jaga flash news

Tuesday, 1 December 2015

ப்ரஹ்மம்

இருப்பது ப்ரஹ்மம் மட்டும்தான். வேறு எதுவுமே இல்லை. பற்பல தெய்வங்கள் இல்லை. எதுவும் இல்லை என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஒருவேளை அது சரி என்றாலும், இல்லாத கடவுள்களுக்கு ஏன் இத்தனை ஆராதனைகளும், திருவிழாக்களும்?"
திருவிழாக்கள் தெய்வத்திற்கு என்று யார் கூறியது. நம் சனாதன மதமான ஹிந்து தர்மத்தில் நீங்கள் இறைவனுக்கு செய்யும் எதுவும் இறைவனுக்கு அல்ல, நீங்கள் செய்வது அத்தனையும் உங்களுக்கத்தான். உங்கள் மன அமைதிக்குத்தான்.
மனிதனை எவ்வாறெல்லாம் அமைதியாக வாழவைக்கலாம் என்று தீர்கமாக சிந்தித்து, ரிஷிகளும் மகான்களும் உருவாக்கியதே நம் சனாதன தர்மமாகும். நாம் கடைபிடிக்கும் மார்கத்தை மதம் என்பது தவறாகும். நாம் பின்பற்றுவது "தர்மத்தை", சனாதன தர்மத்தை. அதாவது "மிகவும் தொன்மையான வாழ்வியல் அறநெறியை"
அதிகம் பணம் படைத்தவன் இன்னும் பணம் வேண்டும் என்று பேராசை படுகிறான். பணம் இல்லாதவன் உயிர் காக்க தன்மானம் விட்டு பொருளுக்காக ஈகைவேண்டி நிற்கிறான்.
பணம் படைத்தவனும், இல்லாதவனும் பணம்,பொருள் பொருட்டு தங்கள் சூழலுக்கு தகுந்தவாறு ஏமாற்றுவது, பொய், பித்தலாட்டம், திருடு.... என்று எப்படிவேண்டுமானாலும் பணம் ஈட்ட நினைக்கிறான்.
அதோடு கருமித்தனம் என்பது அனைத்து மக்களுக்குமே பொதுவான ஒரு தாழ்ந்த குணமாகவும் இருக்கின்றது. பொய், திருட்டு இவைகளுக்கு ஒப்பான ஒரு குற்றமே கருமித்தனமும். ஆம்! கருமித்தனத்தை நான் குற்றம் என்று கூறுகிறேன். பணமோ பொருளோ ஈட்டுவது நமக்கும் மற்றவருக்கும் உபயோகிக்கத்தான். உங்களுக்கும் இல்லாமல், பிறருக்கும் இல்லாமல் யாருக்கும் உபயோகப்படாமல் இருக்கும் உங்கள் சொத்தும் பணமும் ஒருநாள் திருடர்களாலும் கரையாங்களாலும் சூறையாடப்படும். மறவாதீர்.
இவைகள் அனைத்தையுமே தவிற்கும் வண்ணமாகவும், சம்பாதிப்பவர்கள் மகிழ்ச்சியாக அதுவும் மிக முக்கியமாக இதில் ஈட்டப்படும் பணம் "அறநெறியில்" தங்கள் பொருளை செலவு செய்யவும், இல்லாதவர்கள் தொழில் செய்து சம்பாதிக்கவும் உருவாகப்பட்டதே திருவிழாக்கள். மேல்நாடுகளில் சொந்தபந்தம், உறவுகள் என்பது வீணனா ஒன்றக கருதப்படுகிறது. ஆனால் நம் பாரத பண்பாட்டில் நம்மைக்காடிலும் பிறருக்குத்தான் முக்கியத்துவம் தர நாம் விழைகிறோம். நமக்கு அடுத்தவேளை உணவு இல்லாவிடினும் ஏழ்மையில் இருக்கும் தங்கள் உறவுகளை உணவளித்து "அன்றைய மக்கள்" அரவணைத்தனர். இந்த உயர்ந்த பண்பாடு வேறு எந்த நாட்டில் உள்ளது? உறவுகளுடன் கலந்து குழுக்கலாக கொண்டாடுவது எத்தனை மேன்மை!!! (ஆனால் இன்று இந்நிலை தலைகீழாவது வருத்தம் தரும் ஒன்று)
ஏனைய மதங்களில் வருடத்திற்கு நான்கு அல்லது ஐந்து விழாக்கள் வருவதே அதிகம். ஆனால் நம் சனாதன மார்கத்தில் எத்தனை எத்தனை திருவிழாக்கள். புத்தாடைகள் உடுத்தி, உறவுகளுடன் கூடி களிக்க, சித்திரைத்திருநாள், தீபாவளி போன்றவையும்,
விவசாயிகளின் முன்னேற்றதிற்காகவும், குயவர்களின் திறனை பாராட்டவும், புத்துப்பானையில் பொங்கும் தித்திக்கும் தைப்பொங்கலும், கார்த்திகை தீபமும்,
என்னென்ன உணவு வகைகள் உள்ளதோ அத்தனையையும் சமைத்து, இறைவனுக்கு படைத்து நாம் நம் "சுற்றத்துடனும், நண்பருடனும், உறவுகளுடனும் சுவைத்து கொண்டாட " கிருஷன ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி,
ஸ்ரீ ராம நவமி, தீபாவளி நோன்பு, காரடையான் நோன்பு உள்ளிட்ட ஆயிரம் உள்ளன.
வருடத்திற்கு மட்டுமா? மாதம்தோறும் திருவிழா தான்.
சித்திரையில், முழுநிலவு கொஞ்சும் சித்திரா பௌர்ணமி
வைகாசியில், தமிழ்க்கடவுளாம் முருகனுக்கு விசாகம்
ஆணியில், நடராசப்பெருமானுக்கும்,
அரங்கநாதனுக்கும் திருமஞ்சனம்.
அடியில் ஆண்டாளுக்கு ஒரு பூரமும், நீர்நிலைகலுக்கு நன்றி தெரிவிக்க ஆடிபெருக்கும்
ஆவணியில், தங்கள் தங்கள் குலாசாரத்தை நிலைநாட்டும் அவிட்டம். முழுமுதற் கடவுலாம் விநாயகருக்கு விநாயக சதுர்த்தி. இங்கு நாம் சற்று கூர்ந்து நோக்க வேண்டும். ஆடியல் பலத்த பாற்றானும், ஆவணியில் மழையாலும் குயவர்கள் மண்பாண்டங்களை சூளையில் ஏற்ற முடியாது. அதனால் நம் முன்னோர்கள் குயவர்கள் அந்த மாத பிழைப்புக்காக விநாயகரை களிமண்ணால் செய்து வழிபடும் முறையை உருவாக்கினர். எருக்கம்பூவை நாம் என்றுமே மதிப்பதில்லை. ஆனால் அன்று ஒருநால்மட்டும் நரிக்குறவர் விற்கும் எருக்கன்மாலையை பணம் கொடுத்து வாங்குகிறோம். இதுவும் அவர்கள் பொருட்டே.
புரட்டாசியில், பெண்களின்றி உலகமில்லை என்று உணர்த்தும் தாயின் நவராத்திரி விழா
ஐப்பசியில் தீபாவளியும், முருகனுக்கு ஸ்ரீகந்தசஷ்டியும்
கார்த்திகையில் புது விளக்கால் நம் இல்லங்களையும் வாழ்வையும் செழிப்பாக்க திருக்கார்த்திகை தீபத்திருநாள்
மார்கழியில் ஆருத்ராதரிசனம், வைகுண்ட ஏகாதசியும்
தையில் தமிழருக்கே சிறப்பான பொங்கலும், தைபூசமும்
மாசியில் மகாசிவராத்திரியும்,
இன்னும் எத்தனையோ திருவிழாக்கள் வேறு எந்த நாட்டில் உள்ளது?
மாதாமாதம் மட்டுமே? இல்லை நாள்தோறும் தான்..
திங்கட்கிழமை:- சிவபெருமானுக்கு சோமவார வழிபாடு
செவ்வாய்கிழமை:- அம்பாளுக்கு மங்கலவார வழிபாடு
புதன்கிழமை:- திருமாலுக்கு புதவார வழிபாடு
வியாழக்கிழமை:- குருவிற்கு குருவார வழிபாடு
வெள்ளிக்கிழமை:- விநாயகருக்கு சுக்ரவார வழிபாடு
சனிக்கிழமை:- திருமாலுக்கு சனிவார வழிபாடு
ஞானயிற்றுக்கிழமை:- சூரியநாராயனனுக்கு வழிபாடு
இப்படி வருடம் முழுதுமே திருநாளாக மக்களை வாழவைக்கும் மதம் உலகில் வேறு எங்கு உள்ளது?
இன்று அவ்வாறான விழாக்கள் இளைஞ்ஞர்களிடையே புகட்டப்படாததால் சம்பாதிக்கும் பணம் மது, மாது, சூது, என்று தவறான வழியில் செலவிடப்படுகிறது.
அதுமட்டுமல்ல. திருவிழாக் காலத்தில் நம் வீட்டையும் நம் வீட்டை சுற்றியுள்ள இடத்தையும் நாம் சுத்தம் செய்வோம். அவ்வாறு அனைவரும் செய்யச் செய்ய சமூகமே சுத்தமானதாக விளங்கும்.
கூறி மாளாது நம் சனாதன தர்மத்தின் மேன்மையை. ஆயிரத்தில் ஒரு பங்கைக்கூட இங்கு நான் கூறவில்லை.

No comments:

Post a Comment