jaga flash news

Sunday, 18 January 2026

தெய்வத்திடம் கொடுத்து பிள்ளையை வாங்கும் கிரகநிலை யாருக்கு தெரியுமா?

தெய்வத்திடம் கொடுத்து பிள்ளையை வாங்கும் கிரகநிலை யாருக்கு தெரியுமா?

பிள்ளைப்பேறு இல்லாதவர்கள் குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பதை அனைவரும் பார்த்திருப்போம்.

ஜாதகத்தில் கிரக நிலை சரியாக அமையாது விட்டால் தான் பெற்ற பிள்ளையை கடவுளிடம் ஒப்படைத்து பின் தத்தெடுத்து வளர்ப்பது சாஸ்திரம்.

நட்சத்திரங்களில் சித்திரை, விசாகம் இவற்றில் பிறந்த ஆண், பெண் குழந்தைகள். மாதங்களில் சித்திரை, ஆடி, ஐப்பசியில் பிறந்த குழந்தைக ளை தெய்வத்திடம் கொடுத்து வாங்கி, பெற்றோர்கள் வளளிப்பது குடும்பத்துக்கு நல்லது.

*பிள்ளைகளின் பிறந்த ஜாதகத்தில் லக்னத்தில் நான்காம் இடமான தாய் வீட்டில் சந்திரன் இருந்தாலும், ஐந்தாம் இடமான தாய்மாமன் வீட்டில் புதன் இருந்தாலும், ஒன்பதாம் இடமான தந்தை வீட்டில் சூரியன் இருந்தாலும், காரக கிரகம் ஸ்தானபலம் ஏறினால் காரகம் பாவநாஸ்தி என்ற வகையில் தத்து கொடுத்து பிள்ளையை வாங்கப்படும்.

Aanmeegamum

No comments:

Post a Comment