jaga flash news

Monday, 17 August 2026

சுந்தர காண்டத்தின் பலன்கள்



சுந்தர காண்டத்தின்

பலன்கள்

சுந்தரகாண்டம் படிப்பதன் மூலம்

வேதம் புகழ்

பணம்

பெயர்

மனநிம்மதி

தைரியம்

*புண்ணியம்

போன்ற பல நன்மைகள் கிடைக்கும்

ஸ்ரீ ராமாயனய்

ராமாயணத்தில் மொத்தம் 24 ஆயிரம் சுலோகர்கள் உள்ளன அதில் 285 ஸ்லோகங்கள் சுந்தரகாண்டத்தில் இருக்கிறது சுந்தரகண்டத்தை நாம் எந்த அளவுக்கு படிக்கிறோமோ அந்த அளவுக்கு பகவானை நெருங்குகிறோம் என்று அர்த்தம் என சாஸ்திரம் கூறுகிறது

குறிப்பு

பெண்கள் வீட்டுக்கு தூரமாக இருக்கும் நாட்களில் மட்டும் சுந்தரகாண்டம் படிக்கக் கூடாது என்று கூறுகிறது சாஸ்திரம்


+

12 comments:

  1. சூப்பர். அருமை அய்யா

    ReplyDelete
  2. Tue. 8, Sep. 2026 at 8.27am.

    *சைவ சித்தாந்தம் :*

    *பஞ்ச கிருத்தியங்கள்* என்பது - ஐந்தொழில்கள்.
    அவை : படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்.

    *திரோபவித்தும்* என்பது - மறைத்தும்.
    மறைத்தலாவது - சிவன்... ஆன்மாக்களுக்குப் போகங்களைப் புசுப்பித்துக் கன்மங்களைத் தொலைப்பிக்குமளவும் தன்னை மறைத்துப், பிரபஞ்சத்தை மெய்யாக்கிக் கன்மங்களை ருசிப்பித்து அவற்றை அக்கன்ம பலன்களாகிய போக்கியப் பொருளில் அழுந்தச் செய்தல்.

    *அனுக்கிரகித்தும்* என்பது - அருள் செய்தும்.
    அருளலாவது - மலபரிபாகமுற்ற ஆன்மாக்களைச் சிவபிரான் தனது திருவடியிலே சேர்த்துக் கொள்ளுதல்.

    *உபாதானத்திரயங்கள்* என்பன - சுத்தமாயை, அசுத்த மாயை, சுத்தாசுத்த மாயை.

    *திதித்தும்* என்பது - காத்தும்.
    காத்தல் ஆவது - ஆன்மாக்களுக்குக் கன்மங்களைப் புசுப்பித்து இயல்பிலே மலபாகம் வருவித்தற் பொருட்டு அவற்றை நிலைபெறச் செய்தல்.

    *சங்கரித்தும்* என்பது - அழித்தும்.
    அழித்தலாவது - கன்ம மலம்... பரிபாகமாதற் பொருட்டும், தனுவாதிகளைத் தோற்றுவிக்கும்... சத்தி குன்றிய மாயைக்குத் திரும்ப சாமர்த்தியமுண்டாக்குதற் பொருட்டும், தனுகரணாதிகளுடன், சனன (பிறப்பு) மரணங்களில் கூடுதல் பிரிதல் முதலிய தொழில் வேறுபாட்டால் அலைப்புண்ட ஆன்மாக்களை இழைபபாற்றுதல்.

    *இச்சை* என்பது - இச்சா சத்தி.
    இச்சா சத்தி என்பது - சிவபெருமான் ஆன்மாக்களை இரட்சிக்கத் திருவுளம் கொண்டபொழுது அந்த நினைவெழுந்த அவசரத்துக்கு *இச்சா சத்தி* என்று பெயர்.

    *ஞானம்* என்பது - ஞானசத்தி.
    ஞானசத்தி என்பது - ஆன்மாக்களை இரட்சிக்க இச்சை கொண்ட சிவபெருமான் , அவ்வான்மாக்களுக்குரிய வினைப்பயன்களை அறிந்த அவசரத்திற்கு *ஞானசத்தி* என்று பெயர்.

    *கிரியை* என்பது - கிரியா சத்தி.
    கிரியா சத்தி என்பது - ஞானசத்தியில் அறிந்த வினைப் பயன்களை ஆன்மாக்களுக்கு ஊட்டும் பொருட்டு, அவர்களை பிரபஞ்ச காரியப்படுத்தும் அவசரத்துக்குக் *கிரியாசத்தி* என்று பெயர்.
    sivajansikannan4@gmail.com.

    ReplyDelete
  3. Tue. 8, Sep. 2026 at 5.33 pm.

    *பதினோரு திரவியங்கள் :*

    1. தேன்
    2. நெய்
    3. பால்
    4. தயிர்
    5. இளநீர்
    6. சந்தனம்
    7. பழச்சாறு
    8. கறுப்பஞ்சாறு
    9. பஞ்சகவ்யம்
    10.பஞ்சாமிர்தம் 1
    11. தைலம்
    sivajansikannan4@gmail.com

    ReplyDelete
  4. Tue. 8, Sep. 2026 at 6.11 pm.

    *பதினாறு பேறுகள் :*

    பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க.

    அந்த 16-பேறுகள் எவை என பார்க்கலாம்..!

    1. அறிவு
    2. அழகு
    3. இனிமை
    4. கல்வி
    5. நெல்
    6. நல்வாழ்வு
    7. நல்ஊழ்
    8. நன்மக்கள்
    9. நுகர்ச்சி
    10. துணிவு
    11. புகழ்
    12. பெருமை
    13. பொன்
    14. வலிமை
    15. வெற்றி
    16. நோயின்மை
    sivajansikannan4@gmail.com

    ReplyDelete
  5. Tue. 8, Sep. 2026 at 6.31 pm.

    *பஞ்ச சித்தாந்தம் :*

    பஞ்ச சித்தாந்தம் என்பது - சோதிடத்தில் கிரகங்களின் பலத்தை ஐந்து வகையாக ஆராய்ந்து முடிவு செய்யலாம்.
    *அவை :*

    1. நட்சத்திரத்தின் பலம்
    2. கிரக சீலம்
    3. கிரகங்களின் காரகம்
    4. கிரகங்கள் வர்க்கத்தில் பெறும் பலம்
    5. ஆதிபத்ய பலம்.
    sivajansikannan4@gmail.com

    ReplyDelete
  6. Tue. 8, Sep. 2026 at 7.35 pm.

    *பஞ்ச லோகம் :*

    திருக்கோயில்களில் உள்ள விக்கிரங்கள் யாவுமே பஞ்ச லோகத்தில் (பஞ்ச உலோகம்) செய்யப்பட்டவைதாம்.

    அவ்வாறான பஞ்ச லோகம் எது என பார்க்கலாமா..!

    1. இரும்பு
    2. ஈயம்
    3. செம்பு
    4. பொன்
    5. வெள்ளி
    இவைகளே பஞ்ச லோகங்கள் (அ) பஞ்ச உலோகங்கள் என்பது.
    sivajansikannan4@gmail.com

    ReplyDelete
  7. Tue. 8, Sep. 2026 at 7.54 pm.

    *சைவ சித்தாந்தம் +*

    *விஞ்ஞானகலர் :*
    விஞ்ஞானம் + அகலர் = விஞ்ஞானகலர்.

    இவர்களுக்குப் *பிரபோதகலர்* என்ற பெயரும் உண்டு.

    விஞ்ஞானகலர் என்பது - விஞ்ஞானத்தால் கலையற்றவர்.

    பிரபோதகலர் என்பது - பிரபோதம் என்பது *விஞ்ஞானம்*.

    இதனாலே கட்டுப்படுகிறவர்கள் விஞ்ஞானகலர்.

    *அட்டவித்தியேசுரர் :*
    இவர்கள் எண் வகை வித்தியேசுரர்கள்.

    அதாவது, விஞ்ஞானகலரிலிருந்து மலபரிபாகம் எய்தப் பெற்றும், அதிகாரஞ் செய்ய வேண்டுமென்னும் இச்சையால், ஈசுவர தத்துவத்தில் அதிகாரஞ் செய்து கொண்டிருப்பவர்கள் இந்த எண்மர்.

    அவர்கள்...
    1. அனந்தர் 2. சூக்குமர் 3. சிவோத்தமர் 4. ஏக நேத்திரர் 5. ஏக ருத்திரர் 6.திரி மூர்த்தர் 7. சிரிகண்டர் 8. சிகண்டி என்பவர்களே.

    *அணுசதாசிவர் :*
    இவர்கள் அபரமுத்தர்கள். அதாவது, சாதாக்கிய தத்துவத்தில் சதா சிவமூர்த்தியைச் சூழச் சேவித்துக் கொண்டிருந்து போகங்களைப் புசிப்பவர்கள்.

    அவர்கள்...
    1. பிரணவர் 2. சுதர் 3. சுதீப்தர்
    4. காரணர் 5. சுசிவர் 6. ஈசர்
    7. சூக்குமர் 8. காலர் 9. அம்பு
    10. தசேசர்
    என்பவர்கள் ஆவர்.

    திருச்சிற்றம்பலம்
    sivajansikannan4@gmail.com

    ReplyDelete
  8. Wed. 9, Sep. 2026 at 10.41 am.

    *சோதிடவியல் :*

    *சோதிடத்தின் வரலாறு பற்றி இன்று நாம் சுருக்கமாகப் பார்க்கலாம்...!

    பாரத தேசத்தின் வடமொழி இலக்கிய வரலாற்றைப் பார்க்கும்போது முதல் இடத்தில் இருப்பவை.. ருக், யஜூர், சாம, அதர்வணம் என்னும் நான்கு வேதங்களாகும்.

    இந்த வேதங்களுக்கு உறுப்புகளாக சிக்ஷை, வியாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜ்யோதிஷம், கல்பம் ஆகிய ஆறும் கூறப்பட்டுள்ளன.

    இவற்றுள் சோதிட சாத்திரம் வேதத்தின் கண்களாகப் போற்றப்படுகின்றது.

    நான்கு வேதங்களுக்கும் நான்கு வகை சோதிடம் இருந்ததாக கூறப்படுகிறது. இதில் சாம வேதத்தின் சோதிடம் தற்போது இல்லை.

    ருக்கு வேதத்தின் சோதிடம் *ஆர்ச்ச* சோதிடம்.

    யசூர் வேதத்தின் சோதிடம் *யாஜூஷஜ்யோதிஷம் * எனப்படும்.

    அதர்வண வேதத்தின் சோதிடம் *ஆதர்வண ஜ்யோதிஷம்* எனப்படும்.

    இதில்.. 162- சுலோகங்கள் காணப்படுகின்றன. இதை *லககர்* இயற்றியதாக கருதப்படுகிறது.

    இதற்குப் பின் வந்த சோதிட நூல் ஜ்யோதிஷ வேதாந்தம் ஆகும். இதில் 36 - சுலோகங்கள் - ருக்கு வேதத்தைச் சார்ந்தனவாகவும், 46 - சுலோகங்கள் யசூர் வேதத்தைச் சார்ந்தனவாகவும் உள்ளன.

    இந்த வேதாங்கத்தின் தொடர்ச்சியும், வளர்ச்சியுமே *சோதிட சாத்திரம்* எனப்படுகிறது.

    *வேதகாலத்தை அடுத்து வந்த இதிகாச காலத்தில் பார்த்தீங்கனா.. சோதிட சாத்திரத்தின் வளர்ச்சியைக் காண முடிகிறது.

    உதாரணமாக.... *இராமாயணத்திலே இராமனுக்கும் சுக்ரீவனுக்கும் நட்பு வளர்ந்தபொழுது.. அநுமன் தீமூட்டி அத்தீயை அவர்கள் நட்புக்கு சாட்சியாக்கினான் எனப் பார்க்கிறோம்.*

    அச்சமயம் *வாலிக்கும் இராவணனுக்கும், சீதைக்கும் இடது கண் துடித்தது* என கூறப்பட்டுள்ளது.

    *ஆண்களுக்கு வலது கண்ணும், பெண்களுக்கு இடது கண்ணும் துடித்தால் நன்மை பயக்கும். மாறாக ஆண்களுக்கு இடது கண்ணும், பெண்களுக்கு வலது கண்ணும் துடித்தால் கெடுதல் உண்டாகும் என *நிமித்த நூல்களில்* கூறப்பட்டுள்ள கருத்து.

    எனவே, இராமனுக்கும் சுக்ரீவனுக்கும் மலர்ந்த நட்பால்.. இராவணனுக்கும் வாலிக்கும் அழிவு நேரப் போவதையும், சீதைக்கு நன்மை உண்டாகப் போவதையும் இதனால் அறிய முடிகிறது.

    இதுமட்டுமின்றி... *கனவுகளின் பலனும் அக்காலத்தில் அறியப்பட்டிருக்கிறது.*

    சுந்தரகாண்டத்தை எடுத்துக் கொண்டோமானால்.. சீதை அரக்கியர்களால் துன்பறுத்தப்பட்ட பொழுது, அவ் அரக்கியர்களுள் ஒருத்தியான *திரிசடை* என்பவள் தான் கண்ட கனவினைக் கூறி, அதனால் சீதைக்கு வரப்போகும் நன்மைகளையும், இராவணனுக்கும் அவன் கூட்டத்தார்களுக்கும் வரப்போகும் தீமைகளையும் எடுத்துரைக்கிறாள்.

    இதன் வாயிலாக... *கனவுகளின் மூலம் வரப்போகும் நிகழ்ச்சி நன்மை பயக்குமா? இல்லையா? என முன் கூட்டியே அறியும் பழக்கம் அக்காலத்தில் இருந்ததை நாம் அறியலாம்.*

    மேலும்... இதிகாச காலங்களில் கோள்களின் உச்சம், நீசம், நட்சத்திரங்கள் எனப்படும் நாள்கள், அந்நாள்களுக்குறிய தேவதைகள், இலக்கினம் முதலிய வீடுகளைப் பற்றிய தெளிவான அறிவாற்றல் இருந்தது... எனக் கூறமுடியும்.

    எவ்வாறெனில்.. *இராமபிரான் பிறந்தபொழுது, 5 - கிரகங்கள் உச்சமாக இருந்தது என கூறப்படுகிறது. இராமபிரான் பிறந்த நாள் (நட்சத்திரம்) *புனர் பூசம்* என குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் கடக இலக்கினத்தில் தோன்றியதாகவம் கூறப்பட்டுள்ளபடியால், மேற்கூறிய தெளிவான அறிவாற்றல் இருந்தமையை நாம் இதன் வாயிலாக அறிய முடிகிறது.

    மேலும் பாருங்க... எந்தச் செயல்களையும் தொடங்குவதற்கான நாள் நட்சத்திரங்களைத் தேர்ந்தெடுக்கவும் அறிந்திருந்தனர்.

    *எப்படியெனில் ஒரு உதாரணம் காட்டுகிறேன். அநுமன் இலங்கைக்குச் சென்று, சீதையைக் கண்டு திரும்பிய பின், இராவணன் மீது போர்த்தொடுக்க இராமன் எண்ணினான். அப்பொழுது இராமன்... தனது சேனைத் தலைவர்களிடம் இன்று *உத்ரபல்குனி* நட்சத்திரம். இது எனக்கு நன்மை தரும் 6 -வது நட்சத்திரமாகும்; இன்று போருக்கு கிளம்பினால் வெற்றி நிச்சயம் என்று கூறுகின்றான்.

    ஏன் இதைக் கூறினேன் என்றால்... இதன் மூலம் இதிகாசக் காலங்களில் தான்.. பிறந்த நாள்முதல் அன்றைய நாள் வரை எண்ணிப் பலன்களை முடிவெடுக்கும் *தாராபலன்* எனும் நட்சத்திரப் பலன்களையும் நன்கு அறிந்திருந்தனர் என நாம் உணர முடிகிறது.

    இவ்வாறாக... வேதகாலத்தில் துவங்கிய வேதாங்க சோதிடம், இதிகாச புராண காலங்களில் நன்கு வளர்ச்சி பெற்று பின் இலக்கிய காலத்தில் முழு வளர்ச்சி அடைந்தது... என நாம் அறியலாம்.

    மீண்டும் அடுத்த பதிவில் காணலாம்.
    sivajansikannan4@gmail.com

    ReplyDelete
  9. Wed., 9, 2026 at 9.47 pm.

    *முருகர் :*

    *முருகு* என்றால் - இளமை, அழகு, தேன், நறுமணம், கடவுள் தன்மை.

    *முருகனது மூர்த்தங்கள் - சுப்பிரமணி, சண்முகன், ஞானசக்திதரன், தேவசேனாதிபதி, மயில்வாகனன்.

    *முருகனுக்கு முகம் என்பது - 6

    முருகனின் 1 -வது முகம் - இருளுடைய உலகை குற்றமில்லாததன் பொருட்டு பல கிரகணங்களை தோற்றுவித்தது.

    2 - வது முகம் - அன்பர்க்கு வேண்டும் வரம் தருதல்.

    3 - வது முகம் - வேதம் தவறாத பிராமணர்க்கு யாகத்தில் தீங்கு வராமல் தடுக்க.

    4 - வது முகம் - வேதாகமத்தில் மறைந்துள்ளவற்றை ஆராய்ந்து போதித்து சந்திரன் போல் விளங்கும்.

    5 - வது முகம் - அசுரரை ஒழித்து போர் வேள்வியை வேட்டது.

    6 - வது முகம் - வள்ளியுடன் மகிழ்ச்சியை பொருந்திற்று.

    *மேலும், முருகனுக்கு கைகள் - 12.

    *கொக்கறுகோ என்பது - சூரனாகிய மா மரத்தை வெட்டி வீழ்த்திய தலைவன்.

    *வள்ளி பெயர் - சுந்தரி
    *தெய்வானை பெயர் - அமுதவல்லி.
    இவர்கள் பூர்வ ஜென்மத்தில் திருமாலின் புதல்வியர்.

    *முக்கியமாக கவனிக்க வேண்டியது யாதென்றால்...

    *வள்ளி திருமண தத்துவம் - உயிர் தன்னியல்பில்லாமல், கருவி இயல்பே என மயங்கும் போது, இறைவன் ஆட் கொள்வான் என்பதே (சிவஞான போதம் - 8ஆம் சூத்திரத்தில் உள்ளது போன்று).

    திருச்சிற்றம்பலம்.
    sivajansikannan4@gmail.com.

    ReplyDelete
  10. Thu. 10, Sep. 2026 at 7.46 am

    *சைவ சித்தாந்தம் :*

    தொடர்ந்து...

    *சதாக்கியர் :*
    சதாக்கியர் - சதாசிவர்.

    இவர்கள் ஆணவ மலம் ஒன்றை மட்டுமே உடையவர்கள். சுத்த வித்தியா தத்துவத்திலிருக்கும் ஏழுகோடி மந்திரேசுரர். இவர்கள் எழுவித கோடிகளின் ஈற்றிலுடைய மந்திரங்களுக்கு அதிபர்கள்.

    ஏழுவித கோடிகள் என்பது - *நம* ஒரு கோடி; *சுவாஹா* ஒரு கோடி; *சுவதா* ஒரு கோடி, *வௌஷட்* ஒரு கோடி, *வஷட்* ஒரு கோடி, *ஹும்* ஒரு கோடி* ஆகும்.

    *பிரளயாகலர் :*
    பிரளயாகலர் என்பது - பிரளயத்தில் கலையற்றவர். பிரளயம் என்பது - ஒடுக்கம். அகலர் என்பது கலை நீங்கினவர்.
    பிரளயத்தில் மாயாதத்துவத்தில் கட்டுப்படுகிறபடியால் பிரளயாகலர் என்று பெயர் பெற்றவர்.

    *சுத்த மாயா தத்துவம் :*
    சுத்தமாயை என்பது - தூய்மையான மாயை. அதாவது அசுத்தமில்லாதது. சுத்தப் பிரபஞ்சத்திற்குக் காரணமான மாயை. மட் குடத்திற்கு மண் முதற்காரணமாயிருப்பது போல, மாயை உலக படைப்புக்கு முதற்காரணமாய் உள்ளது.

    *நூற்றுப் பதினெட்டு உருத்திரர்கள் :*
    நூற்றுப் பதினெட்டு உருத்திரர்கள் என்பது - இவர்களில் பக்குவ மல கர்ம முடையவர் *புவனேசர், மஹா தேவர், வாம தேவர், பலோத்பவர், ஏகபிங்கர், ஏகேட்சணர், ஈசானர், அங்குஷ்ட மாத்திரர் என்னும் மண்டலர் எண்மரும், இவர்களுக்கு அதிபர்களும், சம்சார சாகரத்திற் சுழல்கிறவர்களைத் திருப்புகிறவர்களுமாகிய அனந்தர், திரிகர், கோப்தர், க்ஷேமேசர், பிரமபதி, துருவர், தேஜோதிபர், கஹனேசர் என்னும் எண்மரும், வீரரும், சிரிகண்டரும் எனப் பதினெண்மர் மற்றும் பக்குவாபக்குவ மல கர்மமுடையவராயுள்ள பிரமாண்ட தாரகராகவிருக்கும் சதருத்திரரும், காலாக்கினி ருத்திரருமாவார்கள். ஆக, நூற்றுப் பதினெட்டு உருத்திரர்கள்.

    மீணடும் சந்திக்கலாம்..!
    sivajansikannan4@gmail.com

    ReplyDelete
  11. Fri. 11, Sep. 2026 at 8.07 am

    *கருட தண்டக ஸ்லோகம் :*

    1. கருட கமண தவ
    சரண கமல மிஹ
    மனஸி லஸது மம நித்யம் - 2

    மம தாபம பாகுரு தேவ - 2

    2. ஜலஜ நயன விதி
    நமுசி ஹரண முக
    விபூதி வினுத பத பத்ம - 2 - மம

    3. புஜக ஷயன பவ
    மதன ஜனக மம
    ஜனன மரண பய ஹாரி - 2 - மம

    4. ஷங்க சக்ர தர
    துஷ்ட தைத்ய ஹர
    ஸர்வ லோக சரண - 2 - மம

    5. அகணித குண கண
    அஷரண ஷரணத
    விதலித சுரரிபு ஜால - 2 - மம

    6. பக்த வரய்ம மிஹ
    பூரி கருணயா
    பாஹி பாரதி தீர்த்தம் - 2 - மம - கருட...
    sivajansikannan4@gmail.com.

    ReplyDelete
  12. Fri. 11 Sep. 2026 at 7.15 pm.

    *விநாயகர் சதுர்த்தி :*

    *விநாயகர் சதுர்த்தியானது - ஒவ்வொரு வருடமும் ஆவணியில் அமாவாசை கழிந்த 4 - ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.

    *விநாயகர் - தனக்கு நிகராய் ஒரு நாயகரும் இல்லாதவர் என்று பொருள்.

    *விநாயகர் சதுர்த்தி நாளானது - மனிதர், விலங்கு, ஆயுதங்களால் தன்னை கொல்லக் கூடாது என வரம் பெற்ற *கஜமுகசூரனைக் கொன்ற தினம்.

    *கஜமுகசூரனுக்கு கொடுத்த மரியாதையான தலையில் குட்டிக் கொள்ளுதலை அந்நாள் முதல் விநாயகருக்கு செய்கின்றனர்.

    *பிரமன் பரிந்துரையால் நாரத மாங்கனியை சிவன் முருகனுக்கு கொடுக்க, சந்திரன் அதைக் கண்டு சிரிக்க, விநாயகர் வெகுண்டு சந்திரனுக்கு சாபம் கொடுத்தார்.

    எனவே சதுர்த்தி அன்று சந்திரனை பார்க்காமல் பூஜிப்பவர்க்கு மட்டுமே விநாயகர் அருள் முழுமையாகக் கிடைக்கும்.

    இதனை அறிந்து கொண்டு விநாயகர் சதுர்த்தியை கோலாகலமாகக் கொண்டாடி வணங்குங்கள்.

    ஓம் கணபதயே நம
    sivajansikannan4@gmail.com

    ReplyDelete