பாதம், 10. நாகவம், 11. கிம்ஸ்துக்னம்.
----------------------------------------------------------------------------------------------
வானவெளியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து சூரியனும், சந்திரனும் செல்கிற மொத்த தூரத்தைக் குறிப்பது யோகம்.
நல்ல நாளா , இல்லையா? னு ஜோசியரைப் பார்த்து நாள் குறிக்கிறப்போ, இதை எல்லாம் பார்த்துத் தாங்க சொல்லணும்.
யார் வர்றாங்களோ, அவருக்கு லக்கினத்தில் இருந்து 9 ஆம் வீட்டுக்கு அதிபதி யாரோ, அவருக்கு உரிய கிழமை தேர்ந்து எடுத்து , நல்ல நேரம் பார்த்து சொன்னா, சிறப்பா இருக்கும்.
சில நாட்களை காலண்டரில் பார்த்தாலே போட்டு இருப்பார்கள் - சித்த யோகம், மரண யோகம், அமிர்த யோகம் என்று...
----------------------------------------------------------------------------------------------
சில கிழமைகளுடன் சில நட்சத்திரங்கள் சேரும்போது, அது ஒவ்வாத நாளாகிவிடும்.
ஞாயிறு: அவிட்டம், கார்த்திகை
திங்கள் : அஸ்விணி, உத்திராடம்
செவ்வாய்: பூரட்டாதி, ரோகிணி, விசாகம், திருவாதிரை
புதன் கிழமை: ஹஸ்தம்
வியாழக்கிழமை: கார்த்திகை, திருவாதிரை, உத்திரம், சதயம், அனுஷம்
வெள்ளிக்கிழமை: ரோகிணி , ஆயில்யம், மகம்,திருவோணம்,
சனிக்கிழமை: ஆயில்யம், பூரட்டாதி, சித்திரை, உத்திரம்
மேற்கண்ட கிழமைகளில், குறிப்பிட்டுள்ள இந்த நட்சத்திரங்கள் சேர்ந்துவந்தால் அன்று மரணயோகம். மரணயோகத்தன்று சுப காரியங்களைச் செய்ய மாட்டார்கள்.
அன்று செய்யும் முக்கியமான செயல்கள் விருத்தி அடையாது.
உதாரணத்திற்கு, மரணயோகத்தன்று நீங்கள் ஒரு இடத்தை வாங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். நிலம் உங்களிடம் தங்காது. கையை விட்டுப் போய்விடும். அல்லது சிக்கல் மிகுந்த இடமாகி உங்கள் பணம் மாட்டிக் கொண்டுவிடும். மரண யோகத்தன்று ஒருவர் புதிதாக ஒரு வியாபாரத்தைத் தொடங்கினால், அது அபிவிருத்தியாகாது. வியாபாரம் செழிப்படையாது. அன்றையத் தேதியில், திருமணம் செய்து கொண்டால், மண வாழ்க்கை கசப்பில் முடிந்துவிடும். பிரிவில் முடிந்துவிடலாம்.
பணி மாற்றத்தில் வேறு ஒரு ஊருக்குச் செல்கிறீர்கள். சென்று அங்கு பணியில் சேரும் நாள், மரண யோக நாளாக இருந்தால், அங்கே நீங்கள் பல பிரச்சினை களைச் சந்திக்க நேரிடும்.
மரணயோகத்தன்று யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். கொடுத்தால் அது வராக் கடனாகிவிடும். ( நம்ம ஏங்க சார் கடன் கொடுக்கிற நிலைமை லெ இருக்கோம் னு கேக்கிறீங்களா ? ஒன்னு பண்ணலாம்.. ... நீங்க வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுப்பதற்கு அந்த நாளைப் பயன்படுத்தலாம். கடன் தீர்ந்துவிடும். அந்த நபரிடமோ, அல்லது அந்த வங்கியிலோ மீண்டும் கடன் ஏற்படாது.. ட்ரை பண்ணித்தான் பாருங்களேன்.. .)
இதுபோல முடிவிற்குக் கொண்டுவர , கழட்டி விட வேண்டும் என்று நினைக்கும் செயல்களை, அன்று செய்யலாம்.
இதற்கு எதிரிடையாக , சில கிழமைகளுடன் சில நட்சத்திரங்கள் சேரும்போது, அது அமிர்தயோக நாளாகிவிடும்.
ஞாயிறு: உத்திரம், உத்திராடம், உத்திரட்டாதி, திருவோணம், பூசம், மூலம்
திங்கள் : சுவாதி, புனர்பூசம்,ரோகிணி, மிருகசீரிடம்
செவ்வாய்: உத்திரம், மூலம்
புதன் : உத்திராடம், பூரம், பூராடம், பூரட்டாதி, உத்திரம்
வியாழன் : சுவாதி, மூலம்
வெள்ளி : அஸ்விணி, பூசம், ஹஸ்தம், மூலம்
சனி: மகம், சதயம், கார்த்திகை, சுவாதி
அமிர்தயோகத்தன்று சுப காரியங்களைச் செய்யலாம். நமக்குச் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய பணிகளைச் செய்யலாம். சுருக்கமாகச் சொன்னால், மரண யோக தினங்களில் எது எதைச் செய்யக்கூடாது என்று சொன்னேனோ, அதையெல்லாம் இந்த நாட்களில் செய்யலாம்......

மேல சொன்ன ரெண்டும் முக்கியமான யோகங்கள்.முக்கியமா மனசிலே ஞாபகம் இருக்கட்டும். மற்றது , இல்லேன்னா கூட பரவா இல்லை.
சுபா சுப யோகம்; சித்த யோகமும் அமிர்த யோகமும் சுபகருமங்களுக்கு உரிய சுப யோகங்களாகும்.
மரண யோகம், நாச யோகம், உற்பாத யோகம், பிரபலா நிஷ்ட யோகம், திரிபுஷ்கர யோகம் எனபன சுப கருமங்களுக்கு விலக்கப்படும் அசுப யோகங்களாகும்.

No comments:

Post a Comment