அதிர்ஷ்டம் தரும் 5 கருமிளகு.. வருமானத்தை பெருக்கி, மகிழ்ச்சியை அதிகரிக்க செய்யும் திருஷ்டி பரிகாரம்
கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்பார்கள்.. எப்பேர்ப்பட்ட காரியத்தையும் தடை செய்யக்கூடிய தன்மை, கண் திருஷ்டிகளுக்கு உண்டு. கண்திருஷ்டி, முதல் தீய சக்தி வரை குடும்பத்தை நெருங்காமல் இருக்க, கல்மிளகுகள் உதவுகின்றன. எப்படி தெரியுமா?
திருஷ்டி பட்டுவிட்டதா? என எப்படி அறிந்து கொள்வது? திருஷ்டிப்பட்டவர் உடலில் அசதி ஏற்படும்.. அடிக்கடி சோம்பலும், கொட்டாவியுமாக இருக்கும்.. எந்த வேலையும் செய்ய முடியாது.. புத்தாடை அணிந்தால் அது கிழியலாம்... சில சமயம் அதில் எதாவது கருப்புக்கறை பட்டுவிடலாம்.
மகன், மருமகள் பற்றி நெப்போலியன் பகிர்ந்த மகிழ்ச்சி செய்தி.. இந்த நாள் மறக்க முடியாது என உருக்கம்!
மகன், மருமகள் பற்றி நெப்போலியன் பகிர்ந்த மகிழ்ச்சி செய்தி.. இந்த நாள் மறக்க முடியாது என உருக்கம்!
வீட்டில் ஏதாவது பிரச்சனைகள், தடைகள், சோகம், பிரிவு, நஷ்டம், இழப்பு என ஒவ்வொன்றாக வந்துகொண்டே இருக்கும்... காரணமே இல்லாமல் கணவன்-மனைவியிடையே பிரச்சனைகள், தகராறுகள் வெடிக்கும்.. உறவினர்களுடன் பகை, சுபநிகழ்ச்சிகளில் தடை, குடும்பத்தில் யாருக்காவது மருத்துவ செலவுகள் ஏற்பட்டுக் கொண்டேயிருக்கும்..
திருஷ்டி சூழ்ந்திருக்கும் அறிகுறிகள்
பசியிருந்தும் சாப்பாட்டில் நாட்டமின்மை, யாரை பார்த்தாலும் எரிந்து விழுவது, கெட்ட கனவுகள், தூக்கமின்மை, எதிர்மறை எண்ணங்கள் இவை அனைத்துமே ஏற்படலாம்.. கையில் கிடைக்கக்கூடிய சந்தர்ப்பங்களும் நழுவிவிடும். இவை அனைத்துமே, திருஷ்டிக்கான அறிகுறிகளாகும். இதுபோன்ற அறிகுறியிருந்தால், உடனே திருஷ்டி கழித்துவிட வேண்டும்.
ஆனால், திருஷ்டிக்கழிப்பவர் திருஷ்டி சுற்றிக்கொள்பவரைவிட வயதில் மூத்தவராக இருக்க வேண்டும்.. திருஷ்டிக்கழிக்கும் நாட்கள் செவ்வாய் அல்லது ஞாயிறு மாலையாக இருக்க வேண்டும்.. கிழக்குத் திசையை நோக்கி நிற்க வேண்டும். தனியாக அல்லது கூட்டமாக திருஷ்டி கழிக்கலாம். ஆனால் கூட்டத்தில் நிற்பவர்களில் பாதிபேருக்கு ஒருவரும், மீதி பேருக்கு மற்றொருவரும் என்று மாற்றி மாற்றி திருஷ்டி கழிக்க கூடாது. திருஷ்டியில் நின்றுவிட்டால், அனைவருக்கும் சேர்த்து ஒரே நபர் தான் திருஷ்டி கழிக்க வேண்டும்.
கொட்டாங்குச்சி வெடிக்கும் சத்தம்
அந்தவகையில் பெரும்பாலும் திருஷ்டி கழிக்க, கல் உப்பு, காய்ந்த மிளகாய், எலுமிச்சை, கற்பூரம் இவைகளில் ஏதாவது ஒன்றை வைத்து திருஷ்டி எடுப்பார்கள்.. ஆனால், கெட்ட சக்திகள், வருமானத்தடை, ஆரோக்கியமின்மை, நிதி நெருக்கடி இவை அனைத்துக்கும் சேர்த்து திருஷ்டி எடுக்க, கருமிளகுகள் உதவுகின்றன..
காரணம், கெட்ட சக்திகளை அழிக்கும் தன்மை கருமிளகுக்கு உண்டு.. இந்த கருமிளகால் திருஷ்டி எடுத்து, தேங்காய் சிரட்டையை சேர்த்து எரிக்கும்போது, அதிலிருந்து வெளியாகும் படபட சத்தம், சுற்றியிருக்கும் எப்பேர்ப்பட்ட கண் திருஷ்டிகளையும் அழிக்கக்கூடியதாம். இதன்மூலம், உடல் ஆரோக்கியமும், நிதிநிலைமையும் பெருகும் என்பது நம்பிக்கையாகும்.
வருமானம் பெருக, கெட்ட சக்தி நீங்க
இதற்கு உள்ளங்கையில் கைப்பிடியளவு கல் உப்பும், 5 கருமிளகையும் எடுத்துக் கொண்டு முதலில் உங்கள் தலையை 3 சுற்று வலது புறமாக சுற்றிக்கொள்ளுங்கள். பிறகு, வீட்டிலுள்ளவர்கள் அனைவரையும் வீட்டிற்கு நடுவே நிற்க வைத்து இதுபோலவே சுற்ற வேண்டும். அப்படி சுற்றும்போது, கண் திருஷ்டி, கெட்ட சக்திகள், கடன் அனைத்தும் நீங்கி, வருமானம் பெருக வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.
பிறகு, வீட்டுக்கு வெளியே நின்று கொண்டு , வீட்டை பார்த்து இப்படி 3 முறை சுற்றிய பிறகு, அந்த உப்பையும், கருமிளகையும் ஒரு தேங்காய் சிரட்டையில் போட்டு எரித்து விட வேண்டும்.. வாரம் ஒருமுறை செவ்வாய் அல்லது ஞாயிறு மாலை 7 மணிக்கு மேல் இதனை கட்டாயம் செய்து வரும்போது, எந்த தீய சக்தியும் நெருங்காது. அல்லது செவ்வாய்க்கிழமை, வளர்பிறை அஷ்டமி நாட்களில் செய்வது கூடுதல் பலனை தரும் என்கிறார்கள்.