jaga flash news

Monday 7 December 2015

கோவில் கோபுரங்களின் கூம்புவடிவ ரகசியம்!

கோவில் கோபுரங்களின்
கூம்புவடிவ ரகசியம்!
கோவில் கோபுரங்களின் கூம்பு வடிவத்தில் அமைக்க‍ப்பட்ட‍தன் ரகசியம்
மெய்ஞானத்தால் உணர்த்த‍ப்படும் உன்ன‍த உண்மை!
கோபுரங்கள் கூம்பு வடிவத்தில் ஏன் அமைக்கப்பட்டு இருக்கின்றன? விண்ணில் விரவிக்கிடக்கும் நல் அலைகள் கோபுரத்தின் முக்கோண பரிமாண வடிவில்பட்டு , அங்கேயே சுழன்று கொண்டு இருக்கும்படி செய்வதற்காக, திட்டமிட்டே கோபுரங்கள் இந்த வடிவில் அமைக்கப்படுகின்றன.
மனதின் சக்தி, ஒவ்வொரு மனிதனுக்கும் வேறுபட்டது.அதே சமயம், அந்த மனசக்தியை ஒருநிலைப்படுத்திடவே மனிதனின்முன்னோர்கள், தெய்வீகசக்தியை பூமியில் சிலகுறிப்பிட்ட இடங்களில் குவியச்செய்து, அதன்மூலம் எல்லாமனிதர்களும் தத்தம் மனசக்தியை சமநிலைப்படுத்திட ஏற்பாடுகள் செய்திருந்தனர்.
அலைந்து திரியும் மனதுடன் ஒருவர் இருந்தாலும், சக்தி வாய்ந்த இந்த கோபுரங்கள் அமைக்கப் பெற்ற ஆலயத்தில் ஒருவர் நுழையும்போதே , அவரது மனது சாந்தியும், சந்தோ சமும் பெறுவது அங்கு நிலவும் இந்த தெய்வீக கதிர் வீச்சினால்தான்.

No comments:

Post a Comment