jaga flash news

Saturday, 2 May 2015

மனம்??!!!

மனம்??!!!
-----------------------
மனிதனின் அணைத்து பிரசினைகளுக்கும் ஒரே காரணம் தான் உண்டு. அது அவன் "மனம்" தான். ஒரு செயலை ஒரு சமயம் இன்பமாகவும், அதே செயலை மறுசமயம் துன்பமாகவும் காட்டுவது மனம் தான். இப்படி மனிதனை ஆட்டிப்படைக்கும் மனம் என்றால் தான் என்ன? அதன் வடிவம் என்ன?
பல எண்ணங்களின் தொடர் தொகுப்பே மனம் எனப்படுவது. எண்ணங்கள் அல்லாது மனம் என்ற ஒரு பொருள் இல்லவே இல்லை. மனதின் சொரூபம் சூனியம் தான். ஒன்றுமே அற்றது. ஆனால் கற்பனையால் அனைத்தையுமே உண்டாக்குவது.
மனம் எதற்காக?
இப்பிரபஞ்சத்தில் ஏதாவது ஒரு பொருள் இயங்கவேண்டுமெளில், பிரபஞ்சமே அந்த பொருளுக்கு ஒரு உந்துதல் ஆற்றலை தந்து அந்த பொருளை இயக்கம். உதாரணமாக கோள்கள் அந்தரத்தில் நிற்கவேண்டுமெனில் "ஈர்புவிசை" எனும் ஆற்றலை தந்து அந்த இயக்கத்தை இயக்குகிறது. அவ்வாறே மனித உடலை இயக்க பிரபஞ்சம் தரும் ஒரு உந்துதல் சக்தியே "எண்ணங்கள்" எனப்படுவது. ஏதாவது ஒரு செயல் நடக்கவேண்டுமெனில், பிரபஞ்சம் உடலுக்கு ஒரு எண்ணத்தை தந்து அந்த செயலை செய்யும். உதாரணமாக, உடகுக்கு தண்ணீர் வேண்டுமெனில் தாகம் என்னும் உணர்வை தந்து, நீர் அருந்தவேண்டும் என்னும் எண்ணத்தையும் தந்து நீர் அருந்தும் அந்த செயலை செய்கிறது. இங்கு நம் பங்கு என்பது எதுவும் இல்லை. உடலின் ஆனது இயக்கமும் பிரபஞ்சத்தினுடயது தான். ஆனால் செயலுக்காக சிந்தனை வரும் அதே நேரத்தில், தேவையே இல்லாமல் வீணாக சிந்தனை செய்யும் பழக்கத்திற்கு நாம் அடிமை ஆகிவிட்டோம். பிரபஞ்சம் மனிதனுக்கு அளித்த மாபெரும் சிந்தனை சக்தியை நாம் வீண் செய்கிறோம். தேவையில்லாமல் சிந்தித்து சிந்தித்து காலத்தையும் வாழ்கையையும் வீணாக்குகிறோம். நம் கடமை என்று உலகத்தில் ஒன்றே ஒன்றுதான் உள்ளது. அது, "வீணாக" சிந்திக்காமல் இருப்பதுதான். ஒரு செயலுக்காக சிந்திப்பது மிகவும் சிறப்பாகும். ஆனால் ஒரு காரமும் இல்லாமல் சிந்தித்துக்கொண்டே இருப்பது மடமை அல்லவோ??!!!

No comments:

Post a Comment