jaga flash news

Thursday 26 November 2015

சபரிமலை விரதம்

சபரிமலை விரதம்
ஏன் சபரிமலை போன்ற கோவில்களுக்கு விரதம் இருந்து செல்கிறோம்
இறை பக்தி என்றாலும் அதன் பின் புலம் வேறு
சின்ன பிள்ளைகளிடம் ஏமாற்றி சோறு ஊட்டுவது போல் விரதம் இரு கடவுள் பலன் தருவார் என்று கூறி உள்ளார்கள்
வருடத்தில் ஒரு மாதம் கஷ்டம் அனுபவித்தால் நீங்கள் உணருவீர்கள்
எது கஷ்டம் என்று
பணக்காரர் என்றாலும் பச்சை தண்ணீரில்தான் குளிக்க வேண்டும்
தலையணை கூடாது செருப்பு போடாமல் நடக்க வேண்டும்
இதை நீங்கள் செய்ய காரணம்
மக்கள் எவ்வாறு கஷ்டம் அனுபவிக்கிறார்கள் என்பது தெரிந்தால் பணம் படைத்தவர்கள் உதவலாம் என்பதற்காகத்தான்
மேலும் ஒரு மாதம் கோபம், போதை தவிர்த்து விட்டால் அதே பழக்கம் வருடம் முழுக்க தொடரலாம் என்பதுதான் அது
மனிதன் என்பவன் ஒரு முப்பது நாட்களாவது கஷ்டம் அனுபவிக்க வேண்டும் என்பதுதான் விரதத்தின் நோக்கம்
காரணம் கஷ்டம் என்பது அனுபவித்து விட்டால் வாழ்க்கை என்பது எளிதாகி விடும்
எல்லா மதங்களிலும் இது உண்டு

1 comment:

  1. விரதம் இருப்பது, தீய பழக்கவழக்கங்களை விட்டு, நல்வழி செல்வதற்கான, ஒரு இறைவழி. மட்டுமின்றி, இதன் மூலம் நம் மனம் சிதறாமல், இறை நோக்கோடு, இருக்க வழி வகுக்கிறது. முரட்டு சாப்பாடு சாப்பிட்டு, கெட்டுப்போன உடம்மையும், மனதையும், வயிறையும், கொஞ்சம் காயப்போட்டால் தான்(பட்டினி போட்டால் தான்) அடுத்து நாம் நோயின்றி வாழலாம் என்றே அப்போதுள்ள பெரியவர்கள் வலியுறுத்திய ஒரு விரதம்.

    ReplyDelete