jaga flash news

Thursday, 14 May 2015

உடல் எடையை குறைக்கும் பழைய சாதம்

உடல் எடையை குறைக்கும் பழைய சாதம்
பாஸ்ட்புட் கலாசாரம் பரவிவிட்டதால், பழைய சாதத்தை மக்கள் மறந்து போய்விட்டனர்.
மேலும், அதில் இருக்கும் ஆரோக்கியம் குறித்தும் முழுமையாக அறிந்திருக்க வாய்ப்பில்லை.
பழைய சாதத்தில் வைட்டமின் பி6, வைட்டமின் பி12, ஏராளமாக இருக்கிறது.
பழைய சாதத்தின் நன்மைகள் சில
1.காலையில் சிற்றுண்டியாக இந்த பழைய சாதத்தைக் குடிப்பதால், உடல் லேசாகவும், அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது.
2. இரவே தண்ணீர் ஊற்றி மூடி வைப்பதால் இலட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் இதில் உருவாகிறது.
3. மறுநாள் இதை குடிக்கும் போது உடல் சூட்டைத் தணிப்பதோடு குடல்புண், வயிற்று வலி போன்றவற்றையும் குணப்படுத்தும்.
4. அதுமட்டுமில்லாமல் இதிலிருக்கும் நார்ச்சத்து, மலச்சிக்கல் இல்லாமல் உடலை சீராக இயங்கச் செய்கிறது.
5. இந்தப் பழைய சாதம் உணவு முறையை சில நாள் தொடர்ந்து சாப்பிட்டால் இரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்துவிடும், உடல் எடையும் குறையும்.
6. மிகவும் முக்கியமான விடயம் என்னவென்றால் உடலுக்கு அதிகமான சக்தியை தந்து நாள் முழுக்க சோர்வின்றி வேலை செய்ய உதவியாக இருக்கிறது.
7. அலர்ஜி, அரிப்பு போன்றவை கூட சட்டென்று சரியாகி விடும்.

No comments:

Post a Comment