jaga flash news

Friday 4 December 2015

பழமொழிகள்---- வாழ்க்கை சிந்தனைகள்

பழமொழிகள்---- வாழ்க்கை சிந்தனைகள்
தமிழ் ஒரு வளமான மொழி. இதில் இருபதாயிரத்துக்கும் மேலான பழமொழிகள் உள்ளன. பழமொழிகள் ஆழமான கருத்துடைய சிறிய சொற்றொடர்கள் ஆகும். எழுத்தறிவில்லாத பாமர மக்களும் கூட இவைகளைச் சரளமாகப் பயன்படுத்துகிறார்கள். தமிழ் மொழியைப் போல வேறு எந்த மொழியிலாவது இவ்வளவு பழமொழிகள் இருக்குமா என்பது கேள்விக்குறியே.
இனி இந்து மதத் தத்துவங்களை விளக்கும் சில பழமொழிகளைப் பார்ப்போம்.
1. தலைக்கு வந்தது தலைப் பாகையோடு போனது
மஹாபாரதத்தில் கர்ணன் விட்ட பிரம்மாஸ்திரத்திலிருந்து அர்ஜுனனை கிருஷ்ணன் எப்படிக் காப்பற்றினான் என்ற கதை எல்லோருக்கும் தெரியும். தேரின் கால் சக்கரத்தை நிலத்தில் புதையுமாறு கிருஷ்ணன் அழுத்தியதால் அர்ஜுனன் உயிர் பிழைத்தான். அர்ஜுனனின் தலையை நோக்கி வந்த பிரம்மாஸ்திரம் அவனது தலைப்பாகையை மட்டும் பறித்துக்கொண்டு போனது. இத்தோடு அர்ஜுனனின் மமதையும் அழிந்தது. அது வரை தன்னுடைய வில் திறத்தால்தான் வெற்றி கிடைத்தது என்று நினைத்து வந்தான். இந்த சம்பவத்தின் மூலம் கிருஷ்ணன் அவனுக்கு பெரிய உண்மையை உணர்த்தினான். இதிலிருந்தே இந்தப் பழமொழி வந்ததது. இப்போது யாருக்கு ஒரு பெரிய ஆபத்து வந்து அதிலிருந்து பிழைத்தாலும் இப்பழமொழியை நாம் பயன் படுத்துகிறோம்.
2.. ஆற்றிலே போட்டுவிட்டு குளத்திலே தேடுதல்.
ஏதெனும் ஒன்றைத் தொலைத்து விட்டு சம்பந்தமில்லாத இடத்தில் தேடும்போது
இதைக் கூறுவது வழக்கம். ஆனால் உண்மையில் இது சுந்தரர் வாழ்க்கையில்
உண்மையிலேயே நடந்த சம்பவத்தின் அடிப்படையில் பிறந்த பழமொழியாகும். அவர் திருமுதுகுன்றம் என்னும் ஊரில் சிவனை வழிபட்டு பன்னீராயிரம் பொற்காசுகளைப் பெற்றார். அதை பத்திரமாக திருவாரூருக்கு தூக்கி வருவது பிரச்சனை ஆகி விடவே மீண்டும் சிவனிடம் முறையிட்டார். இதை மணிமுத்தா நதியில் போட்டுவிட்டு திருவாருர் குளத்தில் பெற்றுக் கொள்க என்று சிவ பெருமான் ஆணையிட்டார். சுந்தரரும் அப்படியே மணிமுத்தா நதியில் பொற்காசுகளைப் போட்டுவிட்டு அவைகளைத் திருவாரூர்க் குளத்தில் மீட்டுக் கொண்டார். இறைவன் அருள் பெற்ற அடியார்களால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை.
3..கெடுவான் கேடு நினைப்பான்
ஓர் காட்டில் கெட்ட சுபாவமுள்ள தேள் ஒன்று வசித்து வந்தது. அந்தக் காட்டின் நடுவில் ஒரு நீரோடை இருந்தது.அந்தத் தேளுக்கு இக்கரையில் இருந்து அக்கரைக்கு போக வேண்டி இருந்தது.
அக்கரைக்குப் போவதற்காக அந்த நீரோடையில் இருக்கும் பெரிய மீன்கள், நண்டு, தவளை போன்றவைகளிடம் தேள் உதவி கேட்டது, ஆனால் அந்த பொல்லாத தேள் தமக்குக் கொட்டிவிடும் என்று அவை மறுத்து விட்டன.எப்படி நீரோடையைக் கடப்பது என்று தேள்யோசித்துக்கொண்டு இருந்தபோது அந்த நீரோடையில் ஆமை ஒன்று வந்து கொண்டிருந்தது. ஆமையைக் கண்ட தேள்.
ஆமையாரே! நான் அக்கரைக்குச் செல்லவேண்டும் என்னை அங்கு கொண்டு போய் விட்டு விடுவீரா? என்று கேட்டது.
நானும் அக்கரைக்குத்தான் போகிறேன், என் முதுகில் ஏறிக்கொள்ளும் உம்மை நான் அக்கரையில் விட்டுவிடுகிறேன்! என்றது ஆமை,தேளும் ஆமையின் முதுகில் ஏறிக்கொண்டது
ஆமை நீரில் நீந்திச்செல்ல அரம்பித்தது
சிறிது தூரம் தான் ஆமை சென்றிருக்கும்
தேளுக்கு ஒரு யோசனை வந்தது ,நான் பல பேரைக கொட்டியிருக்கிறேன்.
அவர்கள் வலியால் துடித்ததையும் பார்த்திருக்கின்றேன்.
ஆனால நான் ஒரு நாளும், ஆமைக்கு கொட்டவில்லை ,இந்த ஆமையைக் கொட்டினால் எப்படித் துடிக்கும்?இதை விட்டால் வேறு சந்தர்ப்பம் கிடையாது .என்று ஆமைக்கு கொட்டிப் பார்க்க நினைத்ததுதேள் ஆமையின் முதுகில் கொட்டியது .அனால் ஆமை பேசாமல் போய்க்கொண்டிருந்தது..உடனே தேள் ஆமையைப் பார்த்து,ஆமையாரே! உமது முதுகு கடினமாக இருக்கிறதே. உமது உடம்பில் வலியே வருவதில்லையா? என்று கேட்டது.
தேளின் கெட்ட எண்ணத்தைப் புரிந்துகொள்ளாத ஆமை , எனது முதுகு கடினமான ஓட்டினால் மூடப்பட்டுள்ளது அதனால் எனக்கு அந்த இடத்தில் வலியே வருவதில்லை.
ஆனால் எனது கழுத்துப்பக்கம் மென்மையாக இருக்கும் . இதில் தான் எனக்கு வலிகள் காயங்கள் ஏற்படும் என்று சொன்னது ஆமை.
ஓகோ ;அப்படியா?என்று கேட்ட தேள் ,மெதுவாக ஆமையின் கழுத்துப் பகுதியை நோக்கிச் சென்றது . கழுத்தில் இருந்து தலைப்பகுதிக்குச் சென்ற தேள் ஆமைக்கு கொட்ட ஆரம்பித்தது...தலையில் ஏதோ குத்தியதால் விடுக்கென்று தலையை உள்ளே இழுத்துக் கொண்டது ஆமை .தேள் நீரோடையில் விழுந்து விட்டது.தனக்கு உதவி செய்த ஆமைக்கு கேடுவிளைவிக்க நினைத்த தேள் .தண்ணீரில் மூழ்கி இறந்தது .ஆமை கரையை நோக்கி நீந்திச் சென்றது.
சில பழமொழிகள்...
அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்.
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.
உடல் உள்ள வரையில் கடல் கொள்ளாத கவலை.
கடவுளை நம்பினோர் கைவிடப் படார்.
கேடு வரும் பின்னே, மதி கெட்டுவரும் முன்னே.
சாது மிரண்டால் காடு கொள்ளாது.
சுவரை வைத்துதான் சித்திரம் வரையவேண்டும்.
சுவாமி வரங் கொடுத்தாலும் பூசாரி இடங்கொடுக்க மாட்டான்.
தருமம் தலைகாக்கும்.
தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும்.
நடந்தால் நாடெல்லாம் உறவு , படுத்தால் பாயும் பகை.
நல்லவன் என்று பெயர் எடுக்க நெடுநாட் செல்லும்.
நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும்.
நேற்று உள்ளார் இன்று இல்லை.

No comments:

Post a Comment