jaga flash news

Saturday, 23 May 2015

பிரபஞ்ச வடிவான இறைவன்

சில குருடர்கள் ஒரு பார்வை உள்ளவனிடம் சென்று, "ஐயா! எதோ பெருசா யானைன்னு இருக்காமே, எங்களுக்கு யானை எப்படி இருக்கும் என்பதனை அறிய வேண்டும் என்று ஆசையாக உள்ளது. அது எப்படி இருக்கும்??" என்று கேட்டனர். இவர்களுக்குத்தான் கண் தெரியாதே. அதனால் அந்த பார்வை உள்ளவர் இர்வர்கள் மீது அன்பு கொண்டு யானையைப்பற்றி விவரிக்கலானார். "யானை உயரமா இருக்கும். கருப்பா இருக்கும். வெள்ளையா தந்தம் இருக்கும்" என்று சொல்லிக்கொண்டே போனார். "உயரமா?? உயரம்னா என்ன?, கருப்பா?? அப்படினா?, வெள்ளையா???? தந்தமா????" ஆனால் இவர்களுக்கு அது ஒன்றும் புரியவில்லை. "புரியலியே சாமி!!" என்றதும், அந்த பார்வயுல்லவன் பார்வை அற்றவர்களை ஒரு யானையின் முன் நிறுத்தி, "உங்கள் முன் ஒரு யானை உள்ளது அதை தொட்டுப்பார்த்து உணர்ந்து கொள்ளுங்கள்" என்று சொன்னார்.
ஒருவன் துதிக்கையை தொட்டான். "ஆ ஆ ஆ!!!! கண்டுபிடித்துவிட்டேன் யானை ஒரு பெரிய காற்று வரும் குழாயைப்போன்றது" என்றான்.
அதை மறுத்த காலை பிடித்த இரண்டாவது குருடன், "இல்லை இல்லை!!! யானை ஒரு பெரிய தூனைப்போன்றது" என்றான்.
இருவரையும் மறுத்த மூன்றாமவன் காதை தொட்டுப்பார்த்து, "முட்டாள்களே!! யானை ஒரு விசிரியைப்போன்றது" என்றான்.
அனைவரும் ஏசியவாறு, நான்காமவன் வாலை தொட்டுப்பார்த்து, "அறிவிலிகளே! யானை கயிறைப்போன்றது. உங்கள் அனைவரது யானையும் யானை அல்ல என்னுடைய கயிறைப்போன்ற யானையே யானை." என்றதும், வந்ததே கோபம் மற்ற மூவருக்கும். இவனை அவன் சாட, அவனை இவன் சாட, யாரும் ஒருவருக்கொருவர் ஒத்துப்போகவே இல்லை. இறுதியில் இவர்கள்மீது பரிதாபப்பட்டு, பார்வை உள்ளவன், அவர்களின் சண்டையை விளக்கி, "நீங்கள் நால்வரும் சொல்வது சரிதான், ஆனால் இவை அனைத்துமே யானையின் அங்கங்கள், அந்த அங்கங்களின் ஒருங்கிணைப்பே யானை எனப்படுவது" என்றார். "எங்கள் கொள்கைகளை குறைகூறி எங்களை அவமதிக்கின்றாய," என்று இந்த நால்வரும் சேர்ந்து அவனை உதைக்க சென்றுவிட்டார்கள். அவன் விட்டால் போதும் என்று காட்டிற்கே ஓடி விட்டான்.
என்ன சிரிப்பாக உள்ளதா? இந்த கதயைப் படிக்கும்போது உங்களுக்கு ஏதேனும் தோன்றியது?
அந்த குருடர்கள் யார் தெரியுமா???
நாம் தான். ஆம், நாமே தான்.
இறைவனின் ஒரு சக்தியை உணர்ந்தவன் அவனை சிவன் என்கிறான். மற்றொருவன் விஷ்ணு என்கிறான். இறைவனின் தாய்மையை உணர்ந்தவன் அதை சக்தியின்வடிவமாக அன்னையாக பூசிக்கிறான்.
அந்த பிரபஞ்ச சக்தியின் மற்றொரு பாகத்தை உணர்ந்தவன் அதை "அல்லா ஹு அக்பர்'' என்கிறான்.
இறைமையில் அன்பை உணர்ந்தவன் அவனை "ஏசு" என்கிறான்.
இறைவனின் பிரகாசத்தை உணர்ந்தவன் அந்த பிரகாசத்தை "அடோநோமஸ்" என்கிறான்.
பிரபஞ்சத்தில் உள்ள வெற்றிடத்தை உணர்ந்தவன், பிரபஞ்சத்தை "சூனியம்" என்கிறான்.
இறைமையின் சூனியத்தை அறிந்தவன் "இறைவன் இல்லை" என்கிறான்.
பிரபஞ்சத்தின் முழுமையையும், பிரம்மாண்டத்தையும் உணர்ந்தவன் "பூரணம், பிரம்மம், ஆனந்தம்,.........." என்கிறான்.
இன்னும் சிலர் எத்தனையோ கோட்பாடுகளால் அந்த இறைவனை துதிக்கின்றனர், திட்டுகின்றனர், காரிஉமிழ்கின்றனர், கற்பூரம் காட்டுகின்றனர், மண்டியிட்டு தொழுகை செய்கின்றனர், கைகூப்பி பிரார்த்திக்கின்றனர்...................................
ஒருவரின் கருத்துக்கு மற்றொருவர் ஆதரவும், எதிர்ப்பும் சேர்த்து சண்டை செய்கின்றனர்!!!
அனைவரின் கருத்தும் அவரவர் கண்ணோட்டத்தில் சரிதான். அனைத்தும் அவன்தான், ஆனால் பிரபஞ்ச சக்தியான இறைவன் இவைகளில் ஏதோ ஒன்று மாட்டும் இல்லை. அந்த முழுமை கற்பனைகளுக்கு அப்பாற்பட்டது. பெயர்களுக்கும் இனத்திற்கும், மொழிக்கும், உலகங்களுக்கும், அண்டங்களுக்கும், அனைத்திற்கும் அப்பாற்பட்டது. அது அனைத்துமே ஆனது. அனைத்துமே இறைவன் தான். இறைவன் என்று ஒருவன் எங்கோ பரலோகதோயில், தேவலோகதிலோ, எங்குமே இல்லவே இல்லை. தனியே இறைவன் என்ற ஒன்று இல்லவே இல்லை. அனைத்தின் ஒருங்கினப்பே பிரபஞ்ச வடிவான இறைவன் ஆகும்.

No comments:

Post a Comment