இதையெல்லாம் கண்டிப்பாக வெளியே சொல்லாதீர்கள்
உங்கள் வீட்டில் திருமணம் நடக்க உள்ளது என்றால் திருமணதேதி குறிக்கும் வரைக்கும் வெளியே சொல்லாமல் ஏகசியமா வைங்க
வீட்டுக்கு திடீர் பணம் வரவு வந்தால், அதை கண்டிப்பாக யாரிடமும் சொல்லாதீர்கள்.
*கணவன் மனைவி பரஸ்பர அன்பு சண்டைஉரையாடல்.காதல் என எதையும் வெளிப்படுத்தாதீர்கள்.
ஏழைக்கு கொடுத்த உதவியை வெளியே சொல்லாதிங்க. அவர்களுக்கு தெரிந்தால்,மிகவும் வேதனை அடைவார்கள்.
இது யாருக்கும் பிடிக்காத கசப்பான உண்மைதான்.கணவன் வீட்டு விஷயங்களை தாய் வீட்டுக்கு சொல்லாதிங்க. ஆனா நீங்க கேட்க மாட்டீங்க
மகன் தவறான பழக்கத்தில் சிக்கினால்,அதை ஒருபோதும் வெளியே தெரிய விடாதீர்கள்.என்றாவது ஒருநான் அவன் மாறுவான். ஒரு முறை கெட்ட பெயர் எடுத்து விட்டால்,அதை மீண்டும் சரி செய்ய முடியாது
வேறு வழி இல்லாமல் கடன் வாங்கினால்.அதை ஒருபோதும் வெளி காட்டாதீர்கள் முக்கியமாக உங்கள் வீட்டு கஷ்டநிலைகளை யாரிடமும் பயிர்ந்து கொள்ளாதீர்கள் உங்கள் கஷ்ட நிலை தெரிந்தால்,உங்களுக்கு உதவி செய்ய மனமில்லாமல் போகும்.
Mon. 19, Jan. 2026 at 7.59 pm.
ReplyDelete*சைவ சித்தாந்தம் *
*அத்துவிதம் :*
அத்துவிதம் என்பதன் பொருள் - இறைவன் உயிர்களோடும் உலகத்தோடும் ஒன்றாய், வேறாய், உடனாய் இருக்கும் நிலை அத்துவிதம் எனப்படும்.
*அத்துவா :*
அத்துவா என்பதற்கு - *வழி* என்று பொருள்.
அதாவது வழி என்பது உயிருக்குக் கன்மம் வந்து சேரும் வழியாகவும்....
உயிர் இறைவனை அடைதற்குரிய வழியாகவும் இருப்பதாகும்.
*அத்துவாக்கள் ஆறு வகைப்படும். அவை : எழுத்து, சொல், மந்திரம், தத்துவம், புவனம், கலை என்பனவாகும்.
ஆறு அத்துவாக்களும் எவ்வாறு வழி வகுக்குகிறதெனில்...
உயிரானது... மனத்தாலும், காயத்தாலும் *கன்மங்களை* ஈட்டிக் கொள்கிறது. இவ்வாறு மனத்தால் ஈட்டுவதற்கு மனம் முதலிய தத்துவங்கள் வழிகளாய் இருக்கிறது.
வாக்கால் ஈட்டுவதற்கு... வன்னம், பதம் மந்திரம் அதாவது எழுத்து, சொல், சொற்றொடர் என்ற மூன்றும் வழிகள் ஆகும்.
காயத்தால் ஈட்டுவதற்கு - புவனங்கள் வழிகளாகும்.
இவ்வைந்தையும் தம்முள் அடக்கி கொண்டு அவற்றிற்குத் தாரகமாயிருப்பது ஐந்து கலைகள்.
இவ்வாறு கன்ம ஈட்டத்திற்கு இவ் ஆறும் வழிகளாய் இருப்பதுவே அத்துவாக்கள் எனப்பட்டன.
மட்டுமல்லாமல் கன்ம ஈட்டத்திற்கு வழிகள் ஆதல்போல... ஆன்மாக்கள் கட்டுற்று நிற்றதலினின்றும் நீங்கி, படிப்படியாக விடுதலை அடைதற்கும், இந்த ஆறும் படி வழிகள் போல இருத்தலினால் இவை அத்துவா எனப் பெயர் பெற்றது.
ஏன் அத்துவா என்ற பெயர்க்கு உரித்தாகினது என்றால் - மனம் வாக்குக் காயங்களால் இறைவனை நினைத்தும், துதித்தும், வழிபட்டும் அவனருள் பெற்று உய்தல் இவற்றின் வழியே நடைபெறுகிறது. ஆதலின் இவை ஆறும் அத்துவா என்ற பெயர்க்கு உரித்தாயின.
*சிறப்பு * நிருவாண தீக்கையின் சிறப்பு விளக்கப்படுகிறது. அதாவது நிருவாணத் தீக்கை, தன்னைப் பெற்ற பக்குவ ஆன்மாவை சிவமாந்தன்மை எய்துவிக்கும் சிறப்புடையது.
*அவத்தை *
ஓர் உடல் பல கருவிகளின் சேர்க்கைகளால் ஆனது. அவ்வுடலானது வருதலும், நிற்றலும், அழிதலும்... அதில் பொருந்தியுள்ள உயிரின் வினைக்கீடாக அமைதல் போல, உடல்கள் நிற்கின்ற காலத்திலும் கருவிகளில் சிலவும் பலவும் *வினைக்கீடாகச் செயல்படாது ஓய்ந்து நிற்கும். அப்போது அவை நீங்கலாகச் செயற்படும் கருவிகளின் ஏற்றக் குறைவால் உயிரின் அறிவு வேறு வேறு நிலைகளை அடையும். அவையே "அவத்தைகள"' எனப்படும்.*
*அவத்தை ஐந்து வகைப்படும். அவை : *சாக்கிரம்(நனவு), சொப்பனம்(கனவு), சுழுத்தி(உறக்கம்), துரியம்(பேருறக்கம்), துரியாதீதம்(உயிர்ப்படங்கல்).* இவ் ஐந்தும் *காரிய அவத்தை* எனப்படும்.
அவத்தைகளில் காரண அவத்தை என்பது - கேவலம், சகலம், சுத்தம் இம் மூன்றும் காரண அவத்தைகள்.
இதில் *கேவலம் என்பது - ஆணவம் மட்டும் இருந்த நிலை..
சகலம் என்பது - மும் மலங்களும் கூடிய நிலை.
சுத்தம் என்பது - மும் மலங்களும் நீங்கப் பெற்று, பிறவி ஒளிந்து, இறைவனோடு கலந்திருக்கும் நிலை.
Meet you....!
Sivajansikannan78@gmail.com