jaga flash news

Friday, 1 May 2015

மாயை!!??

மாயை!!?? ----------------------------------------
  ஆன்மீகவாதிகள் அறுபதுகோடி மாயைகள் உண்டு என்று சொல்லுவார்கள். ஆனால் சொல்லும் யாருக்குமே மாயை என்றால் என்னவென்றே தெரியாது. மாயை என்பது நம் மனமே அன்றி வேறு இல்லை. மாயை என்பது நம் கற்பனைகளே அன்றி வேறு இல்லை. மாயை என்பது நம் சங்கல்பன்களே(முடிவுகள்) அன்றி வேறு இல்லை.
மனமே மாயை. மாயையே மனம்!!!
அதை விளக்க ஒரு குட்டிக்கதையை பார்ப்போம்.
ஒரு சமயம் ஸ்ரீ கிருஷ்ணரும் நாரதரும் ரதத்தில் காட்டுவழியே சென்றுகொண்டு இருந்தார்கள். அப்பொழுது நாரதர் ஸ்ரீ கிருஷ்ணரை பார்த்து "பகவானே! அனைவரும் தாங்கள் மாயையில் சிக்கி தவிப்பதாகவும், அதனின்று தங்களை விடுவிக்ககோரியும் உன்னிடம் வேண்டுகிரார்களே! மாயை என்றால் என்ன?" என்று கேட்டார். ஸ்ரீ கிருஷ்ணர் சிரித்தமுகத்துடன் தேரோட்டியிடம் தேரை நிருத்தசொன்னார். அருகில் அழகிய ஒரு தடாகம். நாரத்தை பார்த்து ஸ்ரீ கிருஷ்ணர், "நாரதரே! சூரியன் உச்சிக்கு வந்துவிட்டது வாருங்கள் சந்தியா வந்தனம் செய்யாலாம்" என்று அழைத்தார். இருவரும் தடாகத்தின் கரையில் அமர்ந்தனர். இருவருமாக சந்தியாவந்தனம் செய்ய துவங்கினர். அப்பொழுது நாரதர், ஆசனத்தில் இருந்து எழுந்து தடாகத்தில் குளிக்க துவங்கினார். என்ன ஒரு விபரீதம்?! நீரில் முழ்கி எழுந்தவுடன் நாரதர் ஒரு அழகிய பெண்ணாக மாறிவிட்டார். தான் யார் என்பதையும் மறந்தார். இவ்வாறு குழப்பத்தில் இருக்க அங்கு ஒரு ராஜகுமாரன் வந்தான், அந்த பெண்ணின் அழகில் மயங்கி தன்னை மணந்துகொள்ளுமாறு கூற இருவருக்கும் காந்தர்வ விவாகம் நடந்தது. இருவருமாக ராஜ்ஜியம் சென்றனர். பிரமாதமான வரவேற்ப்பு புதுமணதம்பதியருக்கு. சிறப்பாக ராஜ்ஜியம் நடந்தது. யார் செய்த குற்றமோ நீண்ட காலமாக ராஜ்யத்தில் மழை இல்லை. எங்கு பார்த்தாலும் பசி, பட்டினி, சாவு. மன்னன் மனம் உடைந்துபோய் தற்கொலை செய்துகொண்டான். ராணிக்கோ என்னசெய்வதென்றே தெரியவில்லை. ராஜ்யத்தை எதிரிமன்னன் கைப்பற்ற இவள் காட்டிற்கு ஓடி வந்தால். தான் அந்த ராஜாவை சந்தித்த அதே குளக்கரைக்கு வந்தால். துக்கம் தாலவில்லை. ஓ.....!!!! வென்று அழுதால். திடீரென்று முதுகில் பலமாக யாரோ அடித்து "என்ன நாரதா!! சந்தியாவந்தனத்தை முடித்து விட்டாயா?? கிளம்பலாமா?" என்றார்கள். யாரென்று பார்த்தல் கண்ணபரமாத்மா. நாரதருக்கு ஒரு கணம் ஒன்றும் புரியவில்லை. பிறகு சுதாரித்துக்கொண்டார். தான் கண்டது பகல் கனவென்றும், தான் பெண்ணாக மாறியதில் இருந்து அனைத்துமே தான் செய்த கற்பனை என்றும் உணர்ந்தார். பிறகு ஸ்ரீ கிருஷ்ணரை பார்த்து, "ஹே பரந்தாமா! இது அனைத்துமே கற்பனையாக இருக்க எப்படி எனக்கு நிஜத்தைப்போல ஒரு அனுபவம் ஏற்பட்டது?" என்றார். அதற்க்கு கண்ணன், "நீ வாஸ்தவத்தில் கற்பனை செய்திருந்தாலும், நீ அதை கற்பனை என்று மறந்து அந்த கற்பனையுடன் ஒன்றிவிட்டதால் உனக்கு அது சத்தியம் போல தோன்றியது. இதுதான் மாயை என்பது. இல்லாதது இருப்பதைப்போன்று தோன்றுவது. உன் மனம் தான் மாயை. உன் கற்பனைகள்தான் மாயை, மனதை ஜெயிப்பதே முக்தி. கற்பனைகளை ஒழிப்பதே மோக்ஷம். வேறு ஒன்றும் இல்லை" என்றார்.
புரிந்ததா மாயை என்றால் என்னவென்று??!!

No comments:

Post a Comment