jaga flash news

Wednesday 23 December 2015

அஜீரணம்,வயிற்றுக்கோளாறுக்கு...

அஜீரணம்,வயிற்றுக்கோளாறுக்கு... நல்லதோர் மருந்து!
இன்றைய பரபர உலகில் பலரும் உணவு இடைவேளையின் நேரம் தவறுபவர்கள் ஆகிவிட்டோம். காலை சாப்பாட்டை 11 மணிக்கும், மதிய உணவை 3 மணிக்கும், இரவு உணவை நடு இரவுக்கும் நகர்த்திச் செல்கிறோம்.
தவிர, எண்ணெய்க் குளியல், செயற்கை சுவையூட்டிகள் என்று மாறிவிட்டன உணவுகள். விளைவு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயிற்றுப் பிரச்னைகளால் அடிக்கடி அவதிப்படுகிறோம். அதுபோன்ற சந்தர்ப்பங்களில் கை கொடுக்கும் நல்லதோர் தமிழ் மருந்துதான் இது..!
அதி மதுரம், அரிசி திப்பிலி, சித்தரத்தை, சுக்கு, மிளகு, சீரகம் தலா 100 கிராம், ஓமம் 200 கிராம், மஞ்சள் 20 கிராம், கடுக்காய் 50 கிராம், சோம்பு 25 கிராம். இவற்றை எல்லாம் வீட்டில் வெயிலில் காய வைக்கவும். பின்பு சிறு சிறு கட்டிகளாக உடைத்து மிக்ஸியில் போட்டு திரித்து, சலித்து வைத்துக்கொள்ளவும். இந்த மருந்து அஜீரணம், வாயு தொந்தரவு, வயிற்றுக்கோளாறு எல்லா பிரச்னைகளுக்கும் சிறந்தது. இதில் 1/4 டீஸ்பூன் எடுத்து தேன் விட்டுக் குழைத்துச் சாப்பிடலாம். அப்படியே வாயில் போட்டும் தண்ணீர் ஊற்றிக்கொள்ளலாம். காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்து, நீண்ட நாட்களுக்கு உபயோகிக்கலாம்; கெட்டுப்போகாது.
இனி வயிற்றில் தொல்லை என்றால், அதற்கும் ‘மெடிக்கல்’ ஓட வேண்டாம். சின்ன சின்ன உடற்தொந்தரவுகளை கை மருந்தில் குணப்படுத்தப் பழகுவோம்!

1 comment: