jaga flash news

Tuesday 15 December 2015

வெள்ளியங்கிரி மலை

வெள்ளியங்கிரி மலை
வெள்ளியங்கிரி மலை தமிழ்நாடு கோயம்புத்தூரிலிருந்து 40 கிமீ தொலைவில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர். தென்கயிலை என பக்தர்களால் அழைக்கப்படும்வெள்ளியங்கிரி மலையானது கொட்டும் பனியும், கை தொட்டு விளையாடும் உயரத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலை ஒரு புனிதத் தலமாகவும், சுற்றுலாத்தலமாகவும் இருந்து வருகிறது. இது மேகங்களும் சூழ, வெள்ளி வார்ப்படத்தால் மூடியது போல தோற்றமளிப்பதால் "வெள்ளியங்கிரி" என்ற பெயர் பெற்றது. இம் மலையடிவாரம் பூண்டி என அழைக்கப்படுகிறது. சுமார் 3500 அடி உயரமுடைய (கடல் மட்டத்திலிருந்து 5000 அடி,1524 m) இம்மலை ஏழு சிகரங்களைக் கொண்டுள்ளது. ஐந்தரை கிலோ மீட்டர் தூரம் செல்லும் இப்பாதையில் வெள்ளை விநாயகர் கோயில், பாம்பாட்டி சுனை, கைதட்டி சுனை, சீதைவனம், அர்ச்சுனன் வில், பீமன் களி உருண்டை, ஆண்டி சுனை போன்ற இடங்களை கண்டு மகிழ்ந்து செல்லலாம்.இரவில், மலையில் காட்டு யானைகள் மற்றும் விலங்குகளின் நடமாட்டம் தொடங்கிவிடும் என்பதால் இங்கிருந்து மாலையிலேயே திரும்பி விடுதல் பாதுகாப்பானது என்று சொல்லபடுகிறது ஆனால் அனைவரும் இரவில் பயணத்தை தொடங்கி அதிகாலை மலை உச்சிக்கு சென்று சேர்கிறார்கள். அதிக மக்கள் நடமாட்டத்தால் வனவிலங்குகள் அங்கு இருப்பதை தவிர்க்கின்றன.
வெள்ளியங்கிரி மலையடிவாரம் - யாத்திரை
ஜனவரி முதல் தேதி ஆரம்பித்து மே வரை வெள்ளியங்கிரி யாத்திரை மேற்கொள்ள உகந்த காலம். இந்தக் காலத்தில் மலை ஏறுவது எளிது. மற்ற காலங்களில் பனிப்புயல், கடுங்குளிர், மழை போன்ற சூழலில் மலையேறுவது ஆபத்தானது.
காலை 6 மணிக்கு புறப்பட்டால் சுமார் 10 லிருந்து 11 மணி அளவில் மலை உச்சியை சென்றடையலாம். தரிசனம், தியானம் செய்த பிறகு மதியம் 1 லிருந்து 2 மணிக்குள் இறங்கத்தொடங்கினால்சுமார்மாலை 6 மணி்ககு் மலையடிவாரத்திற்குசேர்ந்து விடலாம்.
பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் – உடனுறை மனோன்மணி அம்மன் திருக்கோவில், சித்தர்கள் வாழ்ந்த பூமி, சித்தர்கள் வாழும் பூமி, சிவரூபம், தபரூபம் தழைக்கும் ஆன்மீக மலையடிவாரம்.
பூண்டி சிற்றூர் – நீர், நெருப்பு, காற்று, பூமி, ஆகாயம் ஆகிய உலகைக் காக்கும் பஞ்ச பூதங்களின் அதிர்வுகள் ததும்பும் அருள்மிகு பஞ்சலிங்கேசன் திருக்கோவில் அமைவிடம். இயற்கையெழில் மிக்க பூண்டி மலைச்சாரல். வெள்ளியங்கிரி ஈசனின் உறைவிடம்.
தமிழ்நாடு மாநிலம் – பல்லாயிரக்கணக்கான கோவில்கள் நிறைந்த புண்ணிய பூமியாகும். ஆன்மிகச் சிறப்புமிக்க ஆலயங்கள், உயர்ந்து நிற்கும் கம்பீரமான கோபுரங்கள், கலையெழில் மிக்க மண்டபங்கள், நீண்ட நெடும் பிரகாரங்கள், கலைநயம் மிகுந்த சிற்பங்கள், வண்ணமிகு திருவிழாக்கள் – அனைத்தும் தமிழ்நாட்டின் கலாச்சாரப் பெருமைகள் ஆகும்.
தமிழகத்தின் கிராமிய மணம் திகழும் சிற்றூர்களில் அமைந்திருக்கும் சிறிய, சிறிய தொன்மையான கோவில்களும் ஆன்மீகச் சிறப்புகளை தன்னகத்தே கொண்ட சிறப்பிடங்களாகும். இதன் வழியில் கோவை மாவட்டம் பூண்டி மலையடிவாரம் அருள்மிகு வெள்ளியங்கிரி ஆண்டவர் – உடனுறை மனோன்மணி அம்மையார் திருக்கோவில் தொன்மைச் சிறப்பு கொண்ட இடமாகும். சித்தர்கள் வாழ்ந்த வெள்ளியங்கிரி மலையின் வாசற்படியாக பூண்டி திகழ்கிறது. ஆன்மீகச் சிறப்பு கொண்ட மலையடிவாரமாகவும் பூண்டி விளங்குகிறது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில், மேற்கு மலைத் தொடரில், வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் பூண்டி அமைந்துள்ளது. கோவையிலிருந்து 40 கி.மீ தூரத்தில் சிற்றூரான பூண்டி அமைந்துள்ளது. வெள்ளியங்கிரி மலைக்குச் செல்பவர்கள் பூண்டி அடிவாரத்திலிருந்து மலையேறிச் செல்ல வேண்டும். ஏழு மலைகள் சென்று, வெள்ளியங்கிரி ஈசனை, சுயம்புலிங்கத்தைத் தரிசிக்கலாம். இதற்கு முறையான பயணத்திட்டம் அவசியமாகிறது. வெள்ளியங்கிரி மலைப்பகுதி, பல்வேறு சித்தர்கள் உலவிய மலைப்பகுதி.மலை ஏறிச் செல்ல மூங்கில் தடியுடன் செல்வது உதவிகரமாக இருக்கும். தேவையான பொருட்கள், உணவு, குடிதண்ணீர் எடுத்துச் செல்வதும் வழக்கமாக உள்ளது. பெண்கள் இங்கு மலைப்பயணம் செல்ல அனுமதி இல்லை. தை முதல் தேதியிலிருந்து வைகாசி விசாகம் வரை மலைபயணம் செய்யலாம். மலைப் பயணம் அதிகாலை வேளையில் தொடங்குவது வழக்கமாக உள்ளது. வெள்ளியங்கிரி மலை கடல் மட்டத்திலிருந்து 6000 அடி உயரத்தில் 6 கி.மீ மலைப்பயண தூரத்தில் அமைந்துள்ளது.
சர்வம் சிவமயமாக விளங்கும் பிரபஞ்சத்தில் உத்திர கயிலாயம் சூட்சம நி்லையி்ல் அமைந்துள்ளது. மத்திய கயிலாயம் திபெத்தில் உள்ளது. தட்சிண கயிலாயம் வெள்ளியங்கிரி மலையாகும். இதனால் தென்கயிலாயம் என்றும் அழைக்கப்படுகிறது. சப்தரிஷிகளில் ஒருவரான சித்தர் அகத்திய முனி தவம்புரிந்த மலையாகும். வெள்ளியங்கிரி, அகத்திய பரம்பரையில் வரும் ஞானியர் அனைவருக்கும் வழிபாட்டுத்தலமாக விளங்குகிறது. ஆதி சங்கரர் வழிபட்ட இடமாகவும் போற்றப்படுகிறது.
சிவபெருமானே வந்து தவம் புரிந்த இடமென்றும், சித்தர்கள், யோகிகள், ஞானிகள் பலரும் காலங்காலமாய் தவம்புரிந்தும், வாழ்ந்தும்,சூட்சுமத்தில் இயங்கியும்வருவதால் இந்த மலை சிவரூபமாகும், தவரூபமாகவும் திகழ்கிறது. மகாயோகி பழனி சுவாமிகள், சிவயோகியார், சத்குரு ஸ்ரீபிரம்மா, அகோரி விமலானந்தா, அழுக்கு சாமியார், சௌந்திரபாண்டி சாமியார், காலாத்ரி சாமியார், மைசூர் சாமியார், எட்டிகொட்ட சாமியார், மிளகாய் சாமியார், மாரிமுத்து முதலியார், இராமானந்த பரதேசி ஆகியோர் உலவி மறைந்த புண்ணிய பூமி வெள்ளியங்கிரி மலையாகும்.
முதல் மலை
பிரணவ சொரூபம்
வெள்ளிவிநாயகர் உறைவிடம்
இரண்டாம் மலை
சுவாதிஷ்டானம்
பாம்பாட்டிச் சுனை
மூன்றாம் மலை
மணிப்பூரகம்
அக்னிஅம்சம், கைதட்டிச்சுனை
நான்காம் மலை
அநாகதம்
ஒட்டர் சித்தர் சமாதி உள்ள இடம்
ஐந்தாம் மலை
விசுக்தி நிலை
பீமன் களியுருண்டை மலை
ஆறாம் மலை
ஆக்ஞை நிலை
சேத்திழைக்குகை, ஆண்டி சுனை
ஏழாவது மலை
சஹஸ்ரஹாரம்
சுயம்புலிங்கம், (வெள்ளியங்கிரி
ஆண்டவர்)
பூண்டியை அடிவாரமாகக் கொண்ட வெள்ளியங்கிரியின் ஏழு மலைகளிலும் மனி்த உடலில் உள்ள மேற்கண்ட ஏழு சக்கரங்களின் அம்சங்கள், ஒவ்வொரு மலையிலும் ஒவ்வொரு ஆதாரத்தின் அம்சமா௧ அடங்கியுள்ளதாக் ஆன்மீகச் சான்றோர்கள சொல்வதுண்டு்.

No comments:

Post a Comment