jaga flash news

Thursday, 3 December 2015

சந்திராஷ்டம நாளிற்கு எளிய பரிகாரம்

சந்திராஷ்டம நாளிற்கு எளிய பரிகாரம்


பலர் சந்திராஷ்டமம் என்றாலே இரண்டரை நாட்கள் பயந்து நடுங்குவர். முக்கிய வேலைகளை தவிர்ப்பர்-அந்த அளவிற்கு சந்திராஷ்டமம் பற்றி பய உணர்வு ஏற்படுத்த பட்டுள்ளது. மிக எளிய பரிகாரம் மூலம் அந்த நாளை சிறப்பாக எதிர்கொள்ளலாம்.
அரிசி மாவை நீரில் குழைத்து உடல் முழுதும் 20 நிமிடங்கள் ஊற வைத்து பின்பு வழக்கமான முறையில் குளித்து விட்டு, மருந்து கடைகளில் கிடைக்கும் வெள்ளை பிளாஸ்திரியை மிக சிறிய அளவில் வெட்டி, அதில் ஒரு நெல் மணியை வைத்து நம் இடது கை புஜத்தில் ஒட்டி கொண்டு அன்றாட அலுவல்களை கவனிக்கலாம். எளிய ஆனால் மிக சக்தி வாய்ந்த முறை இது-சந்த்ராஷ்டம நாட்களை 
 
எதிர்கொள்ள. 
 மேலும் சந்திராஷ்டம நாளில் உடலில் நீர் சத்து குறையாமல் பார்த்து கொள்வது முக்கியமான ஒன்று. அந்த நாட்களில் நிலவை தொடர்ந்து இருபது நிமிடங்கள் தரிசித்து வருவதும் நல்ல பலன் தரும். அதே போல் நம் தலை நடு உச்சி பாகத்தில் 20 முறை இடது கை ஆட்காட்டி விரலால் அழுத்தம் கொடுத்து கொள்வதும் நன்று. 

No comments:

Post a Comment