jaga flash news

Saturday 5 December 2015

ஜாமத்தில் பிறந்த நாள் கொண்டாடினால் ஆயுள் குறையும்!!

காலையில 6 மணி சூரிய உதயத்துக்கு பிறகுதான் நம் தமிழ் கிழமை (தேதி)மாறுகிறது.ஆனா ஆங்கில தேதி ராத்திரி 12 மணிக்கு அதாவது நம் தமிழ் கணக்குப்படி நடுநிசி அர்த்த ஜாமத்தில் பேய் உலவும் நேரத்தில் துவங்குகிறது...
நம்ம நாட்டு தட்பவெப்ப நிலை,சூரிய உதயம்,அஸ்தமனம் அடிப்படையில் உருவாக்கப்பட்டதுதான் தமிழ் காலண்டர்.தமிழ் மாதம்,கிழமை,நட்சத்திரம்,திதி எனப்படும் பஞ்சாங்கம் எல்லாம்..அதன்படி எதையும் செய்வது தான் சிறப்பு.
அதை விட்டுட்டு ராத்திரி 12 மணிக்கு பிறந்த நாள் கொண்டாடுறது,ஹேப்பி நியூ இயர்னு ராத்திரி 12 மணிக்கு பூசாரியை எழுப்பி சாமிக்கு பூஜை பண்ண சொல்றது...என்னதான் நடக்குது நம்ம ஊர்ல...இது இந்தியா..தமிழ்நாடு...!! இங்கிலாந்தோ,அமெரிக்காவோ அல்ல,
..ஜாமத்தில் பிறந்த நாள் கொண்டாடினால் ஆயுள் குறையும்!! சூரிய உதயத்தின் போது தெய்வ அருள் அதிகமாகும்.சந்திரன் வளரும் காலத்தில் செய்யும் காரியம் பன்மடங்கு விருத்தியாகும்!!

1 comment: