jaga flash news

Tuesday 8 December 2015

வக்கிரம்

வக்கிரத்தின் போது கிரகத்தின் நிலை
=================================
ஒரு கிரகம் வக்கிரம் பெறும் போது பூமிக்கு சமீபத்தில் அல்லது நெருங்கி இருக்கும். உதாரணமாக, இன்று 31 ஆகஸ்ட் 2015 அன்று சுக்கிரன் வக்கிரம். அவ்வாறு வக்கிரம் பெற்ற பொழுது, சுக்கிரன் பூமிக்கு அருகில் இருப்பதாய் படத்தில் காணலாம். அது போலவே 14 மே 2015 அன்று சனி வக்கிரம், அப்பொழுது பூமிக்கு நெருக்கத்தில் சனி இருப்பதை பாருங்கள்.
வக்கிர கிரகம் பலன் தரும் சூட்சுமம்
=================================
வக்கிரம் என்றால் சமஸ்கிருதத்தில் "வளைந்து செல்லுதல்" (பெண்டிங் movement ) அல்லது சட்ட புறம்பான செயல் (Crooked) அல்லது இயற்கைக்கு புறம்பான இயக்கம் (Devious) என்று அர்த்தம்.
எனவே, கிரகங்களுக்கு காலத்தால் கொடுக்க பட்ட ஆதிபத்தியம் (சட்டம் (அ ) உரிமை) மறந்து, அதற்கு புறம்பாக மாற்றி செய்தல் என்று அர்த்தப்படுத்தபடுகிறது.
லக்ன பலன் நிர்ணயம்
======================
ஒவ்வொரு வீட்டின் ஆதிபத்தியமும், லக்ன புள்ளியில் இருந்து தொடங்கி, பாவம் அமைகிறது. அவ்வாறு அமையும் பாவத்தின் அதிபதிகள் ஆதிபத்திய கடமைகளை செய்ய நியமிக்கபடுகிறார்கள்.
ஆனால், வக்கிரம் பெறும் கிரகம், இயற்கை நியமிக்கும் தன் ஆதிபத்திய (கடமையை) வேலையை செய்யாது, அதற்கு மாறாக செயல்பட ஆரம்பிகிறது. ஆதாவது லக்ன பாவி லக்ன சுபராகவும், லக்ன சுபர் லக்ன பாவரகவும் செயல்பட ஆரம்பிகிறார்கள். அது மட்டும் இல்லாமல், ஜோதிடத்தின் அடிப்படை விதியான, ஒரு வீட்டில் அமரும் கிரகம் அந்த வீட்டின் செயலை செய்யும் என்ற விதியை மீறி, வக்கிர கிரகங்கள் அமரும் வீட்டின் பலனை தர மறுக்கும் அல்லது தாமதபடுத்தும். இதில் இருந்து வக்கிர கிரகம் இயற்கைக்கு புறம்பான வக்கிர செயல்களை செய்கிறது.
வக்கிரம் பெற்ற கிரகம், லகன தொடர்பு அறுபட்டாலும், அதன் காரகத்துவம் பாதிக்க படுவதில்லை. எனவே தன் காரகத்துவம் முழுமையாக லக்ன பாவி அல்லது லக்ன எதிரி என்று பாரபட்சம் பாராமல் தன் காரகத்துவதை வெளிபடுத்தும். எனவே, சில லக்னத்திற்கு,இயற்கை சுபர்கள் , லக்ன பாவியாக வரும் போது, வக்கிரம் பெற்றால், நல்ல பலனை பெறுகிறார்கள்.
வக்கிர கிரகம் கிரகணத்தால் பாதிக்குமா?
======================================
வக்கிரம் பெறும் கிரகம், கிரகண பாதிப்பு அடைவதில்லை, கேந்திரதிபதிய தோசமும் பெறுவதில்லை. காரணம் கிரகணம் என்பது பூமிக்கு இணையாக அல்லது சம நிலை தொடர்பு பாகையில் (Rational Dependency ) வலம் வரும் கிரகங்களே கிரகணப்படும். அதன் காரணத்தாலே சூரியன் மற்றும் சந்திரன் அனைவருக்கும் பொதுவானலும், முழு சூரிய மற்றும் சந்திர கிரகணம், நாட்டின் எல்லா பகுதியிலும் ஒரே நேரத்தில் தெரிவதில்லை. எனவே வக்கிரம் என்பது கிரகத்தில் நகர்வில் ஏற்படும் பாகை தொடர்பற்ற நிலை (Degree level in-dependency) ஒரு நாட்டின் குறிப்பிட்ட பாகையில் தெரியும் கிரகணம். இன்னொரு நாட்டில் அதே பாகையில் தெரிவதில்லை. எனவே, பூமியில் இருந்து பின்னோக்கி செல்லும் மாய தோற்றம் ஏற்படுத்தும், வக்கிர கிரகம் கிரகணத்தில் பாதிப்படைவதில்லை.
கேந்திர ஆதிபத்திய தோசம் போக்கும் வக்கிர நிலை
=====================================
கேந்திரதிபதிய (கேந்திர + ஆதிபத்தியம்) தோசம், கேந்திரத்தில் உள்ள வக்கிரம் பெற்ற சுப கிரகம் , ஆதிபத்திய வேலைகளை செய்யாத காரணத்தால், கேந்திர ஆதிபத்திய தோசம் பெறுவதில்லை. கேந்திரத்தில் வக்கிரம் பெற்ற கிரகத்துடன் சேரும் இன்னொரு சுப கிரகமும் கேந்திர ஆதிபத்திய தோசம் தருவதில்லை.
எனவே, பொதுவாக லக்ன பாவியாகிய இயற்கை சுப கிரகம் வக்கிரம் பெற்றால், மிகுந்த நன்மையையும். லக்ன சுபராகிய இயற்கை சுப கிரகம் வக்கிரம், ஜாதகருக்கு தீமையையும் அல்லது மத்திம பலன்களை தன் திசை புத்திகளில் தரும்.

No comments:

Post a Comment